• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

என்னவளே என்னில் பாதியானவளே- 3

Kanisureshதனிமையின் காதலி

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 23, 2024
8
1
3
Kallakurichi
மறுநாள் காலையில் நிலா தனது ஸ்கூட்டியில் அலுவலகத்திற்கு கிளம்பி கொண்டு இருந்தாள் அவள் தினம்தோறும் அலுவலகத்திற்கு ஸ்கூட்டியில் தான் செல்வாள் ...
நேற்று அவளது ஸ்கூட்டி பஞ்சர் ஆகிவிட்டதால் அவளது அப்பா அதை பஞ்சர் ஒட்டி வைப்பதாக கூறி இன்று ஒரு நாள் மட்டும் பேருந்தில் செல் என்று கூறினார்...
காலை வேலையில் அவளின் அண்ணன் அலுவலகத்தில் டிராப் செய்து விட்டான் ...
இரவு வேலையில் தான் அவள் பேருந்தில் வர நேரிட்டது அப்பொழுதுதான் நமது ஹீரோ சிவரஞ்சனை பார்க்க நேரிட்டது...
அவள் நேற்று நின்று கொண்டிருந்த பேருந்து நிறுத்தத்தை கடக்கையில் நிலாவிற்கு சிவரஞ்சரின் ஞாபகம் வந்தது இன்றும் அவன் தன்னை பாலோ செய்கின்றானா என்று திரும்பிப் பார்த்தாள் ...
சுற்றி முற்றி ஒரு நிமிடம் நின்று பார்த்துவிட்டு தலையை தட்டிக் கொண்டு அவள் அலுவலகத்தை நோக்கி சென்றாள்...
சென்று கொண்டே இருக்கும் வேலையில் ஒரு சிக்னலில் வேறு ஒரு போலீஸிடம் நின்று பேசிக்கொண்டு இருந்தான் சிவா...
அவனைப் பார்த்துவிட்டு ஒரு நிமிடம் நின்று பார்த்துக் கொண்டிருந்தாள் ஆனால் அவன் பேசும் மும்மரத்தில் தான் இருந்தானே ஒழிய இவளை அவன் காணவில்லை என்று இவள் நினைத்துக் கொண்டிருக்கின்றாள் ...
ஆனால் அவள் வந்து நின்ற அடுத்த நொடியே அவளை பார்த்து விட்டான் பார்த்தாலும் பார்த்தது போல் காட்டிக்கொள்ளவில்லை...
அவனை பொறுத்தவரையில் நேற்று இரவு ஒரு பெண் தனிமையில் இருந்ததால் அப்பெண் பாதுகாப்புடன் அவள் வீட்டிற்கு சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்துடன் மட்டுமே பாலோ செய்தான் வேறு எந்த எண்ணமும் அவன் மனதில் இல்லை அவ்வளவு தான் அவனின் நினைப்பு....
அதனால் தான் இன்று அவள் வந்து நின்றாலும் நாம் ஏதும் கண்டு கொள்ளக்கூடாது என்று தான் அவள் அங்கு நிற்பதை பார்க்காதது போல் அவன் மற்றொரு போலீசிடம் பேசிக்கொண்டு நின்றான் ...
அவள் இரண்டு நிமிடம் நின்று பார்த்துவிட்டு அலுவலகத்திற்கு நேரம் ஆவதால் அவள் ஸ்கூட்டியை கிளம்பி கொண்டு அவளுடைய அலுவலகத்திற்கு சென்று விட்டாள்....
ஆனாலும் நிலாவுக்கு அலுவலகத்திலும் அவனது நினைவாகவே இருந்தது என்ன இது நமக்கு அவன் நினைப்பாக இருக்கின்றது என்று தலையை உலுக்கி விட்டு அவள் வேலையில் கவனம் செலுத்தினாள்.....
சிறிது நேரத்தில் வேலையில் மூழ்கி விட்டாள் அவனைப் பற்றிய நினைப்பை அப்பொழுது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது....
