• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

என்னுள் நிறைந்தவள் நீயடி 20

Aashmi S

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
156
100
43
Kanyakumari
கல்லூரி தொடங்கி ஒரு வாரம் எந்தவித மாற்றமும் இல்லாமல் சென்றுகொண்டிருந்தது. அந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை எப்பொழுதும் வரும் நண்பர்கள் வேலை காரணமாக வரமுடியாமல் போனது. அதனால் தாமதமாகவே மூவரும் எழுந்து கீழே வந்தனர்.



எப்பொழுதும் சமையல் வேலைகளில் பெண்கள் இருவரும் கவனித்துக் கொள்வதால் ருத்ரன் எப்போதாவது சிறு சிறு உதவிகள் செய்வான். அன்று சாதனா தன் அண்ணனிடம் "அண்ணா நீ வெயிட் பண்ணு நாங்க ரெண்டு பேரும் காலையில சப்பாத்தி பன்னீர் பட்டர் மசாலா செஞ்சிட்டு உன்னை கூப்பிடுகிறோம்" என்று கூறினாள்.



இவர்கள் ருத்ரனை சமையலறையில் வரவிடாமல் செய்தாலே கண்டிப்பாக ஏதோ ஒரு விஷயத்தைப் பற்றி பேசப் போகிறார்கள் என்பதை உணர்ந்த ருத்ரன், அவளை பார்த்து சிரித்துக் கொண்டு "கண்டிப்பா நான் அந்த பக்கம் வரல ஆனா இன்னைக்கு ஏதோ ஒரு சண்டை மட்டும் ரெடியா இருக்கு. அது எனக்கு நல்லாவே புரியுது இப்போ ரெண்டு பேரும் போய் அதுக்கு நல்ல ரெடி ஆகு" என்று கூறிவிட்டு தன்னுடைய லேப்டாப்பை எடுத்து மீதி இருந்த வேலையை பார்க்க ஆரம்பித்து விட்டான்.



தன் அண்ணன் தன்னை கண்டு கொண்டான் என்பதை உணர்ந்த சாதனா சிரித்துக்கொண்டே கிச்சன் புறம் சென்றாள். அங்கு ஏற்கனவே சாகித்யா சப்பாத்தி செய்வதற்கு மாவு பிசைந்து வைத்திருந்தாள். சாதனா உள்ளே வருவதைப் பார்த்த சாகித்தியா "என்ன உங்க அண்ணன் கண்டுபிடிச்சு ஏதாவது சொல்லி அனுப்பி இருப்பானே?" என்று கேட்டாள்.



சாதனா "ஏதோ விஷயம் இருக்குன்னு கண்டுபிடிச்சிட்டான். ஆனா என்ன விஷயம் இன்னும் கண்டு பிடிக்கல நம்ம கேக்குற விஷயத்துக்கு அண்ணா ஒத்துக்குவானா? எனக்கு என்னமோ ஒத்து கொள்வான் அப்படின்னு தோணல" என்று கூறினாள்.



சாகித்யா அவளைப் பார்த்து சிரித்துவிட்டு "இவ்வளவு நாள் உங்க அண்ணன் கூட இருந்து இருக்க அவன பத்தி உனக்கு தெரியாதா கண்டிப்பா ஒத்துக்க மாட்டான். ஆனால் சண்டைபோட்டு அடம்பிடித்தது ஒத்துக்க வைக்கனும்" என்று கூறினாள்.



இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருப்பது வேறு எதைப்பற்றியும் அல்ல இந்த ஒரு வாரம் ருத்ரன் இவர்களை காலையில் கல்லூரியில் விட்டுவிட்டு மாலை வீட்டிற்கு அழைத்து வந்து கொண்டிருந்தான். ஆனால் அவர்கள் இருவருக்கும் தனியாக ஸ்கூட்டியில் கல்லூரி செல்ல வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் அதை ருத்ரன் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ள மாட்டான் என்ற விஷயம் இவர்களுக்கு தெரிந்திருந்தது. அதனால் தான் எப்படியாவது அவளிடம் பேசி சம்மதம் வாங்க வேண்டும் என்று இருவரும் முடிவு செய்து கொண்டு பேசிக் கொண்டிருந்தனர்.



