• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

என்னுள் நிறைந்தவள் நீயடி 2

Aashmi S

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
156
100
43
Kanyakumari
தர்ஷனிடம் பேசி முடித்தவுடன் ருத்ரன் ஏதாவது கேட்பானோ என்று அவன் முகத்தை பார்த்தாள் அவன் எதையும் கண்டுகொள்ளாமல் அவளிடம் வந்து அவளுடைய நெற்றி வகிட்டில் குங்குமத்தை வைத்துவிட்டு "சாப்பிடுற டைமாச்சு கீழே போய் சாப்பிடுவோம் இன்னைக்கு உங்க வீட்டில் இருந்து விருந்துக்கு கூப்பிட இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவாங்க அதனால இப்ப கீழ போனால்தான் சரியா இருக்கும்" என்று கூறி கீழே செல்ல தயாரானான்.

ருத்ரன் வைத்த குங்குமத்தில் ஒரு நிமிடம் சிலிர்த்து அடங்கிய தன் உடம்பை கட்டுக்குள் கொண்டுவர சாகித்யா பாடு பட்டாள் பிறகு ஒரு வழியாக நிதானித்து அவன் கூறியதற்கு சரி என தலை அசைத்து தன்னுடைய தலையை வாரிவிட்டு அவனுடன் கீழே இறங்கி சென்றாள். இருவரும் ஜோடியாக கீழே இறங்கி வருவதைப் பார்த்த சிவலிங்கம் மற்றும் ராணி உள்ளம் பூரித்துப் போனது.

இருவரையும் அழைத்த ராணி டைனிங் டேபிளுக்கு சாப்பாடு எடுத்து வைக்க சென்றார் கூடவே சிவலிங்கமும் உடன் சென்றார் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தனர் அப்போது ராணி சாகித்யாவை பார்த்து "இன்னும் கொஞ்ச நேரத்துல உன் வீட்டில வந்துருவாங்க உனக்கு புடவை மாத்திக்க தோணிச்சுன்னா அதுல உன் வீட்டுக்குப் போ இல்லன்னா இதுவே உனக்கு அழகாத்தான் இருக்கு இதுலயே நீ போகலாம் எப்படியும் அங்க இரண்டு நாள் தங்கர மாதிரி தான் இருக்கும் அதுக்கு ஏதாவது தேவைன்னா எடுத்து வச்சுக்கோ சரியா" என்று கூறினார்.

"சரி அத்தமா ஆனா எனக்கு எதுவும் இங்க இருந்து எடுத்துட்டு போற மாதிரி இருக்காது அங்கு ஏற்கனவே என்னோட திங்க்ஸ் எல்லாம் இருக்கு அதனால பிரச்சனை இல்ல நீங்களும் எங்க கூட அங்க வரலாம் இல்ல இங்க நீங்க தனியா தானே இருக்கீங்க" என்று கேட்டாள்.

சிவலிங்கம் "இல்லடா நீங்க போயிட்டு வாங்க எங்களுக்கு இன்னொரு பொண்ணு இருக்கா அவ நேத்து ஒரு வேலையா வெளிய போய்ட்டா இன்னைக்கு மதியம் வந்துவிடுவேன் அப்படின்னு சொல்லிட்டு தான் போய் இருக்கா அதனால பிரச்சனை இல்லை நீ எங்கள பத்தி யோசிக்காம சந்தோஷமா என்ஜாய் பண்ணிட்டு வா" என்று கூறினார்.

அதன்பிறகு எந்தவித பேச்சுவார்த்தையும் இல்லாமல் அனைவரும் அமைதியாக சாப்பிட ஆரம்பித்தனர். குனிந்து சாப்பிட்டுக்கொண்டிருந்த சாகித்யா எதர்ச்சையாக நிமிர்ந்து தன் கணவனை பார்த்தாள் யாராக இருந்தாலும் ஒரு முறை திரும்பி பார்க்க தோன்றும் ரசிக்கும் அழகை கொண்ட தன் கணவனை பார்த்தாள். முதல் முறை அவனை சந்தித்த நிகழ்வை யோசிக்க ஆரம்பித்தாள். அவள் தன்னை பார்ப்பதை பார்த்த ருத்ரன் மனதிலும் அவர்களுடைய அந்த நிகழ்வுதான் மனதில் ஓடியது.

