• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

என்னுள் நிறைந்தவள் நீயடி 3

Aashmi S

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
156
100
43
Kanyakumari
மறுநாள் காலை திருமணம் என்ற நிலையில் அனைத்து விதமான ஏற்பாடுகளையும் முடித்து விட்டு அனைவரும் தூங்க சென்றனர். சாகித்யா மனதில் "நாளையிலிருந்து அவன் எனக்கு மாமா ஐயோ ஆண்டவா என்ன வச்சு செய்றதுக்கு என்ன என்ன பண்ண முடியுமோ எல்லாம் பண்ணுவானே எப்படியாவது காலேஜ் முடிஞ்ச உடனே அங்கேயே ஏதாவது வேலை தேடிக்கிட்டு ஓடிப் போய் விட வேண்டும் இவன் மூஞ்சில மாட்டினோம் அவ்வளவுதான் என் வீட்டிலே இருக்கிறவங்களுக்கு கூட நான் இவ்வளவு பயந்தது கிடையாது. ஐயோ ஏன் ஆண்டவா எனக்கு இப்படி ஒரு சோதனை எப்படியாவது அவன்கிட்ட இருந்து நான் கல்யாணம் முடிஞ்சு போற வரைக்கும் என்னை காப்பாத்தி அப்படி மட்டும் நீ பண்ணா உனக்கு பத்து ரூபாய் காணிக்கை தருகிறேன்" என்று புலம்பிக்கொண்டே கடவுளிடம் வேண்டிக் கொண்டு தூங்க ஆயத்தமானாள்.

ஆனால் அந்தோ பரிதாபம் அவள் கஞ்சத்தனமாக பத்து ரூபாய் என்று கூறியதில் கடுப்பான கடவுள் எனக்கு அந்த பத்து ரூபாய் தேவை இல்லை வாழ்க்கை முழுவதும் அவருடனே இருந்து என்ஜாய் பண்ணி வாழ்வாயாக என்று அவளுக்கு ரிவீட் அடித்ததை அப்போது அவளுக்குத் தெரியவில்லை.

ராஜி தூக்கம் வராமல் வெறுமனே கண்களில் மூடி படுத்துக் கொண்டிருந்தாள் அவளுக்கு இந்த திருமணத்தில் முதலில் இருந்த ஈடுபாடு இப்போது சிறிதும் இல்லாமல் இருந்தது காரணம் ராஜி சிறுவயது முதலே அமைதி என்ற பெயர் வாங்கியவள் ஆனால் உண்மையில் அவள் அமைதி அல்ல அவளுக்கு அவள் நினைத்தது உடனே கிடைத்தாக வேண்டும் இல்லையென்றால் அமைதி என்ற போர்வையில் தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்துவது அவளுடைய இயல்பு.

அவர்கள் குடும்பத்தில் என்னதான் பணத்திற்கு பஞ்சம் இல்லாமல் இருந்தாலும் தேவையில்லாத செலவுகளை அவர்கள் தவிர்ப்பர் ஆனால் ராஜி அப்படி அல்ல பணம் வீணாக செலவழிக்க சிறிதும் அலட்டி கொள்ளாத குணம் கொண்டவள். எதுவாக இருந்தாலும் தன்னுடைய விருப்பமே முதலாவதாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவள். சாகித்யா பிறந்தபிறகு அனைவரும் அவளை தாங்குவது ராஜிக்கு பிடிக்காத காரணத்தினால் அவளிடமிருந்து ஒதுங்கி இருந்தாள். ஆனால் ஏதாவது ஒரு பொருள் சாகித்யாவிடம் இருப்பது தனக்கு வேண்டும் என்றால் அதை அவளிடமிருந்து எடுத்துக் கொள்வாள் முதலில் அவளுடைய குணம் சிறியவர்களுக்கு புரியாத புதிராகவே இருந்தது. போகப்போக அவள் தங்களிடம் அவளுடைய உண்மை சுயரூபத்தை காட்டுகிறாள் என்பதை அவர்கள் புரிந்து கொண்டனர். ஆனால் பெரியவர்கள் முன்னிலையில் அவள் நடித்து காரியம் சாதிப்பதை பல முறை கண்டு இருந்ததால் அவர்கள் அதன் பிறகு அவள் பக்கம் செல்ல பெரிதும் விரும்ப வில்லை.

