• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

எங்கே என் மனம் - அத்தியாயம் 25

S.JO

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
80
79
18
Paris

25​

காலை விடிந்தது பாதி விடியாதது பாதியாக எழுந்து சந்தியா பரபரப்பாக எதையோ எடுத்து வைப்பதும் போவதுமாக இருக்க அவளை நோட்டம் விட்டபடி சந்தோஷ் காபி குடித்துக்கொண்டிருந்தான்.

ஸ்கூட்டியை ஸ்ராட் செய்தாள் அது வேலை செய்ய மறுத்தது. மீண்டும் மீண்டும் முயற்சி செய்து வெறுத்துப்போக முணு முணுத்தபடி அவன் முன்னால் வந்து நின்றாள்.

“என்ன?”

“ஸ்கூட்டி மக்கர் பண்ணுது...”

“அதுக்கு நான் என்ன பண்ணறது?” குதர்க்கமாக கேட்டவனை முறைத்தாள்.

“ஒண்ணும் பண்ண வேண்டாம்....வந்து என்னெண்ணு பார்த்தா போதும்!” எங்கோ பார்த்துக்கொண்டு சொன்னாள்.

“நான் ஒண்ணும் மெக்கானிக் இல்லை..” அவன் விட்டேற்றியாக சொல்ல மறுபடியும் முறைத்தாள்.

“நா..நான் காலேஜ் போகணும்.....”

“போய்க்கோ...”

“எப்படி போறது?”

“என்னைக்கேட்டா....”
“எ....எ..என்னை டிராப் பண்ண முடியுமா....?” அவள் குனிந்த தலை நிமிராமல் கேட்க,

“எல்லா வண்டியும் திருப்பதி போயிருக்கு..”

“அண்ணனோட பைக் இருக்கு...” தயங்கியவாறு கூறியபடி அவனைப் பார்த்தாள்.

“பைக்கா...?” அவன் ஏதோ ஜோக் கேட்டது போல சிரிக்க குழப்பமாக அவனைப் பார்த்தாள்.

“பைக்கிலே எப்படி போவே...?”

“நீ..நீங்க டிராப் பண்ணினா?”

“நானா? பலே....! பைக் பின்னாடி இருந்தா...உன் கண்டிசன் படி என் நிழல் மட்டும் இல்லை...என் உடல் கூட உன்னை உரசுமே...” அவன் நேரம் காலம் தெரியாமல் காலை வாற அவளுக்கு கண்கள் கலங்கியது.

“சந்தோஷ் எனக்கு நேரமாச்சு....”

“இரு..ஆட்டோ..புடிச்சுகொண்டு வர்றேன்.....” அவன் எழுந்து கொள்ள

“தேவை இல்லை...! நான் நடந்தே போய்க்கிறேன்..” அவள் துப்பட்டாவை எடுத்து மாட்டியபடி படிகளில் இறங்கினாள்.

“சந்தியா..! இரு..” என்றுவிட்டு பைக்கை எடுத்து வந்து அவள் முன்னால் நிறுத்தினான்.

“ஏறிக்கோ..! பயப்படாமல் ஏறு....! எந்த ஸ்பீடு பிரேக்கரிலும் பிரேக் போடாது..உன் உடம்பு என்மேலே படாதவாறு ஓட்டுறேன்...” அவன் சிரித்தபடி சொல்ல, முறைத்தவாறு ஏறி உட்கார்ந்து புத்தகத்தை பிரித்து வைத்து படிக்கத் தொடங்கினாள். அவளுக்கு எங்கே வலித்துவிடுமோ என்கிறமாதிரி லாவகமாக ஓட்டினான். எதிர்பாராத இடத்தில் பள்ளம் இருக்க ஒரு நிமிடம் அவளது கை அவனது தோள்களை அணைத்தது. சந்தோஷ் ஷாக் ஆகி சட்டென்று வண்டியை ஓரமாக நிறுத்தினான்.

“ஏன் நிறுத்திட்டீங்க..?”

“இறங்கு முதல்லே...” அவன் அதட்ட, புரியாமல் இறங்கினாள். தன் கையை எடுத்து அவளது நெற்றி, கழுத்து என தொட்டுப்பார்த்தான். உடல் சுட்டது.

