ஹாய் டியர்ஸ்
இந்த கதையில தன் அக்காவின் திருமணத்தில் மகிழ்ச்சியாக கலந்து கொண்டிருந்தவள் திடீரென தானே மணப்பெண்ணாக மாறிப் போகிறாள். மணமகன் எவ்வித உணர்ச்சியும் இல்லாமல் அவளைத் தன் மனைவியாக மாற்றிக் கொள்கிறான். இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து தங்களுடைய மணவாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வார்களா அல்லது அவரவர் பாதையைத் தேர்ந்தெடுத்து அவரவர் வழியில் சென்று விடுவார்களா. இதைப் பற்றி தான் பார்க்க போகிறோம்.
இந்த கதையில காதல் நட்பு பாசம் கொஞ்சம் ரொமான்ஸ் அப்புறம் நகைச்சுவை சின்ன சின்ன சஸ்பென்ஸ் எல்லாமே இருக்கும் கண்டிப்பா குடும்பம் சார்ந்த கதையாகவும் இருக்கும். படித்துவிட்டு தங்களுடைய கருத்துக்களை கூறுமாறு கேட்டுக் கொள்கிறேன் நன்றி.
அத்தியாயம் 1
அந்த பரபரப்பான காலை வேளையில் அந்த பிரம்மாண்டமான மண்டபத்தில் திருமணத்திற்காக உற்றார் உறவினர் அனைவரும் கூடி இருந்தனர். வரும் உறவினர்கள் அனைவரையும் இன்முகத்தோடு மாப்பிள்ளை வீட்டாரும் பெண் வீட்டாரும் வரவேற்று அமர வைத்துக் கொண்டிருந்தனர். அந்த கூட்டத்திற்கு சிறுசிறு சலசலப்பு எழுந்தாலும் அனைவரும் ஏதாவது ஒரு காரணம் இருக்கும் என்று எண்ணிக்கொண்டு அமைதியைக் கடைப்பிடித்து திருமணத்தை பார்க்க ஆரம்பித்தனர்.
அங்கு எழுந்த சலசலப்புக்கு என்ன காரணம் என்றால் மணப்பெண்ணாக அமர்ந்திருந்தவள் கல்லூரி இரண்டாம் ஆண்டு படிக்கும் 19 வயதான ஏற்கனவே திருமணம் செய்வதாக இருந்த மணப்பெண்ணின் சித்தப்பா மகளாகிய சாகித்யா. அவள் முகத்தில் ஒரு பயம் மற்றும் தன்னை இந்த திருமணத்திலிருந்து காப்பாற்றி விட மாட்டார்களா என்று தன்னுடைய உடன்பிறவா சகோதரர்கள் மூவரையும் பார்க்கும் ஏக்கப்பார்வை தான் இருந்தது.
இதற்கு நேர்மாறாக முகத்தில் எந்தவித உணர்ச்சியும் காட்டாமல் ஐயர் கூறிய மந்திரங்களை கூறிக் கொண்டிருந்தான் மணமகன் சிவ ருத்ரன். சாகித்யா தன் வீட்டு பெரியவர்களின் முகத்தையே பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்த அவளுடைய பெரியப்பா மகன் சக்தி அவள் அருகில் சென்று "நீ எந்த மாதிரி பாவமாக லுக் விட்டாலும் இங்கு இருக்கிற யாரும் அதை மதிக்க போறது இல்லை அதனால அமைதியா உக்காரு பாப்போம்" என்று கூறினான்.
சாகித்யா கடுப்புடன் ஏதோ கூற வரும் நேரத்தில் ஐயர் கெட்டிமேளம் கூற ருத்ரன் சாகித்யா கழுத்தில் பொன் தாலியை அணிவித்து அவளை தன்னுடைய சரி பாதியாய் ஆக்கிக் கொண்டான். அதன் பிறகு அவளுடைய நெற்றி வகிட்டில் மற்றும் தாலி இரண்டிலும் குங்குமம் வைத்து விட்டான். அதன்பின்பு மணவறையை மூன்று முறை வலம் வந்து அவளுடைய காலில் மெட்டி அணிவித்து முழுதாக அவளை தன் மனைவியாக்கிக் கொண்டான்.
