அத்தியாயம் 24
திருமணம் முடிந்து அதற்கான சாம்பிராதயங்கள் கடந்து என ஆதியையும் சாருவையும் முதலில் பெண் வீட்டிற்கு அழைத்து வந்திருந்தனர்.
ஆதியை சாருவின் அறையில் ஓய்வெடுக்க சொல்ல, கூட்டத்தின் நடுவே இருப்பதற்கு பயந்தே ஒன்றும் கூறாமல் சரி என சென்றுவிட்டான்.
தியாகு அவசர வேலையாய் அவன் அலுவலகம் வரை சென்றிருக்க, மாரி முழுதும் இவர்களுடன் தான் இருந்து வந்தான்.
"பால் பழம் கொடுத்தாச்சா?" பெரியவர் ஒருவர் கேட்க,
"கொடுக்கணும் பாட்டிம்மா.. பதினோரு மணிக்கு தான் மாப்பிள்ளை வீட்டுக்கு அனுப்பி வைக்கணும்" என்ற தேவி பால் பழம் எடுத்து வர செல்ல, மகளருகே அமர்ந்துவிட்டார் ஸ்ரீரங்கம்.
"அப்பா!"
"சாரும்மா!" என்று அவள் தலையை வருடியவர்,
"சந்தோஷம் டா" என்று கூற, சாருவும் புன்னகைத்தாள்.
"ஒரே முடிவா இருந்து அது நடந்தது எல்லாம் பெரிய விஷயமே இல்ல சாரு.. இனி தான் உனக்கான வாழ்க்கை ஆரம்பம் ஆகுது.. இனி உன்னோட முடிவு ஒவ்வொன்னும் இன்னுமே கவனமா இருக்கனும்.. உனக்கு சொல்ல வேண்டியது இல்ல டா.. உன்னால முடியும்" என்று முடித்துக் கொள்ள, அவர் கைகளில் அழுத்தம் கொடுத்து சம்மதமாய் தலையசைத்தாள் சாரு.
"ப்ரீத்தி! நீ போய் அக்கா பேக் எல்லாம் எடுத்து வை" என்ற தேவி,
"சாரு! மாப்பிள்ளையை கூட்டிட்டு வா.. நேரமாச்சு நல்ல நேரத்துல தான் கிளம்பனும்" என்றதும் அவள் எழுந்து கொண்டாள்.
உள்ளே ஆதி கட்டிலில் அமர்ந்திருந்தவன் சுற்றி அவள் அறையை பார்வையிட்டபடி அமர்ந்திருந்தான்.
அனைத்தையும் ஒழுங்கு படுத்தி இருக்க, நேர்த்தியாய் இருந்தது அந்த அறை. அருகே டேபிளில் சாரு ப்ரீத்தி இருவருமாய் இருக்கும் புகைப்படம்.
ஒவ்வொன்றாய் அவன் கவனித்து இருந்த நேரம் கதவை திறந்து வந்திருந்தாள் சாரு.
"அம்மா கூப்பிடுறாங்க வாத்தியாரே கிளம்பணுமாம்" என்றதும் அவன் அவளுக்கு பின்னே பார்த்தான்.
"என்ன?" அவள் கேட்க, ஒன்றும் இல்லை என தலையசைத்தவன்,
"ரூம் அழகா இருக்கு" என்றான் பாராட்டாய்.
"இந்த பாராட்டு அம்மாவுக்கு தான் போகணும்.. அதுவும் கல்யாண வீடுன்றதால.. இல்லைனா என் ரூம்குள்ள மூக்கை மூடிட்டு தான் வரணும்னு அம்மா வரவே மாட்டாங்க" அவள் சொல்லவும் அவன் சிரிக்க,
"எனக்கு டஸ்ட் இல்லைனா அலர்ஜி வந்துடும்.. அதான்" என்று வேறு கூற,
"அது சரி!" என்று மெதுவாய் அவள் தலையில் கொட்டி வைக்கவும் ப்ரீத்தி கதவை தட்ட,
"வா போகலாம்" என்று முன்னே நடந்தான்.