பிறகு மதிய இடைவேளையில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் அவளின் ஆபீஸ் தோழி அழுது கொண்டு இருந்தாள் ...
ஏன் என்று கேட்டாள் அவள் தனது பாய்பிரண்ட் நல்லவன் என்று அவனிடம் நான் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் மற்றும் ஒன்றாக இருந்த பேசிய வீடியோக்களை ஆடியோ ஆகியவற்றை காண்பித்து என்னை மிரட்டு கின்றான்...
ஏனென்றால் அப் பெண்ணிற்கு நிலாவின் தோழி அவளுக்கு இன்னும் இரண்டு மாதத்தில் திருமணம் ...
அவள் அவளின் காதலனை உண்மையாக தான் நேசித்தால் ஆனால் அவளின் வீட்டு சூழ்நிலை அவளை வேறொரு ஆடவனை திருமணம் செய்து வேண்டிய சூழ்நிலையில் இருகின்றாள் அவளின் பெற்றவர்களுக்காக ...
ஆனால் அவள் அவனை திருமணம் செய்து கொள்ள வில்லை திருமணத்திற்கு முன்பே தான் தன்னுடைய காதலனிடம் வந்து சொன்னாலே ஒழிய மறக்க வேண்டும் என்று விரும்பவில்லை ...
அந்த மாப்பிள்ளையிடம் பேச வேண்டும் என்று தான் நினைத்துக் கொண்டிருக்கிறாள் ஆனால் அவளின் திருமண விடயத்தை அவளின் காதலன் இடம் சொன்ன உடனே அவளின் காதலன் இப்படி மிரட்டுகின்றான்...
அதனால் அவன் நல்லவன் அல்ல என்று முடிவு செய்து அந்த மாப்பிள்ளையிடம் இப்படி ஒரு விடயம் இருக்கிறது என்று அவள் கூறவில்லை இந்நேரம் வரை....
சிறிது நாட்கள் பொறுத்து பார்க்கலாம் என்று இருந்தாள் ஆனால் அவளின் காதலன் அவளை தினமும் மிரட்டி கொண்டே இருக்கின்றான்
அதனால் தான் இன்று அவளால் முடியாது என்று எண்ணி அழுது கொண்டு இருக்கின்றாள்...
அப்போது தான் நிலா பார்த்து எனவென்று கேட்டாள் அதற்கு நிலாவின் தோழி அவள் அழுததற்கான காரணத்தை கூறினாள் .

பிறகு நிலா தான் அவளின் தோழியிடம் லூசாடி நீ இதற்கெல்லாம் அழுவார்களா வா அவனிடம் பேசிப் பார்க்கலாம் அவன் சரிப்பட்டு வரவில்லை என்றால் போலீசில் கம்ப்ளைன்ட் தரலாம் என்று கூறினாள்...
அதற்கு நிலாவின் தோழி நிலாவிடம் போலீஸ் என்றால் வீட்டிற்கு தெரிந்து விடுமே என்று பயந்தாள்...
ஓ மேடம் லவ் பண்ணும் போது இந்த பயம் வரவில்லை இப்போது தான் வருகின்றதா அமைதியாக வாடி என்று இழுத்துக் கொண்டு தனது தோழியின் காதலனிடம் அழைத்து சென்றாள் ...
ஆனால் அந்த காதலன் இவர்கள் சொல்வதை எதுவும் கேட்கவில்லை அவள் எனக்கு உண்மையாக இல்லை என்று சொல்லிக் கொண்டிருந்தான் ...
என்னுடன் ஒரு நாள் இரவு இருந்துவிட்டு அவளை அந்த மணமகனையே திருமணம் செய்து கொள்ள சொல் என்று சொன்னான்..

அவன் அப்படி சொன்ன அடுத்த நொடி நிலாவின் கை அவனின் தாடையை பதம் பார்த்தது அவன் நல்லவன் என்று உன்னிடம் அவள் பழகினால் நீ அவளை ஒரு இரவு கூப்பிடுவாயா நீ எவ்வளவு அயோக்கியன் என்று இன்றாவது இவளுக்குப் புரியட்டும் என்று கூறிவிட்டு அவளின் தோழியின் கையைப் பிடித்துக் கொண்டு அழைத்து சென்று விட்டாள்...