ருத்ரன் ராஜிக்கு மாப்பிள்ளையாக வந்தபோது அனைவருக்கும் அவரை பிடித்து இருந்தாலும் ராஜி என்ன சொல்லப் போகிறாளோ என்ற பயம் சிறியவர்களுக்கு இருக்கதான் செய்தது ஆனால் அவனை போட்டோவில் பார்த்தவுடன் பிடித்துப்போன ராஜி கல்யாணத்திற்கு சம்மதம் சொல்லி விட்டாள். அதன்பிறகு பெண் பார்க்கும் படலம் நடக்கும்போது சாகித்யா பயந்தது அவளுக்கு கொஞ்சம் குதூகலமாக இருந்தது. ஆனால் நிச்சயத்திற்கு தேவையான அனைத்தையும் அவளுடைய விருப்பம் கேட்காமல் ருத்ரன் குடும்பமே முடிவு செய்தது அவளுக்கு கோபத்தைக் கிளப்பியது இடையில் ஒரு முறை சாதனா உடன் போனில் பேசியபோது தன்னுடைய குடும்பத்தை போலவே அவர்களும் பணத்தில் கஞ்சம் என்று நினைத்துக் கொண்டவள் திருமணத்திற்கு கடுகடுப்புடன் தயாராகிக் கொண்டிருந்தாள். ஏனென்றால் இனி யாரிடம் கூறினாலும் இதுவரை தான் எடுத்த பெயர் அனைத்தும் நாசமாகி விடும் என்பதை உணர்ந்து கொண்ட அவள் அமைதியாக இருக்க முடிவு செய்தாள்.

திருமணத்திற்காக வாங்கும் பொருள்களில் தன்னுடைய சம்மதத்தை கேட்பார்கள் என்று எதிர்பார்த்து ஏமாந்துபோன ராஜி தன்னுடைய தோழி ஒருத்திக்கு தொடர்பு கொண்டு தன்னுடைய ஆதங்கம் அனைத்தையும் கூறினாள்.அதைக்கேட்டு அவளுடைய தோழி ராஜி மீது கல்லூரி படிக்கும்போதே பைத்தியமாக காதலித்த மதன் என்பவனைப் பற்றி கூறினாள். தற்போது அவளுக்குத் திருமணம் என்று கேள்விப்பட்டவுடன் வாழ்க்கையை வெறுத்து அவன் இருப்பதையும் கூறினாள் கூடவே அவனுடைய அலைபேசி மற்றும் முகவரியையும் சேர்த்து வழங்கினாள்.

ராஜி அனைத்தையும் உட்கார்ந்து யோசித்துப் பார்க்கும்போது ருத்ரனை திருமணம் செய்து கொண்டால் கண்டிப்பாக அவனை எதிர்த்து எதுவும் செய்ய இயலாது என்பதை புரிந்து கொண்டவள் தன்னை விரும்புபவன் ருத்ரனை விட பணம் படைத்தவன் தனக்கு திருமணம் என்று கூறியவுடன் வாழ்க்கையை வெறுத்து அலைபவன் கண்டிப்பாக கடைசிவரை தன்னுடைய காலடியில் இருப்பான் என்று எண்ணிக் கொண்டவள் தீர்க்கமான ஒரு முடிவை எடுத்தாள்.

அதன்படி திருமணத்திற்கு முந்திய இரவு அவனுக்கு அலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட ராஜி "மதன் நீங்க என்ன இவ்வளவு காதலித்து இருப்பீங்க என்று எனக்கு தெரியாது ஒரு வாரம் முன்பு தான் என்னோட ஃப்ரெண்டு மூலமா தெரிஞ்சது எனக்காக நீங்க இவ்வளவு வருத்தப்படும் போது உங்கள விட்டுட்டு வேற ஒருத்தரை கல்யாணம் பண்ணிக்க எனக்கு மனசு வரல அதனால நான் இன்னும் கொஞ்ச நேரத்துல இங்க இருந்து கிளம்பலாம் அப்படின்னு இருக்கேன் முடிஞ்சா நீங்க வந்து என்ன கூட்டிட்டு போங்க" என்று கூறினாள்.

