• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

ஊடலில் வந்த சொந்தம் (எபிலாக்)

நித்திலம்NMR

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
231
தத்தக்கா பித்தக்கா நடையிட்டு வந்த வெண்மதி குப்புறப்படுத்து உறங்கிக் கொண்டிருந்த கமலின் காதருகே வந்து அமர்ந்து "தித்தா தித்தா" என்று தன் சித்தப்பனை எழுப்பிவிட்டாள்.

"மதி டார்லிங் சித்தா இன்னும் கொஞ்ச நேரம் தூங்குறேன் டா... ப்ளீஸ்" என்று கண்கள் திறவாமல் மழலையிடம் கெஞ்சினான் கமல்.

தன் தமக்கையுடன் தத்திதாவி தவழ்ந்து வந்த வேதா, இன்னும் பேசவில்லை என்பதால் கமலின் கன்னம் தட்டி எழுப்பினான். அதற்கெல்லாம் அவன் அசைந்து கொடுத்தான் இல்லை.

ஆம் மக்களே ராம்-நேத்ராவிற்கு இரட்டைக் குழந்தை, முதலில் பெண்குழந்தை ஏழு நிமிட இடைவெளியில் ஆண்குழந்தை... வெண்மதி, வேதாந்தன்.

உடன் வந்த ஆறு வயது வெண்பா, "சித்தா எல்லாரும் ரெடி ஆகிட்டாங்க... இப்போ நீங்க எந்திரிக்கலேனா அம்மா விட்டுட்டு போயிடுவேனு சொல்ல சொன்னாங்க..." என்றிட,

"பொம்மிமா... அம்மாகிட்ட சித்தா ஓகே சொல்லிட்டதா சொல்லு..." என்று கூறி மருபுறம் திரும்பி படுத்துக் கொண்டான்.

அங்கில் என்ற அழைப்பை ராம் தான் சித்தப்பா என்று மாற்றியிருந்தான். அதனை சுருக்கி சித்தா என்று அழைக்க ஆரம்பித்திருந்தாள் வெண்பா. அவளைக் கண்டு ஒருவயது நிரம்பிய அவள் தங்கை வெண்மதியும், தம்பி வேதாவும், இரண்டு வயது நிரம்பிய ருத்தேஷ் மற்றும் யாழிசையும் அவ்வாறே அழைக்கக் கற்றுக்கொண்டனர். அதே போல் இன்று வரை அபியை 'சோட்டூ' என்று தான் கால் டிக்கெட், அரை டிக்கெட் அனைத்தும் அழைக்கின்றனர். அதிலும் வெண்பாவைத் தான் பின்பற்றுகின்றனர்.

அவர்கள் மூவரை அடுத்து மீதம் இருக்கும், ருத்தேஷ், யாழிசை இருவரும் உள்ளே நுழைய கமலின் படுக்கையில் ஐவர் குழு ஒன்று திரண்டு கமலின் கழுத்தில் இருந்து ஆரம்பித்து கால் வரை ஏறி அமர்ந்து குதிக்கத் தொடங்கினர்.

அதற்கும் கண் திறவாமல் படுத்திருக்க, அடுத்ததாக சுனோவின் அழைப்பு திறன்பேசியை அதிரச் செய்ய, எடுத்து பார்த்து சைலண்ட்டில் போட்டுவிட்டு மீண்டும் கண்களை மூடிபடுத்துக் கொண்டான். அப்போது உள்ளே நுழைந்த அபி, "டேய் எந்திரி டா... டைம் ஆகுதுடா."

"ஏன்டா படுத்துறிங்க... காலைல இரண்டு மணிக்கு தான் படுத்தேன், ஒரு மணி நேரம் கூட தூங்க விடாம ஏன்டா உயிர வாங்குறிங்க!!!? லவ் பண்ணும்போதும் என்ன தான் ஜூஸ் போட்டிங்க, கல்யாணத்துக்கும் என்னை தான் ஜூஸ் பிளியிரிங்க..." என்று தூக்கக் கலக்கத்தில் உரைத்திட,

"என் கல்யாணம் மட்டும் முடியட்டும்...... இருக்கு உனக்கு" என்று அபி கடுகடுக்க,

"போ... போ... அது வரைக்கும் அந்த குட்டி சாத்தான் வெய்ட் பண்ணமாட்டா... இப்போ ஃபோன் எடுக்காததுக்கே பத்ரகாளி மாதிரி வந்து நிப்பா பார்..."

