• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

எந்தன் ஜீவன் நீயடி..! - 07

Aieshak

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
176
157
43
53
Chennai, Tamil Nadu
aieshakwrites.in
எந்தன் ஜீவன் நீயடி..! - 07

மாந்தோப்பில்...

அம்பரி ஆற்றுவாரோ தேற்றுவாரோ இன்றி அழுது கொண்டிருந்தாள். அப்போது சடசடவென்று மழை பொழிய தொடங்கியது. நீர்த்துளிகள் அவள் மீது பட்டதும்தான் நிகழ்வுக்கு திரும்பினாள். அவள் இருந்த இடம் கருத்தில் பட, அவசரமாக சுற்றுமுற்றும் பார்வையை ஓடவிட்டாள். நல்ல வேளையாக யாருமில்லை... மழையின் வேகம் அதிகரிக்க, அவள் தெப்பலாக நனையத் தொடங்கினாள். நல்ல வேளையாக அவளது உடை லைனிங் கொடுத்து தைக்கப்பட்ட ஆடை என்பதால் அவளது அங்கங்கள் தெரியவில்லை. ஆனாலும் ஈர உடையோடு யார் பார்வையில் படுவதும் நல்லதில்லை. மேலும் மழை நிற்கும் வரை அவள் இங்கேயே நிற்க நேர்ந்தால் குளிரில் விரைத்து விடுவாள். வானம் அந்தி நேரம் போல இருட்டிவிட்டிருந்தது. தோப்பு ஊர் கோடியில் இருந்ததால் பொதுவாக அவ்வளவு தூரம் நடந்து யாரும் வரமாட்டார்கள். ஆனால் சீட்டு விளையாட இளவட்டங்கள் சில சமயங்களில் வருவார்கள். மழை நீரால் சேராகிவிட்டிருந்த தரையில் நடப்பதும் சற்று சிரமமாகத்தான் இருக்கும். ஆனால் அதற்காக இதே இடத்தில் அதுவும் யாருமற்ற இந்த இடத்தில் நிற்பது அவளுக்குத் தான் ஆபத்தாகவும் முடியும். நிதானமாக எட்டுகளை எடுத்து வைத்து தோப்பிற்கு வெளியே வந்தாள், மழை வேகம் குறைந்த போதும் நிற்காமல் பெய்து கொண்டிருக்க... மழை நீர் இலைகளில் விழுவதோடு காற்றும் பலமாக வீச, ஒரே இரைச்சலாக கேட்டது. மண் பாதையில் இருந்து சற்று மேடான இடத்தில் மாந்தோப்பு இருந்ததால், இந்த சமயத்தில் இறங்கினாலும் சறுக்கும் ஏறினாலும் சறுக்கும். ஆகவே, வேலிக்காக நடப்பட்ட கல்லைப் பற்றிக்கொண்டு அவள் இறங்க முயன்றாள். அப்போது அங்கே கீர்த்திவாசன் ஜீப்பில் வந்து சேர்ந்தான்.

திடுமென அவனை அங்கே அவள் எதிர்பார்க்கவில்லை. ஒருபுறம் அவன் முன் இப்படி ஈரத்துணியுடன் நிற்க சற்று அசூசையாக இருந்தது. இன்னொருபுறம் சற்று ஆறுதலாக உணர்ந்தாள். சட்டென்று உள்ளூர திகைத்தாள். அவனைப் பார்த்து ஆறுதல் உண்டாகிறது என்றால் என்ன அர்த்தம்? முன்பு அவன் மீதிருந்த வெறுப்பு கோபம் இப்போது இல்லை என்று அர்த்தமா? மனம் கேள்வி கேட்டது. அதெல்லாம் இருக்கிறது.. இருக்கிறதுதான்.. ஆனால் இப்படியே வழிநெடுக நடந்து செல்லும் சங்கடத்தில் இருந்து அவளை காத்தானே என்ற நிம்மதி அவ்வளவு தான்.

இன்ஜினை அணைக்காமல் இறங்கியவன் கையில் குடையை பிடித்தவாறு சற்று அழுத்தமான காலடிகளோடு அவளை நோக்கி வந்தான். மெல்ல இறங்க முயன்ற அம்பரியின் கால் வழுக்கியது.. நல்ல வேளையாக அவள் விழாது அவன் பிடித்துக் கொண்டான். ஒரு ஆணின் அருகாமையில் சற்று உடல் கூசியது. அவளுக்கு இனம் புரியாத படபடப்பு உண்டாயிற்று. இதயம் பலமாக துடிப்பது போல ஒரு உணர்வு. பிடித்த பிடியை விடாது ஐந்து நிமிடங்களில் வண்டியை நெருங்கி அவள் ஏற உதவினான். அவன் ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்து வண்டியை கிளப்பிய பின்தான் அவன் எப்படி இங்கே வந்தான் என்ற கேள்வி எழுந்தது.

