• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

எந்தன் உயிர் நீயடி !என்னை விட்டுப் போகாதடி!

pooja Karthikeyan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jun 29, 2024
20
4
3
Coimbatore
வணக்கம்🙏🙏🙏🙏🙏🙏 என் அன்பு நெஞ்சங்களே இது என்னுடைய முதல் கதை .இந்த கதை மூலமா என்னுடைய எழுத்து திறமையை உங்களிடம் நான் காட்ட விரும்புகிறேன் .இதில் சிறு தவறுகளோ இல்லை யாரேனும் மனது புண்படும்படியான வார்த்தைகளோ இருந்தால் மன்னித்துக் கொள்ளவும். இதற்கு உங்களுடைய ஆதரவினையும் அளித்து வாய்ப்பினை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் .

நன்றி!!!!

வாங்க நம்மளுடைய கதைக்குள்ள போகலாம்.


முன்னுரை,

ஒரு பாசமான ஒரு குடும்பத்துல வளர்ந்த ஒரு பையன் எதிர்பாராத நேரத்துல மொத்த குடும்பமும் ஒரு ஆக்சிடென்ட்ல இறந்துடறாங்க , அதுக்கப்புறம் அவனோட வாழ்க்கையில் பல இன்னல்கள் அனுபவிக்கிறான். அந்த இன்னல்களில் இருந்து போராடி எப்படி வாழ்க்கையில ஜெயிக்கிறான் என்பது தான இந்த கதையோட கருத்து.

இதுல வேற மனசு ரொம்ப வேதனையில் இருக்கும்போது அவன் எதிர்பாராமல் ஒரு தேவதை சந்திக்கிறான் . அந்த தேவதை அவனுக்கு
வரமா வருகிறார்களாம் ! இல்லை
சாபமா வருகிறார்களா! தான் இந்த கதை.





அத்தியாயம் .1


ஒரு அழகான காலை பொழுது பறவைகள் அங்கொன்றும் இங்கொன்றும் இறை தேடி சென்று கொண்டிருந்தது. பசுமை நாயக்கன்பட்டி
( கற்பனையூர்)உங்களை அன்புடன் வரவேற்கிறது என்று பெயரடங்கிய பலகையைத் தாண்டி பச்சை புல் வேலி நடுவே ஒரு தார் சாலை அதில் மிக மெதுவாக கார் ஒன்று சென்று கொண்டிருந்தது.


அதில் இந்த உலகத்தில் இருக்கும் அனைவரையும் காட்டிலும் சந்தோஷமானவான் நான் மட்டும் தான் என்னும் நிலையில் தான் அப்பா அம்மாவுடன் தான் அப்பாவின் பெற்றோர்கள் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தான் நாம் கதையின் நாயகன் அர்ஜுன் கார்த்திக் கிருஷ்ணா.


அவன் தந்தை கிருஷ்ணன், தாய் ஜானகி.
இருவரும் பல போராட்டங்கள் நடுவே காதல் திருமணம் செய்தவர்கள் .

இவர்கள் காதல் திருமணம் செய்து கொண்ட காரணத்தினால் இருவரின் பெற்றோர்களும் இவர்களை ஏற்றுக் கொள்ளவில்லை .

பின் கார்த்திக் பிறந்த பிறகு தான் கிருஷ்ணனின் தந்தையும் தாயும் இவர்களை ஏற்றுக் கொண்டார்கள்.


ஏனெனில் கிருஷ்ணர் அந்த வீட்டிற்கு ஒரே மகன் அவர்கள் விவசாய குடும்பம் நிறைய தோட்டம் தொறவு அதிகமாக இருந்தது அந்த காலத்திலேயே கிருஷ்ணன் மட்டும் தான் அந்த ஊரில் வெளியூருக்கு சென்று தன் உயர்கல்வியை முடித்தவர்.


(அங்கு படிக்க சென்ற இடத்தில் தான் ஜானகியை விரும்பி திருமணம் செய்து கொண்டார்.)


அதன் பின் வரும் விடுமுறை நாட்களில் கிருஷ்ணனும் ஜானகியும் கார்த்திக் உடன் ஊருக்கு வந்து விடுவார்கள்.

ஏனெனில் கிருஷ்ணனின் தொழில்கள் அனைத்தும் சென்னையில் இருந்தது இவருடைய நண்பரும் இணைந்து தொழில்களை நடத்திக் கொண்டிருக்கின்றனர் . இவர்கள் ஊருக்கு செல்லும் நாட்களில் மட்டும் அவர் பார்த்துக் கொள்வார்.


கிருஷ்ணனின் தந்தை இவர்களை ஏற்றுக் கொண்ட பிறகு வரும் பள்ளி விடுமுறை நாட்களில் வருடம் வருடம் தன்னுடைய தாத்தா பாட்டியை காண்பதற்காக பசுமை நாயக்கன்பட்டி வந்துவிடுவான் கார்த்திக்.


கடந்த எட்டு ஆண்டுகளாக உயர்கல்விக்காக வெளிநாடு சென்றமையால் கார்த்திக்கால் தன் தாத்தா பாட்டியை காண இயலவில்லை .