தன்னருகில் நிற்கும் தன் கணவனை நிமிர்ந்து பார்த்தாள் ஐந்தரை அடியில் அழகு சிலையாக நின்ற சாகித்யா அவளுக்கு எந்த வித வகையிலும் சளைத்தவன் இல்லை என்பதுபோல் 6 அடியில் தினமும் செய்யும் உடற்பயிற்சியினால் முறுக்கேறிய உடம்புடன் மாநிறத்தில் நின்று கொண்டிருந்தான் சிவ ருத்ரன்.
திருமணம் முடிந்த நிம்மதியில் இரண்டு குடும்பம் நின்றுகொண்டிருந்தது அதன்பின்பு வழக்கமான சடங்குகள் அனைத்தும் முடிந்து அனைவரும் சேர்ந்து புகைப்படங்கள் எடுத்து முடித்தவுடன் சாப்பிட்டுவிட்டு மணமகள் இல்லம் நோக்கி சென்றனர்.
மணமகள் இல்லம் ஒரு கூட்டு குடும்பம் அங்கு வசித்தது சாகித்யாவின் பெரியப்பா சுவாமிநாதன் பெரியம்மா கண்மணி அவர்களுக்கு ஒரு மகன் சக்தி மகள் ராஜி( சிவ ருத்ரனுக்கு திருமணம் பேசி இருந்தவள்). சாகித்யா ஒரே பெண் அவளுடைய தந்தை முத்துராமன் தாய் ஜானகி. கடைசியாக சாகித்யாவின் அத்தை புனிதா மாமா செல்வம் இவர்களுக்கு இரண்டு புதல்வர்கள் மூத்தவன் சத்யா இளையவன் பாலா. இதில் சக்தி மற்றும் சத்யா தங்கள் பெற்றோர் தொழில்தான் செய்து கொண்டிருக்கிறார்கள் பாலா கல்லூரி மூன்றாமாண்டு படித்துக் கொண்டிருக்கிறான் சாகித்யா பல ஆண்டு தவத்திற்கு கிடைத்த அந்த வீட்டின் பொக்கிஷம். இனி சிவ ருத்ரன் வீட்டின் பொக்கிஷமாக இருப்பாளா.
சிவ ருத்ரன் வீட்டில் அவனுடைய தந்தை சிவலிங்கம் தாயார் ராணி அவனுக்கு ஒரே ஒரு தங்கை சாதனா அவளும் கல்லூரி இரண்டாமாண்டு படித்துக் கொண்டிருக்கிறாள் ருத்ரன் தன் தந்தையின் தொழிலை மட்டுமல்லாமல் தானும் தனியாக தொழில் தொடங்கி அதை வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கிறான். தன் கைக்கு கிடைத்த பொக்கிஷத்தை சிவ ருத்ரன் பத்திரமாக பார்த்துக் கொள்வானா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
மணமகள் வீட்டிற்கு வந்த புதுமண தம்பதியர் இருவருக்கும் பாலும் பழமும் கொடுத்து சடங்குகளை செய்ய ஆரம்பித்தனர் எந்தவித எதிர்ப்பும் காட்டாமல் இருவரும் அமைதியாக தங்களுடைய சடங்குகளை செய்தனர். அனைத்து சடங்குகளும் முடிந்து கிளம்பும் நேரத்தில் சக்தி மற்றும் சத்யா இருவரை கட்டிக்கொண்ட சாகித்யா "நான் போகமாட்டேன் உங்க எல்லாரையும் விட்டு நான் போகவே மாட்டேன் என்ன விட்டுடாத" என்று கத்தி அழுக ஆரம்பித்தாள்.