“ஏண்டி அறிவு கெட்டவளே! இந்த ஜுரத்தோடதான் எக்ஸாம் எழுதப்போறீயா?” அவன் கேட்க அவள் பதில் ஏதும் சொல்லாமல் மௌனமாக இருந்தாள். கோபமாக பைக்கை நிறுத்திவிட்டு சுற்று முற்றும் பார்த்தான். பக்கத்தில் பார்மசி இருக்க ஓடிப்போய் மருந்தும் தண்ணீர் பாட்டிலும் வாங்கி வந்தான்.

“ம்..இந்தா..இதில ஒண்ணை போட்டுக்கோ..” அவன் நீட்ட அவள் வாங்காது பார்த்தாள்.

“ஏய் போடுன்னு சொல்றேன் இல்லே.....” கையில் திணித்தான். அவள் மீண்டும் அவனை பார்க்க,

“சந்தியா றோடுன்னு கூட பார்க்க மாட்டேன்.... அறைஞ்சுடுவேன்...மாத்திரையை போடு..” அவன் அதட்ட பேசாமல் சொன்னபடி செய்தாள்.

“ம்..இந்தா இதில மதியம் ஒண்ணு போட்டுக்கோ...சாயந்திரம் டாக்டர்கிட்டே போலாம்....” அவளது ஹேண்ட் பேக்கில் வைத்துவிட்டு ‘ஏறிக்கோ’ என்றான்.

அடுத்த அஞ்சு நிமிசத்தில் காலேஜ் முன்னால் வந்து நின்றது வண்டி

“எத்தனை மணிக்கு எக்சாம் முடியும்....?”

“தெரியாது..”

“சரி...எத்தனை மணிக்கு காலேஜ் முடியும்?”

“தெரியாது...” அவள் அதே பாணியில் சொல்ல,

“போ....போ..! முதல்லே எக்ஸாம் எழுது....! அதுக்கும் தெரியாதுன்னு எழுதாம..என் தலைவிதி..” அவன் சினத்துடன் பைக்கை உதைத்தான். அவள் தனக்குள் சிரித்துவிட்டு உள்ளே போனாள்.

எக்ஸாம் முடிந்தது. மூணு மணி போல வெளியே வந்தாள். சந்தோஷ் பைக்கில் காத்துக்கொண்டிருந்தான்.

‘எவ்ளோ நேரமா காத்திட்டிருக்கார்?’ தன்னைத்தானே கேட்டபடி அவனருகில் வந்தாள்.

‘ரொம்ப நேரமா காத்திருக்கீங்களோ?’’ அவள் சிரித்தபடியே கேட்க,

‘இல்லை....! இதோ இந்த காலையிலிருந்து தான் காத்திட்டிருக்கேன்...போதுமா?’’ அவன் குரலில் கிண்டல் தொனிக்க பைக்கை உதைத்தான். அவள் அமைதியாக ஏறி உட்கார்ந்தாள்.

‘என்ன எக்ஸாம் நல்லபடியா எழுதியாச்சா?’’

‘ஏதோ எழுதியிருக்கேன் உங்களுக்கு என்ன?’

‘அது சரி! எனக்கென்ன? நீ போகிறப்பவே நினைச்சேன்....! இப்படித்தான் எழுதுவேன்னு...! கரக்டா நிரூபிச்சுட்டே....அப்புறம் ரிசல்ட்டை பார்க்கத் தேவலைன்னு சொல்லு...!’’

‘சோம வண்டியை ஓட்டுங்க...! எப்பாரு கிண்டலும் எரிச்சலுமா கேசிகிட்டு...’’ முணுமுணுத்தாள்.

‘என்ன யாரு எரியுறா?’’ அவன் கேட்க

‘யாருமில்லை....’’

‘ஆமா ஜுரம் எப்படி இருக்கு?’’ அவன் மீண்டும் வாயைத்திறந்தான்.

’......’’

‘கேட்குறேன் இல்லே....! இப்ப எப்படி இருக்கு?’’

‘சாதாரண ஜுரம்...! அதுபாட்டுக்கு வந்துச்சு போயிச்சு... அப்புறம் என்ன கேள்வி?’’

