• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

எங்கே என் மனம் - அத்தியாயம் 15

S.JO

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
80
79
18
Paris
15​

வசந்தம் எக்ஸ்போட். சந்தோஷ் ஆபீசில் இருந்தான்.

“என்ன சார் கூப்பிட்டிங்களா?” கதவை தட்டிவிட்டு மேனேஜர் உள்ளே நுழைந்தார்.

“ஆமா.! உட்காருங்க...இந்த புராடெக்ட் எல்லாம் எக்ஸ்போட்டாகிடுத்தா..?”

“அனுப்பியாச்சு சார்...! நம்ம புராடெக் தரத்தையும் வொர்க்கையும் பார்த்துட்டு இன்னும் வேணும்னு கேட்டிருக்காங்க...”

“வெரிகுட்..! டிப்பாட்மெண்டல எவ்ளோ ஸ்டாக் இருக்குன்னு பாத்துட்டு அனுப்பிடுங்க...அப்புறம் பாம்பே சிறிநாத் கம்பனியும் கூடுதலாக கேட்டிருக்காங்க..சோ இப்பவே புராடெக்சனை தொடங்கிடுங்க...”

“சரி சார்....” அவன் பேசிக்கொண்டிருக்க ஃபோன் ஒலித்தது.

“சார்..வீட்லேருந்து ஃபோன்...” ரிசப்சனிஸ்ட் சொல்ல,

“ம்..லைன் கொடுங்க...” என்றான்.

“எஸ் சந்தோஷ் பேசுறேன்...என்ன..?” மறுமுனை சொல்ல ஃபோனை தவறவிட்டபடி பதட்டமாக எழுந்து கொண்டான். மறுபடியும்; ஃபோனை எடுத்து,

“இதோ வந்துட்டேன் மாமா....” மேனேஜரை பார்த்து அப்புறமா பேசுறேன் என்று சைகை காட்டிவிட்டு காரில் தாவி ஏறியபடி பறந்தான்.



சந்தோஷ் விழுந்தடித்துக்கொண்டு ஓடிவந்து எதிரே வந்த மகாலட்சுமியை பார்த்து

“அத்தே! சந்தியா....சந்தியாவுக்கு என்னாச்சு?”’ அவரை உலுக்கினான்.

“ஒண்ணும் ஆகலைப்பா...! ஆப்பிள் வெட்டும் போது கையை வெட்டிகிட்டா...ரத்தம் வந்து மயக்கமாயிட்டா...நீ கவலைப்படாதே! உன் மாமா தான் பயந்து போய் உனக்கு ஃபோன் போட்டு உன்னையும் கதிகலங்க வச்சிட்டாரு....!” அவள் சொல்ல சந்தோஷ் கலங்கிய விழிகளை மறைத்தபடி உள்ளே ஓடினான். சந்தியா கையில் கட்டுடன் படுத்திருந்தாள். சத்தம் கேட்டு கண்விழித்தாள். எதிரே சந்தோஷ்,

“எ....என்னடா நீ? பார்த்து வெட்டக்கூடாது!” அவளது கைகளை பார்த்தபடி கேட்க, அவனை வெறித்தபடி இருந்தாள். அவன் அதை பொருட்படுத்தாமல்,

“ரொம்பவும் வலிக்குதா?”
 கவலையோடு கேட்க,

“எனக்கு வலிக்கலை! உங்களுக்கு வலிக்குதோ....?” என்றாள் ஏளனமாக.

“சந்தியா! ப்ளீஸ்...விளையாடாதேடா...! எதுக்கு கவனம் இல்லாம ஆப்பிளை வெட்டினே...?.” அவனது துடிப்பு, பாசம், எதையும் பொருட்படுத்தாமல் அவள் சிரித்தாள். அதையே பார்த்துக் கொண்டிருந்தான். சிரித்து முடித்ததும்,

“யார் சொன்னா நான் ஆப்பிளை வெட்டியதாக?”
கிண்டல் தெறித்தது அவளது வார்த்தைகளில்.

