• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

எங்கே என் மனம் - அத்தியாயம் 37

S.JO

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
80
79
18
Paris
37​



“நோ.....” சந்தியாவின் அலறலில் கோர்ட் அதிர்ந்தது. திகைத்துப்போய் பார்க்க அவள் கூண்டைவிட்டு இறங்கி ஓடிவந்து சந்தோஷைக் கட்டிக்கொண்டாள்.

“எனக்கு டைவோர்ஸ் வேண்டாம்...என்னை என் சந்தோஷ்கிட்டேருந்து பிரிச்சிடாதீங்க....! ஐ லவ் ஹிம்..! ஐ லவ் மை சந்தோஷ்.. என்னால அவர் இல்லாம வாழமுடியாது.” அவனைக்கட்டிக்கொண்டு கதற, மற்றவர்கள் இமைக்க மறந்தனர். கௌதம் உதட்டில் ஒரு வெற்றிப்புன்னகை வந்து அமர்ந்தது.

ஹரி முகம் இருள
“சந்தியா” என்றான் அதட்டலாக,

அவள் திரும்பாமலேயே
“நோ..! உன் பேச்சைக்கேட்டு ஆடியது போதும்..! நான் இவரை படுத்தியது போதும்...! எனக்கு யாரும் தேவை இல்லை! என் சந்தோஷ் மட்டும் போதும்!” அவள் விழிகளில் நீருடன் அவனை பார்க்க, அதுவரை இறுகியிருந்த கரங்களை எடுத்து,

“வாடி என் ஆசை மனைவியே.!” என தன்னுடன் இழுத்தணைத்தான். எல்லோரும் சந்தோசமும் கண்ணீருமாக பார்க்க சில நிமிடம் கழித்து சந்தியா கணவனின் அணைப்பிலிருந்து விலகி மெல்ல உதடு திறந்தாள்.

“ஹரி...உன் பேச்சை கேட்டு எவ்வளவு மடத்தனமாக நடந்துகொண்டேன்? உன்னால இவரை நான் ஆட்டிவச்சேன். அவரால என்னை உணர்ந்திட்டேன்...என் மனசு...என் சிந்தனை..என் நாடி, நரம்புகள் அத்தனையும் யாரிடம் இருக்குன்னு புரியவைச்சிட்டார். எதுக்காக அவரை வெறுத்தேன்? தெரியலை! நீ வந்து பேசத்தொடங்கியதால.. நீயே அதுதான் காதல்னு சொல்லி என் சிந்தனையை, மனசை மாத்தினே....எனக்கு சந்தோஷ் மேலே வெறுப்பு வளரவிட்டே..அப்ப கூட நான் ஏன் எதுக்குன்னு கேட்காமல் நீ சொன்னதுக்கு எல்லாம் தலையாட்டி வைத்தேன். ஆனா...என்னால அவர் பட்ட வேதனையும், அவரை பார்க்க, பார்க்க என்னால தாளமுடியலை! ஒவ்வொரு தடவையும் நீ அவரை மட்டம் தட்டும்போது எனக்குள்ளே எரிந்தது. அப்ப புரிஞ்சுக்கலை! என் வெறுப்பின் மொத்த உருவம் இதுன்னு அவரை சுட்டிக்காட்டினேன் ஆனா என்னுள் ஆழமாக பதிந்து போன உருவம் அது எனத்தெரியாமல் இருந்துவிட்டேன். அது மேலே மூடுபனியாக ஏதோ ஒன்று அது உன் மேல் இருந்த மாயை. சந்தோஷோடு பழக அது விலகிப்போக புரிஞ்சகிட்டேன் என் மனசை.”

“அவரை பார்த்தா புடிக்கலை! பேசினா புடிக்கலை! பக்கத்தில வந்தா புடிக்கலைன்னு சொன்னேன் அது எதுக்காக? சரியான வீம்புதான்! நான் கேட்டதை அவர் தர சம்மதிச்சார். ஒரு சராசரி ஆண்மகன் போல நடந்துக்காம, என்னை மதித்தவரை..குறையே கூற முடியாதவரை எப்படி வெறுத்தேன்? முட்டாள் படிச்ச முட்டாள். புத்தியில்லாதவள். இவ்வளவு நடந்தும் அவர் இதுக்கெல்லாம் சந்தியாதான் காரணம் என்று வாயே திறக்கலை அது எனக்குள் விழுந்த முதல் அடி! போதும்! என்ன வந்து என்னை ஆட்டுவித்ததோ...? அவரை குப்பைத்தொட்டியில் இருந்து எடுத்த குழந்தை என்பதுக்காக வெறுக்குறேன் என தப்பா நினைத்துக்கொண்டு...” கண்களில் நீர் வழிய அவனை ஏறிட்டாள்.

