பாகம் 29
அது வந்து வசு, எனக்கு ஒரு ஹெல்ப் வேணும் என்றாள் ஷகீலா.
என்ன ஹெல்ப் சொல்லு என்றாள் வசுந்தரா.
அக்கா இறந்த பிறகு குடும்பத்தை நடத்துவதற்கே ரொம்ப கஷ்டம் இதுல வேற எங்க அப்பா என்னோட அக்கா கொலை கேஸை ஆதித்யா பேர்ல போடுவதற்காக வக்கீலுக்கு நிறைய செலவு பண்ணிட்டாரு. கடைசில கேஸுலையும் தோத்துட்டோம்.
ஷகி, கல்யாணம் ஆன இந்த கொஞ்ச நாளிலேயே சொல்றேன், ஆதித்யா மேல எந்த தப்பும் இருந்திருக்காது. இன்னமும் அவர் ஷைலஜா அக்காவை லவ் பண்றாரு.
வாட், என்னடி சொல்ற.
ஆமாம் டி என்று ஆரம்பித்து டெடிபேரை அவளுடைய அக்காவாக நினைத்து பேசிக் கொண்டிருப்பதை பற்றி சொன்னாள்.
சத்தியமா என்னால நம்பவே முடியல.
இப்ப சொல்லு, இவரா ஷைலஜா அக்காவை கொலை பண்ணிருப்பாரு.
இல்லடி, இருக்காது.
சரி அத விடு, நீ ஏதோ ஹெல்ப் வேணும்னு கேட்டியே என்னன்னு சொல்லு.
நாளைக்கு எனக்கு ஒரு இன்டர்வியூ இருக்கு.
சரி.
ஏ எம் வி கம்பனி. உன் ஹஸ்பண்ட் ஓட கம்பெனி தான் டி.(AMV என்டர்பிரைசஸ் - ஆதித்யா, அர்ஜுன், அஸ்வினி,மகேஸ்வரி மற்றும் வாசுதேவன் )
சரிடி நீ போய் அட்டென்ட் பண்ணு அதனால என்ன.
நான் தான்னு தெரிஞ்சா இன்டர்வியூ பண்றதுக்கு முன்னாடியே வாசுதேவன் சார் ரிஜெக்ட் பண்ணிடுவாரு டி, இப்போ சாப்பாட்டுக்கே கொஞ்சம் கஷ்டமா இருக்கு. நீ உங்க வீட்ல சொல்லி மன்த்லி ஒரு 10,000 சம்பளம் வர மாதிரி வேலை போட்டுக் கொடுக்க முடியுமா பிளீஸ், அதுக்கப்புறம் அப்பா வேலை செய்யறதை வச்சு சமாளிச்சிடுவோம்.
எதுக்கு டி பிளீஸ் எல்லாம் சொல்ற. நான் சொன்னா கேட்பாங்களான்னு தெரியல. ஆனா உனக்காக நான் திட்டு வாங்கினாலும் பரவாயில்லை என்று கேட்கிறேன். அப்படி முடியாதுன்னு சொல்லிட்டாங்கன்னா ஏதோ என்னால முடிஞ்சது ஒன் மன்த்க்கு மட்டும் என்னோட சேவிங்ஸ்ல இருந்து நீ கேட்ட 10,000 நான் கொடுக்கிறேன்.
ரொம்ப தேங்க்ஸ் டி. ஆனா உன்னோட சேவிங்ஸ்ல இருந்து கொடுக்க வேண்டாம், முடிஞ்சா வேலை வாங்கி கொடு இல்லனா நீ எனக்காக கேட்கிறதே போதும்.
ஓகே ஷகி, நான் அப்பறமா பேசுறேன் பை.
பை வசு, டேக் கேர் என்று சொல்லி ஃபோனை வைத்து விட்டாள் ஷகிலா.
ஆதித்யா, அவன் வேலையை முடித்துவிட்டு அந்த ரூமில் இருந்து வெளியே வந்தான்.
வசு, இன்னும் தூங்கலையா.
தூக்கம் வரல உங்க கிட்ட பேசலாம்னு வெயிட் பண்ணிட்டு இருந்தேன்.