அதன்பிறகு காலை உணவு மூவருமாக சேர்ந்து சாப்பிட்டு முடித்தனர். சாப்பிட்டு முடிச்சு டிவி பார்த்து கொண்டிருந்த நேரத்தில் ருத்ரனை பார்த்த சாகித்யா "என்னங்க உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்" என்று ஆரம்பித்தாள்.



ருத்ரன் ஏற்கனவே இதை எதிர்பார்த்து இருந்ததால் அமைதியாக அவள் முகம் பார்த்து "என்ன பேசனும்" என்று கேட்டான்.



சாகித்யா "காலைல எங்க ரெண்டு பேரையும் காலேஜ்ல கொண்டு விட்டுட்டு உங்களுக்கு ஆபீஸ் போறது ரொம்ப கஷ்டமா இருக்கும். அதனால நீங்க எங்களுக்கு ஆளுக்கு ஒரு ஸ்கூட்டி கூட வாங்கித் தரவேண்டாம் ஒரு ஸ்கூட்டி வாங்கி தாங்க. நாங்க ரெண்டு பேரும் சேர்ந்தே பத்திரமா காலேஜ் போயிட்டு வந்திடுவோம்" என்று கூறினாள்.



அவள் கூறியதைக் கேட்ட ருத்ரன் ஒரு நிமிடம் யோசித்து விட்டு இருவர் முகத்தையும் பார்த்தான்.
அவன் யோசிப்பதை வைத்து சாதனா தன் அண்ணன் சம்மதம் தெரிவித்து விடுவான் என்று எண்ணிக் கொண்டிருக்க சாகித்யா "ஐயோ பயபுள்ள யோசிக்க வேற செய்கிறானே! உடனே சம்மதம் சொன்னா கூட பிரச்சனை இல்லை இவன் யோசிச்சா கண்டிப்பா ஒத்துக்க மாட்டானே" என்று எண்ணிக்கொண்டு அவன் முகம் பார்த்தாள்.



இருவரும் ஆவலாக தன் முகத்தை பார்ப்பதை பார்த்த ருத்ரன் சிரித்துக்கொண்டே "எனக்கு அப்படி ஒன்னும் கஷ்டமா இல்ல வழக்கமா போற மாதிரி நானே உங்களை கொண்டு விட்டுட்டு கூட்டிட்டு வரேன். என்னோட பொண்டாட்டி தங்கச்சி இரண்டு பேருக்கும் இது கூட செய்யாமல் நான் என்ன பெருசா வேலை செய்ய போறேன்" என்று அசராமல் சிரித்துக்கொண்டே அவர்களுக்கு ஆப்பு வைத்தான்.



சாதனா தன் அண்ணன் இவ்வாறு கூறியதைக் கேட்டு கடுப்பாகி கோபமாக கத்தினால், தன் அண்ணன் சம்மதிக்க மாட்டான் என்பதை உணர்ந்தவள். அவனிடம் கெஞ்ச ஆரம்பித்தாள் "அண்ணா ப்ளீஸ் எத்தனை நாளு நீயே எங்களுக்காக எல்லாம் செஞ்சிட்டு இருப்ப, நாங்களும் கொஞ்சமாவது தனியா போய் பழகணும் இல்ல அதனால ஸ்கூட்டி வாங்கி குடு. ஆனா நாங்க எந்தவித பிரச்சனையும் பண்ணாம ஒழுங்கா போயிட்டு ஒழுங்காக வருவோம்" என்று கூறினாள்.



தன் தங்கை தன்னிடம் கெஞ்சி பேசுவது கஷ்டமாக இருந்தாலும் அவர்களை தனியாக அனுப்ப ருத்ரன் மனம் இடம் கொடுக்கவில்லை, ஏன் என்றால் ருத்ரன் புகழ்பெற்ற தொழிலதிபர்களில் ஒருவன். எங்கிருந்து பிரச்சனை வரும் என்பது யாருக்கும் தெரியாது, அவர்கள் வீட்டில் மிகப் பெரிய சொத்து என்று கருதுவது இவர்கள் இருவரை தான். அதனால் எந்த ஒரு பிரச்சனை வந்தாலும் இவர்கள் இருவருக்கும் தான் வரும் என்பதை உணர்ந்து இருந்ததால், அவனால் சம்மதம் தெரிவிக்க இயலவில்லை.