“இல்லீங்க...அதுக்காக எப்பவும் உங்களை நான் வெறுத்தது இல்லை! குப்பையில இருந்த வைரம் நீங்க! ஆண்மை, அழகு, கம்பீரம், பொறுமை, எல்லாம் இருந்தும் ஒரு பெண் சொன்னதுக்காக அவளையும் மதித்து இன்றுவரை என் மேல் ஒரு தூசுகூட படியாம பாத்துக் கொண்டீங்களே...இது போதும்! என்னால் உங்க முகத்தை பார்த்து என் மனசை சொல்ல தைரியமும் இல்லை! அருகதையும் இல்லை! என்னை மன்னீப்பீங்களா...?” அவனது காலடியில் விழப்போனவளை சந்தோஷ் தடுத்து தன் மார்பில் சாய்த்துக்கொண்டான். உலகத்திலுள்ள அத்தனையையும் வென்று விட்டாதக தோன்றியது அவனுக்கு.

“மாப்பிளை என்னையும் மன்னிச்சுடு..நான் இவ மனசில இருப்பதை வெளியே கொண்டு வரத்தான் இந்த டைவோர்ஸ் நாடகமே நானும் அப்பாவும் சேர்ந்து போட்டது.” கௌதம் சொல்ல மற்றவர்கள் திகைப்புடன் அவனை ஏறிட்டனர்.

“குடிச்சே பழக்கம் இல்லாத சந்தோஷ் நிதானமாக படியேறிப்போன முதல் நாளே என் சந்தேகம் தொடங்கியது. அடுத்த நாள் காலை நீங்க ரெண்டு பேரும் பேசிகிட்டது என் காதில் விழ, என் சந்தேகம் வலுத்தது. அதன் பின் சந்தியாவை ஃபாலோ பண்ணினேன். எனக்கு புரிஞ்சு போனது. சந்தியாவின் மனதும் சேர்த்துதான். உன்னைப்பத்தி அவ தெரிஞ்சுக்க வேண்டாம் ? அதான் அஸ்திவாரம் போட்டேன். வெற்றியும் கண்டாச்சு...” கௌதம் பெருமிதத்துடன் கூறினான்.

“இப்ப என்ன என் தீர்ப்பை சொல்ல வேண்டாமா?” நீதிபதி கேட்க,

“மன்னிக்கவேண்டும் யுவர் ஆனர்...பிரிய இருந்தவர்களை சேர்த்த புண்ணியம் உங்களுக்கு வரட்டும்..ப்ளீஸ்..இந்த கேசை நான் வாபஸ் வாங்கிக்குறேன். தங்கள் நேரத்தை தங்கள் அனுமதி இல்லாமல் ஒரு நல்ல தம்பதிகளை சேர்த்து வைக்க உபயோகித்ததுக்கு என்னை மன்னிக்கவும்.. அபராதம் நானே கட்டி விடுகிறேன்’’ என கௌதம் சொல்ல நீதிபதி சிரித்தபடி அந்த ஜோடியை வாழ்த்தினார்.

“மாமா....என்னை மன்னிச்சுடுங்க....” சந்தோஷ் ஓடிப்போய் சாரங்கனின் காலில் விழுந்தான்.

“இல்லைடா கண்ணா..! என்னைத்தான் நீ மன்னிக்கணும்....என் வளர்ப்பு எப்படி தப்பாகும்...? நீ மாறிட்டேன்னு நான் பல ராத்திரி தூங்கமால் இருந்து அழ, கௌதம் சொன்ன பின்தான் நான் பெத்தது தப்பாகிவிட்டதுன்னு உணர்ந்தேன். அவளுக்காக நான் உன்கிட்டே மன்னிப்பு கேட்டுக்குறேன்பா..” சந்தோஷின் கையை பிடித்தபடி மன்னிப்பு கேட்க முயல,

“அய்யோ மாமா! என்ன இது? நீங்க போய் என்கிட்டே....” அவன் கலங்க சாரங்கன் அவனைகட்டிக்கொண்டார். சந்தனா தன் மகனுக்காக மன்னிப்பு கேட்டாள். ஹரியோ எதுவும் பேசாது வெளியேறிப்போனான்.
(coming)
 
  • Like
  • Love
Reactions: Ruby and Maheswari

Ruby

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
96
33
28
Dindugul
கடைசியில் இந்த சந்தோஷ் மண்டையில் இருக்க கொண்டையை மறந்து போய் தான் கௌ கண்டுபிடிச்சு இருக்கான்.... நான் கூட அவனே cid ஆ மாறி கண்டுபிடிச்சி விட்டானோ அப்படினு அவனை பாராட்ட கூட செஞ்சேன் ஹும் அதுக்கும் சந்து தான் காரணம் ஹாஹா🤣🤣
 

Ruby

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
96
33
28
Dindugul
ஏம்மா சண்டியா உன் காதல் வெளிய வர அவன் இம்புட்டு அடி வாங்கணுமமா ? பக்கி மூஞ்சிய பார்த்து சொல்ல முடியலை அப்படினா செவுத்த பார்த்து கூட சொல்லி இருக்கலாம்... சொல்லணும் அவ்ளோ தானே... நல்லா மனசாட்சி குத்துச்சு போ உனக்கு...