• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

என்னவளே என்னில் பாதியானவளே-4

Kanisureshதனிமையின் காதலி

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 23, 2024
8
1
3
Kallakurichi
நிலா அவளின் வீட்டிற்கு சிவாவின் நினைவோடு சென்று கொண்டிருந்தாள் அவன் நம் கண்ணோட்டத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக தெரிகின்றான் என்று நினைத்துக் கொண்டே சென்றாள்...


அவளிற்கு வீட்டிற்குச் சென்று சிவாவின் நினைவாக இருந்தது சிறிது நேரம் கழித்து அவளின் அண்ணன் உதயா அவளின் தலையில் கொட்டி என்ன மேடம் ஏதோ யோசனையாக இருக்கிறீர்கள் சீக்கிரம் வேறு வந்து விட்டீர்கள் என்று கேட்டான்...

அண்ணா நான் ஒரு விடயம் கூறுகிறேன் அதற்கு எனக்கு பதில் சொல் என்று கேட்டாள் ஆனால் அதற்கு உதயா ஒரு நிமிடம் சர்க்கி ஆகிப் பார்த்தான்...

ஏனென்றால் அவள் அவளுக்கு ஏதாவது காரியம் ஆக வேண்டும் என்றாள் மட்டுமே அண்ணன் என்று கூப்பிடுவாள் இல்லை என்றால் அவனை அவள் எப்போதும் அண்ணன் என்று கூப்பிட்டதில்லை ஆகையால் தான் அப்படிப் பார்த்தான்..


பிறகு சொல்லு குட்டி பிசாசு என்ன உனக்கு பிரச்சனை என்னை அண்ணன் என்று கூப்பிடுகிறாய் என்று கேட்டான் ...

அவளின் அருகில் அமர்ந்து கொண்டு டைனிங் டேபிலில் அமர்ந்து அவளின் தலையை கோதிக் கொண்டே கேட்டான்..

பிறகு நிலா இன்று காலையிலிருந்து நடந்த அனைத்தையும் அவள் உதயவிடம் கூறினாள் அவனும் தனது தங்கை சொல்வதை பொறுமையாக கேட்டுக் கொண்டு இருந்தான்...

இதற்கு இப்ப என்ன பிரச்சனை நிலா உன்னுடைய தோழியின் பிரச்சினை தான் முடிந்து விட்டது. அப்புறம் எதற்காக அதையே யோசித்துக் கொண்டிருக்கின்றாய் என்று கேட்டான்...

அதற்கு நிலா நான் எனது தோழியின் பிரச்சினையை பற்றி யோசிக்கவில்லை நான் அந்த போலீஸ் அதிகாரி பற்றி பேசுகிறேன்...

லூசா நீ அவரைப் பற்றி யோசிக்க என்ன இருக்கின்றது அவர் அவர் கடமையை சரிவர செய்திருக்கின்றார் என்று கூறினான் உதயா...

இல்லடா நான் அதை சொல்லவில்லை நேற்று ஒருவர் என்னை பாலோ செய்து வந்தார் பேருந்து நிறுத்தத்தில் என்னிடம் பேசினான் என்று கூறினேன் அல்லவா என்றாள்...

அதேபோலத்தான் இன்று நான் காவல் நிலையத்தில் பார்த்து இதுவரை நடந்த பிரச்சனைக்கு தீர்வு காண்பித்துக் கொடுத்தவர் என்று கூறினானே...

இருவரும் ஒருவரே அதனால் தான் உன்னிடம் கூறிக் கொண்டிருக்கின்றேன் என்று சொன்னாள்...

ஓ மேடம் சைட் அடிச்ச போலீஸ் அதிகாரியா அதனால் தான் என்னிடம் இவ்வளவு நேரம் அந்த போலீஸ் பத்தி சொல்லிக் கொண்டிருக்கின்றாயா? என்றான்

லூசு மாதிரி பேசாதே அவர் அவர் கடமையை செய்துள்ளார் அதுக்கு நீ எதற்கு அவரைப்பற்றி யோசித்துக் கொண்டே இருக்கின்றாய் என்று கேட்டான் உதயா...