அதைப் பார்த்து தலையில் அடித்த சக்தி மற்றும் சத்யா "செல்லம் உனக்கு நாங்க குச்சி மிட்டாய் கேக் பப்ஸ் ஜூஸ் எல்லாம் வாங்கி தருகிறோம் அமைதியா போய் இப்போ கார்ல ஏறு பார்ப்போம்" என்று கூறினார்கள்.
சத்யா சாகித்யாவை சமாதானப்படுத்துவது ஏதாவது தவறாக ஆகிவிடுமோ என்று பெரியவர்கள் கலக்கமாக மாப்பிள்ளை வீட்டாரை பார்க்க அவர்கள் அதை அனைத்தையும் புன்சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தனர் ருத்ரனுக்கு கூட மெலிதான சிரிப்புத்தான் வந்தது.
அவர்கள் இருவரும் கூறிய சமாதானங்கள் ஏற்காத சாகித்யா இருவரையும் பிடித்துக் கொண்டே அவர்கள் காது அருகில் "அண்ணா வேணாண்டா எனக்கு அவரைப் பார்த்தாலே பயமா இருக்கு நான்தான் ஏற்கனவே உன்கிட்ட சொல்லி இருக்கேன் இல்ல ஒருத்தர தேவையில்லாம அடிச்சுட்டேன் அப்படின்னு அது வேற யாரும் இல்ல இவர்தான்" என்று கூறினாள்.
அவள் கூறிய நிகழ்வை யோசித்து தங்களுக்குள் சிரித்துக் கொண்ட இருவரும் அவளை வலுக்கட்டாயமாக பிடித்து காரில் கொண்டு அமர வைத்தனர். பின்பு சக்தி "நான் கூட பயந்தேன் வேற யாரையோ உனக்கு கல்யாணம் பண்ணி வச்சுட்டு தப்பு பண்ணிட்டோம் அப்படின்னு ஆனா இப்பதான் நிம்மதியா இருக்கு உனக்கு ஏத்த சரியான மாப்பிள இவர்தான் அதனால ஒழுங்கு மரியாதையா உன் வாலை சுருட்டிகிட்டு அமைதியா இரு நாளைக்கு நாங்க வந்து உன்னை இங்க கூட்டிட்டு வருவோம் ஆனா உன்னோட மாப்ள கூட தான் கூட்டிக்கிட்டு வருவோம் சரியா" என்று கூறி கதவை அடைத்தனர்.
அவர்கள் இருவரையும் முறைத்த சாகித்யா "நேரம் பார்த்து ரெண்டு பேரும் பழி வாங்கி சந்தோசபட்ற தானே எனக்கு ஒரு நேரம் வரும் அப்போ உங்க எல்லாரையும் பார்த்துக்கிறேன்" தன் கண்ணீரை துடைத்துக்கொண்டே கூறினாள். சரியாக இன்னொரு பக்கம் கதவைத் திறந்து சிவ ருத்ரன் ஏறி அமர்ந்தான். அதன் பிறகு பெரியவர்கள் அனைவரிடமும் கூறிவிட்டு மணமகன் இல்லம் நோக்கி சென்றனர் கார் பயணம் மிகவும் அமைதியாக சென்று கொண்டிருந்தது.
கார் அமைதியாக சென்று ஒரு பெரிய வீட்டின் கேட் அருகில் நின்று ஹார்ன் அடித்தது. வண்டியின் சத்தத்தை கேட்ட காவலாளி உடனடியாக கேட்டை திறந்தார். அந்த சத்தத்தில் கண்மூடி இருந்த சாகித்யா கண்ணை திறந்து பார்த்தாள். அதற்குள் அந்த சின்ன மாளிகையின் முன்பு கார் நின்றது. அதைப்பார்த்த சாகித்யா "இவங்க குடும்பம் இவ்வளவு பெரிய பணக்கார குடும்பமா இவங்ககிட்ட இவ்வளவு பணம் இருக்கிறது எங்க அக்காவுக்கு தெரிஞ்சு இருந்தா கண்டிப்பா அவ இந்த கல்யாணத்துல இருந்து ஓடி போய் இருக்க மாட்டாளே இவர் ஒரு சாப்ட்வேர் கம்பெனில வேலை பாக்குறததான சொன்னாங்க அப்ப அது எல்லாம் பொய்யா" என்று மனதில் பேசுவதாக எண்ணிக் கொண்டு வெளியில் புலம்பிக் கொண்டிருந்தாள்.
