• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

எங்கே என் மனம் - அத்தியாயம் 26

S.JO

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
80
79
18
Paris
26​

வீடு வந்து சேர்ந்தனர். அவன் பைக்கை செட்டில் விட்டுவிட்டு அவளது ஸ்கூட்டியோடு வெளியே போக ஆழமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு சந்தியா மாடிக்கு போனாள். பத்து நிமிடம் கழித்து ஸ்கூட்டியை ஓட்டியபடி வந்தான் சந்தோஷ். அவள் குளித்துவிட்டு கூந்தலை காயவைத்தபடி ஹாலுக்கு வர அவள் முன்னால் ஸ்கூட்டியின் சாவியை நீட்டினான். வாங்கியபடி அவனை பார்க்க அவன் சிரித்தபடி எதுவும் பேசாது போக முற்பட்டான்.

‘யாருன்னு கேட்கமாட்டீங்களா?’’ அவன் முதுகை பார்த்துகேட்டாள்.

‘யாரை? யார்னு கேட்கணும்....?’’
உதட்டில் புன்னகை தவழ அவளை திரும்பி பார்த்தான்.

‘அ...அதுதான் ரோட்டில என்கூட பேசினாரே...அவரை...’’

‘ஓ அவரா...? யாரா இருந்தா எனக்கென்ன?’’ அவன் அலட்சியமாக சொன்னான்.

‘நான் ஒருத்தன் கூட பேசுறேன். என்ன ஏதுன்னு கேட்கத்தோணலையா உங்களுக்கு?’’ அவள் எரிச்சலாக கேட்க,

‘இல்லை! எதுக்கு கேட்கணும்? அவர் யாரு? நீ யாரு? எனக்குத்தேவை இல்லாத விசயம். அடுத்தவங்க விசயத்துல நான் எப்பவும் மூக்கை நீட்டுறது கிடையாது..’’ அவன் தோள்களை குலுக்கிவிட்டு திரும்பி நடந்தான்.

‘சரியான மண்டைக்கனம் புடிச்சவண்டா...’’ முணுமுணுத்தாள் அவனோ,

‘தலைக்கனம் தானே ? நிறையவே இருக்கு..!. நீ சொல்லாமலே புரிஞ்சுகிட்டேன்....!’’ அவன் பதிலடி கொடுக்க தான் முணுமுணுத்தது கேட்டுவிட்டதா என்கிறமாதிரி பார்த்தாள்.

போன் அடித்தது. அவன் எடுப்பான் என்று பார்த்தாள். அவனோ சேரில் காலை நிட்டியபடி டீவியை ஆன் செய்தான். போன் தொடர்ந்து அடிக்க எரிச்சலாக எடுத்து,

‘ஹலோ...’’ என்றாள்.

‘பார்த்து மறுமுனையில இருக்குறவங்க பயந்து ஓடிடப்போறாங்க...’’ அவளது குரலில் தெரிந்த சினத்தை இவன் கிண்டல் செய்ய திரும்பி முறைத்தாள். அவன் திரும்பாமலேயே,

‘முறைப்பு வேண்டாம்’’என்று அவளுக்கு கேட்குமாறு சொல்லிவிட்டு டிவி சானலை மாத்தினான்.

‘ஹலோ சந்தியா’’ மறுமுனையில் ஹரியின் குரல்.

‘என்ன?’’

‘உன்கிட்டே பேசணும்...’’

‘பேசு!’’
‘

போன்லே இல்லே நேரில வா’’

‘இல்லை! என்னால வரமுடியாது!’’

‘ஏய் விளையாடமல் வா..’’ அவன் கோபமாக கத்திவிட்டு போனை வைத்தான். நெத்தியை தடவி விட்டுக்கொண்டாள். சந்தோஷை பார்த்தாள் அவன் ஸ்போர்ட்சில் ஆழ்ந்து போயிருந்தான்.

‘நான்....நான் வெளியே போகணும்’’ அவனுக்கு முன்னால் வந்து நின்று சொன்னாள்.
 அவன் டி.வி யிலிருந்து விழியகற்றாமல்,

‘போய்க்கோ....’’
என்றான்.