"சைடு கேப்புல முதல் நாளே அடிச்சாச்சு" அவனுக்கு கேட்கும்படி கூறி பின்னே சென்றாள்.
அங்கிருந்து கிளம்பி தன் வீட்டிற்கு வர வர மாரி வாய் அடங்கவே இல்லை.
"ஷப்பா! பொண்ணு வீட்டுக்கும் மாப்பிள்ளை வீட்டுக்கும் எவ்வளவு தூரம்! நடந்து முடியல.." என கிண்டல் செய்ய,
"டேய்!" என்ற ஆதி முறைப்பில்,
"அட போங்க ண்ணா.. நீங்க வேற யாரையாச்சும் தூரமா கல்யாணம் பண்ணி இருக்கலாம்" என்றான் மாரி.
"கல்யாண பொண்ணு.. அமைதியா இருப்பான்னு எல்லாம் நினைக்காத.. சத்தியமா பின்னிடுவேன்.. ஓடி போய்டு" சாரு சொல்ல, ஆதி சிரித்தான்.
வீட்டு வாசலில் இவர்கள் வரும் நேரம் தன் அதிகமாய் இருந்த சத்தம் சட்டென குறைந்தது போல இருந்தது.
தியாகு அவர்களை வரவேற்கும் விதமாய் புன்னகைக்க, அன்னையை தேடினான் ஆதி.
"அம்மா எங்க தியாகுண்ணா?" ஆதி கேட்க,
"உள்ள தான் இருக்காங்க வா ஆதி" என்று சொல்ல, இரு தரப்பு வீட்டினருமாய் ஆட்கள் அங்கே.
வீட்டின் முகப்பில் இருந்த பந்தலின் கீழ் வந்த சொந்தங்கள் அமர்ந்துவிட, தியாகு அவர்களை கவனிக்க சென்றுவிட்டான்.
ஆதி சாருவோடு சாரு வீட்டினரும் வீட்டினுள் செல்ல, மீனாட்சி அப்போது தான் சாரு அருகே வந்தார்.
"வா டாம்மா.." என்று கூறவும்,
"கண்ணு ஏன் மா கலங்கி இருக்கு?" என்றான் அவரை கூர்மையாய் பார்த்து ஆதி.
"அதெல்லாம் ஒன்னும் இல்ல டா.. தூசு விழுந்துச்சு.. முதல்ல சாருவை விளக்கேத்த சொல்லணும்" என்றவர் சுமதியை தேட, அவளும் கண்களை துடைத்துவிட்டு சாரு அருகே வந்தாள்.
"கூட்டிட்டு போய் விளக்கேத்த சொல்லு சுமதி" மீனாட்சி கூற,
"நீங்களும் வாங்க மீனாம்மா" என்றாள் சாரு.
"நான் எங்க டா போக போறேன்.. நாம இங்க தான இருக்க போறோம்.. நீ போ" என்று கூறவும் சாரு ஆதியைப் பார்க்க, அவனும் கண்ணசைக்க இருவருமாய் அந்த பூஜை அறைக்கு சென்றனர்.
தேவி, ஸ்ரீ ரங்கம் இருவருக்கும் எதுவோ ஒரு வித்தியாசம் தெரிந்த போதும் சட்டென என்ன பிரச்சனை என கேட்டுவிட முடியவில்லை.
பதில் சொல்ல முடியாத ஒன்றாய் இருந்தால் அவர்களுக்கு தானே சங்கடம் என நினைத்து நிற்க, ஆதி சாரு தெய்வத்தை வணங்கி விளக்கேற்றி வெளியே வரவும் ஆதி அறையில் இருந்து கண்ணன் வெளி வந்தான். பின்னோடே அவன் அன்னையுடன்.
நெற்றி சுருங்க அவர்களைப் பார்த்த ஆதி அன்னையை திரும்பிப் பார்க்க, எதுவும் பேச வேண்டாம் என்பதைப் போல தலையசைத்தார்.
"வெளில வாங்க!" தேவி ஸ்ரீ ரங்கத்திடம் மெதுவாய் கூற,
"ஒரு நிமிஷம் நில்லுங்கம்மா" என்று அவர்கள் அருகே வந்தார் கண்ணனின் தாய்.
