• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

எனக்கென பிறந்தவளே - 01

Hem chandra

Vaigai - Avid Readers (Novel Explorer)
Nov 17, 2023
6
1
3
Pune
அனைவருக்கும் வணக்கம் எனக்கென பிறந்தவளே நான் எழுதும் முதல் கதை.இந்த கதை உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். இந்த கதையில் உள்ள குறை நிறைகளை தங்கள் கருத்துக்கள் மூலம் தெரியப் படுத்துங்கள். உங்களின் கருத்துகளின் மூலம் என்னுடைய பிழைக்களை நான் திருத்திக்கொள்ள உதவியாக இருக்கும்.

அத்தியாயம் 1:

காலை நேரம் 7 மணி என்று அலாரம் அடித்து கூறிக்கொண்டே இருந்தது. அலாரத்தின் ஒளியை காதில் வாங்கி கொள்ளாமல் ஆழ்ந்த நித்திரையில் இருந்தான் வாசு என்று அனைவராலும் அழைக்கப்படும் வாசு தேவன்.

ராசா ராசா எந்திரி ராசா மணி 7 ஆச்சு காலேஜ் போகணும்ல. போ பாப்பாத்தி இன்னும் கொஞ்ச நேரம் தூங்குறேன் . எனக்கு ரொம்ப தூக்க தூக்கமா வருது. ஆமா ராசா நைட் முழுக்க தூங்காம இந்த போனையே பாத்துடே இரு. அப்பறம் தூக்கம் வராம என்ன பண்ணும்.எந்திரி ராசா எந்திரிச்சி இந்த போஸ்ட் குடி அறிட போகுது என்று கெஞ்சி கொண்டு இருப்பவர் பாப்பாத்தி வாசுவின் பாட்டி. இவருக்கு பேரன் என்றால் உயிர்.
பாப்பாத்திக்கு 2 மகன்கள். மூத்தவர் மஹேந்திரன் மனைவி அம்பிகா இவர்களுக்கு ஒரு மகள் ஒரு மகன். மகள் மகாலக்ஷ்மி மகன் வாசுதேவன். மகாவிற்கு திருமணம் முடிந்து ஐந்து வருடங்கள் ஆகிறது கணவர் ராகவன். மகா ராகவனின் செல்லமகள் பிரீத்தி நான்கு வயது சின்ன சிட்டு. வாசு முதுகலைப் படிப்பில் இறுதி ஆண்டு மாணவன்.

பாப்பாத்தியின் இரண்டாவது மகன் முருகேசன் மனைவி லலிதா. லலிதா அம்பிகாவின் உடன் பிறந்த சகோதரி. அண்ணா தம்பி இருவரும் அக்கா தங்கையை மானந்தவர்கள்.

முருகேசன் லலிதா தம்பதி களுக்கு குழந்தை பிறந்து சில நாட்களில் இறந்துவிடாது. லலிதா மிகுந்த மானவருத்தத்தில் இருந்தார். தங்கையின் மனவருத்தம் நீங்க தனக்கு பிறந்த ஆண் குழந்தையை சகோதரிக்கு தாரைவார்த்தர். லலிதா மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். இருப்பினும் அக்காவை கஷ்டப்படுத்த மனமின்றி போக இறுதில் இரண்டு அன்னைக்கு ஒரு மகனா வளர்ந்தான் நம் வாசு தேவன்.

பாப்பாத்தியம்மாள் ஒரே மகள் சாந்தா கணவர் லிங்கம். சாந்தா லிங்கம் தம்பதிக்கு வனிதா, சுரேஷ் என்று இரு குழந்தைகள். சாந்தாவிற்கு தன் மகள் வனிதா வை வாசுவிற்கு திருமணம் செய்து வைக்கவேண்டும் என்ற ஆசையுடன் இருப்பவர்கள்.