ராஜி கூறிய அனைத்தையும் கேட்ட மதன் மிகவும் மகிழ்ச்சியோடு "கண்டிப்பா ராஜி நீ பஸ் ஸ்டாண்ட் வந்து விடு அங்கிருந்து உன்னை நான் பத்திரமாக கூட்டி சென்று விடுகிறேன் நான் உன்னை எவ்வளவு காதலிச்சேன் அப்படிங்கிறது என் கிட்ட வந்த உடனே ஒவ்வொரு நாளும் உனக்கு நான் காட்டுறேன்" என்று கூறிவிட்டு போனை கட் செய்தான்.

அதன்பிறகு இரவில் யாருக்கும் தெரியாமல் தனக்காக வாங்கி வைத்திருந்த நகை அனைத்தையும் எடுத்தவள் செலவுக்கு அங்கிருந்த மீதி பணம் அனைத்தையும் எடுத்துக்கொண்டு மண்டபத்தை விட்டு வெளியேறிவிட்டாள் ஆனால் அவள் சென்றதை நால்வர் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தது அவளுக்கு அப்போது தெரியவில்லை.

அவள் மண்டபத்தை விட்டு வெளியேறிய பிறகு காலையில் அவளைத் தேடி வந்த அவளுடைய அன்னை ராஜி காணாமல் போனது தெரிந்து மண்டபம் முழுவதும் தேட ஆரம்பித்தார். இறுதியில் அவள் தன்னுடைய தந்தைக்கு அனுப்பியிருந்த மெசேஜில் அவள் மண்டபத்தை விட்டு சென்று விட்டாள் என்பதை தெரிந்து கொண்டவர்கள் மாப்பிள்ளை வீட்டாரிடம் மன்னிப்பு கேட்க சென்றனர்.

திருமணத்திற்கு அனைவரும் வர ஆரம்பித்து இருந்தனர் சாகித்யா காலையில் எழுந்து கிளம்பி தனக்கு ஒதுக்கப்பட்ட வேலைகளை செய்துகொண்டிருந்தாள் பின்பு மாப்பிள்ளை வீட்டார் வந்து விட்டனர் என்பதை யாரோ ஒருவர் மூலம் தெரிந்து கொண்டு ஆரத்தி எடுக்க வாசல் சென்றாள். சக்தி தன்னுடைய மச்சானுக்கு செய்யவேண்டிய அனைத்து மரியாதை செய்துமுடிக்க சாகித்யா ருத்ரன் முகத்தை பார்க்காமல் ஆரத்தி எடுத்து முடித்து அவனை உள்ளே அழைத்து சென்றாள். இவர்கள் அனைவரும் காலையிலேயே வேலையாக வெளியே இருந்ததால் ராஜி காணாமல் போனது தெரியவில்லை. அதன் பிறகு சாகித்யா தன் குட்டி நண்பர்களுடன் பஞ்சுமிட்டாய் ஐஸ்கிரீம் பாப்கான் என்று சாப்பிட கிளம்பி விட ருத்ரன் அவனுக்கு ஒதுக்கப்பட்ட அறையில் விட்டுவிட்டு சக்தி சத்யா பாலா மூவரும் தங்கள் பெற்றோரை காண சென்றனர்.

இவர்கள் செல்லும்போது எதிரில் மிகவும் பதட்டத்துடன் வந்த பெற்றோரை பார்த்து என்னவென்று விசாரித்தபோது ராஜி காணாமல் போன விஷயம் தெரிந்தது அதைக்கேட்டு நடக்கப்போகும் விபரீதங்களை யோசித்த மூவரும் அமைதியாக தங்கள் பெற்றோருடன் சென்றனர். ருத்ரன் குடும்பத்தினர் அனைவரும் இருந்த அறையில் இவர்கள் அனைவரும் வந்ததைப் பார்த்து அவர்கள் அனைவரும் எழுந்து நின்றனர்.

பெரியவர்கள் நால்வரும் குனிந்த தலை நிமிராமல் தங்கள் இரு கை எடுத்து கும்பிட்டு "எங்களை மன்னிச்சிடுங்க எங்க பொண்ணு இப்படி ஒரு காரியம் பண்ணுவான்னு எங்களுக்கு தெரியாம போச்சு அதுக்கு நீங்க என்ன தண்டனை கொடுத்தாலும் நாங்க மனப்பூர்வமாய் ஏற்றுக் கொள்கிறோம்" என்று ராஜீ காணாமல்போன விஷயத்திற்காக மன்னிப்பு கேட்டனர் முதலில் புரியாத ருத்ரன் குடும்பத்தினருக்கு பின்புதான் அனைத்தும் புரிந்தது ஆனால் அவர்கள் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.