நேராக இருவரும் அரை நாள் விடுப்பு எடுத்து விட்டு போலீஸ் ஸ்டேஷன் க்கு நிலாவின் ஸ்கூட்டியில் சென்றார்கள் அங்கு சென்று மேல் அதிகாரி பார்க்க வேண்டும் என்று கூறினாள் நிலா...
அங்கு இருக்கும் மற்ற போலீஸ்கள் எங்களிடம் என்ன என்று சொல்லுங்கள் நாங்கள் மேல் அதிகாரியிடம் சொல்கின்றோம்.
நேரடியாக மேல் அதிகாரியை பார்க்க இயலாது என்று கூறினார் இல்லை நான் மேலதிகாரியை தான் பார்க்க வேண்டும் .என்று கூறினாள் நிலா..
பெண் விடயம் என்று கூறினாள் அதற்கு நாங்கள் பத்திரமாக யாருக்கும் தெரியாமல் என்ன கேஸ் என்று பார்ப்போம் நீங்கள் எங்களிடம் கம்ப்ளைன்ட் கொடுங்கள் என்று அங்கு இருக்கும் ஒரு காவலாளி கூறினான்...
ஆனால் நிலா ஒரேப்பிடியாக மேல் அதிகாரியை பார்க்க வேண்டும் என்று மட்டுமே கூறினாள் சிறிது நேரத்தில் சத்தம் கேட்டு ரூமில் இருந்து சிவரஞ்சன் எஸ் ஆர் வெளியே வந்தான் அனைவரும் அவனுக்கு வணக்கம் வைத்தனர்..
சிறிது நேரத்தில் அந்த காவலாளியிடம் சிவா என்ன பிரச்சனை என்று கேட்டான் அதற்கு அந்த காவலாளி சார் உங்களை தான் பார்க்க வேண்டும் என்று ரொம்ப நேரமாக இந்த பெண் கூறிக் கொண்டிருக்கிறார்கள் என்றார் ...
ஏன் என்று கேட்டான் ஒரு கேஸ் பைல் பண்ணனும் என்று மட்டுமே சொன்னார்கள் அதற்கு நாங்களே பண்ணுவோம் என்று கூறியதற்கு உங்களிடம் தான் கூற மாட்டேன் மேல் அதிகாரியிடம் தான் சொல்வேன் என்று கூறுகிறார்கள் என்று கூறினார் அந்த காவலாளி...
பிறகு சிவரஞ்சன் சரி என்னுடைய அறைக்கு வாருங்கள் என்று அந்த போலீஸ் இடம் கூறிவிட்டு வாங்கம்மா இரண்டு பேரும் என்று நிலா மற்றும் அவளின் தோழியை பார்த்து சொல்லிவிட்டு அவன் உள்ளே சென்று விட்டான் சிவரஞ்சன்.
சிவரஞ்சன் அவன் அறைக்குச் சென்ற அடுத்த நொடி நிலா சுயநினைவு பெற்றாள் நிலா சிவரஞ்சனை இங்கு எதிர் பார்க்கவில்லை ...
மேலதிகாரியை பார்க்க வேண்டும் என்று மட்டுமே கூறினாள் அது சிவரஞ்சன் என்று அவள் நினைக்கவில்லை...
நிலா சுயநினைவு பெற இரண்டு நிமிடம் ஆனது பிறகு அந்த போலீஸ் தான் இருவரையும் உள்ளே வாருங்கள் என்று இரண்டு பெண்களையும் கூட்டிக்கொண்டு உள்ளே சென்றார் ...
அவர் அழைத்து கொண்டு சென்றவுடன் சிவா இருவரையும் உட்கார சொல்லிவிட்டு அந்த காவல் அதிகாரியை வெளியே அனுப்பி விட்டான்...
