• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

எந்தன் ஜீவன் நீயடி...! - 14

Aieshak

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
176
157
43
53
Chennai, Tamil Nadu
aieshakwrites.in
எந்தன் ஜீவன் நீயடி..! - 14

கீர்த்திவாசன், மனதுக்குள், எண்ணங்கள் அலை மோதியது.. அம்மாவின் உடல் நலம் பேண அம்பரியை திருமணம் செய்தது.. சரியில்லை .. ஆனால் சூழ்நிலை கைதியாக ,வேறு மாற்று யோசனையும் அப்போது அவனுக்கு தோன்றவில்லை. ஆனால் இன்று அம்மாவின் முகத்தில் எத்தனை மகிழ்ச்சி.. எத்தனை காலங்கள் ஆயிற்று அம்மாவை இப்படி பார்த்து.. அப்பாவுக்கு பிறகு அம்மாவை அரவணைத்து செல்ல வேண்டிய தான், பாதை மாறிய காரணத்தினால் அல்லவா அம்மா, சிரிக்க மறந்து போனது? இனி அந்த சிரிப்பு வாடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.. ஆனால், ஆனால்.. இனி அம்பரி எப்படி சிரிப்பாள்? அவள் சுதாகரியின் இழப்பின் பின்னால் சிரிக்கவே காணோம்.. இப்போது அவனது செயலால், ஒரேடியாக முடக்கி விட்டானே? அவனுக்கு தன் மீதே ஆத்திரம் வந்தது.. அவன் இங்கே வராமலே போயிருக்கலாம்.. இருவரது வாழ்க்கையும் எப்படியாவது சீராக இருந்திருக்கும். தூர இருந்தே அம்மாவிடம் கவனம் வைக்காமல் , இங்கே வந்து சிக்கலை உருவாக்கி விட்டான். நடந்ததை இனி மாத்த முடியாது தான். ஆனால் அம்பரிக்கு ஒரு நல்லது நடக்க அவன் தடையாக இருக்க கூடாது. .. என்பதில் உறுதியாக இருந்தான். அதற்காக அவன் ஏற்கனவே தயாரித்த பத்திரம் இருக்கிறது.. முதல் வேலையாக அம்பரியிடம் கையெழுத்து வாங்க வேண்டும்.. அத்தோடு இன்னமும், ஏதேதோ எண்ணியவாறெ, மெல்ல மெல்ல கண்ணயர்ந்தான்.
💜🖤💜

அந்த கிராமத்து மக்களுக்கு அன்றைக்கு மதியம், கல்யாண விருந்து தயார் செய்யப்பட்டு, அந்த ஊரில் உள்ள சமூகநலக்கூடத்தில் பந்தி பரிமாற ஏற்பாடு செய்திருந்தார் நித்யமூர்த்தி. அவர்களுடன் மணமக்களும், வீட்டினரும் அமர்ந்து சாப்பிட்டனர்..
வந்தவர்கள் அனைவரும் மனதார வாழ்த்திவிட்டு சென்றனர். அதுவும் கீர்த்தியை எல்லோருமே ஏதோ ஒரு வகையில் புகழ்ந்தனர்.

அன்று மாலையில், தெரிந்தவர்களுக்கும் தொழில்முறை நட்புகளுக்காகவும், வீட்டின் மொட்டை மாடியில் விருந்திற்கு ஏற்பாடு செய்திருந்தான் கீர்த்திவாசன்.

கீர்த்திவாசனின் அருகே எளிமையான அலங்காரத்தில் அழகு ஓவியமாக அம்பரி நின்றிருந்தாள். அவளோடு அவ்வப்போது ஈஸ்வரி அல்லது சங்கரி உடன் இருந்தனர். நிறைய பேருக்கு அம்ரியை தெரியாது.. அம்பரிக்கும் தான். இன்று தான் அவளை அவர்கள் பார்க்கிறார்கள்..

"வீட்டிலேயே இத்தனை அம்சமான பெண்ணை வச்சுட்டு இவ்வளவு நாளும் எதுக்கு கல்யாணத்தை தள்ளிப் போட்டீங்க? என்பதே பெரும்பாலானவர்களின் கேள்வியாக இருக்க,

அதற்கு, "அவள் படிச்சுட்டு, வேலைக்கு போக ஆசைப்பட்டா, உலகத்தை புரிஞ்சுக்க இது ஒரு வாய்ப்பு என்று நினைத்தோம். இன்னும் இரண்டு வருஷம் கழிச்சு கல்யாணம் பண்ணலாம்னு இருந்தோம் , திடீர்னு அம்மாவுக்கு இப்படி ஆகிட்டதால அவசரமா செய்ய வேண்டியதாகிவிட்டது, அதனால தான் முறையா மண்டபம் பார்த்து எல்லோரையும் அழைக்க முடியலை, என்ற பதிலையே வீட்டினர் அனைவரும் தந்தார்கள்.