வாசுவின் தாத்தா வேலுசாமி மூன்று முறை மந்திரியாக இருந்தவர். தாத்தா வேலுசாமின் மறைவுக்கு பின்னர் வாசுவின் அப்பா மஹேந்திரன் அவருடைய அரசியல் வாரிசு ஆனார். மஹேந்திரன் இரு முறை மாதிரியாக இருந்து இப்பொழுது MLA வாக இருக்கிறார்.

வாசுவின் சித்தப்பா முருகேசன் அந்த ஊரின் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார்.(மஹேந்திரன் வீட்டில் எப்போதும் அமைதியாக தான் இருப்பார்.தந்தை இருந்த வரை அவர் தான் அந்த வீடின் அனைத்து முடிவுகளையும் எடுப்பார். தந்தை மறைவுக்கு பின் குடும்பம், கட்சி இரண்டும் இவர் பொறுப்பானது. இவர் அரசியல், கட்சி என்று வரும்போது சரவெடியாக இருப்பார். வீட்டில் தேவையென்றால் மட்டுமே பேசுவார்.).

இப்படிப்பட்ட அரசியல் மற்றும் பணக்கார குடும்பத்தின் ஒரே வாரிசு நம் வாசு தேவன் மட்டுமே. இதனாலயே தொழில் மற்றும் அரசியல் எதிரிகளால் இவனுக்கு ஆபத்து நேரும் வாய்ப்பு அதிகம் உள்ளதால் எப்பொழுதும் வாசுக்கு மறைமுக பாதுகாப்பு இருந்து கொண்டே இருக்கும் .

வாசுவின் ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்றுவதை தான் முக்கிய நோக்கமா கொண்டு வாழ்ந்து வருகிறார்கள் .வாசு அந்த விடின் முடிசுடா இளவரசன். அவன் ஆசை பட்ட அனைத்தும் அவன் வாய் திறந்து கேட்பதற்குள் நிறைவேற்றி விட வேண்டும் என்பதே அந்த வீடின் அனைவரது எண்ணமும்.

வாசுவின் அறையில் இல்லாத வசதிகளே கிடையாது. வாசு உபயோகிக்கும் அனைத்தும் விலைஉயர்ந்த தனித்துவம் உடையதாக இருக்கும்.வாசு பயன்படுத்தும் போன், பைக், வாட்ச் என அனைத்தும் வெளிநாட்டிலிருந்து வரவழைக்கப் பட்டது.
வாசுவின் ஆடைகள் அனைத்தும் அப்பா, சித்தப்பா அவருடைய பொறுப்பு. ஒவ்வொரு ஆடையும் பார்த்து பார்த்து தேர்வு செய்வார்கள். உணவு வாசுவின் இரு அன்னையர் பொறுப்பு (வாசு சித்தி லலிதா வையும், லல்லிமா என்று அழைப்பான்).வாசு கஷ்டம் என்பதே தெரியாமல் வளர்ந்தவன். ஆனால் அவன் வாழ்க்கையில் கஷ்டங்கள் தொடர போவதை அறியாமல் போனான்.

வாசு அவனது அப்பா மட்டும் சித்தப்பாவின் உயிர் என்பதால் அவர்களின் தொழில் மட்டும் அரசியல் எதிரிகளுக்கு வாசுவை அழிப்பதே குறிக்கோளாக இருந்தது. வாசுவை முடிப்பதற்கு பல முயற்சிகள் எடுக்கப்பட்டது. அனைத்தும் வாசு அறியா வண்ணம் முறியடிக்கபட்டது.

அம்மா பஸ் வர டைம் ஆச்சிமா வேகமா டிபன்பாக்ஸ' குடுங்க என்று கத்திக்கொண்டு இருப்பவள் அந்த வீட்டின் இளையமகள் ரேணுகாதேவி. ரேணு என்று அனைவராலும் செல்லமாக அழைக்க படுப்பவள் இந்த செல்ல பெயரே பின்னால் அவளின் வாழ்க்கையை மாற்ற போகிறது என்று அறியாமல் போனது விதியோ.