பிறகு என்ன விடயம் என்று கூறுங்கள் என்று கேட்டான் இருவரையும் பார்த்து அதற்கு நிலா தான் சார் என்னுடைய பெயர் நிலா இவள் என்னுடைய தோழி என்று அனைத்து விவரங்களையும் கூறினாள் பிறகு அப்பெண்ணை ஒரு முறை சிவரஞ்சன் பார்தான் ...
அவன் பார்த்த பார்வையில் என்ன இருந்தது என்று நிலாவிற்கும் தெரியவில்லை நிலாவின் தோழிக்கும் தெரியவில்லை அவன் பார்வையின் அர்த்தம் அவன் ஒருவனே அறிவான்....
பிறகு அப்பெண்ணிடம் நான் தனியாக பேச வேண்டும் என்று சிவரஞ்சன் கூறினான்...
நிலா ஒரு நிமிடம் சிவரஞ்சனை உற்றுப் பார்த்துவிட்டு சரி என்று கூறிவிட்டு வெளியே சென்று விட்டாள்...
பிறகு சிவா என்ன கேட்டனோ அப்பெண் என்ன கூறினாலோ இன்னும் இரண்டு மணி நேரத்தில் உனக்கு தேவையான அவனுடன் எடுத்துக் கொண்ட உன்னுடைய போட்டோக்கள் ஆடியோ வீடியோ அனைத்தும் உனது கையில் இருக்கும் என்று கூறிவிட்டு அவன் வெளியில் சென்று விட்டான் ...
நிலாவிடம் அவன் ஒன்றும் கூறவில்லை...
பிறகு நிலா தான் அவளின் தோழியிடம் என்ன கூறினான் என்று கேட்டாள் அதற்கு இன்னும் இரண்டு மணி நேரத்தில் அனைத்தும் எனது கையில் கிடைக்கும் என்று அந்த சார் கூறினார் என்று சொன்னாள்.

நிலா பிறகு எதுவும் பேசாமல் வண்டியை எடுத்துக்கொண்டு அவளின் அலுவலகத்திற்கு பக்கத்தில் இருக்கும் பூங்காவிற்கு சென்றார்கள் ...
ஏனென்றால் சிவரஞ்சன் முகம் தெரியாதே ஒழிய சிவரஞ்சனை பற்றி நிலா அதிகமாக கேள்விப்பட்டு இருக்கின்றாள்
அலுவலகத்திற்கு பக்கத்தில் இருக்கும் போலீஸ் ஸ்டேஷனில் இருக்கும் மேல் அதிகாரி நல்லவர் லஞ்சம் வாங்க மாட்டார் உடனடியாக தீர்வு கண்டு தருவார் என்று நிறைய பேர் கூறி கேட்டு இருக்கிறாள் அதனால் தான் இங்கு அழைத்துக் கொண்டு வந்தாள் நிலா அவளின் தோழியை......
அதனால் அவன் இன்னும் இரண்டு மணி நேரத்தில் நற்செய்தி கூறுவான் என்று இருவரும் அங்கே காத்துக் கொண்டிருந்தனர்...
ஏனென்றால் செல்லும்பொழுது அவன் நிலாவின் தோழி நம்பரை வாங்கிக் கொண்டுதான் சென்றான்...
பிறகு நிலாவின் தோழி நம்பருக்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பாகவே சிவரஞ்சன் போன் செய்தான் நீங்கள் உங்கள் அலுவலகத்திற்கு வாருங்கள் என்று கூறினான்....
பிறகு நிலா மற்றும் நிலாவின் தோழி இருவரும் அலுவலகத்திற்கு சென்றார்கள் அங்கு சென்ற அடுத்த நொடி நிலாவின் தோழி காலில் அவளின் காதலன் விழுந்து இருந்தான் ...
விழுந்து மன்னிப்பு கேட்டுவிட்டு அவர்களுக்கு தேவையான அனைத்து ஆபரணங்களையும் அவர்கள் கையில் ஒப்படைத்துவிட்டு சார் என்னை மன்னித்து விடுங்கள் என்று கூறினான்...
