• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

எங்கே என் மனம் - அத்தியாயம் 24

S.JO

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
80
24​

“அப்பா சாரங்கா....நாம சந்தோஷுக்கு மேரேஜ் ஆகணும்கிறதுக்காக திருப்பதி வடபழனி, இப்படி சந்நிதானத்துக்கு வந்து அன்னதானம் செய்யுறோம்னு வேண்டிகிட்டோமே ஞாபகம் இருக்கா? அவனுக்கு நேர்ந்துகிட்டது செய்யலை. அதனாலதான் என்னவோ இப்படியெல்லாம் நடக்குது...குடும்பத்தோடு ஒருவாட்டி தரிசித்துட்டு நிறைவேத்திட்டு வரலாம்பா....” ரங்கநாயகி

“தொடங்கீட்டீங்களா? உங்க பழைய பஞ்சாங்கத்தை...” - கிண்டலாக கேட்டார் சக்திவேல்.

“நீ சும்மா இருப்பா....அத்தை சொல்றது தான் சரி....யார் கண்பட்டதோ.... சந்தோஷமாக இருந்த நம்ம விடு இப்ப எப்படி இருக்கு? வாங்க போயிட்டு வரலாம்...” கடவுளிடம் வேண்டிகொண்டாலாவது சந்தோஷ் மனது மாறி தன மகள் வாழ்வில் வசந்தம் வீசாதா ? என்ற ஆசையில் மகாலக்சுமியும் சரி என்றாள்.

“எல்லோரும் எப்படி போறது? சந்தியாவுக்கு எக்ஸாம்..அவ தனியா இருப்பாளே...” என்றாள் சாரதா கவலையுடன்.

“எதுக்கு தனியா இருக்கணும்? சந்தோஷை கேட்டா அவன் மாட்டேன்னு தான் சொல்வான். அவனும் இருக்கட்டும் அவளுக்கு துணையாக....அத்தோடு அவங்களை தனிமையில விடுறதுக்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பம்..” .- புவனா தன எண்ணத்தை சொல்ல,

“ஆமா தனிய விட்டா மட்டும் அவன் திருந்திடுவான்..” ப்ரீத்தி கோபமாக கேட்டாள்.

“நீ பேசாம இரு..எனக்கும் இந்த ஐடியா சரியாத்தோணுது....” சங்கீதாவும் இதற்கு சம்மதிக்க,

“எல்லோரும் சொல்றீங்க..உங்க இஷ்டம்! எது செய்தாலும் அவங்க சந்தோசமா இருப்பாங்கன்னா போலாம்....” சாரங்கன் அதுவரை மூடியிருந்த உதட்டை பிரிக்க. மற்றவர்கள் முகத்தில் தெளிவு பிறந்தது.

சந்தோஷ் தோட்டத்திலே இருந்தான். சத்தம் கேட்டு திரும்பினான். சிறியவர்களுடன் ப்ரீத்தி நின்றிருந்தாள். அவர்கள் அருகில் வந்தான். தன் தோள்களை காட்டி ஏறுங்க என்றான். அவர்கள் பேசாமல் நிற்க குனிந்து

“என்னங்கடா.....?”

“ம்ஹூம்....நீ எங்க கூட பேசாதே! உன்னை எங்களுக்கு புடிக்கலை.....போ’’ அவர்கள் அது சொல்லத்தான் காத்திருந்தவர்கள் போல சொல்,ல

“நீங்களுமா என்னை வெறுக்குறீங்க?”
 சந்தோஷ் கவலையுடன் பார்த்தான்.

“இல்லை! நீதான் எங்களை வெறுக்குறே....!”
 அபிஷேக், அஜய், ஆரணி மூவரும் கண்களில் நீருடன் குறை கூறினார்.