"ம்மா! என்ன பண்றீங்க நீங்க?" கண்ணனின் கோபம் எல்லாம் ஒன்றுமே இல்லை என்பதை போல அவர் தேவி அருகே சென்றார்.
சில நிமிடங்களுக்கு முன்பு தான் கண்ணனின் தாய் வந்திருந்தார். வந்தவர் நேராய் மீனாட்சியிடம் சென்று நிற்க, அவர் நின்ற தோரணையே பயம் பிடித்தது மீனாட்சிக்கு.
"எங்க உன் மகன் புது மாப்பிளை?" என்று அவர் கேட்க,
"வாங்க அண்ணி.. அவங்க சாரு வீட்டுல இருந்து இன்னும் வர்ல.. நீங்க சாப்பிட வாங்க என்று அழைக்க,
"இப்போ சாப்பாடு தான கேடு! என் மகன் அவன் அக்கா தங்கச்சிங்களுக்கு கல்யாணம் பண்ணி அவங்க பிள்ளைகளுக்கு வரவு செலவு பார்த்து அவனோட கடமையை எல்லாம் முடிச்ச பிறவு தான் உன் பொண்ணை கல்யாணம் பண்ணினான்.. உன் பொண்ணுக்கு என்ன பண்ணிட்டிங்கன்னு இப்போ அவனுக்கு கல்யாணம்?" என்று கேட்க திகைத்து நின்றார் மீனாட்சி.
அடுத்த நிமிடமே மீனாட்சிக்கு மகனைப் பேசியதில் கோபம் வந்த போதும் பேசுவது சுமதி மாமியார் என்பதில் அமைதியாய் இருக்க,
அவர் பேசியதோ வீட்டின் முகப்பில். அதிக கூட்டம் இல்லாவிட்டாலும் நெருங்கிய சொந்தங்கள் எல்லாம் இருக்க இப்படி கொஞ்சமும் மரியாதை இன்றி பேசுபவரை நினைத்து மருகி நிற்க, அப்போது தான் வெளியே வந்த கண்ணனும் அவர்கள் அருகே வேகமாய் வந்தான்.
"உங்களை யாரு மா இங்க வர சொன்னது? வேண்டாம்னு தான விட்டுட்டு வந்தேன்?" நேராய் அன்னையை கண்ணன் கேட்க,
"ஆமா டா.. கல்யாணம் ஆகி ஆறு மாசம் ஆகல.. பொண்டாட்டி பின்னாடி போய்ட்ட.. நான் நியாயம் கேட்டா அது உனக்கு தப்பா தான தெரியும்" என்று மகனையும் பேச, மீனாட்சிக்கு வராத கோபம் வந்தாலும் சொந்தங்கள் முன் காட்ட முடியாமல் நின்றார்.
"எதுவா இருந்தாலும் உள்ள போய் பேசிக்கலாம்" என்று மீனாட்சி கூற, அவர் மறுக்க, அன்னையை கிட்டத்தட்ட இழுத்து உள்ளே அழைத்து சென்றிருந்தான் கண்ணன்.
"நான் உன் பொண்டாட்டி வீட்டுக்கு விருந்துக்கு வரல.. எனக்கு நாளபின்ன பேரன் பேத்தி வரும் போது இவங்க என்னால சீர் சினத்தி செய்ய முடியாதுன்னு கைய விரிச்சா என்ன செய்வ? அதை இப்பவே வாங்கிட்டு போகலாம்னு தான் வந்தேன்" என்று கூற அப்போது தான் அத்தையைக் கண்ட சுமதியும் அதிர்ந்து நின்றாள்.
தியாகுவும் வந்ததில் இருந்து அவர் பேச்சைக் கேட்டு தான் நின்றிருந்தான். குடும்ப விஷயத்தில் தலையிட முடியாமல் அவன் நின்ற நேரம் ஆதி சாருவுடன் முதல்முறையாய் கணவன் மனைவியாய் வர, மீனாட்சியிடம் சென்று அவர்கள் வருவதாய் சொல்லிவிட்டு வரவேற்கவும் முன்னே சென்றுவிட்டான்.
