18
“சந்தியா.....! சந்தியா.....!” அபர்ணா சந்தியா காதில் ஸ்பீக்கர் வைக்காத குறையாக கத்தினாள்.
“ஆ.....என்னடி? எதுக்கு காது மடல் பிஞ்சுடுற மாதிரி கத்துறே....?” காதை மூடியபடி தலையை நிமிர்த்தி பார்த்தாள் சந்தியா
“எத்தனை வாட்டி கூப்புடுறது? உன் காதில பஞ்சையா அடைச்சு வச்சிருக்கே.....? எந்த லோகத்துல இருக்கே....?”
“இந்த லோகத்தில தான்! வள வளன்னு பேசாம விசயத்தை சொல்லு...” எரிச்சலாக கேட்டாள்.
“ஃபைனல் எக்சாம் வருதுடி....! லீவு விடப்போறாங்க...! நாம வழக்கம் போல எக்சாமில ஒருத்தர் விட்லேதானே சேர்ந்து படிப்போம்..இந்தவாட்டி என்ன பண்றதா உத்தேசம்?”
பதில் சொல்லாமல் யோசித்தபடி அவளையே பார்த்தாள் சந்தியா.
“ஏய் பதில் சொல்லுடி...” பொறுமை இழந்து அபர்ணா அவளை உலுக்க,
“டீ அபர்.. அவளை விடு! அவ வீட்லேயே இருந்து படிச்சுக்கட்டும்...நாம வேணா சேர்ந்து என் வீட்லே படிச்சுக்கலாம்...” – சபரீனா.
“என்ன சந்த் அவ சொல்றது சரிதானா?” வனஜாவும் கேட்க,
“ம்....உங்க இஷ்டம்! நானும் உங்க கூட வந்து படிச்சுக்குறேன்...” பதிலளித்தாள் சந்தியா.
“வேண்டாம் தாயே! வழக்கமா நாமதான் உங்க ஹெஸ்ட் ஹவுசுக்கு வருவோம்....! உன் டாடி உன்னைவிட்டு இருக்க முடியாதுங்குறதால...இப்ப உங்கப்பா விட்டாலும் சந்தோஷ் விடுவாரா?” அபர்ணா கிண்டலாக பார்க்க,
“நீ அவர் கூடவே இருந்துக்கோ...! எங்களை விட்டுடு....! ஆல்ரெடி உங்கப்பா ஃபோன் போட்டு சொன்னாரு சந்தியா இந்த வாட்டி நம்ம வீட்லே தனியாத்தான் படிப்பான்னு....அவளை டிஸ்டர்ப் பண்ணாதீங்கன்னுட்டாரு...” சபரீனா சீரியஸாக சொன்னாள்.
“ஏய் என்ன? பொய்யா சொல்றே? என் டாடி அப்படி எல்லாம் சொல்லியிருக்கமாட்டாரு...”
“உன் டாடி சொல்லலை...” சப்ரீனா ராகத்தோடு இழுக்க,
“அப்ப யாரு....? சந்தோஷா....? அவரும் சொல்லியிருக்கமாட்டார்..நீங்க உங்க பாட்டுக்கு வளவளக்காதீங்க......” கோபமாக முறைத்தாள் சந்தியா.
“அடியேய் சந்தியா! நாங்க வள வளக்கலை! நீ எங்கேருந்து படிச்சாலும் சரி! சும்மா சொல்லி பார்த்தோம் நீ என்ன சொல்றேன்னு பார்க்க” வனஜா புன்னகைக்க,
“ம்....ஆழம் பார்க்குறீங்களா...போங்கடி உங்களுக்கு வேற வேலை இல்லை! நான் உங்க கூட படிக்க வரலை தனியா படிச்சுக்குறேன்... போங்க....” எரிந்து விழுந்தாள்.
“ஓ...! உன் ஆசை நாயகனோடு படிக்கிறேனனு சொல்ல வர்றீயா?” சபரீனா விரலை கடித்தபடி கேட்டாள்.