மணி பத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. கிட்டத்தட்ட விருந்தினர்கள் எல்லோரும் கிளம்பிச் சென்று விட.. வீட்டினர் மற்றும் நெருங்கிய உறவினர் சிலரும் மட்டுமாக இருந்தனர்.. எல்லோரும் சாப்பிட அமர்ந்தபோது, "நான் போய் அத்தையை ஒரு தடவை பார்த்துவிட்டு வந்து சாப்பிடுறேன்" என்று அம்பரி கிளம்ப...

"சரி , நானும் வர்றேன் . உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும் நினைச்சேன்" என்று கீர்த்தியும் அவளுடன் சென்றான்.

ஆனால் தாயின் அறையை அடையும் வரை இருவரும் பேசிக் கொள்ளவில்லை. ஆனந்தவள்ளி நித்திரையில் இருந்தார். உடன் இருந்த நர்ஸிடம் இரண்டு வார்த்தைகளை பேசிவிட்டு, வெளியே வந்தனர்.

"அம்பரி, இப்போது யாரும் இங்கே இல்லை.. அந்த கையெழுத்து விஷயம்? வருகிறாயா இப்போதே அந்த வேலையை முடித்து விடலாம்" என்றான் தீவிரமான குரலில்..

அம்பரிக்கு, இந்த ஒப்பந்தம் எல்லாம் பிடிக்கவில்லை. அத்தையின் நலனுக்காக செய்தது. அத்தோடு இதற்கு பிறகு அவள் வேறொரு திருமணம் செய்வதாக இல்லை எனும் போது இந்த காகிதம் தேவையற்றது தானே? அதை இவனிடம் சொல்ல முடியாது. பிறகு அதையும் இதில் ஒரு ஷரத்தாக சேர்த்தாலும் சேர்ப்பான். ஆகவே, "நான்தான் இதெல்லாம் வேண்டாம் என்றேனே? உங்கள் வார்த்தையை நான் நம்புகிறேன்.. அதுபோதாதா? என்று அழுத்தமாக கூறினாள்..

" நீ என் வார்த்தையை நம்புறேன் சொன்னதில் எனக்கு ரொம்ப மகிழ்ச்சி அம்பரி. ஆனால் நடைமுறை வாழ்க்கைக்கு இது அவசியம். அடுத்து உனக்கு ஒரு வாழ்க்கை அமைய உதவியாக இருக்கும். இது உனக்கான பாதுகாப்பு கேடயம்.. என்று சொன்னதோடு நிற்காமல் கையோடு , அலுவல் அறைக்குள் அழைத்து போனான். பத்திரத்தை படிக்கச் சொல்லி, அதன் பின் கையெழுத்து போட செய்தான். தானும் கையெழுத்து போட்டு, காகிதத்தை உறைக்குள் வைத்து பத்திரப்படுத்தினான்.

" உங்க திருப்திக்காகத் தான் நான் கையெழுத்து போட்டேன். மற்றபடி, இந்த ஒப்பந்தம் எனக்கு உடன்பாடு இல்லை. நான் அத்தைக்காக தான்.. என்று அவள் சொல்லும் போதே.. ஏதோ வாக்குவாதம் நடக்கும் சத்தம் கேட்டது. இருவரும் அவசரமாக அறையை விட்டு வெளியே வர,

டக் டக் என்று சீரான காலடிகள் சப்திக்க, அழகே உருவாக ஒரு இளம் பெண் கூடத்திற்குள் வந்து கொண்டிருந்தாள். அவளது நிறம் இந்தியப் பெண்களைப் போல மாநிறமாக இருந்தது. ஆனால் அவளது உடைகள் வெளிநாட்டுப் பெண் என்று பறைசாற்றியது..

அவள் பின்னோடு,"அட, நில்லுமாங்கிறேன்..நீ பாட்டுக்கு போய்க்கிட்டே இருந்தா என்ன அர்த்தம்? என்று,அதட்டியவாறு வயது காரணமாக ஓட முடியாமல்
காவலுக்கு இருக்கும், இசக்கி ஓடி வந்தான்..

"ஐயா,நான் சொல்ல,சொல்ல இந்த பொண்ணு ,உங்களை பார்க்கணும்னு,சொல்லிட்டு ஓடிவந்திருச்சு" என்றான் பதற்றமான குரலில்..

"சரி, சரி, எனக்கு தெரிஞ்சவங்க தான், நீ போ, நான் பார்த்துக்கிறேன், என்றவன், பணியாள் செல்வதற்காக காத்திருந்து விட்டு,"நீ எங்கே இங்கே வந்தாய்? உன்னை இங்கே யார் அழைத்தார்கள்? என்றான் கடுமையான குரலில்.

"நியாயமா நீ சொல்லியிருக்க வேண்டும் கேவி.. நானாக விஷயத்தை கேள்விப்பட்டு, கிளம்பி வந்திருக்கிறேன்.." என்றவளின் ஆத்திரப்பார்வை அம்பரியிடம் பாய்ந்தது..