அவளுடைய புலம்பலைக் கேட்ட அனைவருக்கும் தன்னை அறியாமல் சிரிப்பு வந்தது தான் சொகுசாக வாழலாம் என்று எண்ணாமல் எதைப் பற்றி யோசிக்கிறாள் என்று எண்ணிக்கொண்டு ருத்ரன் அவளுடைய கையை பிடித்தான். அதில்தான் சுயநினைவு வந்தவள் அவனுடன் இறங்கினாள். பின்பு ஆரத்தி எடுக்கப்பட்டு வலது காலை வைத்து வீட்டிற்குள் அடியெடுத்து வைத்தாள். அதன்பின்பு பூஜை அறைக்கு விளக்கேற்ற அழைத்து சென்றார் ராணி அனைத்தும் முடிந்த பிறகு ருத்ரன் பார்த்த சிவலிங்கம் "நீ உன்னோட ரூம்ல போய் ரெஸ்ட் எடு" என்று கூறிவிட்டு ராணிக்கு கண் காட்டினார்.
அதைப் புரிந்து கொண்ட ராணியும் சாகித்யாவை தனியாக அழைத்து "செல்லம் உன்னோட படிப்பில நாங்க எந்தவித குறையும் வைக்க மாட்டோம் அதே மாதிரி நீ தான் இனி அவனோட பொண்டாட்டி அதையும் ஞாபகம் வச்சுக்கோ நீ இதுவரைக்கும் ஹாஸ்டல்ல தங்கி படித்த மாதிரியே இன்னும் ஒரு வருஷம் படி அப்படி என்றால் தான் உனக்கும் இதெல்லாம் ஏத்துக்க டைம் கிடைச்ச மாதிரி இருக்கும் எதைப் பத்தி தேவையில்லாம யோசிக்காமல் நடந்ததெல்லாம் நல்லதுக்கே நினைச்சிகிட்டு நிம்மதியா இரு எந்த ஒரு பிரச்சனையா இருந்தாலும் எங்க கிட்ட சொல்லு நீ எங்களுக்கு ஒரு பொண்ணு மாதிரிதான் கண்டிப்பா அதையும் நாங்க தீர்த்து வைப்போம் புரியுதா" என்று பாசமாக கூறினார்.
அவருடைய பாசத்தில் நெகிழ்ந்து போன சாகித்யா "கண்டிப்பா அத்தமா உங்கள கஷ்டப் படுத்துற மாதிரி கண்டிப்பா நான் எதுவுமே செய்ய மாட்டேன்" என்று கூறிவிட்டு அவரை இறுக அணைத்துக் கொண்டாள். திருமணத்தில் நடந்த குளறுபடியால் ரிசப்ஷன் இரண்டு நாள் கழித்து ஏற்பாடு செய்யப்பட்ட சிறு பெண் என்பதால் இரவு சடங்கு எதுவும் வைக்காமல் அவளை ருத்ரன் அறையில் ஓய்வெடுக்குமாறு அனுப்பி வைத்தனர்.
உள்ளே வந்த சாகித்யா ருத்ரன் அறையில் இருப்பதை பார்த்து மனதில் "ஐயையோ தெரியாம வந்துட்டோமே ஏதாவது சொல்லி திட்டி விடுவானோ பயமா வேற இருக்கே ஏற்கனவே தெரியாம ஒரு தடவ இவன அடிச்சி வேற இருக்கிறோம் இன்னைக்கு என்ன எல்லாம் நடக்க போகுதோ" என்று பயந்து கொண்டே நின்று கொண்டிருந்தாள்.