கதவை தட்டி இருக்கலாம் இல்ல.
இல்ல நீங்க முக்கியமான ஆபீஸ் வேலை இருக்குன்னு சொல்லிட்டு லாக் பண்ணவே உங்கள டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு விட்டுட்டேன்.
சரி சொல்லு. என்ன விஷயம்.
அது வந்து, என் ஃப்ரெண்ட் ஷகிலா கால் பண்ணினா.
ஓகே.
நாளைக்கு உங்க கம்பெனியில் இன்டர்வியூ இருக்காம் அவளுக்கு.
என்னது.
ப்ளீஸ் கோபப்படாதீங்க ஆதி.
இல்ல நீ என்ன சொன்ன.
இன்டர்வியூ இருக்கு அவளுக்கு.
அதுக்கு முன்னாடி.
கம்பெனியில இன்டர்வியூனு.
அதுக்கும் முன்னாடி.
என் ஃப்ரெண்ட் ஷகிலா கால் பண்ணான்னு .
இல்ல அதுக்கு அப்புறம்.
சத்தியமா எனக்கு தெரியல நான் என்ன சொன்னேன்னு. ஏன் இப்படி பேசுறீங்க. உங்களுக்கு அவங்க மேல கடுப்பா இருக்கும். நான் ஒத்துக்குறேன். உங்கள ஜெயிலுக்கு அனுப்புனாங்க. அதுவும் உங்க மேல தப்பே இல்லாத போது. ஆனா இப்ப சாப்பாட்டு கூட வழியில்லாமல் கஷ்டப்படுறாங்க. இந்த நேரத்துல யாரா இருந்தாலும் நம்ம உதவி பண்ணனும். தயவு செஞ்சு எனக்காக இந்த ஹெல்ப் நீங்க பண்ணுவீங்களான்னு கேட்க நினைச்சேன். ஆனா நீங்க இப்ப பேசுனதுல இருந்தே தெரியுது. உங்களுக்கு அவங்களை யாரையும் புடிக்கலைன்னு. ஷைலஜா அக்காவை தவிர. சரிதானே.
இல்ல.
என்ன.
உண்மையா தான் சொல்றேன். நீ தப்பா புரிஞ்சுகிட்டு இருக்க. எனக்கு அவங்க யார் மேலயும் கோபம் இல்லை. அவங்க பொண்ணு மேல அவங்க அக்கா மேல பாசம் வைத்திருக்கிறதினால தான் அவங்க கேஸ் போட்டாங்க. அவங்க தரப்பிலிருந்து பாக்குறதுக்கு அது நியாயம் தான். அதுக்கப்புறம் உண்மை தெரிஞ்சு நான் வெளியே வந்தேன்.
ஆனா நீங்க.
நான் சும்மா உன்னை வெறுப்பு ஏத்துறதுக்காக அப்படி பண்ணினேன்.
நீ என்ன சொன்ன இல்ல உங்க அப்பான்னு சொல்லாதீங்க, உரிமையோடு உங்க மாமான்னு சொல்லுங்கன்னு சொன்னேன்ல.
ஆமாம்.
அந்த மாதிரி நீயும் ஏன் பேசல.
நான் எப்பவுமே கரெக்டா தான பேசுவேன். உங்க அப்பா உங்க அம்மா உங்க தம்பி உங்க தங்கச்சி என்று சொல்ல மாட்டேனே. அத்தை மாமா அஸ்வினி அர்ஜுன் அப்படித்தானே பேசுவேன்.
நான் அத சொல்லல.
பின்ன.
உங்க கம்பெனின்னு சொன்னேன்ல. அதுக்கு தான் சொல்ல வந்தேன். ஏன் நம்ம கம்பெனின்னு சொல்லல.
அது வந்து.
ஒத்துக்கிறியா நீ தப்பு பண்ணிட்டேன்னு.
ஸ்மைல் செய்தாள் வசுந்தரா.
மாத்திரை மருந்து எல்லாம் ஒழுங்கா சாப்பிடுற இல்ல.
சாப்பிடுகிறேன் ஆதி.
குட்.
நீங்க நான் கேட்டதுக்கு பதிலே சொல்லலையே.