அனைவரையும் பொதுவாக பார்த்த சாதனா "நீங்க எதுவும் பெருசா பண்ண வேண்டாம் உங்களோட சின்ன பொண்ணு இருக்கா அல்லவா அவள எங்க அண்ணனுக்கு கல்யாணம் பண்ணி வைத்துவிடுங்கள். கண்டிப்பா உங்க பெரிய பொண்ணு பண்ண தப்புக்கு அவளை நாங்கள் கஷ்டப்படுத்த மாட்டோம் எங்கள நீங்க முழுசா நம்பலாம்" என்று கூறினாள்.

அவள் கூறியதைக் கேட்டு விருட்டென நிமிர்ந்து அவர்கள் முகத்தை பார்த்தனர் ஆனால் யார் முகத்திலும் எந்தவித சங்கடமும் இல்லாமல் ஒரு மெல்லிய புன்னகை இருந்ததை குழப்பமாக பார்த்துக் கொண்டிருந்தனர் சாகித்யா குடும்பத்தினர்.

அந்தக் குழப்பத்தை புரிந்து கொண்ட அசோக் அவர்களுக்கு தெளிவாக ஒரு சில விஷயங்களைக் கூறினான். அதைக்கேட்ட அனைவர் முகத்திலும் ஒரு தெளிவு பிறந்து மகிழ்ச்சி வந்தது.

அனைவரையும் பொதுவாக பார்த்த சக்தி "உங்க எல்லார்கிட்டயும் ஒரு முக்கியமான விஷயம் சொல்றேன் இப்ப நேரடியாக போய் அந்த குட்டிப் பிசாசு கிட்ட கல்யாணம் பண்ணிக்க சொல்லி கேட்டா அந்த பாப்கான் காரன் கூட ஓடியே போய்விடுவாள் அதனால ராஜி காணாமல் போனது அவளுக்கு தெரிய வேண்டாம் மற்றதை நாங்க பாத்துக்குறோம்" என்று கூறினான்.

அவன் கூறியதை கேட்டு அனைவரும் சிரித்துக்கொண்டு "எப்படியோ இதுதான் கல்யாண பொண்ணுக்கு உள்ள டிரஸ் முகூர்த்த நேரத்துக்கு அவள மணமேடைக்கு கரெக்டா கூட்டிட்டு வந்துடுங்க அதுவே போதும்" என்று ராணி கூறினார்.

அனைவரும் வெளியே வந்த நேரம் கையில் ஐஸ்க்ரீம் சாப்பிட்டுக்கொண்டே உள்ளே வந்துகொண்டிருந்தாள் சாகித்யா அதைப் பார்த்து அனைவருக்கும் முகத்தில் சிரிப்பு வந்தது சக்தி கையில் ஒரு காபியுடன் சத்யா கையில் ஒரு ஜூஸ் உடனும் பாலா கையில் ஒரு கிளாஸ் தண்ணி உடனும் அவளை நோக்கி அவளை கவனிக்காதது போல் சென்றனர் இவர்கள் மூவரையும் பார்த்தவள். அவசரமாக அவர்களிடம் ஓடினாள் அவள் ஓடி வருவதை பார்த்த மூவரும் எதிர்பாராமல் இடிப்பது போல் கையில் இருந்ததை அவள் மேல் அபிஷேகம் செய்து விட்டனர்.

அவள் மெல்லிய ரோஸ் நிற பட்டு கட்டியிருந்ததால் இவர்கள் செய்த கூத்தில் பட்டு நாசமாய் போனது. அதைப் பார்த்து கடுப்பான சாகித்யா மூவரையும் பார்த்து "ஏன்டா எருமை மாட்டு பயலே உங்க மூணு பேருக்கு அறிவே இல்லையா இப்படி பண்ணி வச்சிட்டீங்க என்னோட டிரஸ் இனி நான் என்ன பண்றது எனக்கு வேற ட்ரஸ் வேணும் அதுவும் இதை விட அழகா இருக்கணும் என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ தெரியாது நீ மூணு பேரு தான் ரெடி பண்ணனும்" என்று கூறினாள்.