அதனால் அமைதியாக "சாது புரிஞ்சுக்கோ அண்ணா ஒரு விஷயம் பண்ணா கண்டிப்பா அது உங்க நல்லதுக்கு தான் இருக்கும். உங்களை தனியா விட எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல ஆனால் சில சூழ்நிலை என்ன உங்களை தனியா விட அனுமதிக்க விடவில்லை. அதனால ஆர்குமெண்ட் பண்ணாம ஒழுங்கா சொல்றதை கேளு" என்று பொறுமையாக கூறினான்.



சாதனா பேசினால் சம்மதித்து விடுவான் என்று எண்ணிய சாகித்யா இவ்வளவு நேரம் அமைதியாக இருந்தாள். ஆனால் அவன் சம்மதிக்காமல் போகவே அவனைப் பார்த்து "அப்படி ஒன்னு இங்க இருக்கு பெருசா பிரச்சினை வராது. இப்படி வீட்டுக்குள்ள பொத்தி பொத்தி வச்சா தான் பிரச்சனை வரும், ஓவரா எங்களை பாதுகாக்க நினைச்சு இப்படி அடைத்து வைக்க நினைக்காத. ஒழுங்கா எங்களுக்கு ஒரு ஸ்கூட்டி வாங்கி கொடு நாங்க காலேஜ் போயிட்டு காலேஜ் வருகிறோம். இங்க இருந்து போறதுக்கு பத்து நிமிஷம்தான் ஆகும் அந்த பத்து நிமிஷத்துல எங்களுக்கு எதுவும் ஆகாது ஏற்கனவே ஸ்கூட்டி எல்லாம் சூஸ் பண்ணி வச்சாச்சு. முடிஞ்சா நீ காசு பே பண்ணு இல்லனா சொல்லு என்னோட நகை ஏதாவது அடகு வச்சு அந்த ஸ்கூட்டியை வாங்குகிறோம்" என்று கோபமாக கூறி விட்டாள்.



அவள் கூறியது ருத்ரன் மனதில் கோபத்தை உண்டு பண்ணியது. ஆனால் இப்போது ஏதாவது பேசினால் அதற்கு வேண்டுமென்றே எதிர்வாதம் செய்வாள் என்பதை உணர்ந்து கொண்டவன், அவளைப் பார்த்து "உன் புருஷன் ஒன்னும் அவ்வளவுக்கு பணம் இல்லாமல் பிச்சை எடுக்கும் நிலைமையில் இல்லை. நகையை அடகுவைத்து ஸ்கூட்டி வாங்கும் நிலமை இன்னும் நமக்கு வரவில்லை நான் ஏற்கனவே உங்கள் இருவருக்கும் தனித்தனியாக ஸ்கூட்டி வாங்க முடிவு செய்து ஆடர் கொடுத்துவிட்டேன். இன்று மாலை அது வந்து சேர்ந்துவிடும் ஆனால் நீங்கள் கல்லூரி செல்ல இப்போது என்னால் அனுமதி வழங்க முடியாது" என்று கோபமாக கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டான்.



சாதனம் கோபமாக போகும் தன் அண்ணனை கவலையாக பார்த்தாள். அதை பார்த்த சாகித்யா "ரொம்ப பீல் பண்ணாத நான் ஒன்றும் பெரிதாக கோபப்பட்டு சொல்லவில்லை ஏற்கனவே ஸ்கூட்டி வாங்க வேண்டும் என்று அடம் பிடித்தவள், இப்போது ஏற்கனவே அவன் வாங்குவதற்கு முடிவு செய்திருக்கிறான் என்பது தெரிந்தவுடன் கல்லூரி செல்வதற்கு அடம் பிடிப்போம் என்பதை தெரிந்தவன், தப்பித்து ஓடிவிட்டான். இன்னும் ஒரு வாரம் தான் உன்னோட அண்ணனுக்கு டைம் அதுக்குள்ள அவனாக நமக்கு பெர்மிஷன் தந்தா நல்லது இல்லனா அவ்வளவுதான்" என்று கூறினாள்.



சாதனா அவளைப்பார்த்து "என்ன எங்க அண்ணா இருக்கும் போது மரியாதையா பேசுற அவங்க போனபிறகு இதுவே மரியாதை இல்லாம பேசுற" என்று கேட்டாள்.


சாகித்யா சிரித்துக்கொண்டு "அதெல்லாம் அப்படித்தான் அதை பெரிதாக கண்டு கொள்ளாதே. இப்ப வா மதியம் சமையல் செய்ய போவோம்" என்று கூறி அவளையும் அழைத்துக்கொண்டு சென்றுவிட்டாள்.