என்ன
என் ஃப்ரெண்டுக்கு வேலை பத்தி.
நான் அப்பா கிட்ட பேசி பார்க்கிறேன்.
இன்னொன்னு கேட்டா தப்பா நினைக்க மாட்டீங்களே.
இல்ல சொல்லு.
நீங்க ஏன் மாமா கிட்ட பேச மாட்டேங்கறீங்க.
கண்டுபிடிச்சிட்டியா.
அதான் நல்லாவே தெரியுதே. ஒரு சின்ன விஷயமா இருந்தாலும் அத்தையை மிடில்ல வச்சுக்கிட்டு பேசுறீங்க. அத்தை கிட்ட கேட்டு சொல்ல சொல்றீங்க.
ஷைலஜா இறந்த பிறகு, நான் ரொம்ப உடைஞ்சு போயிட்டேன். குடிப்பழக்கத்துக்கு அடிமை ஆயிட்டேன். ஷைலஜா வீட்டு ஆளுங்க கம்ப்ளைன்ட் கொடுத்ததால ஜெயிலுக்கு வேற போயிட்டேன். அதனால எங்க கம்பெனியோட ஷேர்ஸ் டவுனா ஆச்சு. அதனால எங்க அப்பா என்னை சிஇஓ பதவியிலிருந்து எடுத்துட்டாரு. கம்பெனியை விட்டு வெளியே போக சொல்லிட்டாரு.
அப்புறம்.
த்ரீ மந்த்ஸ், நான் ரொம்ப கஷ்டப்பட்டேன். தனியா பிசினஸ் பண்ணேன். அது எப்படியோ பிரஸுக்கு தெரிஞ்சிடிச்சு. அதனால மறுபடியும் என்னை கம்பனில ஒண்ணா சேர்த்து கிட்டார். ஆனா சிஇஓ பதவியை கொடுக்கல. ஷேர்ஸ் கொடுத்தார், போர்ட் ஆஃப் மெம்பரா மட்டும் இருந்தேன். இன்ஃபெக்ட் இப்பவும் அப்படித்தான் இருக்கேன். கல்யாணமான பிறகு தான் தருவேன்னு சொல்லிட்டாரு அதுதான் உன் கிட்ட ஏற்கனவே சொல்லி இருக்கேனே என்றான ஆதித்யா.
பாகம் 30
ஆமாம்மா சொல்லி இருக்கீங்க என்றாள் வசுந்தரா.
சரி வேற என்ன.
இல்ல நீங்க தான் உங்க அப்பா கிட்ட பேச மாட்டீங்களே அப்போ எப்படி ஷகீலாவை பத்தி பேசுவீங்க.
உன் கவலை உனக்கு. எப்படியோ ஒன்னு உன் பிரண்டுக்கு வேலை கிடைச்சா போதும் இல்ல.
ஆமாம்.
நான் எப்படியாவது பேசி நாளைக்கு உன் பிரண்டுக்கு வேலை வாங்கி தரேன் போதுமா.
அவங்க படிப்பு, திறமைக்கு ஏத்த மாதிரி வேலையும் சம்பளமும் வாங்கித் தரேன்.
தேங்க்யூ சோ மச் என்று கைகுலுக்க தன் கையை நீட்டினாள் வசுந்தரா.
ஸ்மைல் செய்து கொண்டே அவள் கையை குலுக்கினான் அதித்யா.
அவனுடைய ஸ்பரிசம் அவளுக்கு இதமாய் இருந்தது. அவன் தோளில் சாய்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது. ஆனால் அவன் தவறாக நினைப்பானோ என்று நினைத்து அமைதியாக இருந்தாள்.
ஆதி,
சொல்லு வசு,
தூக்கம் வரல கொஞ்ச நேரம் படம் பார்க்கலாமா.
ஓகே என்ன படம்.
உங்களுக்கு எது புடிச்சிருக்கோ அது.
இங்கிலீஷா தமிழா
எதுவா இருந்தாலும் பரவால்ல. இன்ஃபாக்ட் அனிமேஷன் மூவியா இருந்தா கூட பரவால்ல.