சாகித்யா முதலாம் ஆண்டு படிப்பு முடிந்த நேரத்தில் தன் தோழிகளோடு சேர்ந்து காலேஜில் அவுட்டிங் சென்றாள் அவளுக்கு முறையே மூன்று தோழிகள் பிந்து சந்தியா மற்றும் அர்ச்சனா இதில் பிந்து தேவையில்லாத பிரச்சினைகளில் செல்லாமல் சாகித்யாவிற்கு உண்மையான நட்புடன் இருப்பவள் ஆனால் சந்தியா மற்றும் அர்ச்சனா ஏதாவது பிரச்சனையில் சிக்கிக் கொண்டு அதில் சாகித்யாவையும் இழுத்து விட்டு விடுவார்கள் அவர்களையும் சேர்த்து சாகித்திய தான் அந்த பிரச்சனையிலிருந்து காப்பாற்றிக் கொண்டு வருவாள் ஆனால் ஒருபோதும் ஏன் இவ்வாறு செய்தீர்கள் என்று அவள் கேட்டதில்லை.

இப்படி இவர்கள் நால்வரும் காலேஜில் அவுட்டிங் சென்றபோது ருத்ரன் தன் நண்பர்களுடன் சேர்ந்து வெளியே வந்து இருந்தான் ருத்ரனின் நண்பர்கள் சுபாஷ் மற்றும் விக்னேஷ். மூவரும் சேர்ந்து கடற்கரையில் தன் காரில் மேலே அமர்ந்து தங்களுக்குள் பேசி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது ருத்ரனுக்கு போன் வரவே அவன் தனியாக நின்று பேச ஆரம்பித்தான். அப்போதுதான் அங்கு வந்து சேர்ந்தனர் சாகித்யா மற்றும் அவள் நண்பர்களும் சாகித்யா தவிர மற்ற மூவரும் ஏதோ பேசி நடந்து வந்து கொண்டிருக்க தூரத்திலிருந்து ருத்ரனை பார்த்த சாகித்யா தன்னையறியாமல் அவனை ரசிக்க ஆரம்பித்தாள் ஆனால் ருத்ரன் அருகிலிருந்த ஒரு பொறுக்கி கூட்டம் சாகித்யாவை தன்போக்கில் வர்ணித்துக் கொண்டிருந்தனர். அது அவர்களுக்குள் நடந்ததால் வெளியே யாருக்கும் கேட்கவில்லை.

ஆனால் சாகித்யா ருத்ரன் அருகில் செல்லும் போது அவர்கள் பேசிய ஒரு சில வார்த்தைகள் காதில் விழுந்தது ருத்ரனும் அந்தக் கூட்டத்தில் ஒருத்தன் போல இருக்குமோ என்று எண்ணிக் கொண்டிருந்த நேரத்தில் சாகித்யாவின் ஷால் காற்றில் பறந்து ருத்ரன் காரில் மாற்றிக்கொண்டது. ஆனால் அதை ருத்ரன் தான் பிடித்து இழுத்தான் என்று நினைத்தவள் தன்னை மறந்து ஒரு கோவத்தில் அறைந்து விட்டாள் அவள் எதற்கு அடித்தாள் என்று யோசித்த ருத்ரன் பின்புதான் ஷால் வண்டியில் மாட்டி இருப்பதை பார்த்தான் அவன் பார்வை போன திசையை பார்த்த சாகித்யா அதிர்ந்து விட்டாள் தான் தவறு செய்து விட்டோம் என்பதை உணர்ந்தவள் ருத்ரனை நிமிர்ந்து பார்த்தாள். அவன் கண்ணில் இருந்த கொலைவெறியில் பயந்துபோய் சாலை பிடுங்கிக் கொண்டு ஓடிவிட்டாள்.

அவள் சென்ற பிறகு தன் பக்கத்தில் நின்று பேசிக்கொண்டு இருந்தவர்களை பார்த்த ருத்ரன் அவர்களை அடி வெளுத்து விட்டான். ஆனால் இதைப் பார்க்காமல் சாகித்யா ஓடியே விட்டாள் இதை தன் தோழிகளிடம் கூறியபோது அனைவரும் இனி பாக்கும்போது மன்னிப்பு கேட்டு விடு என்று முடித்து விட்டனர். இங்கே விக்னேஷ் "மச்சான் விடு உன்ன அடித்ததை யாரும் பாக்கல இவனுங்களை நீ இதுவரைக்கும் அடிச்சது போதும்" என்று கூறினான்.