அதற்கு சிவா என்னிடம் கேட்டு எந்த பிரயோஜனமும் இல்லை அப் பெண்ணிடம் கேள் இனிமேல் இதே மாதிரி எந்த பெண்ணையும் ஏமாற்றாதே என்று கூறினான்...
பிறகு சிவரஞ்சன் நிலா மற்றும் அவளின் தோழியிடம் சொல்லிக் கொண்டு கிளம்பி விட்டான்...
அவன் ஒரு நொடியும் நிலாவை திரும்பிப் பார்க்கவில்லை ஆனால் அவன் செல்லும் ஒவ்வொரு நொடியும் எல்லா அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்...
பிறகு அவளின் தோழியை பார்த்தாள் அவளை அழைத்துக் கொண்டு அலுவலகத்திற்கு பக்கத்தில் இருக்கும் பூங்காவிற்கு சென்று இருவரும் அமர்ந்தார்கள்...
அங்கு அமர்ந்து அந்த போட்டோஸ் மற்றும் வீடியோ ஆடியோக்களை கேட்டார்கள் மற்றும் பார்த்தார்கள்.....
பிறகு நிலா லவ் பண்றேன் என்று சொல்லிவிட்டு அவனுடன் நெருக்கமாக எதற்கு இவ்வளவு ஃபோட்டோ எடுத்திருக்கின்றாய் நீ கேட்டாள் ...
ஆடியோவில் அவ்வளவு கேவலமாக ஒன்றும் இல்லை நார்மலாக பேசுவது போல் தான் இருந்தது ஆனால் போட்டோ தான் சிறிது நெருக்கமாக இருந்தன தவறாக எதுவும் இல்லை...
பிறகு நிலா அவளின் தோழியின் கண்ணை துடைத்துவிட்டு அவளை அவளின் வீட்டிற்கு கொண்டு சென்று விட்டு விட்டு வந்தாள் ...
பிறகு தனது வீடு நோக்கி செல்லாமல் கோவிலுக்கு சென்று விட்டு வீட்டிற்கு செல்லலாம் என்று யோசித்தாள் ...
பிறகு கோவிலுக்கு சென்று வேண்டி விட்டு சிறிது நேரம் உட்கார்ந்து இருந்தாள் அவ்வேளையில் அங்கு கோவிலுக்கு பக்கத்தில் இருக்கும் இடத்தில் சிறிய சண்டை ஒன்று நடந்து கொண்டிருந்தது கூட்டமாக இருந்தது ....
என்னவென்று பார்த்தாள் அங்கு சிவரஞ்சன் ஒரு பையனை அடித்துக் கொண்டு இருந்தான்...
நேற்று பார்க்கும் போது எப்படி இருந்தான் இப்பொழுது எப்படி இருக்கின்றான் இன்று காலையிலிருந்து இவன் நம் கண்ணோட்டத்தில் வெவ்வேறாக காணப்படுகின்றான் என்று எல்லாவற்றையும் நினைத்துக் கொண்டு அவளின் வண்டியை எடுத்துக் கொண்டு அவளின் வீட்டிற்கு சென்றாள்..
வரும் பதிவில் நிலாவின் மனதில் இன்னும் என்னென்ன இருக்கின்றது என்று பார்க்கலாம் ...
மிக்க நன்றி
அன்புடன்
❣️ தனிமையின் காதலி ❣️
கதைகளை படித்துவிட்டு நிறை குறைகளை கூறுங்கள் திருத்திக் கொள்ளப்படும்...
கதையைப் படித்துவிட்டு விமர்சனங்கள் மற்றும் ரேட்டிங் கொடுக்குமாறு வேண்டுகோள் வைக்கிறேன் ....
உங்களின் விமர்சனங்கள் மற்றும் ரேட்டிங் என் கதைகளை ஊக்குவிக்க உதவியாக இருக்கும் நான் அடுத்த படியாக கதைகளை எழுத உற்சாகம் மூட்டும் விதமாக இருக்கும் என்று வேண்டிக் கொள்கின்றேன்....