இன்று தன்னுடைய படிப்பு, வேலை அனைத்தையும் முடித்துவிட்டு அவர்களை காண்பதற்காக பசுமை நாயக்கன்பட்டிக்கு வந்திருக்கான்.

கார்த்திக் 27 வயது ஆண் மகன் 6 அடி உயரத்தில் ஆண்களே பொறமை படும் அளவிற்கு அழகே உருவாய் இருக்கிறான் .அவன் படிப்பு முழுவதும் வெளிநாட்டு கல்வி ஆனாலும் நம்முடைய பாரம்பரியமான மரபுகளை கற்றுத் தெரிந்தவன் .




அந்த கார் அந்த மிகப்பெரிய கேட் முன்பு வந்து சத்தம் கொடுத்தவாறு நின்றது.


தோட்டத்திற்கு தண்ணி ஊற்றி கொண்டிருந்த ராமு அண்ணா கேட்டின் வெளியே காரின் சத்தம் கேட்ட பொழுது வேகமாக ஓடி சென்று கேட்டை திறந்து விட்டார் .


காரில் இருந்து இறங்கிய கிருஷ்ணனும் ,ஜானகியும் ராமு அண்ணாவை நோக்கி சின்ன சிநேக புன்னகையை சிந்தியவாறு எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்டார்கள்.


அதற்கு அவரும் சிரித்து விட்டு பெரிய ஐயா நீங்க எப்படி இருக்கீங்க, ஏன் இத்தனை நாளா இங்க வரவே இல்ல, உங்கள பாத்து எத்தனை நாள் ஆயிற்று,இந்த தடவையும் சின்னையா வரலையா என்று படபடபடவென்று பேசிக்கொண்டே சென்றார்.

அப்பொழுது சரியாக காரின் பின்புறம் இருந்து சிரித்த முகமாக இறங்கினான் கார்த்திக். .

அவனை பார்த்து புன்னகைத்த ராமு சின்னைய்யா சொல்லவருவதுற்குள் எப்படி இருக்கிருகள் ராமு மாமா என்று கேட்டிருந்தான்.

மிகவும் சந்தோசமாக நல்லா இருக்கிறன் என்று கூறினார்கள் . ஏனெனில் இந்த வீட்டைப் பொறுத்த அளவு வேலைக்காரர்களையும் சமமாகவே மதிப்பதால் இவர்களின் மீது அதீத அன்பு கொண்டு உள்ளார் ராமுவும் அவரது மனைவியும்.


நீங்கள் அப்படியே பெரிஐயாவை போல்தான் என்று கூறியவாறு இவர்களின் உடைமைகளை எடுத்துக்கொண்டு வீட்டினுள் நுழைந்தார் ராமு .


அவர் பின்னே கிருஷ்ணனும் ஜானகியும் உள்ளே நுழைந்தார்கள். அதற்குள் வேகமாக சென்ற கார்த்திக் தன் தாத்தா பாட்டியை அழைத்தவாறு ஹாலில் நின்று கொண்டிருந்தான்தான் .


யாரோ தங்களை அழைப்பது போல் தோன்றவும் இருவரும் வெளியே வந்து பார்த்த பொழுது ஹாலின் நடுவே தங்களது பேரனை கண்டவுடன் இன்ப அதிர்ச்சி அடைந்தனர் . தங்களது முதுமையையும் நினைக்காதவாரு ஓடி வந்து தங்களுடைய பேரனை கட்டிக் கொண்டனர்.


ஐயோ கார்த்தி எப்படி இருக்க எத்தனை நாளாச்சு உன்னை பார்த்து இந்த தாத்தாவையும் பாட்டியும் பாக்கணும் கூட உனக்கு என்னமே இல்லையா ,அந்த அளவுக்கு நாங்க உனக்கு பிடிக்காமல் போயிட்டோமில்ல என்று கண்கள் கலங்க பாட்டி பேசிக்கொண்டே இருந்தார்.

உனக்கு இந்த வயசானவங்கள பார்ப்பதற்கு பிடிக்கலையா ,அதனால தான் எங்களை பார்க்க நீ வரலையா என்று கண்கள் கலங்க தங்களது பேரனிடம் கேட்டுக் கொண்டிருந்தார் பாட்டி மகாலட்சுமி.

அதற்குள் அவனுடைய தாத்தா பசுபதியோ இத்தனை நாள் உனக்கு இந்த தாத்தா பாக்கணும்னு கூட தோணலில்லா என்கூட பேசாத போ என்று அந்தப் பக்கம் திரும்பிக்கொண்டார் .

கார்த்தி அவரின் சிறு பிள்ளை தானத்தை கண்டு தனக்குள் சிரித்து அவரின் கன்னத்தில் முத்தம் வைத்து என் செல்ல குட்டிக்கு என் மேல என்ன கோபம் என் புஜ்ஜு குட்டி என்று தன் தாத்தாவை கொஞ்சிக் கொண்டிருந்தான்.

அதற்குள் அங்கு வந்த கிருஷ்ணன் மற்றும் ஜானகிடம் நலம் விசாரித்துவிட்டு பின் அவர்களை அவர்களுடைய அறைகளுக்கு அனுப்பி வைத்தனர்.



தொடரும்....