ருத்ரன் "இல்ல மச்சான் அவ யோசிக்காம அடிச்சது கூட எனக்கு பெருசா தெரியல இவனுங்க மாதிரி அசிங்கமா பேசுற ஒரு சில ஜென்மங்கள் இருக்கறதுனால தான் எல்லாரும் நம்மள மாதிரி நல்லவர்களையும் தப்பா நினைக்கிறார்கள் அவ அங்க இருந்து வரும்போது என்ன சைட் அடிச்சிட்டு தான் வந்தா பக்கத்தில் வரும்போது இவனுங்க பேசினதும் ஷால் மாட்டிக்கிட்டத வச்சுதான் என்ன தப்பா நெனச்சிட்டு போறா ஆனாலும் இதுக்கு அவ பதில் சொல்லியே ஆகணும்" என்று கூறிவிட்டு தன் நண்பர்களை அழைத்துக்கொண்டு கிளம்பிவிட்டான்.

பக்கத்தில் கேட்ட வீட்டின் காலிங்பெல் சத்தத்தில் தான் இருவரும் தங்கள் நினைவை ஒதுக்கிவிட்டு சாப்பிட ஆரம்பித்தனர். அவர்களை அழைக்க வந்தது சக்தி மற்றும் சத்யா இருவரும் இவர்கள் சாப்பிட்டு கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு அமைதியாக அமர்ந்துவிட்டனர். அமைதியாக சாப்பிட்டு முடித்த ருத்ரன் எழுந்து சக்தி மற்றும் சத்யாவிடம் பேசிக்கொண்டிருந்தான்.

சக்தி "மச்சான் என் தங்கச்சி உங்கள அடிச்சத நீங்களும் மறந்து இருக்க மாட்டீங்கன்னு நினைக்கிறேன் ஆனா தயவு செஞ்சு அந்த கோபம் எதையும் அவ கிட்ட காட்டாதீங்க உண்மையாவே அன்னைக்கு அவ உங்கள ரொம்பநேரம் ரசித்து பார்த்து கொண்டுதான் இருந்தா" என்று கூறினான்.

சத்யா "ராஜி மேலே இருக்கும் கோபத்தையும் இவ கேட்ட காமிகாதிங்க அவ சின்ன பொண்ணு எங்க எல்லாருக்குமே அவ தங்கச்சி தான் அவ கஷ்டப்பட்டா எங்களால் தாங்க முடியாது" என்று கூறினான்.

அவர்கள் இருவரும் கூறியதைக் கேட்ட ருத்ரன் சிரித்துக் கொண்டே "கண்டிப்பா எந்தவித கோபத்தையும் அவ மேல காமிக்க மாட்டேன் ஆனால் ஒரு சில நேரத்துல கோபமா இருந்தா தான் உங்க தங்கச்சியை கரெக்டா வாழ வைக்க முடியும் இல்லனா உங்க தங்கச்சி இன்னொருத்தி இருக்காளே அவ வந்து என்னை கேட்டா இவ விட்டு கொடுத்துவிட்டு போய்ட்டே இருப்பா அதை என்னால ஒத்துக்க முடியாது அதனால அதுக்காக ஒரு சில வேலைகள் செய்யத்தான் போறேன்" என்று கூறினான்.

அவன் கூறியதை பொறுமையாக கேட்ட சக்தி "சரி மச்சான் எதுக்காக இவளைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு சொன்னிங்க உங்களோட நல்ல குணத்துக்காக தான் அவ வேண்டாம்னு சொல்லிடுவாளோன்னு நாங்க பிளான் பண்ணி கல்யாணம் பண்ணி வச்சோம் ஆனா யார் சொல்லி நீங்க உங்க வீட்ல எல்லாரும் இவளை கல்யாணம் பண்ணி வைக்க சொல்லி கேட்டீங்க" என்று கேட்டான்.

ருத்ரன் "இது எல்லாத்துக்கும் காரணம் என்னோட தங்கச்சி சாதனாதான் அவ தான் உங்க தங்கச்சி தான் எனக்கு சரியா இருப்பான்னு முடிவு பண்ணி சொன்னது அதுமட்டுமில்லாம உங்களுக்கு இன்னும் நிறைய சந்தேகம் இருக்கும் அது எல்லாத்தையும் நான் தெளிவா உங்களுக்கு அப்புறமா சொல்றேன்" என்று கூறினான்.