இல்லடா நான் இந்த விஷயத்தை எல்லாம் உன்னிடம் சொல்வதற்காக உன்னை கூப்பிடவில்லை வேறு எதற்காக கூப்பிட்டாய் என்று கேட்டான் உதயா....

நான் ஒரு விடயம் சொல்வேன் நீ என்னை தவறாக நினைத்து கொல்லக்கூடாது...இப்பொழுது அம்மா அப்பாவிடம் சொல்லகூடாது என்று கூறினாள்...

அவளின் பெற்றோர்கள் இருவரும் ஒரே வண்டியில் தான் வேலைக்கு செல்வார்கள் அவளின் பெற்றோர்கள் இருவரும் ஒரே கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்...

இவள் அப்பா அம்மாவிடம் கூறக்கூடாது என்று கூறும் போதே அவர்கள் வெளியில் வந்து விட்டார்கள் அவர்கள் வரும் நிலையில் அவள் அவ்வாறு கூறியதால்...

அவர்கள் இருவரும் எதுவும் பேசாமல் வெளியே தன் பிள்ளைகள் என்ன பேசுகிறார்கள் என்று கேட்டுக் கொண்டிருந்தார்கள்...

பிறகு நிலா அண்ணா நேற்று பார்த்த அந்த காவல் அதிகாரி இன்றும் பார்த்தேன் என்று கூறினேன் அல்லவா ஆனால் எனக்கு அவரை பார்க்கும் பொழுது ஏதோ தோன்றுகின்றது என்று கூறினாள்...

நிலா அதுக்குள்ள என்ன லவ் பண்றியா என்று கேட்டான் லூசாடா நீ லவ் பண்ணல எனக்கு ஒரு மாதிரி தோன்றுகின்றது என்று மட்டும் தான் கூறினேன் என்றாள்..

அதற்கு அவன் அண்ணன் ஒரு மாதிரி என்றால் என்ன அர்த்தம் எனக்கு புரியவில்லை அப்பா அம்மாவிடம் கூற வேண்டாம் என்று கூறுகிறாய்...

ஒரு மாதிரி அப்படின்னா என்ன அர்த்தம் என்று எனக்கு புரியவில்லையே என் அன்பு தங்கையே என்று கேட்டான்...

அவள் எதுவும் கூறாமல் அவன் தலையை பிடித்து ஆட்டி விட்டு போடா லூசு உன்னிடம் போய் பேசினேன் பாரு என்று கூறிவிட்டு அவ்வளது அறைக்கு சென்று விட்டாள்....

அவன் அண்ணனும் இந்த விஷயத்தை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை அதனால் அவனும் அவனுடைய அறைக்கு சென்று விட்டான்....

இருவரும் பேசிக் கொண்டிருந்ததை கேட்டுக் கொண்டிருந்த அவர்களின் பெற்றோர்கள் எதுவும் கூறாமல் தங்களுக்குள் தங்களைப் பார்த்து சிரித்துக் கொண்டு வீட்டிற்கு வந்து அவர்களின் வேலைகளை பார்த்தார்கள்....


இரவு வேலையில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டார்கள் அப்பொழுது நிலா இன்று நடந்த அனைத்தையும் அப்பா அம்மாவிடம் கூறினாள்...

தினந்தோறும் நடக்கும் விஷயங்களை நிலா எப்பொழுதும் அவளின் வாழ்வில் தினம் தினம் என்ன நடக்குமோ அதை பெற்றோரிடம் கூறுவாள் அதனால் மட்டுமே கூறினாள்...

அவள் அப்பா அம்மாவிடம் கூற வேண்டாம் என்று அவன் அண்ணனிடம் சொன்ன விடயம் சிவரஞ்சனை பார்க்கும் பொழுது அவளுக்கு ஏதோ மாறி தோன்றுகின்றது என்ற விஷயத்தை மட்டும் தான்...

ஏனென்றால் நான் அப்படி கூறினாள் தனது பெற்றோர் அண்ணன் கூறுகிறது போல் நினைத்துக் கொள்வார்கள் அண்ணன் விளையாட்டாக எடுத்து கொண்ட விசயத்தை அவர்கள் சீரியஸாக எடுத்துக் கொள்வார்கள் என்ற காரணத்தினாள் தான்...