“மா...மா...தான்”
தடுமாற்றத்துடன் அவளை நோக்கினான்.

“ம்...அவங்களை பொறுத்தவரை நான் ஆப்பிளை வெட்டப்போய் கையை வெட்டிகிட்டேன்...பட் நிஜம் அது அல்ல”
என்று நக்கலுடன் சொன்னவளை,

“எ....என்ன சொல்றே?” என குழப்பமாக பார்த்தான்.

“ம்....வேணும்னு தான் என் கையை நானே வெட்டிகிட்டேன்...”
 அவள் சாதாரணமாக சொல்ல,

“சந்தியா...!” அதிர்வுடன் அவளை உலுக்கினான்.

“ச்சீ தொடாதீங்க....!” அவள் முகம் சுளிக்க அவன் சட்டென்று கையை எடுத்தான்.

“என்ன சாருக்கு எதுக்கு துடிக்குது? நான் இப்படித்தான் என் கையை வெட்டுவேன்....காலை வெட்டுவேன்....என் உடம்பு பூரா கிழிச்சுக்குவேன்.... உங்களுக்கு என்ன வந்தது?”
 சந்தியா வீம்புடன் கூற,

“ஏய்...உளறாதே..!” அவன் அதட்டினான்.

“நோ...உண்மையைத்தான் சொல்றேன்....”

“ஏன்மா..ஏன் இப்படி பண்றே? உனக்கு என்னாச்சு...? என்ன வேணும்..? என்கிட்டே கேளுடா? நீ கேட்பது எதுவாக இருந்தாலும் உனக்காக இந்த உலகத்துல எந்த மூலையில இருந்தாலும் கொண்டு வருவேன்....” அவளது மனது தெரியாமல் பாசத்தில் வார்த்தையை கொடுத்தான்.

“ம்...வெரி குட்..! அப்படி கேளுங்க..சொன்ன பேச்சை மாறக்கூடாது...எனக்கு டைவோர்ஸ் மட்டும் வேணும்...! நான் சொன்னது போல...ஞாபகம் இருக்கா?”
 அவள் கேலியாக சொல்ல,

“சந்தியா...!”
 என்றான் அதிர்வுடன்.

“ஸ்...கத்தாதீங்க....! நீங்க நான் சொன்னபடி செய்யலைன்னா இப்படித்தான் என்னை என்ன வேணா பண்ணுவேன்...கேட்குற உரிமை உங்களுக்கு இல்லை...”
 சந்தியா கோபமாக சொல்ல,

“சோ....என்னை மிரட்டி நீ நினைச்சதை சாதிக்கப்போறே?” அவளை வெறித்தான்.

“அப்படியும் வச்சுக்கலாம்....”
 அலட்ச்சியத்துடன் தொடர்ந்தாள்

“.......”

“உங்களுக்குத்தான் என்மேலே நிறைய லவ்வாச்சே...! என் சந்தோசத்துக்காக எதைவேணா செய்வேன்னு சொன்னீங்க...அதை நிறைவேத்துறது உங்களுக்கு விருப்பமில்லையா? வெளிநாட்டுல வேற படிச்சிருக்கீங்க...” அவனது மனதை, குணத்தை அறிந்து பேச அவன் சிலையாகி நின்றான்.

“அதனால....”
 கண்கள் இடுங்க விழியாகற்றாமல் அவளையே பார்த்தான்

“அதனாலதான் கேட்குறேன் விருப்பமில்லாத பொண்ணோடு வாழுறது ஏன் அவளை பாத்துட்டிருக்குறது..உங்களுக்கு அருவருப்பா இல்லை....? பட் எனக்கு இருக்கு....! எனக்கு உங்க முகத்தை பார்த்துக்கொண்டிருக்க முடியாது! என் வெறுப்பின் மொத்த உருவம் இந்த உருவம்...!” அவனை நோக்கி சுட்டுவிரல் நீட்டி காட்டினாள். அவன் முகம் இறுகியது. நரம்புகள் புடைத்துக்கொண்டிருந்தன.