அதைக்கேட்ட மூவர் மனதிலும் ஆஹா ஆடு தானா வந்து சிக்கிவிட்டது என்று எண்ணிக்கொண்டு சக்தி அவளைப்பார்த்து "சரி வா அந்த ரூம்ல ஒரு புது ட்ரஸ் இருக்கு அதை வந்து போட்டுக்கோ என்று அழைத்து சென்றான் அவளும் துணியை மாற்றினால் போதும்" என்று எண்ணிக்கொண்டு அவர்களுடன் சென்றாள்.

உள்ளே பியூட்டி பார்லர் ஆட்கள் இருப்பதை பார்த்து குழப்பமாக மூவரையும் பார்த்தாள். அதை புரிந்து கொண்ட பாலா அவசரமாக "அக்கா ஏற்கனவே முகூர்த்தத்துக்கு லேட் ஆச்சு இதுல நீ இந்த புடவையை கட்டி உன் மேக்கப் எல்லாம் போட்டு தலையெல்லாம் சரிசெய்து கிளம்பி வருவதற்கு முன்னாடி கல்யாணம் முடிஞ்சு ரிசப்ஷன் வந்துரும் அதனாலதான் இவங்க உன்ன ரெடி பண்ணுவாங்க நீ ஒரு அரை மணி நேரம் அமைதியா இரு என்று அவளுடைய தலையை கலைத்து விட்டுக் கொண்டே" கூறினான்.

அவளும் விரைவாக கிளம்பவில்லை என்றால் அனைவரிடமும் திட்டு வாங்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டு மூவரையும் பார்த்து "சரி நீங்க போங்க நான் சீக்கிரம் கிளம்பி வரேன்" என்று கூறினாள். ஏற்கனவே பியூட்டி பார்லர் பெண்களிடம் "அவளை கண்ணாடி பார்க்கவிடாமல் அனைத்தையும் செய்து விடுங்கள்" என்று கூறி சென்றதால் அவர்களும் அனைத்து வேலைகளையும் அரை மணி நேரத்தில் கச்சிதமாக முடித்து விட்டனர். தான் பெண்ணின் தங்கை என்பதால் இவ்வளவு மெனக்கெட்டு தன்னை அலங்கரிக்கிறார்கள் என்று தன்னை சுற்றி நடப்பது என்னவென்று புரியாமல் என்ஜாய் செய்து கொண்டிருந்தாள்.

சரியாக அரை மணி நேரத்தில் வந்த மூவரும் அவளை வெளியே அழைத்து வந்து மணவரை நோக்கி அழைத்துச் சென்றனர். அவளும் "பாத்தியா நான் எவ்வளவு அழகா இருக்கேன்னு அவங்க என்ன அழகா மேக்கப் பண்ணி இருக்காங்க என்ன கண்ணாடி தான் பார்க்கவில்லை" என்று அவர்களுடன் பேசி சிரித்துக் கொண்டே சென்றாள்.

மூன்று ஆண்கள் மனதிலும் "நீ இப்படி சின்னப்பிள்ளையாவே இருக்கிறது எங்க எல்லாருக்கும் எவ்வளவு நல்லதா போச்சு" என்று எண்ணிக் கொண்டு அவளை மணவறையில் அமர வைத்தனர் தன்னை எங்கே இவர்கள் அமர வைக்கிறார்கள் என்று சுற்றி பார்த்தவள். பக்கத்தில் அமர்ந்திருந்த ருத்ரனைப் பார்த்து கண்கள் வெளியே வந்துவிடும் அளவுக்கு விரித்தாள்.

அவள் பதட்டத்தில் எழுந்து விடக்கூடாது என்று அவள் காதருகில் சென்ற சத்யா "ராஜி இந்த கல்யாணம் வேண்டாம் என்று சொல்லிவிட்டு மண்டபத்தை விட்டு சென்று விட்டாள் அதற்கு பதிலாக அவர்கள் உன்னை திருமணம் செய்ய சொல்லி கேட்டார்கள் நிச்சயமாக உன்னை அவர்கள் பத்திரமாக பார்த்துக் கொள்வார்கள் அதனால எந்திரிச்சு ஓடாம அமைதியாக உட்கார்ந்து கல்யாணம் பண்ணிக்க பார்ப்போம்" என்று கூறினான்.