"நீ அவ கையாள அடிவாங்கினா தான் எந்திரிப்ப... எக்கேடோ கெட்டுத்தொல..." என்று கூறி அபி அறையைவிட்டு வெளியேற, சுனைனா உள்ளே நுழைந்தாள்.

"டேய் கமல் தடிமாடு எந்திரி டா... வீணாபோனவனே... நீ தான் ஐயரை கூட்டிட்டு வரனும் தெரிஞ்சும் ஏன்டா இப்படி லேட் பண்ணிட்டு இருக்கே!!!"

"போடி முட்டபொம்மா... அதான் கல்யாணத்துக்கு பொண்ணு, மாப்பிள்ளை ரெண்டு பேரும் ரெடியா தானே இருக்கிங்க... அபியும் இப்பவே தாலி கட்ட சொன்னாக்கூட ரெடியா தான் இருக்கான்... பின்னே எதுக்கு டி ஐயர்லாம்!???"

"உனக்கெல்லாம் கல்யாணமே நடக்காது டா..." என்றிட சட்டென எழுந்து அமர்ந்தான்.

"சாபம் விட்டு தொலையாதே... போறேன்" என்றவன், எழுந்து குளிக்கச் சென்றான். ஏற்கனவே தன்னைவிட ஒரு வயது சிறியவன் அபிக்கு கூட திருமணம் செய்கிறார்களே என்று எப்போதும் போல் போர்கொடி தூக்கிப் பார்த்தான்... "உனக்கு பொண்ணு அமையலே அதுக்கு என்னடா பண்ண சொல்றே!!!" என்று அசால்டாகக் கூறிவிட்டார் கங்காதரன். இப்போது சுனோவும் இப்படிக் கூறிவிட, ஒருநொடி அதிர்ச்சியடைந்தான்.

தயாராகி கீழே வர அங்கே அனைவரும் மண்டபத்திற்கு புறப்பட்டுக் கொண்டிருந்தனர்.

"கமல் நீ ஐயரை கூட்டிட்டு மண்டபம் வந்திடு" என்று கூறிச்சென்றார் விமலா.

அவரின் பின்னால் வந்த நேத்ரா, "கமல் குழந்தைகளையும் கூட்டிட்டு போயிட்டு வா" என்றாள்.

"சீக்கிரம் வா டா..." என்று பவன் நகர,
அவன் கையைப் பிடித்து நிறுத்தி, "டேய் இதுங்களை வெச்சிட்டு நான் எங்கேயிருந்து சீக்கிரம் வரது... கூட யாராவது ஒரு ஆளை வர சொல்லு..."

"டேய் கார்ல எடம் இருக்காது டா... சரி சரி மசமசனு நிக்காம சீக்கிரம் போ" என்றிட,

'ஒரு கல்யாணத்தை நடத்தி முடிக்கிறதுக்குள்ள எப்படியெல்லாம் வேலை வாங்குறானுங்க...' என்று புலம்பிய படி சிறுவர் பட்டாளங்களை காரில் ஏறி அமரச் சொன்னான்.

மதியை பவன் பார்த்துக்கொள்ள, வேதாவை ஆரவ் வைத்துக் கொண்டான். மற்ற மூவரும் கமலுடன் புறப்பட, ராமின் ரூட் க்ளியர் ஆகியது. தன்னவளுக்கு உதவுவது போல் காலையிலிருந்து பற்பல சீண்டல்களைச் செய்து அவளின் முறைப்பையும் பரிசாகப் பெற்றுக் கொண்டிருக்கிறான்.

காசி விஸ்வநாதர் கோவிலில் இருந்து புரோகிதரை கமல் அழைத்து வர, அபிவன்கிரன்-சுனைனா திருமணம் மிகச்சிறப்பாக நடந்தேரியது. அபியின் அருகில் மாப்பிள்ளைத் தோழனாக கமல் தான் நின்றான். சுனைனாவிற்கு அதுவே பெரும் மகிழ்ச்சாயாக இருந்தது. ஆரம்பத்தில் இருந்து சற்றும் இறங்கி வராமல் முட்டிக் கொண்டிருந்த அபியும், கமலும் இப்போது ஒன்றாகிவிட அவளுக்குத் தான் அளவு கடந்த மகிழ்ச்சி.

