அத்தியாயம் 26
காலையில் எழுந்த சாரு குளித்து முடித்து தலைமுடியினை விரித்தபடி குளியலறையில் இருந்து வெளிவந்தவள் கட்டிலை சுற்றி வர, அவள் வெளிவரவுமே அவள் வாசனையை உணர்ந்து கொண்டான் உறக்கத்தில் இருந்த ஆதி.
ஆனாலும் விழி திறக்காமல் இருந்தவன் இதழ்களில் இருந்த புன்னகை நான் உறங்கவில்லை என காட்டிக் கொடுக்க,
சிநேகிதனே சிநேகிதனே!
ரகசிய சிநேகிதனே!
சின்ன சின்னதாய்..
கோாிக்கைகள்!
செவி கொடு சிநேகிதனே
அவன் முகத்தின் வெகு அருகே தன் முகத்தினை கொண்டு வந்து அவள் பாட, அதற்கு மேல் அப்படியே இருக்க முடியாமல் விழித்தவன் கண்களுக்கு அழகாய் தயாராய் புன்னகை முகமாய் என சாரு நின்றிருக்க, நொடியும் தாமதிக்காமல் தன் கைவளைவிற்கு கொண்டு வந்திருந்தான் ஆதி.
இதே அழுத்தம் அழுத்தம்..
இதே அணைப்பு அணைப்பு..
வாழ்வின் எல்லை வரை
வேண்டும் வேண்டும்!
வாழ்வின் எல்லை வரை
வேண்டும் வேண்டும்!
தொடர்ந்து பாடலை அவள் குரல் இசைக்க,
"எப்ப பாரு பாட்டு.. என்னை பார்த்தாலே இதான் வேலை இல்ல உனக்கு?" கழுத்தினில் முகம் புதைத்தவன் கேள்வி காதினை எட்ட,
"பாட தான முடியும்.. பேசினா மட்டும் அப்படியே பதில் பேசி தள்ளிடுவீங்க.." என கிண்டலாய் பதில் வந்தது சாருவிடம் இருந்து.
"எப்படி சாரு இப்படி பேசுற? ஒரு சில நேரம் எனக்கு கண்ணை கட்டிடும் உன் பேச்சு, பாட்டு, கிண்டல்னு" என்றவன் கைகள் நேற்று அவளுக்கு தான் அணிவித்த மாங்கல்யத்தை கைகளில் தாங்கி பார்த்தபடி இருந்தது.
அமர்ந்திருந்தவன் மடியினில் வாகாய் படுத்துக் கொண்டவள், "எனக்கே தெரியல.. ஆனா சும்மா போயிருந்தேன்னா என்னை எல்லாம் தூக்கி போட்ருக்க மாட்டிங்க? சாருன்னு ஒருத்தி நமக்காக இருக்கானு உங்களுக்கு மறக்காம இருக்கனும்ல?" என்றாள்.
"மறக்குற மாதிரியா இருக்க நீ?" என்றவன் அவள் கண்ணங்களை வலுவாய் பிடித்து அழுத்தினான்.
"ஆஹ்! கத்திடுவேன்.." என்று சாரு சொல்ல,
"வாத்தி எங்க போச்சு?" என்றான் இன்னும் கண்ணங்களை விடாமல்.
"பார்றா! நோட் பண்றீங்களே!" என்று அதிசயம் காட்ட,
"வாயாடி! கேட்டதுக்கு பதில சொல்லு" என்றான்.
"அம்மா ஸ்ட்ரீக்ட் ஆர்டர் அப்படி கூப்பிட கூடாதுன்னு.. இப்பவே கண்ட்ரோலா இருந்தேன்னா தான் வெளில போயும் வராது.. இல்ல துடப்பம் பறந்து வரும் என் வாய்க்கு" என்றவள் சொல்லியதில் சிரித்தவன்,
"ஆனா எனக்கு வேணும்.. இவ்ளோ நேரத்துல.. ரொம்ப மிஸ் பண்றேன்.. சொல்லு சொல்லு" என்று கொஞ்சியவனை புதிதாய் பார்த்தாள் சாரு.