“இன்னிக்கு கத்தி...நாளைக்கு விசமோ....அடுத்த நாள் பா...”
 எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றினாள்

“ஸ்டாபிட்.....! போதும் நிறுத்து....! நீ நினைச்சதை சாதிக்கணும் என்கிறதுக்காக உன்னை வருத்திக்காதே...!”
 என்றான் கோபமும் வருத்தமுமாக,

“ஏன்....இது என் உடம்பு...! ஓ! என்னை லவ் பண்றீங்க இல்லே அப்படீன்னா உங்களுக்குத்தானே வலிக்கும்..” அவள் நக்கலடிக்க,

“ஆமாண்டி...! லவ் பண்ணேன் ! அஞ்சு வயசுல நான் சாப்பிட்ட கொய்யாவை பறித்து சாப்பிட்ட சந்தியாவை! எட்டு வயசுல என் கன்னத்தில முத்தமிட்ட சந்தியாவை! பத்து வயசுல என் தோளில் ஊஞ்சல் ஆடின சந்தியாவை! பதினைஞ்சு வயசுல நான் போட்ட தாவணி எனக்கு அழகா இருக்கா? என கேட்ட சந்தியாவை! லவ் பண்ணினேண்! அவளைத்தான் லவ் பண்ணிகிட்டிருக்கேன்....! உன்னை இல்லைடி...! உன்னை இல்லை...!” அவன் கொதித்துப்போனான்.

“.......”

“உன்னைப்பொறுத்தவரை நான் பிடிக்காத கணவன்! என்னை பொறுத்தவரை நீ என்றுமே என்னை நாடாத மனைவி! சோ....உன் வழிக்கே வர்றேன்... நாம பிரிஞ்சுடலாம்! நானே டைவோர்ஸ் தர்றேன்...நீ நினைத்து போல...உன் அப்பா வாயாலேயே வரவழைக்குறேன்....என்னைப்பத்தி எனக்கு கவலை இல்லை! என்விதி உன் ரூபத்தில விளையாடுது! நான் காதலிச்ச அந்த பதினைஞ்சு வயசு சந்தியா திரும்ப கிடைப்பாள்னு கனவு கண்டுட்டு இருந்தேன்....காத்திருந்தேன்....அது எல்லாம் வேஸ்ட்னு நீ நிரூபிச்சிட்டே.” விரக்தியாக சொன்னான்.

“.......”

“ஓகே! எனிவே! இனி நீ உன்னை புண்ணாக்கவேண்டாம்! உன் மேலே ஒரு தூசிகூட படியாமல் நீ கேட்டது கிடைக்கும்...நினைத்தது நடக்கும்! நான் பெண்மையை மதிப்பவன், பூஜிப்பவன், அதனாலதான் இவ்வளவு தூரம் பேசிகிட்டு இருக்கேன்....! உன் அதிர்ஷ்டம் நான் இங்குள்ள சாராசரி ஆண்மகன் போல இல்லாதது. நான் படித்த நாடு எனக்கு கற்றுக்கொடுத்த நற்பாடங்களில் ஒன்று பெண்ணை சமமாக மதிக்க.அதைவிட என் தாய், தந்தையின் வாழ்க்கை முறை ஒரு முன் உதாரணம்”

“......”

“என் விதியை நானே எழுதிக்குறேன்..! நீ வேடிக்கை மட்டும் பாரு..!” அவன் கொந்தளித்துவிட்டு வெளியேறினான்.

சந்தியா சந்தோசப்படவும் முடியாமல், கவலைப்படவும் முடியாமல் தள்ளாடினாள். அவனது வார்த்தைகள் அப்படியே மீண்டும் மீண்டும் காதில் ஒலித்தது.
(coming)
 
  • Like
  • Sad
Reactions: Ruby and Maheswari

Ruby

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
96
33
28
Dindugul
🤐🤐🤐🤐

😥😥😥சந்து மா