திருமணம் முடிந்தப் பின் நடத்தப்படும் சடங்குகள் அனைத்திற்கும் கமல் தான் பறந்து பறந்து வேலை செய்தான். பெரும்பான்மையான சொந்தங்கள் கலைந்து சென்றபின் வீட்டாட்களும், சுனோவின் தோழிகள் சிலரும் மட்டும் மண்டபத்தில் இருக்க, ஒரு சிறுமி ஓடி வந்து கமலை கட்டிக்கொள்ள எவருக்கும் எதுவும் புரியவில்லை.

குழந்தையின் தங்க நிற தலை முடியும், வெள்ளைத் தோலும், நீலநிறக் கருவிழியும் அடித்துக் கூறியது அது வெளிநாட்டுக் குழந்தை என்று. கழுத்தில் இருந்த உத்ராட்சை மட்டும் தான் கொஞ்சம் வித்தியாசமாகத் தெரிந்தது.

அனைவரும் கமலின் பதிலை எதிர்பார்த்து காத்திருக்க, மிதுன்யா மட்டும் பவனை முறைத்துக் கொண்டிருந்தாள்.

கமலுக்கும் அந்த குழந்தை யார் என்று தெரிந்திடவில்லை. குழந்தையிடம் பேச்சுக் கொடுத்தான்.

"Hi cutie..... May I Know your sweet name baby?"

"Eesha"

"Wow... Such a nice name. Do you know the meaning?"

"Ya... Lord Shiva" என்று அச்சிறுமி உரைத்திட, மிதுன்யா உறுதியே செய்துவிட்டாள்.

"உங்க தம்பி தங்க கம்பினு சொன்னிங்க... இப்போ பாத்திங்களா!!!" என்றிட, பவன் புரியாமல் மிதுன்யாவைப் பார்த்தான்.

"இந்து கடவுளையும், கலாச்சாரத்தையும் சொல்லிக் கொடுக்கப்பட்டு ஒரு வெளிநாட்டு குழந்தை வளருதுனா, அதுக்கும் இந்தியாவுக்கும் ரத்த சம்பந்தம் இல்லாமலா இருக்கும்!!!" என்று பவனின் காதை கடித்துக் கொண்டிருந்தாள்.

"Where are your mama & papa Eesha baby?"

"Mama is there" என்று வாசல் பக்கம் விரலை சுட்டிக் காண்பித்து கூறியது.

சிறுமி காண்பித்த திசையைப் பார்த்தவன் அங்கே நின்றிருந்தவளைக் கண்டு தன் கண்களோடு சேர்த்து இதழ்களையும் விரித்தான்.

"டேஃப்னி..." என்றபடி சிரித்துக் கொண்டே அவளை நோக்கி நான்கு எட்டுகள் வைத்தப்பின் தான் தன் குடும்பம் தன்னை கவனித்துக் கொண்டிருப்பதை உணர்ந்து திரும்பிப் பார்த்தான் கமல்.

மற்ற அனைவரும் ஆச்சரியமாகப் பார்த்தார்கள் என்றால் மிதுன்யா மட்டும் 'எனக்கு தெரியும்டா உன்னை பத்தி...' என்பது போல் பார்த்தாள். அதனையும் உணர்ந்து கொண்டவன்,

"அண்ணி சத்தியமா எனக்கு அந்த பொண்ணை மட்டும் தான் தெரியும்... இந்த பொண்ணை தெரியாது...." என்று சிறுமி கை காண்பித்துக் கூறிட,

"தெரியுது... உன் மூஞ்சிய பாத்தாலே தெரியுது... விட்ட கதை தொட்ட குறை பாதில வந்து நிக்கிது... பாத்துட்டு வாங்க" என்றாள். இப்போதெல்லாம் இருவரும் சகஜமாக பேசிக்கொள்வதால் அவனிடம் 'நான்லாம் உன்னை நம்பமாட்டேன் பா' என்று பல நேரங்களில் கூறியிருக்கிறாள் மிதுன்யா. அதே தான் இப்போதும் நடந்தது.

'நாமலா வாயக் கொடுத்து வாங்கி கட்டிக்கிட்டோமே' என்று நினைத்த படி, சரி இவ இங்கே என்ன பண்றானு கேப்போம் என்று டேஃப்னியின் புறம் திரும்பினான். இவ்வளவு நேரம் இயல்பாகப் பேசியவன் டேஃப்னியிடம் வழவழ கொழகொழ ஆங்கிலத்தில் பேசிட முந்தையத் தலைமுறைக்கு ஒன்றும் புரியவில்லை.