உடனே அன்னையை உள்ளே ஆதி அறைக்கு இழுத்து சென்றுவிட்டான் கண்ணன்.
உள்ளே அன்னைக்கு பல புத்திமதி சொல்லியே அவன் வெளியே வந்திருக்க அதை கேட்காமல் தான் தேவியின் முன் சென்று நின்றார் அவர்.
"ம்மா! நீங்க இப்ப பேசாம இருக்கல... நான் சுமதியோட தனிக்குடித்தனம் போய்டுவேன்" மகன் மிரட்ட,
"போவியா? போய் தான் பாரேன்!" என்று கூற சாருவோடு ஆதியுமே புரியாமல் நின்றவன்,
"என்ன பிரச்சனை அத்த? அவங்ககிட்ட என்ன பேசணும்? என்கிட்ட சொல்லுங்க" என்றான் நேராய் கண்ணன் அன்னையிடம் வந்து.
"நான் பேசிக்குறேன் ஆதி" கண்ணன் கூற,
"இல்ல மாப்பிள்ளை.. அவங்க ஒரு முடிவோட தான கல்யாணத்துக்கு வராம இப்ப வந்திருக்காங்க.. நான் பேசிக்குறேன்" என்ற ஆதியிடம்,
"என்ன பேசுவ.. நீ எதுவும் பேச வேண்டாம்.. உன் தங்கச்சிக்கு புள்ள பிறக்கும் போது சீர் செய்யணும் தான? அதை இப்ப வாங்கிட்டு போக தான் வந்தேன்.. நீ கல்யாணம் பண்ணிட்டு குடும்பமா போய்ட்டன்னா என் பேரன் பேத்திங்களுக்கு யார் செய்வா?"
"ம்மா! மனசாட்சியே இல்லாம பேசாதீங்க.. ஆதி அவன் தங்கச்சிக்கு எதுவுமே செய்யலையா? நாக்குல நரம்பில்லாம பேசாதீங்கம்மா.." என்று கண்ணன் கூற,
"என் தங்கச்சிக்கு எப்ப என்ன செய்யணும்னு எனக்கு தெரியும்.. ஆமா சீர் சுமதிக்கு தான செய்யணும்? அவ கேட்கட்டும் இப்பவே செய்யுறேன்.. இல்ல என் மாப்பிள்ளை கேட்கட்டும் உடனே செய்யுறேன்.. என்ன மாப்பிள்ள" என்று கண்ணனிடம் கேட்க,
"ஆதி! அம்மாக்கு தான் புத்தி அப்படின்னா என்ன நீங்க?" என்றான் கண்ணன்.
"ஆனா இவன் என் பையன்.. என்னோட பேரன் பேத்திங்களுக்கு நான் தான சேர்த்து வைக்கணும்?" கண்ணனின் தாய் அவ்வளவு கோபமாய் கேட்க, பிரச்சனையும் பெரிதானது.
"இது தான் பிரச்சனையா? இதுக்கு ஏன் மா நீங்க கண் கலங்கணும்? நாம எதுவும் செய்யாம இல்ல.. செய்யாம இருக்க போறதும் இல்ல.. யாருக்கு செய்யுறோமோ அவங்க கேட்டா தான்.. எல்லாருக்காகவும் கண் கலங்கிட்டு கவலைபட்டுட்டு இருக்க கூடாது" என அன்னையிடம் கூறிய ஆதி,
"அதுக்கு நீங்க சேர்த்து வைக்கணும்..ஆமா சாரு அம்மாகிட்ட பேச உங்களுக்கு என்ன இருக்கு?" என்றான் கண்ணனின் அன்னையிடன்.
சாதாரணமாய் கேட்பதை போல இருந்தாலும் அதில் கணல் இருந்தது.
"என்னவா? இவங்க பொண்ணு தான நீ கட்டினது?" என்று ஆதியின் பேச்சில் அவரும் வெகுண்டு எழ, சுமதியும் மீனாட்சியுமே பயந்து போயினர் சாரு வீட்டினர் முன் அதுவும் இன்றே நடக்கும் இந்த தேவை இல்லாத கலவரத்தைப் பார்த்து.
தொடரும்..