“சந்தியா உனக்கு என்ன செய்தா..? எதுக்கு அவளை டைவோர்ஸ் பண்றே? நீ பெரிய உத்தமன்னு நினைச்சுட்டிருந்தேன்...! என் சந்தியாக்காவுக்கு எப்படி தூரோகம் பண்ண உனக்கு மனசு வந்தது? வீ கேட் யூ! நீ எங்க சந்தோஷ் இல்லை..!” ப்ரீத்தி அழுதபடி சொல்ல, சந்தோஷ் கலங்கிய விழிகளுடன் அவளைத்தொட தட்டிவிட்டாள்.

“வாங்கடா போகலாம்!” அவர்களையும் அழைத்துக்கொண்டு போக சந்தோஷ் முகம் இறுக நின்றிருந்தான்.



நேற்றைய பிரச்சனைக்கு பின் அவன் ஒதுங்கியே இருந்தான். அவர்களும் அவன் கண்முன்னால் நடமாடினால் போதும் என்று இருந்துவிட்டனர். ஒட்டுமொத்தமாக எல்லோரும் கிளம்பிக்கொண்டிருந்தனர். பார்த்தவன் எங்கே என்னை விட்டுட்டு போறீங்கன்னு ? தொண்டை வரை வந்த கேள்வியை அடக்கியபடி பேசாமல் நின்றான்.

சாரங்கன் அவனருகில் வந்து.

“உனக்கு மேரேஜ் ஆனா திருப்பதிக்கு வந்து அன்னதானம் பண்றேன்னு வேண்டிகிட்டேன்பா....அது நிறைவேத்த கிளம்பிகிட்டிருக்கோம். சந்தியாவுக்கு எக்சாம் இருக்கு. அவ வீட்லே தனியா இருப்பா.....கௌதம் கேஸ் விசயமா பெங்களூர் கிளம்பறான்....நீ...நீ நான் வரும் வரைக்கும் சந்தியாவுக்கு துணை...” மேலே பேச அவருக்கு தொண்டை அடைத்தது.

தனக்காக கோயில் போகும் அந்த குடும்பத்தின் பாசத்தை பார்த்தவனுக்கு உருக்குலைந்து போனான். சந்தியாவால் தான் இது எல்லாம் என்று சொல்லிவிடுவேனோன்னு பயந்து தலைகுனிந்தபடி,

“ம்....ம்....” என்றான் உணர்ச்சியற்ற குரலில். அவர்

‘நன்றிப்பா’ என்று சொல்லிவிட்டு கிளம்பினார்.

சந்தியா ஸ்கூட்டியை தள்ளியபடி சோர்வாக வந்து சேர்ந்தாள். அனைவரும் வண்டியில் ஏறிக்கொண்டிருக்க புரியாமல் தந்தையை பார்த்தாள்.

“ஏய்....சந்தியா! நாம திருப்பதி போறோம்....சந்தோஷும் நீயும் சந்தோஷமாக வாழணும்னு...சாமிகிட்டே வேண்டிக்கப்போறோம்....” அஞ்சு வயசு அஐய் எகிறிகுதித்தான். சந்தியா தந்தையை ஏறிட்டாள்.

“ஆமாம்மா...! நாம கோயிலுக்கு கிளம்பிட்டிருக்கோம்! உனக்கு டிஸ்டர்ப் இல்லை படிச்சுக்கோ....சந்தோஷ்கிட்டே பேச்சு வச்சுக்காதே! அவனாக வந்து பேசினா பேசு.. அவன் தன்பாட்டுக்கு இருக்கான் ஏதும் கேட்டுவச்சிடாதே!” தந்தை சொல்ல தலையாட்டினாள்.

சந்தியா போகும் அவர்களை பார்த்தவாறு உள்ளே நுழைந்தாள்.

“சின்னம்மா....காபி கொண்டாரட்டா......” வேலைக்காரி சரஸ்வதி

“வேண்டாம்....” அவள் உடைமாத்திவிட்டு ஹாலுக்கு வந்தாள். வீடு வெறிச் என்று இருந்தது. பார்க்க எரிச்சலாக வந்தது. தோட்டத்துப்பக்கம் போனாள். தோட்ட மணலில் சந்தோஷ் வானத்தை பார்த்தபடி படுத்திருந்தான். அவனை டிஸ்டர்ப் பண்ணாமல் தோட்டத்து மறுபக்கம் போய் அமர்ந்தாள். முழங்காலில் முகம் வைத்து யோசனையில் ஆழ்ந்தாள். எத்தனை மணிநேரம் அமர்ந்திருந்தாளோ தெரியாது,

“சந்தியா....சந்தியா...” குரல் கேட்க திடுக்கிட்டு திரும்பினாள்.