அவளைப் பார்த்த ருத்ரன் தன் கையிலிருந்த பேப்பர் அனைத்தையும் அவள் அருகில் போட்டான். அதைப்பார்த்த சாகித்யா "ஒருவேளை டிவோர்ஸ் பேப்பராக இருக்குமோ நம்மள கையெழுத்து போட சொல்லி இதுல போட்டு இருக்காங்களோ" என்று புலம்பிக் கொண்டிருந்தாள்.
அவளுடைய புலம்பலைக் கேட்ட ருத்ரன் "ரொம்ப ஆசைப் படாதே என் வாழ்க்கைக்குள் என்னோட பொண்டாட்டியா ஒரு தடவை வந்துட்டா கடைசி வரைக்கும் அது மாறாது. இந்த பெட்ல இருக்கிறது எல்லாம் நீ என்னோட பொண்டாட்டி அப்படிங்கறதுகாண ஆதாரம் உன்னுடைய ஆதார் கார்டு பேன் கார்ட் ஓட்டர் ஐடி எல்லாத்துலயும் இப்ப நீ சாகித்யா சிவ ருத்ரன் தான். அதுமட்டுமில்லாம பக்கத்துல இருக்கிறது நம்ம கல்யாணம் ரெஜிஸ்டர் பண்ண மேரேஜ் சர்டிஃபிகேட் இனி என்னோட வாழ்க்கையை விட்டு நீ போகணும்னா பின்விளைவுகள் ரொம்ப மோசமா இருக்கும். உன்னுடைய மனசுல இருக்கிற உன்னோட காதலனை மற்றும் காதலை அடியோடு அழித்துவிடு அதுதான் இனி உனக்கும் நல்லது அனைவருக்கும் நல்லது புரியுதா" என்று கேட்டான்.
ருத்ரன் கூறிய அனைத்தையும் கேட்ட சாகித்யா அடப்பாவி கல்யாணம் முடிஞ்சு இவ்வளவு நேரத்துக்குள்ள இவ்வளவு வேலை பண்ணிருக்க இவ்வளவு சீக்கிரம் செய்ய தெரிஞ்ச உனக்கு எங்க அக்காவை கண்டுபிடிக்க எவ்வளவு நேரம் ஆகப்போகுது நீ நினைச்சிருந்தா கண்டுபிடித்து அவளை கல்யாணம் பண்ணி இருக்கலாமே என்ன எதுக்கு உனக்கு பொண்டாட்டி ஆக்கின" என்று எண்ணிக்கொண்டு தலையை மட்டும் ஆட்டினாள்.
அவளுடைய எண்ண ஓட்டம் என்னவாக இருக்கும் என்பதை புரிந்துகொண்ட சிவ ருத்ரன் உள்ளுக்குள் மெலிதாக புன்னகைத்துக் கொண்டு "இன்னும் 15 நாள் விருந்து எல்லாம் இருக்கும் அது மொத்தமா முடிஞ்ச பிறகு உனக்கும் லீவு முடிஞ்சிடும் அதுக்கப்புறம் நானே உன்னை கொண்டு ஹாஸ்டல்ல சேர்த்து விடுறேன். நீ செகண்ட் இயர் ஒரு செமஸ்டர் தானே முடித்து இருக்கிறாய் இந்த செகண்ட் இயர் முடிக்கிற வரை ஹாஸ்டல்ல இரு அதன் பிறகு உள்ளதை அப்புறமா பார்த்துக்கொள்ளலாம் ஆனால் உன்னோட மனசுல நீயே ஏத்துக்கோ உனக்கு கல்யாணம் ஆயிடுச்சு ஞாபகம் வச்சுக்கோ இந்த கபோர்ட் உன்னோட திங்ஸ் எல்லாம் இருக்கு டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வந்து தூங்கு" என்று கூறிவிட்டு படுக்க சென்றவன். அவளைத் திரும்பிப் பார்த்து "வந்து பெட்ல அந்தப்பக்கம் படுத்துக்கோ தேவையில்லாம கீழே படுக்கிறேன் சோபால படுக்க போறேன்னு சீன் போட்ட அப்புறம் நடக்குறதுக்கு நான் பொறுப்பு இல்லை" என்று அசால்டாக கூறிவிட்டு படுத்துவிட்டான்.