சாப்பிட்டுவிட்டு வந்து இருவரும் netflix இல் ஒரு படத்தை போட்டுவிட்டு பெட்டில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தனர். இருவருக்கும் இடையில் ஒரு ஆள் உட்காரும் அளவுக்கு இடைவெளி இருந்தது. அந்த இடைவெளியை குறைக்க விரும்பினாள் வசுந்தரா.
ஆதி கொஞ்சம் பாஸ் பண்ணுங்க ரெஸ்ட் ரூம் போயிட்டு வந்துடறேன் என்று சொல்லிவிட்டு வந்தபின் அவன் அருகில் அமர்ந்தாள்.
அவன் பாஸ் ரிலீஸ் செய்து விட்டு தன் ஃபோனை பார்த்துக் கொண்டிருந்தான்.
அவன் ஃபோனை பிடுங்கி அவளுடைய இந்த பக்கமாக வைத்து விட்டு.
என் கூட படம் பாக்குறேன் என்று தானே சொன்னீங்க, இப்ப எதுக்கு ஃபோன் பாக்குறீங்க. என்று செல்லமாக கோபித்துக் கொண்டாள்.
ஒரு முக்கியமான மெசேஜ் அனுப்ப வேண்டி இருக்கு அது மட்டும் அனுப்பிட்டு கொடுத்துடுறேன் ஃபோனை கொடு வசு.
முடியாது
ப்ளீஸ்
முடிஞ்சா எடுத்துக்கோங்க, என்று சொல்லி அவள் முதுகின் பின்னால் வைத்துக் கொண்டாள். அதன் மேலே ஏ படுத்துக் கொண்டாள்.
நீ நார்மலா இருந்தா உன்னை தள்ளி விட்டுட்டு எடுத்துட்டு இருப்பேன். ஆனா உனக்கே உடம்பு முடியலையேன்னு யோசிக்கிறேன்.
நான் நல்லா தான் இருக்கேன். எடுக்க முடியாததுக்கு இப்படி எல்லாம் ஒரு காரணம் சொல்லாதீங்க.
இப்ப எடுத்துட்டேன்னா.
எடுங்க பாக்கலாம்.
என்ன பெட்டு.
நீங்க எடுத்துடுங்க அப்புறமா சொல்றேன்.
சரி என்று சொல்லி அவளை உருட்டி விட முயன்றான். ஆனால் அவள் திரும்பவில்லை. அழுத்தம் கொடுத்தால் அவளுக்கு வலிக்குமோ என்று பயந்து அவள் கையை மெதுவாக திருப்ப முயன்றான். ஆனால் அவள் அழுத்தமாக படுத்திருந்தாள்.
அப்போது ஆதித்யாவின் ஃபோனில் வைப்ரேஷன் மோடில் கால் வந்தது. அவளுக்கு முதுகெல்லாம் கூச ஆரம்பித்தது. அவளே எழுந்து விட்டாள். உடனே ஃபோனை எடுக்க கை வைத்தான் ஆதித்யா.
அவன் கையை தடுத்து ஃபோனை எடுப்பதற்குள்
அவன் சட்டென்று எடுத்து விட்டான்.
இப்ப என்ன சொல்றீங்க மேடம். நான் தான் வின் பண்ணிட்டேன். பெட் என்னன்னு சொல்லவே இல்லையே. வின் பண்ணதுக்கு என்ன தரப் போறீங்க.
தன் இரு கைகளாலும் அவன் தலையை பிடித்து அழுத்தமாக ஒரு இதழ் முத்தம் கொடுத்தாள் வசுந்திரா.
இதை சற்றும் எதிர்பார்க்காதவன் அதிர்ச்சியானான். அவளைத் தள்ளி விடவும் இல்லை. அவன் திரும்ப அவளுக்கு முத்தம் கொடுக்கவும் இல்லை. அவள் கொடுத்த முத்தத்தை மட்டும் பெற்றுக் கொண்டான். இரண்டு நிமிடத்திற்குப் பிறகு அவளே அவனை விடுத்தாள்.
ஆதி, ஐ லவ் யூ டா என்றாள் வசுந்தரா.