"ஹாய் டேஃப்னி... எப்படி இருக்க?"

"ஹாய் கே.கே... நான் நல்லா இருக்கேன். நீ எப்படி இருக்க?" என்றிட

சிரித்த முகமாக மேலும் கீழும் தலையசைத்து "நீ இங்கே எப்படி?" என்று கேட்டபடி அவளின் பின்னால் தேடிட எவரும் இல்லை.

"கோவில்ல உன்னை பாத்தேன்... உன்கிட்ட பேசலாம்னு வந்தா நீ அவசர அவசரமா கார்ல ஏறி கிளம்பிட்ட... அதான் உன்னை ஃபாலோ பண்ணி வந்தேன். நீ ரெம்ப பிசியா இருந்தே... சரி ஃப்ரீ ஆனதும் பேசலாம்னு வெய்ட் பண்ணிட்டு இருந்தேன்."

"ஓஓஓ...என்கிட்ட பேச என்ன தயக்கம் உனக்கு!!! சரி இது உன் குழந்தையா?"

"The gift of our love" என்றிட, கமல் சிறிதும் பதறிடவில்லை. குழந்தையின் கன்னத்தில் முத்தமிட்டு,

"என்ன வேலையா வந்திருக்க?" என்றிட

"என்னை கல்யாணம் செய்துக்க சொல்லி கேட்க வந்தேன்..." என்று கூறி கண்ணடித்தாள்.

கமலும் பதிலுக்கு சிரித்தபடி "ம்ம்ம்... இதோ இது தான் என் ஃபேமிலி... இவங்க சம்மதிச்சா கல்யாணம் செய்துக்களாம்" என்று இப்போதும் சிரிப்பு மாறாமல் கூறிட, டேஃப்னி அனைவரின் முன்பும் வந்து நின்று பேசினாள்.

தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு கமலை தான் காதலிப்பதாகக் கூறி தாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாமா என்றும் வினவிட, அனைவரும் வாயடைத்து நின்றிருந்தனர். நேத்ரா தான் அவர்களுக்கு மொழிபெயர்த்துக் கூறினாள்.

"அப்போ அந்த குழந்தை!??" என்று விமலா வினவிட,

"அது என்னோட மிஸ்டேக் தான். நான் தான் எனக்கு குழந்தை வேணும்னு கட்டாயப்படுத்தி பெத்துக்கிட்டேன்." என்று சாதாரணமாகக் கூறினாள்.

"கமல் அந்த குழந்தைக்கு நீ தான் அப்பானு உன் வாய் திறந்து சொல்லிட்டு இந்த பொண்ணை கல்யாணம் பண்ணிக்கோ?" என்று இறுக்கமான மனநிலையோடு கூறினார் கங்காதரன்.

"அதாவது நீங்க என்ன சொல்லவறிங்க... ஈஷா கே.கே-வோட பொண்ணா இருந்தால் மட்டும் தான் எங்களுக்கு கல்யாணம் செய்து வைப்பிங்களா?" என்றிட

"என் பையன் இப்படி ஒரு தப்பு செய்திருக்கமாட்டான்னு சொல்றேன்... அவனுக்கும் உன்னை பிடிச்சிருந்தா அவனே எங்ககிட்ட சொல்லியிருப்பான். இப்படி உன்னை கேட்கவிட்டிருக்கமாட்டான். அதுவும் குழந்தையோட வந்து நிக்க வெச்சு..."

அவரின் பதிலை கேட்டப்பின் டேஃப்னி கமலை ஒரு நம்பகப் பார்வை பார்த்தாள். மீண்டும் கங்காதரனிடம் திரும்பி "உண்மை தான்... இது கே.கே குழந்தை இல்லே..." என்று அவர்களிடம் கூறிவிட்டு, வெளிவாசலைப் பார்த்து "வில்..." என்று சத்தமிட, ஈஷாவின் ஜாடையில் ஒரு ஆண்மகன் உள்ளே வந்தான். வந்தவன் நேரே கமலை கட்டிக்கொண்டு, ஏதோ பேசினான்.

