• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

எங்கே என் மனம் - அத்தியாயம் 31

S.JO

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
80
79
18
Paris
31​

கோயிலுக்கு போய் வந்ததிலிருந்து சாரதாவும் சரி விஜயராகவனும் சரி யார் கூடவும் பேசாமல் ஒதுங்கியிருந்தனர்.

“என்னங்க கடைசியில நம்ம புள்ளை...” அவளுக்கு மேலும் வார்த்தை வராமல் தொண்டை கமறியது.

“அ.......ம்.......மா.....” சந்தோஷின் குரல் கேட்க சாரதா ஆவலாக நிமிர்ந்தாள். எதிரே மகன் அவனது விழிகளில் ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தது.

“என்னப்பா...?” என்றாள் பாசத்தோடு.

“நா.....நா.....நான் கொஞ்ச நேரம் உங்க மடியில படுத்துக்கலாமா?” அவன் ஏக்கமாக கேட்க,

“என் கண்ணே...! வாடா ராஜா....” அவள் பதறியபடி எழுந்தாள். மகனை கட்டித்தழுவினாள். சந்தோஷ் தாளமாட்டாமல் தாயின் மடியில் முகம் புதைத்தான். சராதா கலங்கிய விழிகளுடன் அவனது தலையை கோதிவிட்டாள்.

“அ....அம்மா....” மீண்டும் அவனது குரல்.

“என்னப்பா....?”

“அடுத்த ஜென்மம் ஒன்று இருந்தா நான் உங்க வயித்துல பொறக்கணும்னு ஆசைப்படுகிறேன்’. அவன் குரல் தழுதழுத்தது. சாரதா நெஞ்சு பதற கணவனை பார்த்தாள். கண்ணீர்த்துளிகள் மகனின் கன்னத்தில் விழுந்து சிதறியது.

‘‘போதும்பா! என்னால தாங்க முடியலை....! நீ என் வயித்துல தான் பொறந்தே... உங்கப்பா விஜயராகவனுக்குத்தான் பொறந்தே....இனியும் இப்படி பேசி எங்களை வதைக்காதேடா கண்ணா..!.”

“அம்மா.....! நான் உங்க புள்ளை தாம்மா..அதுல எந்த மாத்தமும் இல்லை...எனக்கு நீங்க மட்டும் போதும்....! ”

“அப்புறம் ஏம்பா...அப்படி நடந்துகிட்டே..? எனக்கு நீயும் சந்தியாவும் ரெண்டு கண்ணுங்கதான்...அவளை ஏம்பா வெறுக்குறே...?” தாய் குலுங்க,

“அம்மா நான் சந்தியாவை வெ....” என தொடங்கியவன் சட்டென்று வாயை மூடிக்கொண்டான்.

‘‘உணர்ச்சிவேகத்தில உண்மையைச்சொல்ல பாத்தியேடா...இது எல்லாம் தெரிந்தால் அதன் பின் அம்மா சும்மா இருப்பாங்களா.? இல்லை அப்பாதான் பாத்துக்கொண்டு இருப்பாரா? மாமாவின் பேரில உள்ள மரியாதையும், மதிப்பு சந்தியாவால போக காரணமாயிடுமே...! அவரை எதிர்த்து பேசாத அம்மா ஒரு வார்த்தை தப்பாக பேசினால் மாமாதான் தாங்குவாரா? அவசரத்தில் கோபத்தில் விபரீதமாயிடுமே.. ஒன்றுபட்டிருக்கும் குடும்பம் ஒருத்தியால கெடணுமா....நான் நல்லவன் என்கிறதை நிலைநாட்டி அவர்களை பிரிக்கணுமா? கெட்டபெயர் எடுத்துட்டேன் அப்படியே இருந்துட்டு போகிறேன்...என்னால இந்தக்குடும்பத்தை வெறுக்க முடியாது இது எனக்குத்தெரியும் ஆண்டவனுக்கு புரியும் இது போதும்..” தனக்குள் எண்ணிக்கொள்ள அவனது சிந்தனையை கலைத்தது தாயின் குரல்,

“என்னப்பா சொல்ல வந்தே...?” தாய் அவனது தலையை கோத அவளது கையை எடுத்து தன் கன்னத்தில் வைத்தான்.