ஆனால் அவளின் பெற்றோர் அவள் பேசியதை கேட்டதை அவள் அறியவில்லை இவள் நினைத்தது போல் அவர்கள் அந்த விடயத்தை சீரியஸ் ஆக தான் எடுத்துக் கொண்டார்கள்...

பிறகு அனைவரும் சாப்பிட்டு முடித்து சிறிது நேரம் பேசிவிட்டு அவரவர் அறைக்குச் சென்று விட்டார்கள்...

நிலாவிற்கு அவளின் அலுவலக தோழி போன் செய்து நன்றி கூறிவிட்டு இன்னும் இரு மாதங்களில் எனக்கு திருமணம் என்று கூறினாள்...

அதற்கு நிலா இந்த வாழ்க்கையை சந்தோஷமாக வாழப்பார் உனது பெற்றோருக்காக மட்டுமில்லாமல் உனக்கு வரும் வருங்கால கணவனுகாகவும் உண்மையாக இருந்து நல் முறையில் வாழு எதையும் யோசிக்காதே என்று கூறி பேசிவிட்டு வைத்து விட்டாள்...


பிறகு நிலாவும் எதுவும் யோசிக்காமல் படுத்து உறங்கி விட்டாள் அவள் எப்பொழுதும் படுத்தவுடன் உறங்கும் ரகம்...

ஆனால் இன்னும் சிறிது நாட்கள் போனால் தூக்கம் என்பதே மறந்து எந்நேரமும் ஒருவனை நினைத்துக் கொண்டே இருப்போம் என்று அவள் அப்பொழுது அறியவில்லை...




மறுநாள் காலையில் அவள் வேலைக்கு கிளம்பி கொண்டிருந்தாள் அன்று போல் இன்றும் சிவரஞ்சனை அந்த சிக்னல் அருகில் பார்த்தாள் ஆனால் வரும் வழியில் பார்த்துக் கொண்டே வந்தாலே தவிர நின்று எதுவும் பார்க்கவில்லை அவனும் கண்டுகொள்ளவில்லை ...

இருவரும் அவர் அவர் வேளையில் மூழ்கி இருந்தனர் அதேபோல் கிட்டத்தட்ட ஒரு மாதங்களுக்கு மேல் நடந்தது அவன் தினந்தோறும் வந்து அந்த நேரத்திற்கு அந்த இடத்தில் நின்று பேசிக் கொண்டிருந்தான்...

இது எதாச்சியாக நடந்து செயலே திட்டமிட்டு எதுவும் நடக்கவில்லை ஆனால் நிலா தவறாக எண்ணிக் கொண்டாள்...

நம்மை பார்ப்பதற்காக அவன் அப்படி நாம் வரும் நேரத்திற்கு வந்து நிற்கின்றான் என்று நினைத்துக் கொண்டாள் ஆனால் அவன் தினந்தோறும் அவனின் வேலைக்காக இங்கு நின்று கொண்டு அவனின் கீழ் இருக்கும் அதிகாரிகளுடன் என்ன நடந்தது எப்படி நடந்தது என்று பேசிக் கொண்டே விசாரித்து கொண்டிருப்பான் கேட்டுக் கொண்டிருப்பான் அவனின் கீழ் இருக்கும் அதிகாரிகளிடம்...

ஒரு நாள் இதேபோல் பொறுத்து பார்த்த நிலா சிவரஞ்சனின் அருகில் யாரும் இல்லாமல் அவன் போன் பேசிக் கொண்டிருந்ததால் அவன் அருகில் போய் ஸ்கூட்டியை நிறுத்தினாள்...



தன் அருகில் நிழலாடுவதை உணர்ந்து அவன் திரும்பிப் பார்த்தான் நிலாவைப் பார்த்த பிறகு எதுவும் பேசாமல் போனில்
பேசி கொண்டு இருந்தான் ...

நிலா அவனின் கண் முன் கை ஆட்டியதால் அவளிடம் இரண்டு நிமிடம் இரு என்று கூறிவிட்டு போனில் பேசிவிட்டு வைத்து என்ன என்று கேட்டான்...

தினமும் எதற்காக இங்கே இந்த நேரத்தில் நின்று கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டாள்...