‘அஞ்சு அஞ்சரைக்கு திரும்பிடுவேன்....’’ அவள் சொல்ல சந்தோஷ் தன்னை கிள்ளிப்பார்த்தான்.

‘ஆ! கனவில்லை நிஜம் தான்..!’’ அவன் தன்னை கிண்டல் செய்வது புரிய முகம் கறுத்தது.

‘யார்கிட்டேருந்து போன் வந்ததுன்னு நீஙக கேட்கமாட்டீங்க...! நான் சொல்றேன். என் பிரண்டுகிட்டேருந்து...அதுவும் பாய் பிரண்டுகிட்டேருந்து...’’அவனை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டு அழுத்தமாக சொல்ல,

‘‘இதெல்லாம் யார் கேட்டா...?’’
என்றான் அவள் கண்களை ஊடுருவி பார்த்த வண்ணம்.

‘‘அவரை பார்க்க போகணும்...’’
அவளும் அவனையே பார்த்த வண்ணம் சொன்னாள்.

‘‘என்னடா இது அதிசயமா இருக்கு...? என்கிட்டே வந்து சொல்லிகிட்டு...! ஆமா நீ சந்தியாதானே....?’’ அவன் கேலியாக கேட்க,

‘‘இல்லை..’’ வெடுக்கென்று பதில் வந்தது.

மாடிக்குபோய் சுடிதார் மாத்தி வந்தாள்.

‘‘நான் கிளம்புறேன்’’ என சொல்லியவாறு அவனை பார்த்தாள். அவன் இவள் பக்கம் திரும்பாமல் பதில் ஏதும் சொல்லாமல் டி வி யையே பார்த்துக்கொண்டிருக்க,

‘‘சரசு நான் வெளியே போறேன் அப்பா ஃபோன் பண்ணாருன்னா சொல்லிடு.’’ அவள் உரத்த குரலில் சந்தோஷை பார்த்தபடி சொன்னாள்.

‘‘பரவாயில்லை டைரக்டாகவே என்கிட்டே சொல்லலாம்..’’
அவன் குரல் மட்டும் கேட்டது.

‘‘ஆமா சொன்னா மட்டும் கேட்டுப்பாரு....’’
கோபமாக முணுமுணுத்தாள்.

‘‘நீ சொல்லி நான் எதை கேட்கலை..?’’ அவன் வம்புக்கு இழுக்கிறான் என்று தெரிந்தது. பேசாமல் ஹீல்ஸை மாட்டினாள்.

‘‘நல்லவேளை ஸ்கூட்டி ரிப்பேர் செய்தது.’’ அவன் சொல்ல திரும்பினாள்.

‘‘இல்லைன்னா நீ வெளியே போறதுக்கு, வர்றதுக்கு நான் டிரைவரா இருந்திருப்பேன்...’’ அவன் சிரிப்புடன் சொல்ல முறைத்தவாறு ஸ்கூட்டியை உதைத்தாள். அது ஸ்டார்ட் ஆகமாட்டேன் என்றது. மெல்ல திரும்பி அவனை பார்த்தாள். அவன் எழுந்து வந்தான்.

‘‘அது ஒண்ணுமில்லை..நான் சொன்னது அது காதில விழுந்திருச்சுன்னு நினைக்குறேன்...! ம்.. ஸ்கூட்டி கண்ணா...! ஒழுங்கா வொர்க் ஆகிக்கோ....! உன்னை நம்பித்தான் நான் வாயைக்கொடுத்தேன்..! மறுபடியும் எனக்கு பைக் ஓட்டுற வேலையை கொடுத்துடாதே!’’ அவன் ஸ்கூட்டியுடன் பேசிய படி ஸ்டார்ட் செய்தான் அது ஸ்டார்ட் ஆனது.

‘‘அட அது! பரவாயில்லையே! ஒரு முறை தொட்டதுக்கு என்மேலே அவ்வளவு பாசமா?’’ அவன் அதை தொட்டு கிஸ் பண்ண சந்தியாவோ வந்த சிரிப்பை மறைக்க கஷ்டப்பட்டபடி கண்களில் சிரிப்பு மின்ன அவனை பார்த்தவாறு ஸ்கூட்டியில் ஏறினாள்.