"என்ன பார்வை டி இது?" அதன் தாக்கத்தை உள்வாங்கி ஆதி கேட்க,
"ரொம்ப மயங்க வைக்குறிங்க வாத்தியாரே!" என்றாள் தோளில் முகம் புதைத்து.
"ஹ்ம் இதான் சாரு.. அதென்ன மத்தவங்களுக்காக மாத்துறது?" ஆதி கேட்க,
"இல்ல?" என்றாள் அவளும் அவனைத் தொடர்ந்து.
"ஹ்ம்ம்.. நீ நீயாவே இரு.. அதான் அழகு" என்றவன் நெற்றி முட்ட,
"ஆனா நான் என் வாத்தியை மிஸ் பண்றேன்" என்றாள் குறும்பாய்.
"எனக்கெல்லாம் தெரியாது.. மாத்தினது நீ தான?.. நீயே மீட்டு எடு" என்றவன் கைகள் விளையாட்டை தொடர,
"அவ்ளோ தானே?" என்றவள் நினைப்பை அப்போது அறியவில்லை ஆதி.
நீண்டு தொடர்ந்த சிலபல நிமிடங்களுக்கு பின்பு சாருவை மட்டும் முதலில் வெளியே அனுப்பி வைத்தான் ஆதி.
அதற்கும் அவனை கலாய்த்து தள்ளி தான் வெளியே வந்திருந்தாள் சாருவும்.
மீனாட்சியோடு சுமதி கண்ணன் மட்டுமே இருந்தனர் அந்த வீட்டில்.
சொந்தங்கள் என வந்தவர்கள் எல்லாம் இரவே கிளம்பி இருக்க சுமதியுடன் தங்கி இருந்தான் கண்ணன்.
மீனாட்சி பாலை காய்ச்சிக் கொண்டிருக்க, சுமதி காய்களை நறுக்கிக் கொண்டிருந்தாள்.
"வா சாரும்மா! காபியா டீயா?" மீனாட்சி கேட்க,
"வாத்.. அவங்க என்ன சாப்பிடுவாங்க மீனாம்மா?" சாரு நல்ல பிள்ளையாய் கேட்க,
"வாத்தி தான? நீ குடுத்தா எது வேணா சாப்பிடுவாங்களே!" என சுமதி கிண்டல் செய்ய, மீனாட்சியும் சிரித்தார்.
"ஒரு ஃபுளோல வந்துடுச்சு பா.. இதுக்கு தான் சொன்னேன்.. கேட்டா தான?" என ஆதியையும் திட்டிக் கொண்டாள்.
"சாப்பிட்டு கோவிலுக்கு போய்ட்டு வாங்க சாரும்மா.. சுமதி வேற காலையிலே கிளம்பனும் சொல்றா" மீனாட்சி கூறவும்,
"ஏன்? நாளைக்கு போலாம்ல நாத்தனாரே!" சாரு கேட்க,
"அடடா! வாத்தியார்.. நாத்தனார்.. நல்லாருக்கே" என்று சிரித்த சுமதி,
"அத்தை கோபமா இருப்பாங்க சாரு.. எப்படி சமாதானப்படுத்தவோ" என்று சுமதி சொல்லவும்,
"அதெல்லாம் ஒன்னும் இல்ல.. அவங்களுக்கு ஒரு பயம்.. அப்படி இல்லனு தெரிஞ்சுட்டுன்னா போதும்.. அடுத்து அவங்களே உங்களை நல்லா பார்த்துப்பாங்க" என்ற சாரு,
"இல்ல மாட்டாங்கனு தோணுச்சுன்னா சொல்லுங்க.. உங்களுக்காக கல்யாணம் பண்ண மாட்டேன்னு சொன்ன உங்கண்ணா உங்களுக்கு ஒண்ணுன்னா கேட்கணும்ல.. கேட்போம்" என்றவள்,
"பெட்டரா இன்னொரு ஐடியா சொல்லவா? பேசாம ஒரு குட்டி கண்ணனை பெத்து அவங்க கையில கொடுத்துடுங்க.. அவனை பாத்துக்க தான் அடுத்து நேரம் இருக்கும்" என்று சிரித்தவள் பேச்சில் மீனாட்சியும் கேட்டவாறு புன்னகைத்து,
"டீ வச்சுருக்கேன் சாரு.. அவனுக்கு கொடுத்துட்டு நீயும் குடி" என அனுப்பி வைத்துவிட்டார் மீனாட்சி.