அவர்கள் இருவரும் சரி என தலையசைத்த நேரம் சாகித்யா உணவை முடித்து வந்து சேர்ந்தாள் இவர்கள் இருவரையும் பார்த்தவள் ஓடிவந்து அணைத்துக் கொண்டாள் அவளை பதிலுக்கு அணைத்து கொண்டவர்கள் "சரி கிளம்பு நம்ம வீட்டுக்கு போகலாம் இரண்டு நாள் அங்க தான் இருக்கப் போறே எவ்வளவு எங்கள பாடு படுத்த முடியுமோ அவ்வளவு படுத்தி எடுத்துக்கோ" என்று கூறினான். அவர்கள் இருவரும் கூறியதை கேட்டவள் "கண்டிப்பா நீங்க நிறைய பாடுபட வேண்டி இருக்கு எல்லாத்தையும் வீட்ல வந்து மொத்தமா செய்கிறேன்" என்று பதிலுக்கு அவர்களை அடித்து கொண்டே கூறினாள். இதை மற்றவர்கள் சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.

பின்பு அனைவரிடமும் கூறி விட்டு மறுவீடு கிளம்பி சென்றனர் செல்லும் வழியில் இந்த திருமணம் எவ்வாறு நடந்தது என்று தங்கள் எண்ண அலைகளை பின் நோக்கி நகர்த்திக் கொண்டே சென்றனர்.

அன்று சாகித்யா ருத்ரன் பிரச்சினை முடிந்தவுடன் சாகித்யா கல்லூரிக்கும் ருத்ரன் வீட்டிற்கும் சென்றனர். இரண்டு நாட்கள் எந்தவித மாற்றமும் இல்லாமல் சென்றது சாகித்யா விடுமுறைக்காக வீட்டிற்கு கிளம்பி சென்றாள். அவள் சுட்டிப் பெண் என்பதால் வீட்டிற்குள் குதித்துக் கொண்டே சென்றவள் அனைவரையும் பிடித்து கன்னத்தில் முத்தம் வைத்துவிட்டு தனக்கு பிடித்த உணவுகளை தன்னுடைய தாயிடம் சமைக்க சொல்லிவிட்டு அறைக்கு சென்றுவிட்டாள்.

அந்த வீட்டில் ராஜி தவிர அனைவருமே அவளுடன் மிகவும் நெருக்கம் ஆனால் ஏனோ ராஜிக்கும் அவளுக்கும் பெரிதாக நல்ல உறவு இருந்ததில்லை ஆனால் அதை அவள் பெரிதாக எடுத்துக் கொண்டதும் இல்லை நன்றாக தூங்கி எழுந்து உட்கார்ந்தபோது அவள் அறைக்குள் சக்தி சத்யா பாலா மூவரும் நுழைந்தனர். அவர்கள் மூவரும் வந்ததை வைத்தே ஏதோ விஷயம் உள்ளது என்பதை புரிந்து கொண்ட சாகி "சொல்லுடா எல்லாரும் சேர்ந்து வந்து இருக்கீங்க என்ன விஷயம் ஏதாவது லவ்வு பண்ணிட்டியா வீட்ல எல்லார்கிட்டயும் பேசி சம்மதம் வாங்கணுமா" என்று கேட்டாள்.

சக்தி அவள் தலையில் கொட்டி விட்டு ஒரு புகைப்படத்தை காட்டி "இதில் இருப்பவரை தான் ராஜிக்கு மணமுடிக்க மாப்பிள்ளை பார்த்து இருக்கிறோம் எங்கள் அனைவருக்கும் பிடித்திருக்கிறது மாப்பிள்ளை சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்க்கிறார் உடன் பிறந்தது ஒரு தங்கை மட்டுமே கை நிறைய சம்பளம் நல்ல குடும்பம் ராஜி வாழ்க்கை நன்றாக இருக்கும். நாளை மாலை அவர்கள் பெண் பார்க்க வருகிறார்கள் அவர்களுக்கும் பிடித்திருந்தால் நேரடியாக நிச்சயதார்த்தம் அடுத்து கல்யாணம்தான்" என்று கூறினான்.

போட்டோவை பார்க்காத சாகி மிகவும் சந்தோஷமாக "ஐ ஜாலி நம்ம வீட்டில் ஒரு விஷேஷம் நடக்கப்போகுது எவ்வளவு என்ஜாய் பண்ண முடியுமோ அவ்வளவு என்ஜாய் பண்றோம் எனக்கு பத்து டிரஸ் வேணும் அப்புறமா நான் சொல்ற சாப்பாடு ஐட்டம் எல்லாம் போடணும்" என்று லிஸ்ட் எழுத ஆரம்பித்தாள்.

அதைப்பார்த்து பாலா "அடியே லூசு மொதல்ல போட்டோவ பாரு அதுக்கப்புறம் மத்ததெல்லாம் எழுது" என்று கூறினான்.