"சாரி ம்மா... சாரி ப்பா... இவங்க ரெண்டு பேரும் என் ஃப்ரெண்ட்ஸ்... லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டாங்க... அவங்க லவ்-க்கு முதல் எதிரியே நான் தான். அதான் அவளுக்கு இந்தியன் பேரண்ட்ஸ் எல்லாரும் லவ்க்கு அகெய்ன்ஸ்டா தான் இருப்பாங்கனு ஒரு தாட்... அந்த வம்சாவழி தான் நான்னு என்னை திட்டிக்கிட்டே இருப்பா... நீங்க ரெண்டு பேரும் அப்படி இல்லேனு சொன்னா அவ நம்பலே... இன்னைக்கு அதை டெஸ்ட் பண்ணத்தான் அப்படி பேசினாள்." என்று விளக்கம் கொடுத்தான்.

டேஃப்னியின் பேச்சில் இருந்து வெளியே வர அனைவருக்கும் சற்று நேரம் பிடித்தது. பேச்சுக்கொடுக்க வேண்டுமே என்பதற்காக பவன் அவர்களுடன் பேசிட மிதுன்யா அவனை முறைத்துக் கொண்டு நின்றாள். அவர்கள் புறப்பட, கமல் அவர்களை வழியனுப்பி வைக்க வாசல் வரை வந்தான். நண்பர்களை அனுப்பிவிட்டு திரும்ப அங்கே சுனோவின் தோழி நின்றிருந்தாள்.

"என்னங்க கெளம்பிட்டிங்களா? கேப் புக் பண்ணிருக்கிங்களா?" என்று அவன் மட்டுமே கேள்வி கேட்டுக் கொண்டிருக்க அந்த பெண்ணோ கைகளை கட்டிக்கொண்டு அவனை முறைத்துக் கொண்டிருந்தாள். அவள் முறைப்பது புரிந்திட, கமல் அவளை விசித்திரமாகப் பார்த்து நகர்ந்து செல்ல முற்பட, அவன் கையைப் பிடித்து இழுத்து நிறுத்தி,

"இனி எவளாவது உன் பேரை சொல்லிக்கிட்டு உன்னைத் தேடி வந்தா!!! கொன்னுடுவேன்...." என்று அதி தீவிரமாக மிரட்டிட,

நெற்றியில் கை வைத்து தேய்த்தபடி, 'மனசுக்குள்ள வசீகரன் ஸ்நேகானு நெனப்பு' என்று சத்தமின்றி முணுமுணுத்துவிட்டு,

"என்ன லவ்வா?" என்று அசட்டையாக வினவினான். அவளிடம் எந்த பதிலும் இல்லை. "எத்தனை வர்ஷமா லவ் பண்ற? அந்த குட்டி சாத்தான் என்னை பத்தி என்ன கதை அள்ளிவிட்டுச்சு?" என்று நக்கலாக கேட்க,

"இப்போ இந்த ஒரு மணி நேரத்துல வந்த காதல்னு சொன்னா நம்புவேயா? அந்த வெள்ளகாரி உன்னை கே.கே னு கூப்பிடுறதுக்கு முன்னாடி வரைக்கும் உன் பேர் கூட தெரியாதுனு சொன்னா நம்புவேயா?" என்று கண்களில் காதலோடு கூறியவளை சற்று பிரம்மிப்பாகப் பார்த்தாலும்,

ஒரு முழு வினாடி அமைதிக்குப் பின் "போடி..." என்று அசட்டையாகக் கூறி அவளைக் கடந்து சென்றான்.

இவ்வளவு சாதாரணமாக அவளைக் கடந்திட முடியும் என்று அவன் போட்ட கணக்கு தப்புகணக்கு ஆகப்போகிறுது என்று அறியாமல் போய்விட்டான். பகலில் பின் தொடரும் நிழலாகவும், இருளில் தோன்றிடும் ஒருநொடி பயமாகவும் தன்னை இருபத்து நான்கு மணிநேரமும் இம்சிக்கப் பிறந்தவள் என்பதை அறியாமல் போனான்.

இது அடுத்த கதையில் டீசரும் கூட.

கதையின் பெயர்-
சீண்டாமல் செல்லாதே

ஹீரோ-கமல்

ஹீரோயின்-அமுதினி

இந்த கதை தொடர்கதை பிரிவில் படிக்கலாம்.... நன்றி 🙏💕
 
  • Like
Reactions: dsk
Top