அவன் கூறியதை கேட்டு ஒரு நிமிடம் அதிர்ச்சியான சாகித்யா அதன்பின்பு எதையும் காட்டிக் கொள்ளாமல் அமைதியாக சென்று துணி மாத்திட்டு வந்து பெட்டில் மறுபுறம் படுத்து இருந்தவள் இருந்த சோர்வு காரணமாக தூங்கிவிட்டாள்.
மறுநாள் காலை வழக்கம் போல் விடிந்தது முதலில் கண் விழித்த ருத்ரன் தன் அருகில் அமைதியாக உறங்கிக் கொண்டிருந்த தன் மனைவியை பார்த்து மனதில் 'சீக்கிரமே நாங்க தான் உன்னோட சொந்தம் அப்படின்னு புரிய வைக்கிறேன் ஆனால் முடிஞ்ச வரைக்கும் உனக்கு கஷ்டம் வராம பார்த்துக்க வேண்டியது எங்க எல்லாருடைய பொறுப்பு' என்று நினைத்துக்கொண்டு வழக்கமாக செய்யும் உடற்பயிற்சி செய்ய சென்றான். அவனது வழக்கமான அனைத்து உடற்பயிற்சிகளையும் முடித்துவிட்டு குளிக்க சென்றான். அவன் குளித்து முடித்து வெளியே வரும்போது தான் சாகித்யா மெதுவாக கண்களைத் திறந்தாள்.
முதலில் எங்கே இருக்கிறோம் என்று புரியாமல் பார்த்தவள் தன் கழுத்தில் கிடந்த தாலியை பார்த்து நேற்று நடந்த அனைத்து ஞாபகம் வர எழுந்து குளிக்க துணிகளை எடுக்கச் சென்றாள். அப்போதுதான் அவளுக்கு எந்த மாதிரியான உடை உடுத்த வேண்டும் என்ற சந்தேகம் வந்தது அவள் யோசித்துக் கொண்டு நிற்பதை பார்த்த ருத்ரன் "உனக்கு புடவை வசதியாக இருக்காது அதனால சுடிதார் போட்டுக்கோ ஒரு பிரச்சனை இல்லை இந்த விருந்து எல்லாம் முடிஞ்ச பிறகு நீ உன்னோட வீட்ல வழக்கமா போடுற டிரஸ் இங்கேயும் போட்டுக்கோ யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க" என்று கூறினான்.
அவருடைய சத்தத்தைக் கேட்டு தான் அவன் அறையில் இருப்பதை கவனித்த சாகித்யா அமைதியாக தலையசைத்துவிட்டு குளிக்க சென்றாள். அவள் குளித்துக் கொண்டிருந்த போது அவளுடைய அலைபேசிக்கு அவளுடைய காதலன் தர்ஷன் போன் செய்தான். போன் சத்தமிட்டது யார் என்று பார்த்த ருத்ரன் தர்ஷன் பெயரை பார்த்துவிட்டு அதை அட்டென்ட் செய்து காதில் வைத்தான். அந்தப்பக்கம் தர்ஷன் "ஹலோ சாகி கல்யாணம் எல்லாம் நல்லபடியா முடிஞ்சுதா நீ காலேஜுக்கு திறக்கிற அன்னைக்கு வர்றியா இல்ல முன்னாடி நானே வந்து விடுவியா இன்னொரு விஷயம் உன்கிட்ட கேட்கணும் கேட்டாலும் அனுப்ப மாட்டே ப்ளீஸ் உங்க அக்கா கல்யாணத்துல நீ எப்படியும் புடவை தானே கட்டி இருப்ப அந்த போட்டோ அனுப்பு என்று எதிர்ப்பக்கம் யார் பேசுகிறார்கள்" என்று கூறினான்.