“பனி பெய்யத்தொடங்கிடுத்து....உளளே வந்து திங் பண்ணு.” சந்தோஷ் சொல்லிவிட்டு திரும்ப அவள் அசையாது இருந்தாள்.

“வான்னு சொல்றேன் இல்லே..” அவன் அதட்ட பேசாமல் எழுந்து வந்தாள்.

வேலைக்காரி வைத்துவிட்டுப்போன உணவு மேசையில் மூடியபடி இருந்தது. அவன் சாப்பாட்டுப்பக்கமே போகவில்லை. அவளும் போகவில்லை. அவன் டீவியை ஆன் செய்து அதிலே ஆழ்ந்தான். பக்கத்து சேரில் அமர்ந்து படிப்பதும் அவனை பார்ப்பதுமாக இருந்தாள்.

“நீ சாப்பிடலை...?” அவன் குரல் மீண்டும்.

“நான் சாப்பிட்டா என்ன? சாப்பிடலைன்னா உங்களுக்கு என்ன?”

“எனக்கொண்ணும் இல்லை...உனக்குத்தான் படிப்பு ஏறாது! எக்ஸாம் எழுதமாட்டே... அப்புறம் உன் இஷ்டம்” அவன் சொல்லிவிட்டு போக,

“சந்தோஷ்....” அழைத்தாள்.

“என்ன?”

“நீங்க சாப்பிடலை?” கேட்டவளை கூர்ந்து பார்த்தான்.

“இது என்ன புதுசா இருக்கு?” விழிகளில் ஆச்சர்யத்ததுடன் அவளை நோக்கினான்.

“இ...இல்லே நாம ரெண்டு பேரும் தான் இருக்கோம்....”
 தயங்கியவாறு அவனை பார்த்தாள்.

“அதனால..?” அவன் புருவம் சுருங்க கேட்டான்.

“என்னை சாப்பிடச்சொன்னீங்க...அ..அதைப்போல உங்களையும்...”

“ஓ பார்மாலீட்டீஸ்...? அதானே பார்த்தேன்...என்னமோ அக்கறையில கேட்குறேன்னு அப்படியே பூரிச்சுப்போயிட்டேன்....” அவன் கேலி செய்தபடி சிரித்தான். அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

“ஓகே! எனக்கு பசியில்லை...நான் தூங்கப்போறேன்..உனக்கு பயம்மா இருந்தா உன் ரூம்லே வந்து படிச்சுக்கோ....” அவன் சொல்லி விட்டு மாடி ஏற,

“சந்தோஷ்...” மீண்டும் அழைத்தாள் அவன் பழைய நினைவில் கனிவாக

“என்னம்மா...?” என்றுவிட்டு முகம் மாறி “என்ன” என்றான் அதட்டலாக. அவள் மௌனமாக இருக்க
அவனே தொடர்ந்தான்.

“என்னடா டைவோர்ஸ் கேட்டுட்டு அதற்கு பின்னால இவன் இங்கு இருந்தா எப்படி நடக்கும் நாம கேட்டதுன்னு கவலைப்படுறீயா? உன் அண்ணன் பாத்துப்பான் அது விசயமாகத்தான் பெங்களூர் போயிருக்கான்...”

“.............”

“நீ எதுக்கு என்னை புடிக்கலைங்கிற காரணத்தை அன்னிக்கே சொல்லியிருக்கலாம்.... நீ அப்பன் ஆத்தா பேர் தெரியாத இல்லீகல் வழியில பொறந்தவன் உன்னைப்போய் நான் எப்படி கல்யாணம் செய்துக்குறது...? என்று முகத்திலடித்தது போல பேசியிருக்கலாம்.... இவ்வளவு தூரம் காத்திட்டிருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது!” அவன் பேச அவள் உதடடைக்கடித்தபடி பேசாமல் நின்றாள்.

