அத்தியாயம் 13
"ஏன் தியாகுண்ணா நீ இன்னும் கல்யாணம் பண்ணிக்காம இருக்க?" மாரி தியாகுவிடம் கேட்க,
"அதை ஏன் டா கேட்குற.. வேணும்னா இருக்கேன்.. வேண்டாம்னு சொல்ற இவனை துரத்த கூட பொண்ணுங்க இருக்கு" என்று தியாகு ஆதியை சொல்லவும்,
"உன்னை நாய் தான் தூரத்துதாண்ணா" என்று கேட்டு ரெண்டு அடியையும் வாங்கிக் கொண்டான் மாரி.
"அப்புறம் பொண்ணுங்கன்னு சொல்லாதண்ணா.. அக்கா பறந்து வந்து அடிக்கும்.." என்று சொல்ல, ஆதியைப் பார்த்து சிரித்தான் தியாகு.
"நேத்து கூட ஒரு ஜாதகம் வந்ததா அம்மா சொன்னாங்களே.. அது என்னாச்சு?" ஆதி மற்றதை விடுத்து இதை கேட்க,
"அந்த பொண்ணு ஜாதகத்தை அவங்க அம்மா குடுத்தது பொண்ணுக்கு தெரியாதாம்.. இன்னைக்கு காலையில ஜாதகம் குடுத்தது தெரிஞ்சி அது விஷத்தை குடிச்சிருச்சாம்" என்று சொல்லவும் ஏதோ நினைத்து மாரி சிரிக்க,
"மரியாதையா சொல்லிடு என்ன நினச்சு சிரிச்ச?" என்றான் தியாகு.
"சொன்னா அடிப்பியே!" மாரி கூற,
"சொல்லலைனாலும் அடிப்பேன்.. சொல்லு டா" என்று கூற, மாரியை அறிந்த ஆதியும் அவன் பதில் தெரிந்ததை போல முறைத்தபடி பார்த்தான்.
"அப்படிலாம் பார்க்காதண்ணா.. அந்த பொண்ணு எஸ்கேப் ஆனது ஒரு விஷயம்.. இன்னொன்னு கவனிச்சியா.. விஷம் குடிச்சு செத்தாலும் பரவாயில்ல ஆனா.." என்று மாரி ஆரம்பிக்கும் முன்பே தியாகு அவனருகே வந்து காதைப் பிடித்து திருகி இருந்தான்.
"வாய்.. வாய்.. ஆதி இவனுக்கு வாய் இப்ப ரொம்ப ஜாஸ்தி ஆயிடுச்சி டா.. முன்னாடியும் பேசுவான் தான்னாலும் இப்ப ரொம்ப ஓவரா தான் இருக்குது" என்று தியாகு கூற,
"சேர்க்க அப்படிண்ணா" என்றான் ஆதி முணுமுணுப்பாய்.
"சரி சரி மிச்சத்த சொல்லு" மாரி காதை தடவியபடி எடுத்து கொடுக்க,
"அந்த பொண்ணு யாரையோ லவ் பண்ணுதாம் டா.. அதை சொல்ல தைரியம் இல்லாம விஷத்தை குடிச்சிருக்கு.. நல்லவேளை நான் சிக்கல.. வக்கீலுக்கு படிச்சதுக்காக ஒரு பொண்ண நம்பி தர மாட்றாங்க" என்றான் தியாகு.
அதெல்லாம் உனக்குன்னு இருக்குற அண்ணி பக்கவா வரும் பாரு.." என்று மாரியும் நல்ல வார்த்தையாய் கூறி வைத்தான்.
தியாகு அன்று வீட்டில் இருந்ததால் ஆதியின் கடையில் வந்து சில நிமிடங்கள் அமர்ந்து பேசிவிட்டு சென்றிருந்தான்.
அடுத்தடுத்த நாட்கள் அழகாய் சென்று கொண்டிருந்தது ஆதிக்கு. அவனையும் மீறி சாருவின் வார்த்தைகளை எல்லாம் கேட்க ஆரம்பித்து இருந்தான்.
முகத்தில் காட்டிக் கொள்ளவில்லையே தவிர சாரு பேசும் ஒவ்வொரு வார்த்தைகளும் தாளம் தவறாமல் அவன் காதிற்குள் சென்று சேர்ந்திருக்கும்.