அவள் எண்ணியது போல் தன் ரூமுக்கு சென்ற ருத்ரன் "இது குட்டி பிசாசு ஓவராத்தான் போகுது இதை எப்படி சமாளிக்க அப்படின்னு தனியா கிளாஸ் போகனும் போல. இன்னும் கொஞ்ச நேரம் இருந்த இருந்தா என்னோட வாயாலேயே ஸ்கூட்டியில் போக சம்மதம் வாங்கி இருக்கும் இந்த மூஞ்ச பார்த்தாலே சுத்தமா மூளை வேலை செய்ய மாட்டேங்குது அவளை ரசிக்க தான் தோணுது" என்று புலம்பிக்கொண்டு அங்கேயே பாதியில் விட்டு வந்த வேலையை பார்க்க ஆரம்பித்தான்.


மறக்காமல் யாரோ ஒரு சிலருக்கு தொடர்பு கொண்டு பேச வேண்டிய விஷயங்கள் அனைத்தையும் பேசிவிட்டு வைத்துவிட்டான். அதேபோல் ஸ்கூட்டி இன்று வீட்டிற்கு வந்தால் நிச்சயமாக இவர்கள் நாம் சொல்வதை கேட்க மாட்டார்கள் என்று எண்ணிக்கொண்டு நான் சொல்லும்போது ஸ்கூட்டியை வீட்டில் கொண்டு வந்து விட்டால் போதும் என்று போன் செய்து கூறிவிட்டான்.


அடுத்த ஒரு வாரம் இந்த விஷயத்தை பற்றி வீட்டில் யாரும் பெரிதாக பேசிக் கொள்ளவில்லை. ருத்ரன் அலுவலகத்தில் அதிகமாக வேலை இருந்ததால் வீட்டிற்கு வந்த பிறகும் அவன் வேலையை பார்த்துக்கொண்டே இருந்தான். அதனால் அவனை இருவரும் தொந்தரவு செய்யாமல் தங்களுடைய வேலைகளை மட்டும் பார்த்துக்கொண்டிருந்தனர். சாகித்யா ஒரு வாரம் கடந்த நிலையில் ஸ்கூட்டி பற்றி அவனிடம் கேட்க நினைக்கும் போது அவன் ஏதோ மும்முரமாக வேலை பார்த்து கொண்டிருப்பதை பார்த்து அவன் வேலை முடிந்த பிறகு கேட்டுக் கொள்ளலாம் என்று அமைதி ஆகிவிட்டாள்.



பத்து நாட்கள் எந்த வித பிரச்சனையும் இல்லாமல் சென்ற நிலையில் சாதனா கல்லூரி வந்தது முதலில் அவளை ஒருவன் மனதாரக் காதலித்துக் கொண்டிருந்தான். அவன் எம்பிஏ இரண்டாம் வகுப்பு படிக்கும் சரவணன். இது கடைசி வருடம் என்பதால் இப்போது அவளிடம் தன்னுடைய காதலை கூறவில்லை என்றால் தன்னுடைய காதல் சொல்லப்படாமல் போய்விடுமோ என்ற பயத்தில், அன்று மதியம் சாதனா சாகித்யா இருவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் இடத்தை தன் நண்பர்களுடன் அடைந்தான்.



தங்கள் முன்னே ஏதோ நிழல் தெரிவதை பார்த்த இருவரும் நிமிர்ந்து பார்த்தனர் . ஏன் என்றால் இவர்கள் தோழிகள் அனைவரும் விடுதியில் தங்கி இருப்பதால் அவர்கள் மதியம் விடுதிக்கு சாப்பிட சென்று விடுவார்கள். இதனால் இவர்கள் இருவர் மட்டுமே தனியாக அமர்ந்து சாப்பிடுவார்கள்.



நிமிர்ந்து பார்த்த இருவரும் தங்கள் முன்னே நிற்கும் சீனியர் மாணவர்களை எதற்காக இவர்கள் இங்கே வந்து இருக்கிறார்கள் என்று பார்த்தனர். அவர்கள் இருவரும் தங்களை பார்ப்பதை பார்த்த சரவணன் சாதனாவை பார்த்து "உன்கிட்ட கொஞ்சம் தனியா பேசணும் கொஞ்சம் அந்தப் பக்கம் வர முடியுமா?" என்று கேட்டான்.