ஏன் மேடம் அதற்கு உங்களுக்கு பதில் கூற வேண்டும் என்று எந்த அவசியமில்லையே கவர்மெண்ட் ரோடு நான் நிற்க்கின்றேன் உங்கள் வீட்டில் நின்றது போல் என்னிடம் வந்து கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்றான்...

நான் எந்த டைமில் எங்கு வேண்டுமானாலும் இருப்பேன் உங்களுக்கு என்ன வந்தது என்று கேட்டான்...


அவன் ஏன் இப்படி பேசினான் என்று அவனுக்கும் தெரியவில்லை அவன் இவ்வளவு ஜாலியாக யாரிடமும் வம்பு இழுக்க மாட்டான் ...

ஆனால் நிலாவிடம் அவனுக்கு அவனையும் மீறி வம்பு இழுக்க தோன்றுகின்றது...

நிலா அவனை குறுகுறு என ஒரு ஐந்து நிமிடம் பார்த்துக் கொண்டு நின்றாள் அப்பொழுது சிவாவின் கீழ் இருக்கும் ஒரு அதிகாரி வந்து அவனிடம் பேசிவிட்டு சென்றார்...

செல்லும் நிலையில் சார் இந்த பெண் யார் என்று என்ன விடையும் நான் பார்க்கிறேன் என்று கேட்டுக் கொண்டிருந்தார்...

அதற்கு சிவா இல்லை எனக்கு தெரிந்தவர்தான் என்னை பார்க்க வந்துள்ளார் நீங்கள் உங்கள் வேலையை பாருங்கள் என்று கூறி விட்டான்...

யாரு சார் நான் உங்களுக்கு தெரிந்த பெண்ணா எதற்காக அவரிடம் என்னை அப்படி கூறினீர்கள் என்று கேட்டாள் ...

அதற்கு சிவா நான் யார் என்று உங்களுக்கு தெரியாது சரி அப்புறம் எதற்காக என்னை ஏன் இங்கு நிற்கிறாய் இந்த டைமுக்கு நிற்கிறாய் என்று கேட்கிறீர்கள் என்று கேட்டான்...

அதற்கு நிலா எதுவும் பேசாமல் இவன் கேட்பது உண்மையே நாம் ஏன் இப்படி வந்து கேட்கின்றோம் என்று நினைத்துக் கொண்டு அவனிடம் எதுவும் கூறாமல் அவளது ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு அவளின் அலுவலகத்தை நோக்கி வண்டியை கிளப்பிக்கொண்டாள்...


அலுவலகத்திற்கு செல்லும் வேலையில் இதை ஏன் நம்ம அவனிடம் போய் கேட்டோம் நாம் இருக்கும் டைமுக்கு அவன் வருவது போல் நாம் ஏன் எண்ணினோம்...

அவன் ஒரு போலீஸ் அதிகாரி அவனின் வேலையை அவன் செய்தான் அன்று அண்ணன் சொன்னது போல் அதை எண்ணி அதிகமாக அவனை நினைத்து கொண்டிருக்கின்றோம் என்று நினைத்தாள்...

இது தவறு இது நம்மை தப்பான பாதையில் கொண்டு சென்று விடும் என்று எண்ணி தலையை உலுக்கிக்கொண்டு எதுவும் நடக்காதது போல் அனைத்தையும் மறந்து விட்டு அலுவலகத்தில் ஸ்கூட்டி நிறுத்தி விட்டு அலுவலகத்தின் உள்ளே சென்றாள்...


அவளே மறக்க வேண்டும் நினைக்க கூடாது என்று நினைத்தாலும் நினைக்காமல் மறக்காமல் அவளால் இருக்க முடியுமா என்று நாம் வரும் அடுத்த பதிவில் பார்ப்போம்...

அன்புடன்

❣️ தனிமையின் காதலி,❣️


கதையைப் படித்துவிட்டு உங்கள் விமர்சனங்களை தாருங்கள் கமெண்டில் கூறுங்கள் அப்படியே ரேட்டிங்கும் தாருங்கள் உங்களைப் போன்ற வாசகர்களால் தான்
என்னை ஊக்குவிக்க முடியும் ..

உங்களின் ஊக்குவித்தல் தான் என்னை அடுத்த பாகம் உடனடியாக பதிவிட தூண்டுகோளாக இருக்கும் என்று நம்புகின்றேன்...