"ஆதிக்கு சரியான ஜோடி மா.. எங்க விட்ருவானோனு நினச்சேன்" சுமதி கூற,
"பின்ன கொஞ்ச நஞ்சமாவா படுத்தினான்.. வேண்டாம், இப்போ வேண்டாம்னு காரணத்தை அடுக்கி அடுக்கி.. நான் கூட ரெண்டு வருஷம் இழுத்துடுவான்னு நினச்சேன்.. இப்போ தான் சந்தோசமா இருக்கு" என்றவர் முகத்தில் உடனே கவலை தெரிய,
"அதான் எல்லாம் நல்லபடியா முடிஞ்சதே பின்ன என்னம்மா?" என்றாள் சுமதி.
"உன் அத்தைய நினச்சா தான்.. இன்னைக்கு நீ போகணுமே? நான் வேணா சமாதானப்படுத்த வரட்டுமா?" என்று கேட்க,
"அதெல்லாம் வேணாம் மா... என் அத்தை நீங்க வந்தா தான் இன்னும் பேசுவாங்க.. அதான் அவங்க பாத்துக்குறேன்னு சொல்றாங்க இல்ல.. பாத்துக்குவாங்க.. அவங்களுக்கு சாரு குடும்பம் பெரிய இடம்னு தெரிஞ்சதும் பொறாம.. ஏற்கனவே கல்யாணம் ஆகி இத்தனை மாசம் ஆச்சே.. ஏன் சும்மா இருக்கன்னு என்னை கேட்டுட்டு இருந்தாங்க.. சொன்னா நீங்க கவலைபடுவீங்களேனு சொல்ல வேணாம்னு நினச்சேன்.. இப்படி அதுக்கு மேல ஒரு பிரச்சனை பண்ணுவாங்கனு நான் நினைக்கவே இல்ல.." என்றாள் அத்தையைப் பற்றிய நினைப்பில் சோர்வாய்.
"எப்படினாலும் அவங்களோட தான் இருந்தாகணும் சுமதி.. கொஞ்சம் அனுசரிச்சே போ.." மீனாட்சி கூறவும், தலையசைத்தாள் சுமதி.
கண்ணன் எழுந்து வரவும் ஆதி சாருவோடு அவர்களுக்கும் சேர்த்து பரிமாறினார் மீனாட்சி.
ஆதி சாரு இருவரும் இணைந்து கோவிலுக்கு கிளம்ப, அப்போதே தன் ஊருக்கு கிளம்பினர் கண்ணன் சுமதி.
"எதுவும்னா கால் பண்ணு சுமதி" ஆதி தனியாய் கூற, சரி என்று மட்டும் கூறிக் கொண்டாள் சுமதி.
அத்தனை பெரிதாய் எதுவும் நடந்து விட கணவன் விட மாட்டான் என்கின்ற நம்பிக்கை இருந்தாலும் பேச்சு எந்த அளவுக்கு இருக்குமோ என்கின்ற பயம் இல்லாமல் இல்லை சுமதிக்கு.
சுமதி கண்ணன் இருவரையும் வழியனுப்பி வைத்துவிட்டு ஆதி கோவிலுக்கு செல்ல வண்டியை எடுக்கவும் சாரு தகராறு பண்ணவுமாய் இருக்க உள்ளே நுழைந்தான் மாரி.