என்று பல்லைக் காட்டி விட்டு போட்டோவை பார்க்க ஆரம்பித்தாள் போட்டோவை பார்த்து அவள் ஐயோ அண்ணா என்று கத்தி தான் செய்த அனைத்தையும் கூறினாள் அதைக் கேட்ட மற்ற மூவருக்கும் அடக்கமாட்டாமல் சிரிப்பு வந்துவிட்டது. ஆனால் அவர்களுக்கு ருத்ரன் மேல் மரியாதை வந்தது என்றால் அவன் தப்பும் செய்யவில்லை என்பதற்காக அந்த இடத்திலேயே எவ்வளவு அசிங்க படுத்தி இருக்கலாம் ஆனால் அதை செய்யாமல் தன்மையாக நடந்து கொண்டது அவன் மேல் ஒரு நல்ல மதிப்பை உருவாக்கியிருந்தது. ஆனால் சாகித்யா தான் அவனை நினைத்து பயந்தாள்.

அவர்கள் மூவரின் சிரிப்பு சாகித்யாக்கு கடுப்பாகியது அவர்கள் மூவரையும் மொத்து மொத்து மொத்தி எடுத்தாள். ஆனால் அதற்கு சிறிதும் அலட்டிக்கொள்ளாத சத்யா "கண்டிப்பா அவர்தான் இந்த வீட்டு மாப்பிள்ளை அவர் இந்த வீட்டுக்கு வந்தால் தான் நீ கொஞ்சமாக அடக்கி வாசிப்பாய் அதனால் நாளைக்கு ரெடியாக இரு அவர்கள் அனைவரும் வருகிறார்கள்" என்று கூறிவிட்டு வெளியே சென்று விட்டனர்.

உள்ளுக்குள் அவன் தனக்கு மாமனாக வருவது பயமாக இருந்தாலும் தனக்கு கணவனாக வராமல் இருப்பதே பெரிய விஷயம் என்று எண்ணிக்கொண்டாள் ஆனால் அவன் தான் அவளது கணவன் என்று ஏற்கனவே எழுதி வைக்கப் பட்டது அவளுக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை.

அதே நேரம் வீட்டில் ருத்ரன் கையில் பெண்ணின் போட்டோவை கொடுத்தனர் அதைப் பார்த்தவன் முகத்தில் சிறு புன்னகை பரவியது அதைப் பார்த்த அனைவர் முகத்திலும் நிம்மதியாக இருந்தது அதன் பிறகு அனைவரும் மறுநாள் பெண்ணைப் பார்க்கச் செல்ல முடிவு செய்தனர். ருத்ரன் குடும்பத்தைப் பொருத்தவரையில் தன் வீட்டிற்கு வரும் மருமகள் தங்கள் வீட்டின் பணத்தின் மதிப்பை தெரிந்து வரக்கூடாது ஏழையாக இருந்தாலும் மகிழ்ச்சியாக வாழ்பவள் இருக்க வேண்டும் அதனால் தான் தங்கள் படத்தின் அளவை கூறாமல் சாதாரண நடுத்தர வர்க்கத்தை விட கொஞ்சம் வசதியானவர்கள் என்ற ரீதியில் கூறி வைத்திருந்தனர்.

மறுநாள் எந்தவித ஆரவாரமும் இல்லாமல் அமைதியாக விடிந்தது மதியம் வரை வழக்கமான வேலைகளில் இயங்கி விட்டு 3 மணி அளவில் மாப்பிள்ளை வருவதால் அதற்கு தேவையான அனைத்து வேலைகளையும் பார்க்க ஆரம்பித்தனர் சாகித்யா வீட்டில் இருப்பவர்கள் சரியாக நான்கு மணியளவில் ருத்ரன் குடும்பத்தினர் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.

ருத்ரனை நினைத்து பயத்தில் இருந்ததால் வெளியே வந்திருப்பவர்கள் யாரையும் சாகித்யா கண்டு கொள்ளவில்லை ஆனால் ராஜி கிளம்புவதற்கு தாமதமானதால்
வந்திருப்பவர்கள் அனைவருக்கும் டீ மற்றும் சிற்றுண்டி சாகித்யா மூலமாக கொடுத்தனுப்பினார். முதலில் செல்ல மாட்டேன் என்று அடம் பிடித்த அவள் பின்பு காரணம் கேட்டால் என்ன சொல்வது என்று புரியாமல் அமைதியாக கொண்டு சென்றாள். வந்தவர்கள் அனைவருக்கும் அவள் ராஜியின் தங்கை என்று தெரிந்ததால் கொண்டுவந்து கொடுத்ததை அமைதியாக எடுத்துக்கொண்டனர். சாகித்யா யாரையும் நிமிர்ந்து பார்க்காமல் அனைத்தையும் கொடுத்து விட்டு உள்ளே சென்று விட்டாள்.