அவளது பார்வையை கவனித்து, "வெல், மீட் மை வைஃப் அம்பரி, என்றுவிட்டு "இவள் பிரின்ஸி, என்னோட யுஎஸ்ஸில் வேலை பார்த்தவள்.." என்று முறையாக இருவரையும் அறிமுகம் செய்து வைத்தான்.

அம்பரியின் மனம் ஏற்கனவே அவள் பேசிய தமிழில் அயர்ந்து இருக்க ,உடன் வேலை பார்த்தவள் போலவா பேசுறா? ஏதோ ரொம்ப உரிமை இருக்கிறவ மாதிரிப் பேசுறாளே என்று யோசனை ஒருபுறம் ஓடினாலும், "வணக்கம்" என்று கை குவித்தாள்.

பதிலுக்கு வணக்கம் செலுத்தாமல் அலட்சியமாக,தோளை குலுக்கியவள், "வேலை மட்டும்தான் பார்த்தோமா கேவி? என்றாள் நக்கலாக..

அவள் சொன்ன பதில், மனதுக்குள் ஏனோ பிசைந்தது.. அவன் பெயரளவு கணவன் என்பதை மூளை அறிவுருத்தினாலும், அந்த பெண்ணின் பேச்சும் தோற்றமும் அவனிடம் தன் உரிமையை நிலைநாட்ட நினைப்பது போல.. தோன்றியது. ஆனாலும் வீடு தேடி வந்திருப்பவளை நிறுத்தி வைத்து பேசுவது சரியில்லை என்று நினைத்து, "நீங்கள், முதலில் உட்காருங்க, நான் உங்களுக்கு சாப்பிட கொண்டு வர சொல்கிறேன்" என்று வீட்டுப் பெண்ணாக விருந்தோம்பலில் இறங்கினாள்.

"நான் இங்கே விருந்து உண்டு விட்டு போக வரவில்லை.. என்று முகத்தில் அடித்தார்போல பதில் சொன்னாள்.

"லிசன், பிரின்ஸி. அவள் என் மனைவி. அவளை நீ அவமானப்படுத்துவதை நான் ஒரு போதும் பொறுத்துக் கொள்ள மாட்டேன்.. என்று கண்டனம் தெரிவிக்க..

ஒருகணம், அமைதி காத்தவள், "ஸாரி.. என்று வேண்டாவெறுப்பாக மன்னிப்பை வேண்டிவிட்டு," நான் உங்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும், இல்லை காட்டணும் கேவி.. அதுக்காகத் தான் நான் இப்போது வந்ததே.. நீ தான் திடுமென அந்தர்த்தனம் ஆகிவிட்டாயே.. அதன் பிறகு உன்னைப் பற்றி விசாரித்தால் யாருக்குமே உன் ஊர், விலாசம் எதுவுமே தெரியலை..
இப்போதுகூட உன்னோட அக்கா பொண்ணுங்க fbல போட்டிருந்த ஸ்டேடஸ் பார்த்துதான் நான் இந்த ஊர் எல்லாம் கண்டுபிடித்தேதே "
படபடவென்று அவள் பேசினாள்..

"ப்ளீஸ், பிரின்ஸி காம்டவுன், மொட்டை மாடியில் என் திருமணத்திற்கு வந்திருக்கும் உறவினர்கள் உணவருந்திக் கொண்டு இருக்கிறார்கள். நாங்களும் இன்னும் சாப்பிடவில்லை. அத்தோடு நீ வெகு தூரம் பயணம் செய்து வந்திருக்கிறாய்.. அதில் களைத்திருப்பாய்.. ஆகவே, நீயும் எங்களுடன் சாப்பிட்டுவிட்டு போய்
ஓய்வு எடு. எதுவானாலும் நாளை காலையில் பேசலாம்.." என்று அவன் பேசிமுடிக்குமுன்.. அங்கே இசக்கி ஓடி வந்தான்..


"தம்பி, தம்பி.. இந்த பொண்ணு வந்த கார் வெளில நிற்குது. அதுக்குள்ள ஒரு குழந்தை அழுவுதுனு.. அந்த வண்டிக்காரன் சொல்லச் சொன்னான்" என்றதும்..

"ஓ! மை பேபி" என்று பிரின்ஸி ஓட,

கீர்த்திவாசன் ஸ்தம்பித்து நிற்க,
அம்பரி, அவனை பேச்சற்று வெறித்தபடி நின்றாள்...

_ஜீவ ராகம் தொடரும்..
 

Attachments

  • eiYA3YC15460.jpg
    eiYA3YC15460.jpg
    71.3 KB · Views: 59

பாரதிசிவக்குமார்

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 18, 2021
2,761
570
113
45
Ariyalur
அட கடவுளே கல்யாணம் முடித்த அன்னைக்கே அம்பரிக்கு பிரச்சனை ஆரம்பம் ஆகிடுச்சே 😔😔😔😔😔😔😔😔😔😔😔