‘‘மேடம் துப்பட்டாவை பாத்து போடுங்க! அது பாட்டுக்கு போற வர்றவங்க கண்ணை மூடப்போகுது..’’. அவன் சிரிக்காமல் அவளை பார்த்தான்.

‘‘அது எனக்குத்தெரியும்’
என்றாள் வெடுக்கென்று.

‘‘அப்படீன்னா.. காலேஜ் விட்டு வரும்போதே பண்ணியிருக்கலாமே...! நான் கண்ணை மூடிகிட்டு ஓட்டியிருக்க மாட்டேன்.’’ அவன் சொல்ல உறைத்தது. மெல்ல திரும்பிபார்த்தாள்.

‘என்ன?’’அவன் புருவத்தால் கேட்க,

‘ஒண்ணுமில்லை’’

‘ஓண்ணுமில்லாததுக்கு எல்லாம் பார்க்க என் மூஞ்சி அவ்வளவு சீப்பா போயிட்டுதா?’’ அவன் முகத்தை அப்படியும் இப்படியும் திருப்ப சந்தியா சிரித்துவிட்டாள். அவனும் சிரிக்க,

‘சரி வர்றேன்’’
என்றாள் உதட்டில் புன்முறுவலுடன்.

‘ம்’’ அவன் தலையசைக்க கிளம்பிபோனாள். சந்தோஷ் போகும் அவளை பூடகமாக பார்த்துவிட்டு விசிலடித்தவாறே உள்ளே நுழைந்தான்.



‘என்ன ஹரி? எதுக்கு வரச்சொன்னே? அவசரமா வா! ஆர்டனரியா வான்னுகிட்டு.. இப்பதானே எக்ஸாம் முடிஞ்சு டென்சன் குறைஞ்சு வீட்டுக்குள்ளே நுழைஞ்சா.. உடனே நீ போன் பண்றே..! நாளைக்கு மீதி எக்ஸாம் இந்த நேரத்துல....சரி என்ன விசயம்..?’’ ஸ்கூட்டியில் இருந்தபடி படபடத்தாள் சந்தியா.

‘முதல்லே அதை அப்படி ஓரமா நிறுத்திட்டு வந்து உட்கார்ந்து பேசு..!’’

‘பரவாயில்லை! நான் உடனே கிளம்பணும்...! என்ன விசயம்னு சொல்லு?’’

‘உடனே கிளம்புறதா இருந்தா ஏன் வந்தே...? அங்கேயே இருந்துக்க வேண்டியதுதானே....’’ அவன் கோபமானான்.

‘‘சரி...சரி...எதுக்கு வரச்சொன்னே? முதல்லே அதைச்சொல்லு...!’’

‘‘என்ன நடக்குது உங்க வீட்லே?’’

‘‘ஏன் என்னாச்சு?’’
புரியாமல் அவனை பார்த்தாள்.

‘‘என்னவாகணும்? வீட்லே யாரும் இல்லையா?’’
அவன் குரலில் எரிச்சல் இழையோடியது.

‘‘இல்லை திருப்பதிக்கு போயிருக்காங்க..ஏன் என்ன மேட்டர்?’’

‘‘அப்ப வீட்லே இருக்குறது....’’ அவன் இழுக்க அவனை மேலும் கீழும் பாத்தபடி,

‘நானும், சந்தோஷும் தான் ஏன் கேட்குறே?’’
சாதாரண குரலில் கேட்டாள்.

‘அதுதானே பாத்தேன்...! ஆமா எதுக்கு அவன் உன்னை பைக்கில ஏத்திகிட்டு வந்தான்?’’

‘அவர் என்னை ஏத்திகிட்டு வரலை நாந்தான் லிஃப்ட் கேட்டு வந்தேன்’’ உண்மையை கூறினாள்.