அவள் கண்களை கூட நிமிர்ந்து பார்க்காமல் எழுந்து தன்னுடைய ஆபீஸ் ரூமிற்கு சென்று விட்டான் ஆதித்யா.
ஆதி, ஆதி என்றாள் வசுந்திரா.
ஆனால் அவளை திரும்பி பார்க்காமல் பதில் எதுவும் பேசாமல் சென்று விட்டான்.
தன் ஃபோனை எடுத்து அவனுக்கு மெசேஜ் டைப் செய்ய நினைத்தாள். ஆனால் அவள் கொடுத்த முத்தத்தின் அதிர்ச்சியினால் அவனுடைய ஃபோனை கூட கட்டிலிலேயே வைத்து விட்டான்.
எப்படி இருந்தாலும், ஃபோனை எடுத்துப் பார்ப்பான் என்று நினைத்த வசுந்தரா.
சாரி ஆதி, என்னன்னு தெரியல. எனக்கு உங்க மேல லவ் வந்துடுச்சு. எப்படி ஒரு பொண்ணுக்கு பிடிக்காத போது ஒரு ஆண் அவளை தொடக்கூடாதோ, அதேபோல தான் ஒரு ஆணுக்கு பிடிக்கலைனாலும் ஒரு பெண் தொடக்கூடாது. நான் தெரியாம அப்படி பண்ணிட்டேன். எப்ப நான் முத்தம் கொடுத்த போது நீங்க எனக்கு திருப்பி கொடுக்கலையோ, அப்பவே புரிஞ்சிகிட்டேன் உங்களுக்கு என் மேல எந்த விருப்பமும் இல்லைன்னு. தயவு செஞ்சு என்னை மன்னிச்சிடுங்க என்று மெசேஜ் அனுப்பி விட்டு படுத்தாள். வெகு நேரத்திற்குப் பிறகே தூங்கினாள் வசுந்தரா.
அந்த ரூமிற்கு சென்ற ஆதித்யா.
டெடி பேர் இடம்.
சாரி ஷைலு. வசுந்தரா இப்படி பண்ணுவான்னு என்று நினைக்கல,
அப்ப ஏன்டா அவளை தள்ளி விடல.
தெரியலடி,
உனக்கு அவ மேல காதல் வந்துடுச்சா டா.
இல்ல, நான் உன்னை மட்டும்தான் டி காதலிக்கிறேன்.
அப்புறம் அவ கிஸ் பண்ணும் போது, தள்ளி விட வேண்டியது தானே.
பாவம் அவ.
அதுக்காக, நாளைக்கு ச***** வச்சுக்கலாம் னு சொல்லுவா. அதுக்கும் ஓகே சொல்லுவியா என்ன.
சேச்சே இல்லடி, கண்டிப்பா இல்ல. நான் தான் முதலிலேயே சொல்லிட்டேனே. ஆர்ட்டிஃபிஷியல் இன்ஸெம்சன்ல தான் குழந்தை பெத்துக்கணும்னு.
ஆதி நீ என் கூடவே இருடா.
சரி ஷைலு, நீ டென்ஷன் ஆகாத, கவலப்படாத.
அவளுக்கு மட்டும் தான் குடுப்பியா எனக்கு கொடுக்க மாட்டியா.
ஏய் நான்தான் கொடுக்கலைன்னு சொல்றேன்ல.
அதான் நான் பாத்துகிட்டு இருந்தேனே.
சரி சரி கோச்சிக்காத நானே கொடுக்கிறேன் என்று சொல்லி டெடிபியர் தனக்கு முத்தம் கொடுக்க கிட்ட வருவது போல் அவனே அதை இழுத்து முத்தம் கொடுத்தான். பிறகு டெடி பேர் உடன் கட்டிப்பிடித்துக் கொண்டு அங்கேயே தூங்கினான்.
5:00 மணிக்கு அலாரம் வைத்து எழுந்து வெளியே வந்து வசுந்தரா தூங்கிக் கொண்டு தான் இருக்கிறாளா என்று பார்த்துவிட்டு அவள் எழுவதற்குள் கிளம்பி வெளியே சென்று விட்டான் ஆதித்யா.