“எனக்கு உன் மேலே கோபமோ வருத்தமோ...இல்லை! நீ கேட்டதில நியாயம் இருக்கு.. டைவோர்ஸ்க்கு அப்புறம் உனக்கு புடிச்சவனா பொருத்தமானவனா பார்த்து கல்யாணம் பண்ணிகிட்டு சந்தோசமா வாழ என் மனமார வாழ்த்துக்கள்” அவன் பேச அவள் வெளியே ஒடினாள். ஒரு நிமிடம் திகைத்து பின்னால் ஓடிவந்தான்.

“சந்தியா....சந்தியா...மழை வேற பெய்யுது....எங்கே இருக்கே....?” வெளியே வந்தான். அவள் கைகளை குறுக்கே கட்டியபடி மழையில்.

“ஏய் என்ன இது? மழையில நனைஞ்சுகிட்டு...? நாளைக்கு எக்ஸாம் இருக்கு..என்ன விளையாட்டு இது?” அவன் அதட்ட அவள் அசையாது நின்றாள்.

“சந்தியா உன்கிட்டேதான் பேசிகிட்டுருக்கேன்...உள்ளே வா முதல்லே...நீ இப்படி நனையுறதை பார்த்தா நாந்தான் உன்னை தள்ளிவிட்டுட்டேன்னு பேசுவாங்க..ப்ளீஸ் உள்ளே வா” அவன் கெஞ்சலுக்கு போனான். அப்பவும் அவள் அசையாது நிற்க,

“ஏய் சொல்றேன் இல்லே....வரமாட்டே...“அவளை இழுத்து அப்படியே அலாக்காக தூக்கியபடி வெளிக்கதவை அறைந்து சாத்தினான்.

“விடுங்க...என்னை விடுங்க..” அவள் திமிற,

“ச்சு..பேசாம கிட...! நான் ஒண்ணும் உன்னை ரேப் பண்ணலை...! மழையில நனைய ஆசைன்னா அதுக்கு இதுவா நேரம்...? நனையுறாளாம்....இடியட்.” உள்ளே போய் அவளது டிரஸ்களையும் டவலையும் எடுத்து வந்து அவள் முகத்தில் விட்டெறிந்தான்.

“ஸாரி உன்னை தொட்டு தூக்கியதுக்கு...” அவன் சொல்லிவிட்டு மாடிக்கு போக, அவள் துவட்டாமல் இருந்தாள். நின்று திரும்பினான்.

“என்ன துவட்டாமல்...இப்படியே இருக்க போறீயா?” கோபமாக கேட்டபடி அவள் முன்னால் வந்து நின்றான்.

“இதப்பாரு....உன்னைத்தொட்டு தூக்க நான் யோசிக்கலை....! அப்புறம் தொட்டு டிரஸ் கழட்டவும் தயங்க மாட்டேன்..! மரியாதையா துவட்டிட்டு டிரஸ் சேஞ்ச் பண்ணிக்கோ...” அவன் மிரட்ட அவனை பாத்தபடி நின்றாள்.

“சந்தியா! என் கோபத்தை கிளறாதே! அப்புறம் எக்கேடும் கெட்டுப்போன்னு போயிடுவேன்..”

“போங்க...!” அவள் உதடு திறக்க சினம் மேலிட பார்த்தான்.

“ச்சை...” அவன் தலையில் அடித்துக்கொண்டு படியேறி கதவை சாத்தினான். இவள் அவன் போன திசையை பார்த்தவண்ணம் தலையை துவட்டத்தொடங்கினாள்.
 

Ruby

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
96
அடுத்த பைத்தியமா இவளுக்கு🤦🤦🤦
 

Ruby

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
96
ஜன்னி வரட்டும் விடு டா
 
Top