‘‘ஏன்?’’
குற்றம் சாட்டும் தொனியில் கேட்க,

‘‘என்ன ஹரி குறுக்கு விசாரணை நடத்திகிட்டு? ஸ்கூட்டி மக்கர் பண்ணிச்சு எனக்கு எக்ஸாமுக்கு போகணும் அதான் சந்தோஷ்கிட்டே பைக்கில ஹெல்ப் கேட்டேன்’’ அவளுக்கு லேசாக எரிச்சல் தலை தூக்கியது.

‘ஏன் உனக்கு ஆட்டோ கிடைக்கலையா?’’

‘‘என்ன ஹரி? ஆட்டோ சொல்லி அது வந்து அப்புறம் காலேஜுக்கு எக்ஸாம் எழுத போகமாட்டேன் கேட் பூட்டத்தான்..போயிருப்பேன்....’’

‘அப்படின்னா என்னை கூப்பிட்டுருக்கலாமே..’’

‘என்ன நீ? உன் கேள்வியின் தோரணையே சரியில்லையே! என்ன மனசுல வச்சுட்டு கேட்குறே? வெளிப்படையா சொல்லிடு..!’’ அவள் கோபமானாள்.

‘என்கூட ஒரு நாளும் வந்துருக்கமாட்டே...என் விரல்... ஏன் என் மூச்சு காத்துகூட படவிட்டிருக்கமாட்டே..’’ கோபத்தில் அவன் குரல் உயர்ந்தது. அவள் பதில் எதுவும் கூறாமல் அவனையே பார்த்தாள்.

‘அவன் கூட பைக்கில ஒட்டி உரசிகிட்டு போக மட்டும் விட்டிருக்கே...’’

எரிச்சலாக அவளை பார்த்தான்.

‘ஸ்டாபிட் ஹரி! உன்பாட்டுக்கு உளறாதே!’’ அவளும் கோபத்தில் சொல்ல,

‘உளறலை சந்தியா! டைவோர்ஸ் ஆகப்போகுது. இப்ப போய் நீ ஒட்டிகிட்டு இருந்தா..அப்புறம் எப்படி ஆகும்? நாம எப்ப சேருவது?’’அவன் சொல்ல அவனை ஒரு நிமிடம் கூர்ந்து பார்த்தாள்.

‘இதுதான் உன் பிரச்சனையா?’’

‘நம்ம பிரச்சனைன்னு சொல்லு’’

‘ம்..கவலைப்படாதே! நான் ஒட்டிகிட்டாலும். சந்தோஷ் ஒட்டத் தாயர் இல்லை! நீ நினைச்சது நடக்கும்...!’’ பட்டென வந்தது அவளது பதில்.

‘நாம நினைச்சது நடக்கும்னு சொல்லு’’அவன் சமாதானமாக சிரித்தபடி அவளை பார்த்தான்.

‘ம்...ம்...நான் கிளம்புறேன்..’’ அவள் ஸ்கூட்டியை உயிர்ப்பித்தாள்.

‘ஏய் என்ன வந்தே அஞ்சு நிமிசம் கூட ஆகலை.. அதுக்குள்ளே கிளம்பிட்டே....’’

‘ம் இந்த வியசயத்தை நீ போன்லேயே கேட்டிருக்கலாம்...’’

‘போன்லே கேட்டிருந்தா அவன் ஒட்டுக்கேட்க மாட்டானா?’’’ அவன் கிண்டலாக கேட்க அவளுக்கு மறுபடியும் எரிச்சல் எட்டிபார்த்தது.

‘இல்லை! நான் வர்றேன்!’’ அவனது பதிலுக்கு காத்திராமல் கிளம்பிப்போனாள். ஹரி சிகரட் பிடித்தபடி அவள் போவதை ரசித்தான்.
(coming)
 
  • Like
  • Wow
Reactions: Ruby and Maheswari

Ruby

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
96
33
28
Dindugul
இல்ல எனக்கு புரியலை...

இவ எதுக்கு இப்போ பல்லு சுளுக்கிக்கிறது போல சிரிக்கிரா🤔🤔

அவன் ஏன் பூடகமா சிரிக்கிறான்😳😳😳🙄🙄🙄🙄

ஒன்னும் புரியலை ஏ? என்ன நடக்குது இங்கே இப்போ???

எப்படி மாறிச்சு டக்குனு???🤔🤔🤔