"சாருக்கா... ண்ணோவ்!" என்ற குரலில்,
"வந்துட்டானா!" என்று ஆதி முணுமுணுக்க,
"என்னாண்ணா கட லீவா?" வேண்டுமென்றே மாரி கேட்க,
"லீவ் எல்லாம் இல்ல.. அதான் அசிஸ்டன்ட் நீ வந்துட்டியே.. கடைய பாத்துக்கோ.. நாங்க கிளம்புறோம்" என்றாள் சாரு
"இந்தா பாருக்கா.. நீ ஆதிண்ணா வீட்டம்மாவா இருக்கலாம்.. ஆனா இந்த தம்பிக்கு தான எப்பவுமேட்டு சப்போர்ட்டா இருக்கணும்.. நீயே வாருனா நான் யார்கிட்ட சொல்லுவேன்?" மாரி அவன் விளையாட்டை ஆரம்பிக்க,
"வந்தேன்னா எதக் கொண்டு அடிப்பேன்னு தெரியாது டா.. நானே நல்ல நேரம் பாத்து பிள்ளைங்கள வெளில அனுப்பிருக்கேன்.. வந்து நிக்குறான் பாரு சகுனத்தோட" என உள்ளிருந்தே மீனாட்சி குரல் கொடுக்க,
"நீங்க வந்தா தான் நான் கிளம்புவேன் மீனாம்மா" என்றபடி இன்னும் இலகுவாய் நின்றாள் சாரு.
"இப்போது இன்றைய நாளில் இரண்டாம் முறையாய் மனைவியை முறைத்து நின்றான் ஆதி.
கோவிலுக்கு வழியனுப்ப மீனாட்சி தான் வர வேண்டும் என ஒற்றை காலில் சாரு நிற்க, முடியாது என அவளைப் போலவே மீனாட்சியும் நிற்க, அன்னையின் எண்ணம் புரிந்தாலும் அவரை மாற்ற முடியாது என்று மனைவியிடம் கேட்டான் ஆதி.
சாரு எதற்கும் அசையவில்லை. மீனாட்சியும் வீட்டைவிட்டு வெளியே வருவதாய் இல்லை.
"நான் வேணா ஆச்சியை இழுத்தாரவா சாருக்கா?" மாரி கேட்க,
"வேண்டாத வேலை எல்லாம் நீயும் உன் அக்காவும் தான் டா நல்லா பார்ப்பீங்க" என்றான் மாரி தலையில் ஆதி கொட்டி.
வாக்குவாதம் தொடர ஆதி பேச்சு எடுபடாமல் போகவே, சில நிமிடங்கள் கழித்து உள்ளே வந்தார் தேவி "இன்னும் கோவிலுக்கு கிளம்பலையா சாரு?" என்றபடி.
அதுவும் ஆதி தான் வரவழைத்து இருந்தான் இங்கு நடப்பதை அலைபேசியில் கூறி.
சாருவும் நடந்ததை வந்ததும் அன்னையிடம் கூற, தேவியும் வந்து கூறவே அனைவரின் வற்புறுத்தலின் பிறகே வெளியே வந்து வழியனுப்பி வைத்தார் மீனாட்சி.
"என்னோட வாத்தி வெளில வரணும்னா நம்ம சுத்தி யாராவது இருக்கணும் போல.. இல்ல வாத்தி? எது எப்படியோ நீங்க என்னை முறைச்சா தான் அந்த நாளே எனக்கு அழகா போகுது வாத்தி!" என்று வளவளத்து சென்றாள் சாரு.
ஆதி வீட்டின் ஒவ்வொரு செயலையும் முழு ஈடுப்பாட்டோடு கற்று கொண்டாள் சாரு.
பெரிதாய் மெனக்கெடல் எதுவும் இன்றி ஆதி உறவுகளோடு அழகாய் பாந்தமாய் பொருந்தி இருந்தாள் சாரு.
தொடரும்..