எங்கிருந்து வருவாள் எப்படி அவன் முன் நிற்பாள் என்றெல்லாம் சொல்லவே முடியாது.. ஆனாலும் ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு நேரத்தில் அவன்முன் வந்து நின்று விடுவாள் சாரு.
முகத்தை உர்ரென வைத்திருவனை கொஞ்சம் ஆழமாய் அவள் பார்க்க, இவனுக்கு கண்கள் துடிக்கும்.
சுமதி திருமணம் முடிந்து ஒரு மாத காலம் ஓடி இருந்தது. முதல் பத்து இருபது நாட்களும் மறுவீடு, விருந்து என்று சுமதி புகுந்த வீட்டிற்கும் பிறந்த வீட்டிற்குமாய் மாறி மாறி வந்து கொண்டிருந்தாள்.
சாரு வீட்டிலும் சுமதியை கணவனோடு கூட்டி சென்று விருந்து கொடுத்து அனுப்பி இருந்தனர்.
அப்போதும் கூட "நீயும் வாயேன் வாத்தியாரே!" என்று கூப்பிட்டு அவனின் முறைப்பை வாங்கி சென்றிருந்தாள் சாரு.
"எங்கிருந்து தான் இவளுக்கு இவ்வளவு தைரியமோ!" சில நாட்களாக அவள் தன்னிடம் பேசி செல்லும் பொழுதெல்லாம் இந்த வார்த்தைகள் தான் முதலில் அவனுக்கு தோன்றும். கூடவே ஒரு புன்னகையும் கூட.. அதை காட்டிக் கொள்வானா என்ன!.
இப்போது தான் மருமகளாய் புகுந்த வீட்டில் பொறுப்பேற்க சுமதி ஆரம்பித்திருக்க, கல்யாண வீட்டின் அமளிதுமளி எல்லாம் அடங்கி தினமும் கடையில் அமர ஆரம்பித்திருந்தான் ஆதி.
வழக்கமான நாட்களாக மாற ஆரம்பித்திருந்தது. ஆதிக்கு மட்டும் இன்றி சாருவிற்கும் தான்.
இந்த ஒரு மாத காலமும் இவள் வகுப்பிற்கு கிளம்பி வெளியே வந்தால் கடையில் அவன் இருக்க மாட்டான்.. எதாவது சமாளித்து, ஏமாற்றி, மாரியை தூதுவிட்டு என ஆதியை ஒரு நாளில் ஒருமுறை பார்ப்பதே பெரிதாய் இருந்தது அவளுக்கு.
இப்பொழுது அவளுக்கான நாட்கள் திரும்பி இருக்க, தியாகு சென்ற சில நிமிடங்களில் வந்தவள் "வணக்கம் வாத்தியாரே!" என்றாள் சத்தமாய் ஸ்கூட்டியை அவன்பக்கமாய் திருப்பியபடியே.
பதில் பேசாமல் பார்த்துவிட்டு குனிந்து கொண்டான்.
"என்ன சில்ற அக்காவைப் பார்த்தும் பார்க்காத மாதிரி இருக்க?" சாரு மாரியிடம் கேட்க,
"நீ என்ன எனக்கா வணக்கம் சொன்ன? எங்க சொன்னியோ அங்கேயே முடிஞ்சா பதில் வணக்கத்த வாங்கிக்க.." என்றான் வம்பாய்.
"நீ பதிலுக்கு ஒரு சலாம் போட்ருந்தன்னா இந்த சில்வண்டு எல்லாம் என்னை இப்படி பேசுமா.." என ஆதியிடம் கேட்க, அவன் கேட்டுக் கொண்டிருந்தானே தவிர பேசவில்லை.
"பார்த்தியா! இதான்... இவ்வளவு தான் உனக்கு மரியாதை.. உன்னை தேடி வந்து பேசுற எனக்கு ஒரு நமக்கம் போட்டியா நீ? போ போ!" என்று மாரி கூற,
"சரி சரி டென்ஷன் ஆவாத.. இந்த வாத்திகிட்ட வணக்கம் வேணா வாங்க முடியாம போகலாம்.. என்ன வாங்கணுமோ அதை கண்டிப்பா வாங்குவேன்" என்று ஆதியை பார்த்தே கூற,
"டேய்! கடைக்கு ஆளுங்க வர்ற நேரம்" என்றான் பார்வையை திருப்பாமல் ஆதி.
"ன்னக்கா சவுண்ட்டு குறைஞ்சிடுச்சு.. எதனா பண்ணிட்டியா என்ன?" சாரு காதை கடிப்பதை போல மெதுவாய் மாரி கேட்க,
"அதான் டா நானும் யோசிச்சுட்டு இருக்கேன்.. முன்ன மாதிரி வாத்தி என்னை முறைக்கவும் மாட்டுது கத்தி பேசவும் மாட்டுது.. ஒருவேளை வாய்ப்பு இருந்து அது வந்திருக்குமோ?" என்று அவனைப் போலவே அவளும் பேச,
"எதுக்கா?" என்றான் புரியாமல் மாரி.
"அது தான் டா.. இந்த லவ்வு கிவ்வு.." என்று கூறவுமே
"அதுக்குள்ளவா?" என்று அவன் அதிர்ச்சியாக, அவன் மண்டையிலேயே நங்கு நங்கென்று கொட்டினாள் சாரு.
"வருஷக்கணக்கா நானே காத்துட்டு கிடக்குறேன்.. அதுக்குள்ளவாவாம்.. முதல்ல எனக்கும் வாத்திக்கும் உன் காலடி மண்ணை எடுத்து தான் சுத்தி போடணும்.. முகரைய பாரு" என்று பேசி ஆதி புறம் திரும்ப, நன்றாய் இருவரையும் இடுப்பில் கைவைத்து முறைத்து நின்றான் ஆதி.
"என்னவோ இப்பத்தான் முறைக்குறதே இல்லனு சொன்ன? இந்தா போதும்ல எனக்கு" என்று மாரி சிரிக்க,
"உனக்கு இருக்கு டா" என்றாள் கோபமாய்.
"உன் மண்டையை பொளக்க போறேன்.. உன் அம்மா இன்னைக்கு வரட்டும் டா பாத்துக்குறேன்.. என்ன நினைச்சுட்டு இருக்குற நீ?" காச்மூச் என ஆதி மாரியை மட்டுமே திட்ட, அவனையே குறுகுறுவென பார்த்து நின்றாள் சாரு.
"போய் வேலைய பார்க்க சொல்லு" முடிவாய் சொல்லிவிட்டு அவன் உள்ளே செல்ல,
"ஏன் அதை இவரு சொல்ல மாட்டாராமா.. இதுக்கெல்லாம் சேர்த்து மாட்டுவ டி ஒருநாள்" என்றவள்,
"இந்த வண்டி வேற ஒரு மக்கரும் பண்ணி தொலைய மாட்டுது.. வாத்தியார் கையில ஒருவாட்டி கொடுக்கலாம்னு பார்த்தா.. ம்ம் நடக்காது போலயே.. என்னனு வாங்கினாரோ அப்பா" என நன்றாய் இருக்கும் தன் வண்டிக்கும் நாலு கேள்வியை கேட்டபடி அதை ஸ்டார்ட் செய்து வகுப்பை நோக்கி சென்றாள்.
உள்ளே சென்றவன் முகம் முழுதும் அத்தனை புன்னகை. முதலில் சாரு பேச்சை அசட்டை செய்து பின் திருத்த பார்த்து, கோபமாய் பேசி, முறைத்து என அவ்வளவு திடமாய் இருந்தவனுக்குள்ளும் சிறு சலனத்தை தன் வீட்டில் உள்ளவர்கள் முதல் தன்னை சுற்றி உள்ளவர்களே ஏற்றி விட்டிருக்க, முதலில் அதிர்ச்சியும் பின் இது சரி வருமா என்ற எண்ணமுமாய் தான் சுற்றி வந்தான்.
அன்னைக்கு துணையாய், அவர் மரியாதைக்கு பாதுகாப்பாய் என சாருவை கண்ட அந்த நொடியில் முடிவு செய்துவிட்டவன் அதன்பின்னும் யாரிடமும் காட்டிக் கொள்ளவில்லை.
இந்த மாதிரியான தருணங்களை ரசிக்கவும் ஆரம்பித்து இருந்தான். காட்டிக் கொள்ளவில்லை என்றாலும் முன்பிருந்த முறைப்பும் கோபமும் என எங்கோ போயிருக்க, அதை கவனிக்கவும் ஆரம்பித்து இருந்தாள் சாரு.
கண்ணால் காண்பதை எல்லாம் நம்ப முடியுமா என்ன? வாய் திறந்து சொல்ல வேண்டுமே? அவன் வாய் மொழி மட்டுமே இங்கே தேவை.
ஆதியும் மறைக்க நினைக்கவில்லை.. ஆனாலும் சாரு போல பட்டென்று பேசிவிட முடியவில்லை. அது அவன் குணமும் இல்லையே!
தாய் எதாவது பேசினால் கூட பேசி பார்க்கலாம் தான்.. இப்போது தான் சுமதியின் விருந்து அனைத்தும் முடிந்து அவர் கவனம் மகளிடம் இருந்து திரும்பி இருக்க, இன்னும் சாருவை பற்றிய பேச்சு சுமதி திருமணத்திற்கு பின் ஆதியின் வீட்டில் நிகழவே இல்லை.
மீனாட்சி மகனிடம் சொல்லவில்லையே தவிர தேவியிடம் சென்று பேசி இருந்தார் தெளிவாய். ஆனால் அதற்கு தேவி தான் பிடி கொடுக்கவில்லை.
மகள் மாறப் போவதில்லை தான் என்றாலும் ஆதி அன்று பேசி இருந்ததில் இருந்து ஆதிக்கு சாருவை பிடிக்கவில்லை என்பதை நினைத்துக் கொண்டே தான் இருந்தார் தேவி.
"அவன் ஏதோ புரியாம உளறுறான் தேவி.. நீ தப்பா நினைச்சுக்காத.. நான் அவனுக்கு புரிய வைக்குறேன்" என்று மீனாட்சி கூற,
"ஆதி கல்யாணமே வேண்டாம்னு சொல்லலையே மீனா.. எனக்கென்னவோ சாரு வேண்டாம்னு சொன்ன மாதிரி தான் இருந்துச்சி" என்று மறைக்காமல் மனதில் இருந்ததை கூறி இருந்தார்.
"அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்ல தேவி.." என்றவர் திருமணம் வேண்டாம் என்று ஆதி கூறிய காரணத்தை கூறவும் தேவி யோசிக்க,
"அடுத்த முறை அண்ணே எப்ப வர்ராங்கனு சொல்லு.. கல்யாணத்துக்கு தேவையான எல்லாம் நானே ஏற்பாடு பண்றேன்" என்று அடித்து மீனாட்சி கூற,
"என்னவோ சொல்ற.. பொண்ணா போய்ட்டாளே! அதுவும் வாய் வேற ஜாஸ்தி.. அதான் கொஞ்சம் பயமா இருக்கு" என்று அப்போதும் குழப்பத்தில் தான் இருந்தார் தேவி.
சாரு தான் தன் மருமகள் என்ற அளவில் உறுதியாய் இருப்பதாய் பலவிதமாய் நம்பிக்கையை கொடுத்துவிட்டே சென்றிருந்தார் மீனாட்சி.
அதனால் கூட பிரேமா சுமதியின் திருமணத்தில் கேட்டதும் அய்யோ என்று ஆனது மீனாட்சிக்கு.
அப்போதே முடிந்த அளவு சீக்கிரம் மகனிடம் பேசிவிட வேண்டும் என்றும் நினைத்துக் கொண்டிருந்தார்.
ஆதியும் எதுவும் மீனாட்சியிடம் பேசவில்லை திருமணம் குறித்தும் சரி சாருவை குறித்தும் சரி.
அவராய் பேசும் பொழுது சொல்லிவிட வேண்டும் என்று நினைத்திருந்தான். அதுவும் இன்னும் ஒரு ஒருவருட கால நேரம் கேட்கவும் நினைத்து இருந்தான்.
ஆதி அளவில் தெளிவாய் திட்டமிட்டு அதை அன்னையிடமும் கூற தயாராய் இருக்க, இரு வீட்டினரும் எப்போதடா ஆதி சம்மதம் சொல்வான் என்பதாய் இருக்க, சாருவுக்கு எந்த கவலையும் இல்லை. அவன் வருவான்.. அவனாய் வருவான் என்பதில் மட்டும் தெளிவாய் இருந்தாள்.
அதுவும் சில நாட்களாக அவனிடம் தென்படும் மாற்றங்கள் நினைத்து அவ்வபோது சிரித்துக் கொள்வாள்.
'நான் உன் பின்னாடி சுத்துறதுல உனக்கு அவ்வளவு சந்தோசம் இல்ல.. பாத்துக்குறேன்' என்பதை போன்ற பாவனைகள் இருக்கும் அவள் சிரிக்கும் பொழுதெல்லாம்.
தொடரும்..