அவள் மனதை படித்தவன் போல, "தோட்டக்கார தாத்தா போன் செய்தார். பாதை ஒரே சேறாக இருக்குமே, நடக்க முடியதே" என்றுதான் நான் உடனே கிளம்பி வந்தேன், மழை இப்போதைக்கு நிற்கும் போல தெரியவில்லை. அத்தோடு.. என்று தயங்கிவிட்டு, தொடர்ந்தான்.. இந்த நிலையில் நீ ஊருக்குள் வருவதற்கு சங்கடப்படுவாய்"என்று டிரைவரை அனுப்பாமல் நானே வந்தேன்... அவன் சொல்லிக்கொண்டு இருக்கையில் அவனது செல் அழகாய் ராகம் இசைத்தது..

நித்யமூர்த்தியின் அழைப்பு அது..
"என்ன மாமா, உங்ககிட்ட சொல்லிவிட்டு தானே அம்பரியை அழைத்துப் போக வந்தேன்? அதற்குள்ளாக போன் செய்றீங்களே?

எதிர்முனையில் நித்யமூர்த்தி பரபரப்பாக பேசினார்,"ஆமா கீர்த்தி, ஃபோனை ஸ்பீக்கரில் போடு, என்றதும் அவன் அப்படியே செய்து விட்டு, "என்ன விஷயம் மாமா? ஏன் உங்க குரல் ஒருமாதிரியா இருக்கு? என்றவனின்.. பேச்சில் அம்பரி குறுக்கிட்டாள்.. "அப்பா, அத்தைக்கு என்னாச்சு சீக்கிரம் சொல்லுங்க,"என்றாள் பதற்றத்துடன்...

"அடடா, அக்காவுக்கு ஒன்றும் ஆகவில்லை. அவங்களுக்கு முழிப்பு வந்ததும் என்னை அழைப்பதாக நர்ஸ் சொன்னாங்க, நான் போய் பேசினேன்"என்றார் கரகரத்த குரலில்

"அப்படியா? அம்மா என்ன சொன்னாங்க மாமா ? என்னை தேடுனாங்களா? என்றான் பரபரப்பாய்

" ஆமாம், உன்னையும் அம்பரியையும் உடனே பார்க்கணுமாம், அதனால் நீ அவளை இங்கேயே கூட்டிட்டு வந்துவிடுப்பா" என்றதும்.. கீர்த்திவாசன் உள்ளூர திடுக்கிட்டாலும் அதைக் காட்டிக்கொள்ளாது, அவசரமாக பேசினான்,

"கொஞ்சம் பொறுங்க மாமா, அம்பரி மழையில் நல்லா நனைஞ்சு போயிருக்கிறாள். அதனால உடை மாத்திக்கிட்டு கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிட்டு வரட்டும். நீங்க சுப்பம்மாக்கிட்டே சொல்லி சீக்கிரம் அவளுக்கு குடிக்க சூடாக ஏதாவது சூப் அனுப்ப சொல்லுங்க, அப்புறம் மாமா இப்போதைக்கு அம்மாவிடம் அம்பரி டாக்டர் அங்கிள் வீட்டில் இருப்பதாகவும் மழை நின்றதும் வருவாள் என்றும் சொல்லி வையுங்கள்... என்றவன் அவர் பதிலைக்கூட எதிர்பாராமல் இணைப்பை துண்டித்துவிட்டு காரை முடிந்த அளவு விரைவாக செலுத்தியபடி, "அம்மாவை பார்க்கறதுக்கு முன்னாடி, உன்கிட்டே நான் கொஞ்சம் பேசணும்.. அப்பத்தான் அம்மா பேசறப்போ உன்னால இயல்பா இருக்க முடியும் அம்பரி. சரி, வீடு வந்துவிட்டது, இந்த குடையை எடுத்துக்கொள், என்றவன் வாகனத்தை அங்கிருந்த ஒரு மரத்தின் அடியில் நிறுத்தினான்.