அவனைப் பார்த்த சாகித்யா "ஏன்டா நீ வேற அவன் கண்ண பார்த்த பயத்திலேயே இந்த இடத்தை விட்டு எழும்ப முடியாமல் அப்படியே உட்கார்ந்து இருக்கேன் நீ வேற புதுசா என்னவோ சொல்லரே தயவுசெஞ்சு காப்பாத்து" என்று தன் மனதிற்குள் புலம்பிக் கொண்டிருந்தாள்.

அவள் கண்ணை பார்த்தேன் அவளுடைய எண்ண ஓட்டத்தை புரிந்து கொண்ட மூவரும் உள்ளுக்குள் சிரித்துக்கொண்டே அமைதியாக நின்றுகொண்டனர். ருத்ரன் மாலையை எடுத்து சாகித்யா கழுத்தில் எந்தவித உணர்ச்சியையும் காட்டாமல் போட்டான். ஐயர் கூறியவற்றை ருத்ரன் அமைதியாக சொல்லிக்கொண்டிருக்க சாகித்யா புரியாமல் முழித்துக் கொண்டிருந்தாள் ருத்ரன் பார்த்த ஒரு பார்வையில் அமைதியாக அவளும் கூற ஆரம்பித்து விட்டாள்.

சாகித்யா குடும்பத்திலுள்ள அனைவர் மனதிலும் "செல்லம் நீ கவலை படாதே நீ சேர வேண்டிய இடம் இதுதான் அந்த உண்மை உனக்கு தெரிய வரும் போது நிச்சயமா ரொம்ப சந்தோஷப்படுவ நம்ம வீட்ல எவ்வளவு சந்தோஷமா இருந்தியோ அதேபோல அந்த வீட்டிலேயும் போய் சந்தோஷமா இருப்ப" என்று மகிழ்ச்சியாக எண்ணிக்கொண்டு தங்கள் செல்ல மகளின் திருமணத்தை பார்த்துக்கொண்டிருந்தனர்.

யாராவது தன்னைக் காப்பாற்ற மாட்டார்களா என்று சுற்றியிருந்த அனைவரையும் பார்த்த சாகித்யா யாரும் தன்னை காப்பாற்ற வரமாட்டார்கள் என்பதை ருத்ரன் முகத்தைப் பார்த்து தெரிந்து கொண்டாள் இப்படி இவள் அனைவரையும் பார்த்துக்கொண்டிருந்த நேரத்திலேயே ருத்ரன் கையால் பொன் தாலி வாங்கி அவனுடைய மனைவியாகி போனாள்.

அதன் பிறகு நடந்தது தான் நாம் தெரிந்து கொண்டோம் அல்லவா இப்படியே தன்னுடைய என்ன அறையில் அனைவரும் மூழ்கியிருக்க சாகித்யா இல்லம் வந்து சேர்ந்திருந்தனர்.

ருத்ரன் சாகித்யா இருவரையும் ஒன்றாக நிற்க வைத்து ஆரத்தி எடுத்து வீட்டிற்குள் அழைத்துச் சென்றனர். அவளும் தன்னுடைய வீட்டிற்கு வந்து விட்ட மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்துக் கொண்டு சென்றாள் அதைப் பார்த்து ருத்ரன் உட்பட அனைவரும் சிரித்துக் கொண்டனர். ஆனால் வீட்டில் இருக்கும் அனைவரிடமும் ஒரு சில கேள்விகளை கேட்க வேண்டும் என்று சாகித்யா முடிவு செய்து அதற்காக நேரத்திற்காக காத்திருக்க ஆரம்பித்தாள்.

சாகித்யா என்ன கேட்கப் போகிறாள்?

இனி இவர்கள் வாழ்வில் நடக்கும் சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை அடுத்தடுத்த அத்தியாயங்களில் பார்க்கலாம்.

தங்களுடைய கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கும் உங்கள் தோழி என்னுடைய பதிவுகளில் ஏதேனும் பிழைகள் இருந்தால் மன்னித்துக் கொள்ளவும் ஏதேனும் மாற்றங்கள் செய்யப்பட வேண்டியது இருந்தால் உங்களுடைய கருத்துக்களை கூறுங்கள்.