“ஒண்ணுமில்லைம்மா.....எனக்கு....எனக்கு..” அவனுக்கு வார்த்தை வராமல் கண்ணீர் எட்டிபார்த்தது. தாய்க்கு தெரியாமல் துடைத்து விட்டுக்கொண்டான் தந்தை கவனித்தது தெரியவாய்ப்பில்லை. சந்தோஷை தேடிக்கொண்டு வந்த சந்தியா இந்தக்காட்சியை பார்த்ததும் உறைந்து போய் நின்றாள். அவளது முகத்தில் உணர்ச்சி இல்லை. தாயின் மடியில் படுத்திருக்கும் சந்தோஷின் முகத்தில் பதிந்து போயிருந்தது அவளது பார்வை. விஜயராகவன் மகனது காலை எடுத்து பிடித்துவிட்டுக்கொண்டிருக்க சந்தோஷ் சுயநினைவுக்கு வந்தவனாக பார்த்து பதறியபடி எழுந்தான்.

“அப்பா.....என்னப்பா என் காலை பிடித்துக்கொண்டு....” அவன் நா தழுதழுத்தது.

“என்னடா கண்ணா! என் புள்ளை காலை நான் புடிச்சுவிடுறேன்..நீ படுத்துக்கோ....”

“இ....ல்லை..! இப்படி எல்லோரும் பாசத்தால கொல்லாதீங்க...?! பாசம் காட்ட வேண்டியங்களுக்கு மனச்சாட்சியே இல்லை....அவங்களுக்காக நான் எல்லாத்தையும் இழந்துட்டு...” என சந்தோஷ் குமுறினான்.

“யார்ப்பா உன்மேலே பாசம் காட்டலை? ஒருத்தரை சொல்லு..” தந்தை வினாவ, தான் என்ன சொன்னேன் என்று புரியாமல்,

“அ..அது ஒண்ணுமில்லைப்பா.....நான் வர்றேன்..” மேலும் இருந்தால் தந்தைவிடாமல் கிளறுவார் எனப் புரிந்து பாரமான மனதுடன் வெளியேறினான். பெற்றவர்கள் இருவரும் கேள்வி தாக்கிய முகத்தோடு ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.



சாரங்கன், மகாலட்சுமி, ரங்கநாயகி மூவரும் கோயிலில் இருந்தனர்.

“ம்....இப்படி கோயில் கோயிலாக ஏறவச்சுட்டியே...இதே புள்ளைக்காக உன்கிட்டே வந்தேன்..இப்ப அதே புள்ளை மனசை மாத்துன்னு உன்கிட்டே கேட்க வந்திருக்கேன்.” சாரங்கன்
கடவுளிடம் முறையிட்டார்.



“அம்மா நீங்க எதுக்குமா சிரமபட்டுகிட்டு கோயில் கோயிலா ஏறுறீங்க..? மாசம் பூரா விரதம்..” ஹரியின் குரல் தயைப்பார்த்து கேட்டது

“நான் செய்த பாவமோ என்னமோ என் அண்ணன் பொண்ணோட வாழ்க்கை இப்படியாடுத்து..அதுக்கு ஒரு நல் வழி காட்டுன்னு பிரார்த்திக்க வந்திருக்கேன்டா... .உனக்கு புடிக்கலைன்னா...நான் என் அண்ணனை மறக்க முடியாது..”

“என்னம்மா நீங்க? எனக்கு மட்டும் மாமா நல்லா இருக்கணும் அவர் குடும்பம் நல்லா இருக்கணும்னு எண்ணம் இல்லையா? நீங்க அவரை பிரிஞ்ச நாள்லேருந்து இப்படி வேதனைபட்டே வாழ்கிறீங்களே...உங்க வேதனை எனக்கு புரியாமலா.? நான் மட்டும் சந்தோஷாமாகவா இருக்கேன்...”

