• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

என்னுள் நீயடி உன்னுள் நானடி, பாகம் 16

Vaishnavi Vijayaraghavan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2024
288
111
43
Maduravoyal

பாகம் 31

தன் ஃபோனை எடுத்துக் கொண்டு சென்றான் ஆதித்யா. அவள் மெசேஜை அனுப்பி இருப்பது தெரிந்தது. இருந்தாலும் அதை ஓப்பன் செய்யவில்லை. கடைசியாக அனுப்பிய மெசேஜ் மட்டும் பாப்பப்பாக ஸ்கிரீனிலேயே தெரிந்தது. அதில் சாரி ஆதி என்று இருந்தது .

அதனால் அதை ஓப்பன் செய்யாமல் விட்டு விட்டான் ஆதித்யா. ஏனோ அவளை பார்க்க அவனுக்கு சங்கடமாக இருந்தது. அன்று முழுவதுமே அவன் வெளியே இருந்தான். விக்னேஷும் நைட் ஷிஃப்ட் முடிந்து தூங்கிக் கொண்டிருந்ததால் அவனை டிஸ்டர்ப் செய்யாமல் ஆதித்யாவே தனியாக பைக்கை எடுத்துக் கொண்டு லாங் டிரைவ் சென்றான்.

அவனுடைய அப்பா கூறியது போல் அன்று தான் நான்காவது நாள். மறுநாளில் இருந்து அவன் கம்பெனி செல்ல வேண்டும். ஆகையால் எப்படியாவது இந்த நாளை வீட்டில் இல்லாமல் வெளியே கழிக்க வேண்டும் என்று முடிவு செய்தான்.

அவன் கற்பனையில் சைலஜா கூறியது போல் ஒருவேளை வசுந்தரா விருப்பப்பட்டால் கணவன் என்ற முறையில் அவளுடைய ஆசையை தீர்க்க வேண்டியது நான் தானே என்று நினைத்துக் கொண்டான். தன் அம்மாவிற்கு மட்டும் மெசேஜ் செய்தான். அம்மா கிளையண்ட்ஸ் பாக்குறதுக்காக நான் வெளியே போறேன். வருவதற்கு ரொம்ப லேட் ஆகும். அதனால இன்னைக்கு ஒரு நாளைக்கு நீங்களே வசுந்தராவை பாத்துக்கோங்க என்ற மெசேஜ் செய்துவிட்டு ஃபோனை சைலண்டில் போட்டு விட்டான்.

தூங்கி எழுந்த வசுந்தரா, ஆதித்யாவின் அந்த ஆபீஸ் ரூம் வெளியே பூட்டி இருப்பதை பார்த்து விட்டு, பாத்ரூமில் இருக்கிறானா அல்லது கீழே இறங்கி சென்று விட்டானா என்று தேடினாள். ஆனால் அவன் கிளம்பி விட்டது தெரிந்தது.

அத்தை குட் மார்னிங்.

குட் மார்னிங் மா. எத்தனை மணிக்கு மா ஆதி கிளம்பினான்.

அவள் கேட்க வேண்டிய கேள்வியை அவர் கேட்டதால் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் யோசித்தாள்.

பிறகு, தெரியல அத்தை நானும் மாத்திரை போட்டு தூங்கியதால என்கிட்ட சொல்லல மெசேஜ் தான் அனுப்பி இருந்தாரு.

ஆமா எனக்கும் மெசேஜ் தான் அனுப்பி இருந்தான்.

உங்களுக்கு மெசேஜ் அனுப்பி இருந்தாரா.

ஆமாம்மா.

அத்தை, ஒரு நிமிஷம் உங்க ஃபோனை தரீங்களா.

இந்தா மா.

ஃபோனை வாங்கி எத்தனை மணிக்கு மெசேஜ் அனுப்பி இருக்கிறான் என்று பார்த்தாள் வசுந்தரா.

காலையில் தான் அனுப்பி இருக்கிறான். வேண்டுமென்றே வசுந்தரா அனுப்பிய மெசேஜை அவன் ஓப்பன் செய்யவில்லை என்று தெரிந்து கொண்டாள். கண்கள் லேசாக கலங்கியது அவளுக்கு. அதை வெளி காட்டாமல், இந்தாங்க அத்தை ஃபோன் என்று சொல்லி திரும்ப கொடுத்தாள்.

என்னாச்சும்மா எதுக்கு என் ஃபோனை வாங்கி பார்த்த.