அதன்பிறகு ராஜி வர அனைவருக்கும் திருப்திகரமாக இருந்ததால் அன்றே திருமணத்தை முடிவு செய்தனர் சரியாக ஒரு மாதத்தில் நிச்சயம் வைத்துக் கொள்வதாகவும் மூன்று மாதத்தில் திருமணம் வைத்துக் கொள்வதாகவும் முடிவு செய்யப்பட்டது. ருத்ரன் மற்றும் ராஜி இருவருக்கும் தேவையென்றால் அலைபேசி எண் மாற்றிக்கொள்ள கூறினார்கள் ஆனால் இருவரும் பெரிதாக பதில் ஈடுபாடு காட்டாததால் பெரியவர்களும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

திருமணம் முடிவானது கேட்டு சாகித்ய தான் பயந்து வாழ ஆரம்பித்தாள். இப்படியே அவளும் அடுத்து பத்து நாட்களில் கல்லூரிக்கு சென்று விட பார்த்த எதை பற்றியும் கவலைப்படாமல் அமைதியாக படிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தாள் நிச்சயதார்த்த நான் நெருங்க இவள் வீட்டிற்கு செல்லாமல் கல்லூரியிலேயே இருக்க முடிவு செய்தாள் ஆனால் வந்தே ஆகவேண்டும் என்று வீட்டிலிருந்து செய்தி வந்ததால் வேறு வழியில்லாமல் சென்றாள்.

நிச்சயதார்த்தம் நடந்த போது ஒரு தங்கையாக அவள் செய்ய வேண்டிய கடமை அனைத்தையும் செய்துவிட்டு மறுபடியும் கல்லூரிக்கு வந்து விட்டாள். அதன்பிறகு திருமணம் வரை எந்தவித பிரச்சினையும் இல்லாமல் அவரவர் வேலையை அவரவர் இருந்தனர் ஆனால் ரூத்ரன் மற்றும் ராஜி இருவரும் பேசுகிறார்களா என்று பார்த்தால் அது யாருக்கும் புரியாத புதிராகவே இருந்தது. திருமணம் இவளது விடுமுறையில் வைக்கப்பட்டிருந்ததால் வேறு வழியில்லாமல் வீட்டிற்கு வந்து சேர்ந்தாள்.

திருமணத்திற்கு அவள் ஆசைப்பட்டபடி அவளுக்கு தேவையான அனைத்தையும் வீட்டில் செய்து வைத்திருந்தனர் திருமணத்திற்கு முந்தைய நாள் பெரிதாக எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லை மணமகன் வீட்டில் இருந்து மாலை மற்றும் இதர பொருள்களை கொண்டு வந்து வைத்திருந்தனர் திருமணத்திற்கு தேவையான முகூர்த்த பட்டு அனைத்தையுமே ருத்ரன் வீட்டில் இருப்பவர்கள் தான் தேர்வு செய்தனர். அந்த மாதிரி நடந்த சில நிகழ்வுகள் ராஜிக்கு அந்த குடும்பத்தின் மேல் ஒரு வெறுப்பு வந்திருந்தது ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அமைதியாக இருந்திருந்தாள் அவள் வீட்டில் எப்பொழுதுமே தான் அமைதி என்று காட்டிக் கொள்வதால் அதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

அன்றிரவு மெஹந்தி அனைத்தும் வைத்து விட்டு பெண்கள் அனைவரும் தூங்க சென்றனர் சாகித்யா ஆரத்தி எடுக்க வேண்டியது இருந்ததால் அதற்கு தேவையான அனைத்தையும் ரெடி செய்து விட்டு உறங்க சென்றாள்.

திருமணம் எவ்வாறு நடந்தது என்பதனை அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம் கூடவே ராஜி எதற்காக வீட்டை விட்டு வெளியே சென்றாள் என்பதற்கான காரணத்தையும் அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்.

தங்களுடைய கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கும் உங்கள் தோழி என்னுடைய பதிவுகளில் ஏதேனும் பிழைகள் இருந்தால் மன்னித்துக் கொள்ளவும்.