“ச்சே...தொடங்கிட்டீங்களா? ஆசை நாயன்... அருமை நாயகன்னு....உங்களுக்கு இதே பொழைப்பா போச்சு....” எரிச்சல் மேலிட எழுந்தாள்.
“ஏண்டி கோவிச்சுக்குறே? நாங்க உன்னை கிண்டல் பண்ணாம வேற யாரு கிண்டல் பண்ணுவாங்க....சும்மா ஜாலிக்குத்தான்...” - தாஜா பண்ணினாள் அபர்ணா.
“உங்க ஜாலிக்கும் கிண்டலுக்கும் நாந்தானா கிடைச்சேன்....?”
“ஆமாண்டி நம்ம குரூப்லே ஏன் காலேஜில கல்யாணம் ஆனவ நீ ஒருத்தி தான்...”
“ஸ்டாபிட்....! சும்மா சும்மா மேரேஜ் ஆனவ... மேரேஜ் ஆனவள்னு என்னை வெறுப்பேத்தாதீங்க....நான் வர்றேன்...” அவள் கிளம்பிப்போனாள்.
“ஏய் எங்கே போறே? கிளாசுக்கு வரலை....” சபரீனா கத்தினாள்.
“ஏய் விடுங்கடி! போகட்டும் அவளுக்கு சந்தோஷ் கூட சந்தோஷமா இருக்க முடியலைங்கிற ஃபீலிங்...இடைஞ்சலா .ஐ.ஏ.எஸ். சில வந்து மாட்டிகிட்டா...” வனஜா சொல்ல கிடைத்த கற்களை எடுத்து அவர்கள் மீது வீசிவிட்டு போனாள்.
“ச்சே....இவளுகளுக்கு வேற வேலை இல்லை! வீட்லே இருந்தா அவங்க தொல்லை தாங்க முடியலை! இங்கே வந்தா இவளுங்க..ஏன் தான் இப்படி பேசிப்பேசி உயிரை எடுக்குறாங்களோ....” நொந்தபடி ஸ்கூட்டியை தள்ளிக்கொண்டு காலேஜ் கேட்டுக்கு அருகில் வந்தாள்.
“என்னம்மா? கிளாசு கட்டா?” வாட்ச்மேன் கேட்க,
“தெரியுதுல்லே.....அப்புறம் என்ன கேள்வி...?” யார் மேலே இருந்த கோபமோ அவனிடம் பாய்ந்தது.
“எக்ஸாம் வருது...நீ இப்படி கட்டடிச்சா எப்படி?” அவன் அக்கறையாக சொல்ல,
“அது என் கவலை! வாட்ச்மேன் உங்க வேலையை மட்டும் பாருங்க...” அவள் பேச வாட்ச்மேன் திகைத்து பின் தலையாட்டியவாறு கேட்டை திறந்துவிட்டான்.
நேராக நேரு பார்க்கிற்கு வந்தாள். ஏற்கனவே ஹரி வந்து காத்திருந்தான்.
“ஹாய் ஹரி...ரொம்ப நேரமா காத்திட்டிருக்கியா?” கேட்டபடி அவனுக்கு எதிராக அமர்ந்தாள்.
“உன்னை காதலிச்சுட்டேனே....காத்திருக்கத்தானே வேணும்...”
“ஏய்....ஸாரிபா... காலேஜில் இருந்து கிளம்புறதுக்குள்ளே போதும் போதும் என்றாயிடுச்சு....” என்றாள் கண்களால் மன்னிப்பு கேட்டபடி
“ஏன்”
“என் பிரண்ட்ஸ்ங்க...லொள்ளுக்கு அளவே இல்லாமப்போச்சு....அவன் பேரச் சொல்லியே என்னை வெறுப்பேத்துறாளுங்க...வீட்லே இருந்தா பாட்டி, அத்தை, அம்மான்னு ஒரு கூட்டம்...ச்சே அங்கே போகவே புடிக்கலைடா” சந்தியா வெறுப்போடு புலம்ப,
“அப்ப என் வீட்டுக்கு வந்துடு...” ஹரி குறும்பு புன்னகையுடன் அவளை பார்த்தான்.