இல்ல அத்தை உங்களுக்கு மெசேஜ் அனுப்பும் போது கிளம்பி இருக்காரா இல்ல எனக்கு மெசேஜ் அனுப்பும்போது கிளம்பி இருக்காரான்னு செக் பண்றதுக்காக கேட்டேன். எத்தனை மணிக்கு போனாருன்னு தெரியல இல்ல அதனால தான்.

ஓ சரிமா சரி.

அத்தை இன்னைக்கு நான் சமைக்கட்டுமா.

உனக்கு சமைக்க தெரியுமா மா.

ஓரளவுக்கு சுமாரா சமைப்பேன் அத்தை.

சரிம்மா. உன்னால முடியும்னா பண்ணு.

சரிங்க அத்தை குளிச்சிட்டு வந்துடறேன் என்று சொல்லிவிட்டு தன் ரூமிற்கு சென்றாள்.

ரூமிற்கு சென்று கதவை சாத்திவிட்டு, ஆதித்யாவின் ஃபோட்டோவை எடுத்துக்கொண்டு கட்டிலின் மேல் அமர்ந்து பேசினாள்.

என்னை வெறுத்துட்டீங்களா ஆதி.
சாரி ஆதி. நான் உங்ககிட்ட அப்படி நடந்து இருக்க கூடாது. தயவு செய்து என்னை மன்னிச்சிடுங்க. இன்னைக்கு நான் உங்களுக்காக சமைக்கப் போறேன். என் சாப்பாட்டை சாப்பிட்ட பிறகு நீங்களே என்னை மன்னிச்சிடுவீங்க. எப்படின்னு கேக்குறீங்களா.

சூப்பரா இருக்குனு நினைச்சுக்காதீங்க. சுமாரா தான் இருக்கும். மறுபடியும் இந்த சுமாரான சமையலை சாப்பிட வேண்டாம் அதுக்காகவே உன்னை மன்னிச்சிடுறேன்னு நீங்களே என் கிட்ட சொல்ல போறீங்க என்று சொல்லி சிரித்தாள் வசுந்தரா.

பிறகு குளித்துவிட்டு கீழே இறங்கி தன் மாமியாருடன் சமையல் செய்தாள் வசுந்தரா. மகேஸ்வரியும் உடன் இருந்ததால், வசுந்தராவின் சமையல் சுமாருக்கு பதிலாக சூப்பராக மாறியது.

அனைத்தையும் டேஸ்ட் பார்த்த வசுந்தரா.

அத்தை எல்லாத்தையும் நீங்க சூப்பரா மாத்திட்டீங்க.

நீ தனமா செஞ்ச.

இல்ல இல்ல நீங்க எல்லாத்தையும் மாத்திட்டீங்க. எங்க அம்மா வீட்ல செய்யும்போது இந்த மாதிரி டேஸ்ட் ஒரு நாளும் வந்தது இல்லை.

தண்ணி மாறுது இல்ல மா அதனால.

நீங்க ஏதாவது ஒரு ரீசன் சொல்றீங்க. ஆனா உண்மையாவே உங்க கூட சேர்ந்து கத்துக்கிட்டா நான் நல்லா சமைக்க ஆரம்பிச்சிடுவேன் போல.

சிரித்தார் மகேஸ்வரி. அப்போது காலேஜுக்கு ரெடியாகி வந்த அஸ்வினிக்கும், அர்ஜுன் மற்றும் வாசுதேவனுக்கும் லஞ்சை பேக் செய்து கொடுத்தார் மகேஸ்வரி.

ஆதி எங்க என்றார் வாசுதேவன்.

அவன் எதோ வேலை இருக்குன்னு போய் இருக்காங்க என்றார் மகேஸ்வரி.

வசுந்தராவை பார்த்துக் கொள்வதற்காக தானே அவனக்கு லீவே கொடுத்தேன். எப்போ போனான் என்றார்.

இப்பதாங்க என்றார் மகேஸ்வரி.

காலையிலேயே கிளம்பிட்டாரு மாமா என்றாள் வசுந்தரா.

இருவரும் ஒரே நேரத்தில் கூறியதால் இருவரையும் மாற்றி மாற்றி பார்த்தார் வாசுதேவன்.

இப்ப எங்க போயிருக்கான் என்றார் வாசுதேவன்.

இருவரும் அமைதியாக இருந்தனர்.

என்ன பதில் சொல்லுங்க.

ஏதோ கிளையண்ட்ஸ் பாக்க போறேன்னு மெசேஜ் பண்ணாரு மாமா.