கத்தி கொண்டு இருந்த ரேணுகா வை பார்த்து இருவர் முறைத்து கொண்டு இருந்தனர். ரேணுகாவின் அண்ணா விக்னேஷ் மட்டும் தங்கை அனு.

என்னடி என்னமோ உனக்கு மாட்டோம் தான் டைம் ஆகுற மாதிரி இப்படி கத்துற எனக்கும் தான் லேட்டாசி ஏன் அண்ணா க்கு கூடத்தான் ஆபீஸ் க்கு நேரம் ஆச்சு நாங்க அமைதியா தானே இருக்குறோம் உனக்கு மாட்டோம் என்ன வய முடிடு வந்து உக்காரு கொஞ்ச நேரம். காலையிலே கத்தி தலைவலி வர வச்சிரத வா வந்து உக்காரு ரேணுகா என்று அண்ணன் அழைக்கவும் அமைதியாக வந்து அமர்ந்து கொண்டால் அண்ணன் அருகில்.

இன்னைக்கு ஆபீஸ் ஒரு மீட்டிங் இருக்குமா கொஞ்சம் வேகாமா டிபன்பாக்ஸ் தாங்க என்று அமைதியாக கேட்டான் விக்னேஷ். இதோ கொண்டு வந்துட்டேன் என்று குறிக்கொண்டே வந்தால் ரேணுகா வின் அண்ணி இந்து.டிபன்பாக்ஸ் பெற்றுக் கொண்டு அனைவரிடமும் விடைபெற்றான் விக்னேஷ்.

அம்மா இன்னும் எனக்கு டிபன்பாக்ஸ் வரல என்று காத்த ஆரம்பித்தாள் ரேணுகா கத்தாத டி என்று மகளை வைத படி வந்தார் ரேணுகா வின் அம்மா லட்சுமி. நீ கத்துறத கேட்டு அப்பா வந்துட போறாரு என கூறிக்கொண்டே மகள் கள் இருவருக்கும் டிபன்பாக்ஸ் கொடுத்து கிளம்ப சொன்னார்.அனு கிளம்பி சென்று விட ரேணுகா மட்டும் செல்லாமல் இருந்தால்.

என்னடி கிளம்பளைய டைம் ஆச்சு லட்சுமி கூற. அது எப்படி அதுக்குள்ள கிளம்புவ என்கிட்ட இருந்து பணத்த கறக்காம போயிருவாளா என கூறிக்கொண்டே விட்டின் உள்ளே வந்தார் ரேணுகாவின் அப்பா வெங்கடேசன் இவர் தனியார் அலுவலகம் ஒன்றில் மேலளராக உள்ளார். வெங்கடேசன் அமைதியும் நேர்மையும் கொண்ட நல்லமனிதர். தேவை இல்லாமல் யாரிடமும் அதிகமாக பேச கூடா மாட்டார். முக்கியமாக அரசியல் பற்று சிறிதும் இல்லாதவர்.அரசியல் மட்டும் அரசியல்வாதிகளை வெறுப்பவர். இப்படிப்பட்டவரின் மகள் பின்னாளில் மிகப்பெரிய அரசியல் குடும்பத்தின் மருமகள் ஆக போகிறாள் என்பதை அறியாமல் போனது விதியின் சதியோ...

வெங்கடேசன் குணங்களுக்கு நேர் எதிரிரான குணம் கொண்டவள் நம் ரேணு. அப்பாவிடம் நிறைய பொய்க்குறி அவரிடம் இருந்து 200ரூபாய் பெற்று கொண்டு மின்னல் போல் ஓடி மறைத்தால் ரேணுகா.ரேணு BCA இறுதியாண்டு படித்து வருகிறாள். தினமும் பஸ்சில் ஒரு மணி நேரம் பயணம் செய்து தஞ்சாவூரில் உள்ள தன் கல்லூரிக்கு சென்றுவருகிறாள்.
 
  • Like
Reactions: Vathani