“அய்யோ என்ன நீ? குண்டைத்தூக்கி போடுறே...! உன் வீட்டு பேரைச்சொன்னாலே என் விட்டு காம்பவுண்டு எகிறும்...இதில உன் வீட்டுக்கு நான் வர்றதா? வேண்டாம் பொறுத்திருப்போம்....”
“ம்...ம்....நான் ஒரு பேச்சுக்கு சொன்னேன்....ஆமா இப்ப எந்த கண்டிசன்லே இருக்கு உன் வீட்டு நிலமை....” அவன் கேட்க நைட்டு நடந்ததை சொன்னாள்.
“ம்....” தலையாட்டியபடி கேட்டுக்கொண்டிருந்தவனை பார்த்து,
“விட்லே எல்லோரும் குழம்பி போயிட்டாங்க ஹரி...” என்றாள் ஆச்சர்யமாக,
“அதுதானே வேணும்...! அவன் செய்யுற செயல்களுக்கு நீ எப்படி ரியாக்சன் கொடுக்கணும்னு சொல்றேன் கேட்டுக்கோ....” அவன் சொல்ல சொல்ல சந்தியா மனதில் பதித்துக்கொண்டாள்.
“பேசாம நானும் லாயருக்கு படிச்சிருக்கலாம்....பயங்கர மூளைடா உனக்கு!” அவன் தலையில் செல்லமாக குட்டினாள்.
“கடவுளே...! மின்சாரம் என் மீது பாய்கின்றதே...” அவன் கிறக்கமாக அவளை பார்த்தபடி பாட,
“ச்சீ போடா....!” மறுபடியும் கையை ஓங்கினாள்.
“ஏய் இந்தவாட்டி என் கன்னத்துல அடியேன்...”
“அலையாதே!” கண்கள் பளபளக்க அவனை செல்லமாக முறைத்தாள்.
“சரி! ஆமா எக்ஸாம் வருதே.. நீ படிக்குறே? இப்படி காலேஜ் கட்டடிச்சா.....”
“ஏய் நான் என் லட்சியத்தோடு தான் இருக்கேன்.....உன்னை பார்க்க வருவதால நான் காலேஜ் கட்டடிக்கறதால ஒண்ணும் என் படிப்பு கெட்டுவிடாது.! நீ கவலைப்படாதே..!”
“கவலைப்படாமல்....வருங்கால ஐ.ஏ.எஸ் மேடம் இந்த லாயருக்கு மனைவி....! ம்...அப்புறம் நான் சலாம் போட்டு மேடம்னு தான் கூப்பிடணும்....” பெருமையாக அவளை பார்த்தான்.
“ச்சீ போடா! நான் என்னவானாலும் உன் சந்தியாதான்....நீ ஒண்ணும் சலாம் வைக்க வேண்டாம்....அய்யோ” வாட்சை பார்த்து பதறினாள்.
“என்ன?”
“உன்கூட பேசினதுல காலேஜ் டைம் முடிஞ்சுடுத்து கவனிக்கலை! இப்ப நான் வீட்லே இருந்தாகணும்.....அப்புறம் படுபாவித்தோழிங்க நான் வீட்லே இருக்கேன்னு ஃபோன் போட்டு பேசிடபோறாளுங்க....” அவசரமாக ஸ்கூட்டியை கிளப்பினாள்.
“ம்...பதறாம ஸ்கூட்டியை ஓட்டு...”
“சரி சரி....வர்றேன்...பாய்;....நாளைக்கு பார்க்கலாம்...” சிட்டாக பறந்து போனவளை ரசித்தவண்ணம் கிளம்பினான்.
(coming)