அவனுடைய பார்வையில் தெரிந்த காதலை வைத்து என்ன பேசப் போகிறான் என்பதை உணர்ந்து கொண்ட இருவரும் மற்றவர் முகத்தை பார்த்தனர்.



சாதனா சரவணனை பார்த்து" இவளை விட்டுவிட்டு பேசுற அளவுக்கு என் வாழ்க்கையில எந்த ஒரு தனிப்பட்ட விஷயமும் இல்லை, அதனால நீங்க இங்கேயே சொல்லலாம் ஆனா என்ன சொல்ல விரும்புறீங்க?" என்று கேட்டாள். என்னதான் அவன் பார்வையை வைத்து புரிந்து கொண்டாலும் தான் ஏதாவது கேட்க போய் அவன் வேறு ஏதாவது மனதில் நினைத்து விடக்கூடாது என்று எண்ணி அவன் கூற விரும்புவதை கூறட்டும் அதன் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று அமைதி காத்தாள்.



சாதனா கூறுவதை வைத்து சாகித்யா அவள் வாழ்வில் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்து கொண்ட சரவணன் ஒரு மெல்லிய புன்னகையை சிந்திவிட்டு, சாதனாவை பார்த்து பேச ஆரம்பித்தான் "எனக்கு உன்ன ரொம்ப பிடிச்சிருக்கு அது இப்ப இருந்து இல்ல நீ பஸ்டியர் காலேஜ்ல ஜாயின் பண்ணும்போதே எனக்கு உன்ன ரொம்ப பிடிச்சு இருந்துச்சு. நானும் அன்னைக்கு தான் இங்க ஃபர்ஸ்ட் இயர் ஜாயின் பண்ணுனேன். என்னமோ தெரியல உன்னை பார்த்ததுல இருந்தே எனக்கு நீதான் எனக்கானவ அப்படின்னு தோன ஆரம்பிச்சிருச்சு. இந்த ரெண்டு வருஷம் உனக்கு தெரியாம உன்ன பார்த்துட்டு இருந்து இருக்கேன், இந்த செமஸ்டர் முடிஞ்ச பிறகு நாங்க காலேஜுக்கு வரப்போவது கிடையாது. அதுவும் இன்னும் ஒரு வாரம் தான் அங்க வருவேன் அதுக்கப்புறம் ப்ராஜெக்ட் காக வெளியே போயிருவோம் அதனால என்னோட காதல உனக்கு சொல்லி விடலாம் அப்படின்னு சொல்லி தான் இப்போ சொல்ல வந்தேன். நான் ஏற்கனவே ஒரு கம்பெனில வேலைக்கு அப்ளை பண்ணி விட்டேன் அங்கு எனக்கு வேலையும் கிடைச்சிடுச்சு. எஸ்ஆர் குரூப் ஆஃப் கம்பெனிஸ் தான் அது கண்டிப்பா உன்னைய வாழ்க்கையில நல்லபடியா பார்த்துக் கொள்வேன். நீ யோசிச்சு உன்னோட முடிவ சொல்லு" என்று கூறினான்.



அவன் குறிப்பிட்டு கூறிய கம்பெனி பெயரை கேட்ட சாதனா சாகித்யா இருவரும் ஒரு நிமிடம் அதிர்ந்து பின்பு சகஜமான இருந்தனர். ஏனென்றால் அதை முழுவதுமாக நிர்வாகித்து கொண்டிருப்பது ருத்ரன் அவனுக்கு துணையாக இருப்பது அசோக் மற்றும் விக்னேஷ். ஆனால் அது சாதனா உடைய குடும்பத்தின் கம்பெனி என்று தெரியாமலேயே அங்கே வேலைக்கு சேர்ந்ததால் உன்னை நன்றாக கவனித்துக் கொள்வேன், என்று கூறிய சரவணனை பார்க்க இருவருக்கும் சற்று பாவமாகத்தான் இருந்தது. ஆனால் அவன் கண்களில் தெரிந்த உண்மை நேர்மை இரண்டும் அவன் வாழ்வில் நல்ல படியாக வாழ்வதற்கு வழி வகுக்கும் என்பதை இருவரும் உணர்ந்து கொண்டனர்.