அவன் பேசுவதை வைத்தே அவர்களுடைய காதல் எந்த அளவு இருந்தது என்பதை ருத்ரன் புரிந்து கொண்டான். பின்பு ஹலோ என்று தன்னுடைய கம்பீரக் குரலில் கூறினான். அந்த குரலில் சற்று பயந்த தர்ஷன் "ஹலோ சாகித்யா இல்லையா" என்று கேட்டான். அதற்கு ருத்ரன் "சாகித்தியாவிற்கு நேத்துதான் என் கூட கல்யாணம் ஆச்சு சோ நீ அவளை தொந்தரவு பண்ணாதே எப்படி கல்யாணம் ஆச்சு அப்படின்கிற விஷயம் உனக்கு தெரிய வேண்டுமென்றால் அவ காலேஜ் வருகிற வரைக்கும் அமைதியா காத்திரு அவளோட புருஷன் பெயர் சிவருத்திரன் இப்ப அவ வெறும் சாகித்யா இல்லை சாகித்யா சிவருத்திரன்" என்று தன் ஆளுமை குரலில் கூறினான்.
ருத்ரன் கூறியதை கேட்ட தர்ஷனுக்கு ஒரு நிமிடம் உலகம் தலைகீழாக சுற்றியது போல் இருந்தது பின்பு நிதானித்து "நிச்சயமாக அவ கல்யாணம் பண்ணி இருக்க மாட்டா" என்று கூறினான். அவன் கூறியதை கேட்டு ருத்ரன் சிரிக்க ஆரம்பித்தான் அப்போதுதான் குளித்து முடித்து வெளியே வந்த சாகித்யா இவர் எதுக்காக சிரிச்சிட்டு இருக்காரு என்று எண்ணிக்கொண்டு அவனைப் பார்த்தாள். அப்போது தான் அவன் தன்னுடைய போனில் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து யார்கிட்ட இவரு பேசி சிரிச்சுகிட்டு இருக்காரு அதுவும் நம்ம போன்ல என்று எண்ணிக்கொண்டு அவன் அருகில் சென்றாள்.
அவள் வருவதைப் பார்த்த ருத்ரன் அவளிடம் போனை கொடுத்து "உனக்கு கல்யாண விஷயத்தை தர்ஷன் கிட்ட சொன்னா அவன் நம்பவே மாட்டேங்குறான் அதனால நீயே சொல்லு" என்று கூறி போனை கொடுத்தான். அதை வாங்கிய சாகித்யா "ஹலோ அவர் சொல்வது எல்லாம் உண்மை தான் நேத்து எனக்கு கல்யாணம் ஆயிற்று அதனால நீ தேவையில்லாம என்ன பத்தி யோசிக்கிறத விட்டுட்டு உன்னோட வேலைய பாரு உனக்கு எனக்கு எப்படி கல்யாணம் நடந்துச்சு அப்படிங்கற முழு விவரம் வேணும்னா நேர்ல பாக்கும்போது சொல்றேன்" என்று கூறிவிட்டு அவன் பதிலை எதிர்பார்க்காமல் கட் செய்தாள்.
அங்கே தர்ஷன் "எப்படியும் நீ ஆசைப்பட்டு கல்யாணம் பண்ணி இருக்க மாட்ட நீ வந்த பிறகு என்ன நடந்துச்சுன்னு கேட்டு நானே உன்ன கல்யாணம் பண்ணிக்கிறேன்" என்று கூறி தன்னுடைய வேலையை பார்க்க சென்றான்.
சாகித்யா தர்ஷன் என்பவனை உண்மையாக காதலித்தாளா?
ராஜி எதற்காக திருமணத்தை விட்டு ஓடிச் சென்றாள்?
இவர்களுடைய திருமண வாழ்வு காதலில் செல்லுமா அல்லது வெறுப்பில் பிரியுமா?
இதுபோன்ற கேள்விகளுக்கு அடுத்த அத்தியாயத்தில் விடை காண்போம் தங்களுடைய கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கும் உங்கள் தோழி என்னுடைய பதிவுகளில் ஏதேனும் பிழைகள் இருந்தால் மன்னித்துக் கொள்ளவும்

Last edited: