அத்தியாயம் 19
வண்டியை அதனிடத்தில் விட்டுவிட்டு வீட்டிற்குள் செல்லாமல் கடையிலேயே இருந்து கொண்டான் ஆதி.
வீட்டிற்குள் சென்றால் அம்மா நிச்சயம் கேட்பார்.. சொல்லிவிட்டு தானே சென்றான்.. கேள்வி வராமல் இருக்காது அதனால்.
ஆனாலும் உடனே சொல்லிவிடுவானா என்ன ஆதி? மெதுவாய் சொல்லிக் கொள்ளலாம் என நினைத்து அவன் வேலையில் அமர,
அங்கே வண்டி நின்றது முதல் முகம் முழுதும் மலர்ந்தபடி வந்து அமர்ந்து வேலையை பார்க்கும் வரை தன்னை ஒருவன் கவனிப்பதை என்ன.. அங்கே ஒருவன் இருப்பதையே கண்டுகொள்ளவில்லை ஆதி.
மாரியும் ஆதி வேகமாய் வண்டி எடுத்து செல்லும் போது பார்த்து தான் இருந்தான். அவன் சென்ற பின் மீனாட்சி வந்து எட்டிப் பார்க்க,
"என்ன ஆச்சி! அண்ணா எங்க போகுது?" என்றதற்கு,
"அவனுக்கென்ன எதாவது ஏழரையை கூட்ட போவான்" என்று சத்தமாய் சொன்னவர், இன்னும் கொஞ்சம் முணுமுணுத்தார் மெதுவாய் மகனை.
எப்படியும் சம்மதிக்க வைத்து விடலாம் என்று நினைத்திருக்க, இன்னும் இப்படி உளறிக் கொண்டு இருக்கிறானே என்ற கோபம் அவருக்கு.
இப்படி என்ன பிரச்சனையோ என மாரியும் பார்த்து அமர்ந்திருக்க, எதையுமே கண்டு கொள்ளாமல், எப்பொழுதும் உர்ரென்று இருக்கும் முகம் கொஞ்சமே கொஞ்சமாய் புன்னகைப்பதை போலவும், அப்படி இல்லாததை போலவும் இருக்க,
"வர வர என்ன நடக்குதுன்னே புரியலை.. இனி காலேஜ் போறதை கொஞ்சம் தள்ளி வைக்கணும்.. நிறைய நமக்கு தெரியாம நடக்குது" என்று சத்தமாய் மாரி சொல்ல, அந்த சத்தத்தில் தான் கலைந்தான் ஆதி.
"நீ இன்னைக்கு காலேஜ் போகல?" ஆதி அவனை கேட்க,
"ண்ணோவ்! காலையிலே இங்க தான இருக்கேன்.. சொல்லாம போனதும் இல்லாம ஏன் இருக்கேன்ற மாதிரி கேக்குறீங்க?" என்றான்.
"ஆமா உன்கிட்ட சொல்லிட்டு தான் போனும் நான்.." என்று முறைத்தவன் காலை அவன் இருந்ததையே மறந்திருந்தான்.
"ஒரு மார்க்கமா தான் இருக்குது இந்தண்ணா.. இரு அக்கா வரட்டும் தெளிய வைக்குறேன்" என்றான் மாரியும்.
இன்னும் மகனை காணவில்லையே என வெளியே வந்த மீனாட்சி அவன் கடையில் இருப்பதை பார்த்ததும் அவனை முறைத்தபடி வந்தார்.
"எதுக்கும் பதில் சொல்றது இல்ல சரி.. வந்ததும் இங்கேயே உட்கார்ந்தாச்சு.. என்னை பார்த்தா உனக்கு எப்படி தான் தெரியுதோ" என்று கோபமாய் ஆதி முன் நிற்க,
"நீங்க தான் நான் சொன்னதை கேட்கலையே அதான்" என்றான் அவனும் அலட்டிக் கொள்ளாமல்.
"ஆமா இவரு பெரிய மனுஷன்.. இவர் சொன்னா கேட்டுக்கணும்" மீனாட்சியும் விட்டேனா என பேச,
"நீங்க தானே நீயே பார்த்துக்கோன்னு சொன்னிங்க.. அதான் நானே பார்த்து பேசிட்டேன்.. எல்லாம் சரினு சொல்லிட்டாங்க" மொட்டையாய் இருவரும் பேச மாரியும் புரியாமல் அமர்ந்திருந்தான்.
"என்ன டா சொல்ற? சாரு என்ன சொன்னா?" பதறி அவர் கேட்க,
"ஏன் மா டென்ஷன்? நீங்க சொன்னது சரினு தோணுச்சு.. கேட்டேன்.. ஒரு வருஷம் ஒன்னும் பெரிய விஷயமே இல்லைனு சொல்லியாச்சு..இப்போ ஓகே தான உங்களுக்கு?" என்று கேட்க பல்லைக் கடித்தார் அன்னை.
"பேச்சுக்கு சொன்னா அப்படியே செஞ்சுடுவியா? அய்யோ தேவி என்னை என்ன நினைப்பா? உன்னை எல்லாம்.." என்று பேச,
"ஆச்சி என்ன பிரச்சனை?" என்றான் மாரி.
"ஆமா சொல்லுங்க.. சார் தீர்த்து வச்சுடுவார்" ஆதி கிண்டல் செய்ய, அவனை முறைத்தவர், அனைத்தையும் சொல்ல,
"இவ்ளோ தானா? அதான் ஆதிண்ணா வேண்டாம்னு சொல்லுதே அப்புறம் என்ன?" என்று மாரி ஆதிக்கு சப்போர்ட் செய்ய, ஆதியும் அவனை சந்தேகமாய் பார்த்தான்.
"அவன் இஷ்டப்படி விட சொல்றியா? மூணு மாசத்த விட்டா ரெண்டு வருஷத்துக்கு பண்ண கூடாதுன்னு சொல்லிட்டாரு ஜோசியர்" என்று மீனாட்சி கூற,
"அதான் நானும் சொல்றேன்.. மூணு மாசத்துல அண்ணா வேண்டாம்னு சொல்லுது இல்ல.. அப்ப ரெண்டு வருஷம் வெயிட் பண்ணட்டும்.. இல்ல ஆதிண்ணா" என்றவன் மீனாட்சியைப் பார்த்து கண்ணடிக்க, சட்டென்று விழித்துக் கொண்டான் ஆதி.
'ரெண்டு வருஷமா?' என நினைத்தவன் இப்படி மாட்டி விடுகிறானே அன்னையிடம் என்று நினைத்து அன்னையை பார்க்க, அவரும் யோசிப்பதை போல பாவனை செய்தார்.
"போச்சு.. பிளான் பண்ணிட்டாங்க.." ஆதி நினைக்க,
"ரெண்டு வருஷம் அதிகம் டா" என்றவர் மாரியின் கண்ணசைவில்,
"இருக்கட்டும்.. நான் தேவிகிட்ட பேசுறேன்.. அதான் வேண்டாம்னு சொல்றானே" என்று சொல்ல, முதலுக்கே மோசமாய் போனது ஆதிக்கு.
"ம்மா! நீங்க ஒன்னும் பேச வேண்டாம்.. நீங்க சொன்னதால தான நான் போய் பேசினேன்?" ஆதி மல்லுக்கு நிற்க,
"ண்ணோவ்! நீ சாருக்காகிட்ட பேசின? எப்போ?" என்று மாரி கேட்க,
"அதெதுக்கு உனக்கு?" என்றவன் அன்னையைப் பார்த்தான்.
"இங்க பாரு ஆதி.. நான் ஏதோ உன்னை பயமுறுத்த சொன்னேன்.. அதுவும் நீயெல்லாம் பொண்ணுகிட்ட பேசுவியாக்கும் நினச்சு சொன்னேன்.. ஆமா நிஜமாவே நீ சாருகிட்ட பேசினியா?" என்று அன்னையும் கேட்க, அய்யோ என்று ஆனது ஆதிக்கு.
"எல்லாம் உன்னால டா" என மாரியை முறைத்தவன்,
"இந்த பேச்சு இத்தோட இருக்கட்டும்.. நான் பேசிட்டேன்.. ஒரு வருஷம் டைம் வேணும் அவ்வளவு தான்" முடிவாய் ஆதி சொல்ல,
"அப்படி உன் இஷ்டத்துக்கு பண்ண முடியாது.. முணு மாசத்துல வேண்டாம்னா ரெண்டு வருஷம் இப்படியே சுத்து.. உனக்காக நானெல்லாம் யார்கிட்டயும் போய் நிக்கமாட்டேன்" என சண்டைக்கே வர, தியாகு வந்துவிட்டான்.
"என்னம்மா ரோட்லயே சவுண்ட் அதிகமா கேட்குது?" என்று வண்டியை நிறுத்த,
"வா தியாகு.. நீயே இவனை என்னனு கேளு.. கல்யாணம் பண்ண மாட்டேன்னு உசுர வாங்கினான்.. இப்போ பண்ணினாலும் இப்படி தான் பண்ணுவேன்னு உசுர வாங்குறான்.. ஒன்னு சாமியாரா போக சொல்லு.. இல்ல நான் சொல்றதை கேட்க சொல்லு" என்று பேச,
"ம்மா! என்ன பேசுறீங்க நீங்க?" என்றான் ஆதி.
"உனக்கு என்ன டா பிரச்சனை? கல்யாணத்துக்கு சரினு சொன்ன தான?" என்று தியாகு கேட்க,
"நீ வேற ஏன் ண்ணா?" என்றவனுக்கு மீண்டும் முதலில் இருந்து சொல்ல வேண்டுமே என்ற ஆயாசம்.
"உனக்கு நேரமாச்சா தியாகு..?" மீனாட்சி ஆற அமர பேச வேண்டும் என்று கேட்க, அதை புரிந்தது போல வண்டியை நிறுத்தி இறங்கி இருந்தான் அவன்.
"இல்லம்மா ஆபீஸ்ல கொஞ்சம் எம்ஓடி இருக்கு.. அதை நான் பாத்துக்குறேன்.. இப்ப சாப்பிட தான் வீட்டுக்கு வந்தேன்..சொல்லுங்க" என்று சொல்லவுமே அனைத்தையும் அவர் கூற, மாரியும் கர்ம சிரத்தையாய் கேட்டுக் கொண்டிருந்தான்.
"நீ சாருகிட்ட எப்ப டா பேசின?" மற்ற அனைத்தையும் விட்டு இப்படி தியாகு கேட்க அவன் பதிலுக்காய் மாரியும் திரும்பிப் பார்த்தான்.
"அய்யோ ண்ணா! நான் பேசிட்டேன்.. எல்லாம் சரினு சொல்லியாச்சு.. இப்ப அம்மா தான் பிரச்சனை பன்றாங்க"
"நான் என்ன டா பிரச்சனை பண்ணினேன்? ஒன்னு மூணு மாசம்.. இல்ல ரெண்டு வருஷம்.. அவ்ளோ தான்" அவரும் சத்தமாய் கூற,
"சத்தம் போடாதீங்க மா.. ரோட்ல நின்னுட்டு.." என்றவனுக்கு வீட்டிற்கு சென்றிருக்கலாம் என்ற எண்ணம் தாமதமாய் தோன்றியது.
"அட போடா.. இனி என்கிட்ட எதாவது கேட்டு வா.. அப்புறம் இருக்கு உனக்கு" என்றபடி சென்றுவிட,
"உனக்கு கல்யாணம் பண்றதுக்குள்ள மீனாட்சிம்மா இன்னும் என்னவெல்லாம் ஆக போறாங்களோ" தியாகு சொல்ல,
"அம்மாக்கு சில விஷயங்கள் புரியலண்ணா.. எனக்கும் புரியவைக்க தெரியல" என்று சொல்ல,
"சரி டா.. கல்யாணம்னா இந்த மாதிரி பிரச்சனைகள்லாம் வர்றது தானே? நீயே யோசிச்சு முடிவெடு.. ஜாதகம் பார்த்த அப்புறம் அதை மீறக் கூடாது.. அதனால அம்மா சொல்றது தான் சரினு தோணுது.. ஏன் அம்மாவை டென்ஷன் பண்ற?" என்றதும் சாருவை பார்த்து வந்தபோது இருந்த மனநிலை மாறி இப்போது குழப்பத்திற்கு சென்று இருந்தான் ஆதி.
"அக்காக்கு என்னண்ணா.. ஏன் எதாவது சொல்லி நிறுத்த பாக்குற?" சாரு சொன்னது போலவே மாரியும் சொல்ல,
"உன்ன கொல்ல போறேன் பாரு.. நான் எப்ப டா நிறுத்த போறேன்னு சொன்னேன்?" என்று கோபமாய் கேட்க, தியாகு சிரித்தான்.
"அப்போ ஏன் எதாவது சொல்லிட்டே இருக்கனும்? இரு இரு அக்கா வரட்டும் உன்னை சொல்லிக் கொடுக்கல.." என்று மாரி சொல்ல,
"திரும்ப திரும்ப கேட்குறேன்னு நினைக்காத.. சாரு என்ன டா சொன்னா?" என்றான் தியாகு.
"ஒரு வருஷம் ஆகும்னு சொல்லவும் சரின்னு தான் சொன்னா" என்றதோடு முடித்துக் கொண்டான் ஆதி.
"சரி டா நீயே முடிவெடு.. அம்மாவை ரிலாக்ஸ்டா இருக்க சொல்லு" என்று சொல்ல,
"ம்ம்ம் சரி ண்ணா நான் பாத்துக்குறேன்" என்று சொல்லவும் கிளம்பினான் தியாகு.
சொல்வது எளிதாய் தான் இருந்தது.. ஆனால் அன்னையிடம் செயல்படுத்துவது தான் கடினமே..
இரண்டு வருடம் என்றால்? நினைக்கவே அப்பப்பா என்று இருக்க, மூணு மாதமும் குறைவு என்று தோன்ற, சாருவை மனதில் நினைக்க வைத்த கடவுளை தான் தேடினான் இப்பொழுது.
"எனக்கென்னவோ ஆதிண்ணா மேல நம்பிக்கை இல்ல.. அக்கா ஏதோ கோபத்துல சொல்லி இருக்கு.. நீ என்னனு பேசினியோ.." என்றவனை மண்டையில் நான்கு கொட்டினால் என்ன என்று தோன்றியது ஆதிக்கு.
'ஒரே ஒரு கல்யாணம் அதை பண்றதுக்குள்ள இவங்க படுத்துற பாடு இருக்கே' ஆதி நொந்து கொண்டான்.
மாலை சாரு வரும் நேரம் சரியாய் ஆதியின் கண்களும் மணியினை பார்த்துக் கொண்டது.
"இந்த மனசு எப்படி தான் இப்படி இருக்குதோ.. ஆயிரத்தெட்டு கவலையிலயும் சரியா அதோட வேலையை காட்டுது பாரேன்" தனக்கு தானே அவன் சொல்லிக் கொள்ள, சாருவின் இத்தனை நாட்களான காதலையும் புரிந்து கொள்ள முடிந்தது அவ்வபோது.
தூரத்தே வரும் பொழுதே கடையினை பார்த்தபடி தான் வந்தாள் சாரு.. ஆதியும் அதை பார்த்துவிட்டான்.
"ரோட்டைப் பார்த்து ஒட்றாளா பாரு" மனதில் நினைத்துக் கொள்ள,
"ஹாய் டா சில்ற" என்றாள் வண்டியை நிறுத்தியதும்.
"என்ன இந்த பக்கம் பாசம் பொங்குது.. எப்பவும் வாத்தினு வருவ.." என்று சந்தேகமாய் மாரி கேட்க,
"இன்னைக்கு உன்னை தான் டா ரொம்ப மிஸ் பண்ணினேன்" என்றவள் பேச்சைக் கேட்டபடி வேலையில் இருந்தவன் மாரி அறியாமல் முறைக்கவும் தவறவில்லை.
"புலி ஏன் பீஸ்ஸா திங்குது?" மாரி கேட்க,
"அதெல்லாம் சொன்னா உனக்கு புரியாது டா" என்றாள் ஆதியை பார்த்தபடி.
"ஆமா வாத்தி சொன்னது உண்மையா?" என்று மாரி கேட்கவும் ஆதி அதிர்ந்து பார்க்க, எதே என்று பார்த்தாள் சாரு.
தொடரும்..