‘ம்... டாக்டர்கிட்டே போயிட்டு போகலாம்....’’

‘நான் வரலை..!’’

‘நீ வராட்டி போ! நான் போய்க்கிறேன்....!’’ அவன் பைக்கை கிளினிக்குக்கு விட்டான்.

‘போய் உங்களுக்கு டிரீட்மெண்ட் எடுத்துக்கோங்க...’’
‘

அதெப்படி? உனக்குத்தானே ஜுரம்....’’

‘நாந்தான் வரலைன்னு சொல்றேனில்லே?’’ அவனையே கூர்ந்து பார்த்தபடி சொன்னாள்.

‘நீ சொல்வே அப்புறம் நைட்லே ஜுரம் வந்து நீ புலம்ப யார் இருக்கா? உன் பக்கத்திலே இருந்து பாத்துக்க? நான் மாட்டேன்’’. என்றவனை கோபமாக பார்த்தாள்.

‘இந்த முறைப்பெல்லாம் வேண்டாம்....வா டாக்டர்கிட்டே போலாம்...’’

‘நான் வரமறுத்தா...?’’

‘ம்..டாக்டரை வரவழைச்சுடுவேன்..! இல்லைன்னா...குண்டுகட்டா துக்கிட்டுபோய் பெட்டில போட்டுடுவேன்...’’ அவன் மிரட்ட,

‘எனக்குத்தானே ஜுரம் உங்களுக்கு என்ன வந்தது? சொன்ன வேலையை மட்டும் செய்யுங்க’’
உதட்டை சுளித்தாள்.

‘நீ சொன்னதை கேட்டதாலதான் நான் இப்படி இருக்கேன்...! பேசாம வா...!’’ அவன் அதட்டலில் மறுபேச்சு இல்லாமல் போனாள். மாத்திரையும் எழுதி இன்ஜெக்சனும் போட்டுவிட்டார் டாக்டர். அவள் ஏதோ முணுமுணுத்துக்கொண்டு வந்தே வண்டியில் ஏறினாள்.

‘என்ன திட்டிகிட்டே வர்றே போலிருக்கு’’

‘நான் யாரையும் திட்டலை! முதல்லே வண்டியை எடுங்க...!’’ உம்மென்று முகத்தை வைத்துக்கொண்டு ஏறி உட்கார்ந்தாள்.

‘ஓகே’’ அவன் பேசாமல் ஓட்டினான்.

‘ஹேய் சந்த்....!’’ பக்கத்தில் குரல் கேட்க திரும்பினாள் ஹரி பைக்கில் வந்து கொண்டிருந்தான் அவனது பார்வை இருவரையும் மாறி மாறிபார்த்தது. உடனே அவனது முகம் கறுத்தது. சந்தோஷ் திரும்பி பார்த்துவிட்டு பேசாமல் வண்டி ஓட்டுவதில் கவனமானான்.

‘உன் ஸ்கூட்டிக்கு என்னாச்சு?’’
ஆராய்ச்சி பார்வை ஒன்றை சந்தியாவின் மேல் வீசினான்.

‘மக்கர் பண்ணிச்சு மெக்கானிக் வந்து பார்க்கணும்...’’ அவனை பாராமல் பதில் சொன்னாள். அவன் மேலும் கீழும் பார்த்துவிட்டு வண்டியை முன்னால் ஓட்டிக்கொண்டு போக சந்தோஷ் சினேகமாக புன்னகைக்க. ஹரி தலையை திருப்பிக்கொண்டு பேனான்.
(coming)
 
  • Like
  • Love
Reactions: Ruby and Maheswari

Ruby

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
96
33
28
Dindugul
இவ என்னை சாக அடிக்கிரா😳😳😳😳 ரெண்டே எபிசோட் ல கிறுக்கு பிடிக்குது எனக்கு😥😥😥😥
 

Ruby

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
96
33
28
Dindugul
அடியே இப்போ தான் உன் துரு பிடிச்ச மூளை வேலை செய்யுதோ?🤔🤔🤔

கௌதம அவனுக்கு உண்மை தெரிஞ்சு இருக்குமோ? 🤔🤔