சாதனா சாகித்யா முகத்தைப் பார்த்துவிட்டு நிமிர்ந்து சரவணனைப் பார்த்து பேச ஆரம்பித்தாள் "உன்கிட்ட நான் தெளிவா ஒரு விஷயம் பேசுறேன். என்னோட முடிவு அதுல தான் இருக்கு ஆனா அந்த முடிவு என்னவா இருந்தாலும் அத நெனச்சு நீங்க வருத்தப்பட்டு உங்களோட வாழ்க்கையே இதோட விடக்கூடாது மேலே மேலே முன்னேறி போயிட்டே இருக்கணும்" என்று கூறி அவன் முகம் பார்த்தாள்.



அவள் முடிவு ஓரளவுக்கு இதிலேயே தெரிய ஆரம்பித்தது சரவணனுக்கு இருந்தாலும் அவள் கூறுவதை முழுமையாக கேட்பதே நல்லது என்று நினைத்து அமைதி காத்தான். பின்பு "நீ சொல்ற மாதிரி எந்த முடிவாக இருந்தாலும் அதை நினைச்சு நான் வருத்தப்பட்டு, ரொம்ப சந்தோஷப்பட்டு என் வாழ்க்கையே இதோட விட்டு விட மாட்டேன். கண்டிப்பா இதுல இருந்து வெளியே வந்து போய்கிட்டே இருப்பேன்" என்று கூறினான்.



சாதனா "நான் மூணு வருஷமா ஒருத்தர உயிருக்கு உயிரா காதலிக்கிறேன் என்னோட வீட்டிலேயும் இந்த விஷயம் தெரியும். அவர் வேறு யாரும் இல்லை என்னோட அண்ணனோட ஃபிரண்ட் எங்களுடைய காதலுக்கு வீட்ல எல்லாரும் சம்மதம் சொல்லிட்டாங்க. நான் படிச்சு முடிச்ச பிறகு எங்களுக்கு கல்யாணம் இருக்கும் அதனால என்ன மன்னிச்சிடுங்க. அதே மாதிரி நீங்க சொல்ற எஸ் ஆர் குரூப் ஆப் கம்பெனி எங்களோடது தான். அதை மொத்தமா பார்த்துக்கொள்வது என்னோட அண்ணன் தான் கூட ஹெல்ப் பண்றது நான் லவ் பண்ற அசோக் அப்புறம் எங்க அண்ணா ஓட இன்னொரு பிரின்ட் விக்னேஷ். இவ என்னோட அண்ணி சாகித்யா. இப்போ நான் சொல்றத வச்சு அசோக் ரொம்ப பணக்காரன் அதனால பணத்தை பார்த்து காதலிச்சேன் அப்படின்னு உங்களை யாரும் பிரைன் வாஷ் பண்ணிட கூடாது. ஏன்னா அசோக்கும் நீங்க சொல்ற மாதிரி ஒரு சாதாரண குடும்பத்துல இருந்து வந்தவன் தான். இப்போ அண்ணா கூட சேர்ந்து வேலை பார்க்கிறான் ஆனா மாச சம்பளம் தான் வாங்கி கிட்டு இருக்கான். இப்போ ஆறு மாசம் முன்னாடி தான் என்னோட அண்ணன் அப்புறம் அசோக் அப்புறம் விக்னேஷ் அண்ணா மூணு பேரும் சேர்ந்து பார்ட்னர்ஷிப் போட்டு புதுசா ஒன்னு ஆரம்பிச்சு இருக்காங்க. அதனால பணத்தைப் பார்த்து பழகும் பழக்கம் எங்களுக்கு கிடையாது. நீங்க வந்து பேசினது உங்களுடன் நேர்மை எல்லாமே எனக்கு பிடிச்சிருக்கு. ஆனா நான் ஏற்கனவே ஒருத்தரை விரும்புறன் நீங்க உங்களோட மனசை மாத்திகோங்க" என்று தெளிவாகக் கூறி அவன் முகத்தை பார்த்தாள்.