“தெரியும்பா என்னைவிட உனக்கு அவங்க மேலே பாசம்னு தெரியும்..என்ன பண்றது நான் செய்த தப்பு அவர் முகத்துல எப்படி விழிக்க கூட அருகதை இல்லாதவளப்பா.....இப்படியே கோயில் கோயிலா போய் பாவத்தை கழுவுறேன்..” அவள் அழ,

“சந்தனா....” குரல் வர திரும்பினாள்.

அண்ணன் சாரங்கனோடு அண்ணியும், தாயும் நின்றிருக்க.

“அ...அண்ணா...நீங்களா என்னை கூப்பிட்டிங்க?” என ஆச்சர்யமாக அண்ணனை பார்க்க,

“ஆமாம்மா நாந்தான் கூப்பிட்டேன்! எப்படிம்மா இருக்கே?” அவர் கேட்டது தான் தாமதம் ஓடிவந்து அவரது கால்களில் விழுந்து கதறினாள்.

‘‘எ..என்னம்மா இது? நாந்தான் உன் கால்லே விழுற நிலமையில இருக்கேன்... எழுந்திரு....” அவர் துக்கி நிறுத்தினார். கண்ணீரை துடைத்து விட்டுக்கொள்ள, ஹரி முகத்தில வெற்றிப்புன்னகை வந்து உட்கார்ந்தது.

“உன்னை ரொம்பவும் தண்டிச்சுட்டேன்மா...இது தான் என் பொண்ணு வாழ்க்கையில விளையாடுது” ஹரியை ஒரு பார்வை பார்த்து மீண்டது அவரது விழிகள்.

“அய்யோ என்னண்ணா நீங்க கலங்கலாமா? ஆண்டவன் ஒரு கதவை அடைச்சா இன்னொரு கதவை திறந்துவச்சிருப்பான்...சந்தியா வாழ்க்கை என்னவாகும்னு கவலை வேண்டாம்....” என்றாள் சந்தனா ஆறுதலாக,

“என்னண்ணா பார்க்குறீங்க....? என்னடா இவள் இப்படி புதிர் போடுறாள்னு என்றா? நீங்க என்னை மன்னிச்சு ஏத்துக்கிட்டது நிஜம் னா. என்மேலே பாசம் இன்னும் இருக்குன்னா.. சந்தியாவை நான் மருமகளாக ஏத்துக்கொள்ள தயாராக இருக்கேன்...என் புள்ளை நான் கிழிச்ச கோட்டைத் தாண்டமாட்டான்.” அவள் சொல்ல மற்றவர்கள் குழப்பத்துடன் ஏறிட்டனர்.

“என்ன மாமா யோசிக்குறீங்க..? குறுக்கே பேசறதுக்கு மன்னிக்கணும்...அம்மா செய்த தப்பை உங்களுக்கு இழைத்த பழியை என் மூலமாக நிவர்த்தி செய்ய விரும்புறாங்க.....நீங்க விரும்பினா சந்தியாவை நான் கல்யாணம் பண்ணிக்குறேன் மாமா! டைவோர்ஸ் ஆனதும் அவ வாழ்க்கை கேள்வி குறியாகிடுமேன்னு நீங்க நிதமும் கவலைப்படவேண்டாம்..” அவன் சொல்ல மகாலட்சுமியும் ரங்கநாகியும் அவன் கரங்களை பிடித்து கொண்டு பேச்சுன்றி கண்ணீர் வடித்தனர்.

பிரிந்தகுடும்பம் ஓன்று சேர்ந்தது. அப்புறம் என்ன பேச்சுக்கு சொல்லவும் வேண்டுமா? எல்லோருக்கும் மனதில் தெளிவு பிறந்தது. சாரங்கன் எதுவும் பேசாமல் அவர்களுடன் சேர்ந்து கொண்டு வீடு நோக்கி புறப்பட்டார்.
(coming)
 
  • Like
  • Love
Reactions: Ruby and Maheswari

Ruby

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
96
33
28
Dindugul
ஆக சாரங்கனும் நடிக்க ஸ்டார்ட் பண்ணிட்டார்... இப்போ யார் போன இடத்துக்கு யார் வந்தது?

மகனோட கெட்ட எண்ணம் தெரியாது சந்தனா அவனுக்கு ஏத்த போல... பாவம் உண்மை தெரிந்தால் என்ன நடக்குமோ?