அம்பரிக்கு அவனோடு வந்ததே அதிசயம் என்றால் அவனது பேச்சு அதைவிட ஆச்சரியமாக இருந்தது. "என்ன இது துரை இப்படி மாறிவிட்டான்? மணிமேகலை ஆன்ட்டி சொன்னது போல நிஜமாகவே மாறிவிட்டானோ? நம்புவது சற்று கடினமாக இருந்தாலும்.. ஏனோ இதமாகவே உணர்ந்தாள். "தாங்க்ஸ், என்றவள் என்கிட்டே என்ன பேசணும்?என்றாள்..

"கல்யாண விஷயம் அம்பரி.." என்றவன் மூன்று தினங்களுக்கு முன்பு நடந்ததை அவளிடம் ஒளிவுமறைவின்றி சுருக்கமாக தெரித்தான்..

அம்பரி யூகித்ததுதான் என்றாலும் அவன் சொன்ன விஷயம் அவளை வெகுவாக பாதித்தது. தவறு செய்வது மனித இயல்பு என்றாலும் அதை ஒத்துக்கொள்ள எத்தனை பேருக்கு தைரியம் இருக்கிறது?

"நீ சொல்லு அம்பரி, நான் மறுக்கிறது தப்பா? என்னைப் போன்ற ஒருவன் உனக்கு தகுதியானவனா? அம்மாவோட ஆசையை நான் தப்பு சொல்லவில்லை.. எனக்குத்தான் எந்த பெண்ணோடும் வாழும் தகுதி இல்லை என்கிறேன்.. அம்மா புரிந்து கொள்ளாமல் பிடிவாதமாக இருக்கிறார்கள்.. நீ மறுப்பு சொன்னால் ஒருவேளை.. அம்மா அவங்க முடிவை மாத்திக்குவாங்கனு தோனுது..: என்றதும் அம்பரியின் முகத்தில் ஒரு கீற்றாய் புன்னகை தோன்றி மறைந்தது..

"என்ன? என்றான் குழப்பத்துடன்..

"அத்தையைப் பற்றி உங்களுக்கு சரியா தெரியவில்லை.. அவங்க சும்மா ஒரு பேச்சுக்காக எதையும் பேசுறவங்க இல்லை.. நாலையும் யோசிச்சுதான் செய்வாங்க.." என்றபோதே தும்மிவிட,

"நான், மடையன் ஈரத்தோடு உன்னை உட்கார வச்சு பேசிட்டு இருக்கிறேன் பார்.. நீ இறங்கு முதலில், போய் டிரஸ் மாத்திட்டு வா" நானும் போய் பிரஷ்ஷப் ஆகிறேன் என்றவன் அவள் இறங்கவும் வண்டியை வேகமாக செலுத்திக் கொண்டு சென்றுவிட்டான் கீர்த்திவாசன்.

அவன் கொடுத்த குடையுடன் அவள் அவுட்ஹவுஸிற்கு நடந்தாள்.. அவளால் நம்பவே முடியவில்லை.. அவளா கீர்த்தியுடன் போசினாள் ? அவனை அவளுக்கு பிடிக்காதே? இப்போது மட்டும் எப்படி அவனோடு பேச முடிந்தது? மனதில் கேள்விகள் எழ வீட்டினுள் நுழைந்தாள் அம்பரி.

கீர்த்திக்கும் அதே யோசனைதான், முன்பெல்லாம் அவன் தூரத்தில் வருவதைப் பார்த்தாலே காணாமல் போய்விடுகிறவாள். இன்று இத்தனை சகஜமாக பேசியதே மிகுந்த வியப்பை அளித்தது. அவனது பேச்சை கேட்ட பின், அவள் தன் தாயைப் பற்றி சொன்னது.. முற்றிலும் சரி என்று தான் தோன்றியது.. அம்மா காரணகாரியமின்றி எதையும் செய்ய மாட்டார்..அவனுக்கு அந்த வார்த்தைகளில் ஏதோ உள்ளர்த்தம் இருப்பதாக தோன்ற, என்ன யோசித்தும் அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை..

கீர்த்திவாசன் தன் அறைக்கு சென்று உடையை மாற்றியவன் நேராக சமையல்கட்டிற்கு சென்றான்..

🧡🧡🧡
 

Attachments

  • IMG-20210929-WA0012.jpg
    IMG-20210929-WA0012.jpg
    68.9 KB · Views: 63