அவள் மறுத்து பேசியது சரவணனுக்கு கஷ்டமாக இருந்தாலும் அவளுடைய உண்மையான பின்புலம் அறிந்து அதிர்ச்சியானான். ஏனென்றால் ஒரு நாள் கூட அவள் இவ்வளவு பெரிய பணக்கார வீட்டுப் பெண் என்பது போல் நடந்து கொண்டதில்லை, அதேபோல் என்று கூறியதை கேட்டு இன்னும் அதிர்ச்சிக்குள்ளான். ஏனென்றால் அவர்கள் இருவரையும் இந்த கல்லூரி முழுவதற்கும் தெரியும் அவள் கூறிய விளக்கங்கள் அனைத்தும் உண்மையான தகவலாகவே இருக்க, இனி அவளை நினைத்து தன்னுடைய வாழ்க்கையை வீணாக்கி அவளையும் கஷ்டப்படுத்த கூடாது என்று எண்ணிக்கொண்டு அவளைப் பார்த்தான்.. அவனுக்கு ஒரு விதத்தில் மன நிம்மதியை தந்தது ஏனென்றால் தன்னுடைய நேர்மை அவளுக்கு பிடித்திருக்கிறது என்று என்னும் போது கண்டிப்பாக ஏதோ ஒரு நண்பன் என்ற உறவிலாவது அவளோடு இருப்போம் என்று எண்ணிக்கொண்டு அவள் முகத்தை பார்த்தான்.
சாதனா சாகித்யா இருவரும் அவன் கூறப்போகும் பதிலுக்காக அவன் முகத்தைப் பார்த்தனர். அதைப் பார்த்து சிரித்த சரவணன் "கண்டிப்பா என்னால இனி உன்னோட வாழ்க்கைக்கு தொந்தரவு இருக்காது ஆனால் ஒரு நல்ல நண்பனா உனக்கு நான் எப்பவுமே இருப்பேன். ஏதாவது உதவி தேவைப்பட்டால் என்கிட்ட தயங்காம கேளு நீங்க ரெண்டு பேருமே என்கிட்ட கேட்கலாம். உங்க ரெண்டு பேருக்குமே நான் ஒரு நல்ல பிரண்டா கண்டிப்பா இருப்பேன்" என்று கூறினான்.



அவன் கண்களில் தெரிந்த உண்மை அவன் இனி ஒரு நல்ல நண்பனாக இருப்பான் என்று இருவருக்கும் தெளிவாக உணர்த்தியது. சாகித்யா அவனைப்பார்த்து "சரவணா நீ இவ பின்னாடி சுத்தி அவள சுத்தி இருக்கிற யாரையும் கண்டுக்கவே இல்லை ஆனா நீ இவளை பார்க்க வரும்போதெல்லாம் ஒருத்தி உன்னை ரசித்து பார்த்து இருக்கிறா. நீ இவள எந்த அளவுக்கு லவ் பண்றியா அதே அளவுக்கு அவ உன்ன லவ் பண்றா அது யாருன்னு கண்டுபிடி பார்ப்போம்" என்று கூறினாள்.


சரவணனுக்கு இந்த தகவல் புதிது அவனுக்கு அப்படி யாரும் தன்னை காதலிப்பதாக தெரியவில்லை, அதனால் குழப்பமாக சாகித்யா முகம் பார்த்தான். அவன் குழப்பமாக இருப்பதை பார்த்து சாதனா, சாகித்யா இருவரும் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டு "உனக்கு இன்னும் பத்து நிமிடம் டைம் தரேன் அதுக்குள்ள அது யாருன்னு நல்லா யோசிச்சு கண்டுபிடிக்க கண்டு பிடிக்க முடியல என்றால் சாயங்காலம் வெயிட் பண்ணு, அது யாருன்னு சொல்லிட்டு வீட்டுக்கு போகிறோம் சரியா ஏன்னா இப்ப எங்களுக்கு பிரேக் டைம் இன்னும் பத்து நிமிஷம்தான் இருக்கு" என்று கூறி hi-fi போட்டுக் கொண்டு அவன் முகத்தைப் பார்த்தனர்.


அவனும் யோசிக்க ஆரம்பித்தான்.
சரவணன் அது யாரென்று கண்டுபிடிப்பான?
என்பதற்கான விடையை அடுத்த அத்தியாயத்தில் காண்போம் தங்களுடைய கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கும் உங்கள் தோழி என்னுடைய பதிவுகளில் ஏதேனும் பிழைகள் இருந்தால் மன்னித்துக் கொள்ளவும்.
உங்க யாருக்காவது சரவணனை காதலிப்பது யார் தெரியுமா தெரிஞ்சா கமெண்ட் பண்ணுங்க.