என்னது மெசேஜ் பண்ணினானா.

ஆமாம் மாமா.

நீங்க ரெண்டு பேரும் எழுந்துக்கறதுக்குள்ளேயே கிளம்பி போயிட்டானா.

ஆமாம்.

இல்ல அவ சொல்லுவாளோ நான் அமைதியா இருந்தேன் என்றார் மகேஸ்வரி.

அத்தை சொல்லுவாங்கன்னு நினைச்சு நான் சைலன்ட்டா இருந்தேன் மாமா.

தயவு செஞ்சு யாராவது ஒருத்தர் பதில் சொல்லுங்க.

ஆமாம் மாமா.

பெருமூச்சு விட்டபடி, மாமியாரும் மருமகளும் நல்லா காப்பாத்துங்க அவனை என்றார் வாசுதேவன்.

சரி சரி என்னவோ பண்ணுங்க நான் கிளம்புறேன் என்று சொல்லி தன் மகளையும் மகனையும் அழைத்துக் கொண்டு அவர் வெளியே சென்றார்.

அவர்கள் மூவரும் கிளம்பினார்கள். அர்ஜுன் அஸ்வினியை தாங்கி பிடித்து காரில் ஏற்றி விட்டான். பின்னர் அவளை காலேஜில் இறக்கி விட்டு விட்டு அவனும் அவனுடைய அப்பாவும் ஆபீசுக்கு சென்றனர்.

வீட்டில் மாமியாரும் மருமகளும் பேசி அரட்டை அடித்து கொண்டு இருந்தனர்.

மணி மூன்றாகியது.

என்ன இவ்வளவு நேரமாயிடுச்சு, இன்னமும் ஆதி வரல ஃபோன் கூட பண்ணல என்றார் மகேஸ்வரி.

ஆமாம் அத்தை நானும் அதையே தான் யோசிச்சு கிட்டு இருந்தேன் என்றாள் வசுந்தரா.


பாகம் 32

தன் ஃபோனை எடுத்துப் பார்த்தாள் வசுந்தரா.

ஆதித்யா எதுவும் மெசேஜும் பண்ணவில்லை அவள் செய்த மெசேஜை இது வரையிலும் ஓப்பன் செய்து பார்க்கவில்லை.

ஆதிக்கு கால் பண்ணி பாருமா என்றார் மகேஸ்வரி.

சரிங்க அத்தை என்ற சொல்லி தன் ஃபோனை எடுத்தவளுக்கு, தன் ஃபோனிலிருந்து கால் செய்தால் ஆதித்யா எடுப்பானோ மாட்டானோ என்று நினைத்து.

அத்தை உங்களோட ஃபோனே தரீங்களா, என்ன காரணம் என்று அவர் கேட்பதற்கு முன்னால் வசுந்தராவே சொன்னாள்.

என் ஃபோன்ல சிக்னல் சரியா இல்ல , என்றாள்.

இந்தா மா பேசு. என்று சொல்லி ஃபோனை கொடுத்துவிட்டு தன் ரூமிற்கு ஏதோ வேலையாக சென்றார் மகேஸ்வரி.

அவளுடைய ஃபோனில் பேசவில்லை என்றாலும்
உன்னுடைய அம்மாவின் ஃபோனில் இருந்து கால் வந்தால் கண்டிப்பாக எடுப்பான் என்று நினைத்து அப்போதாவது அவன் குரலைக் கேட்டவுடன் சாரி செல்ல வேண்டும் என்று நினைத்து டயல் செய்து காதில் வைத்திருந்தாள்.

ஃபுல் ரிங் போய் கட் ஆகியது. மறுபடியும் கால் செய்தாள். ஆனால் ஆதித்யா எடுக்கவில்லை.

அப்போது வெளியே வந்த மகேஸ்வரியிடம்.

அத்தை இந்தாங்க ஃபோன்.

என்னச்சு மா, என்ன சொன்னான், எங்க இருக்கானாம்.

இல்ல அத்தை அவர் காலை எடுக்கல.

ஓ சரிமா. சரி சாப்பிடலாம் வரியா.

இல்ல அத்தை அவர் வந்ததும் நான் அவர்கூட சாப்பிடுறேன் நீங்க சாப்பிடுங்க,

அவன் வர லேட் ஆக போகுதுமா.

பரவாயில்ல அத்தை எனக்கு பசிக்கல.
உங்களுக்கு வேணும்னா பரிமாறவா.

இல்லம்மா வேண்டாம் நானே போட்டுக்கிறேன். நானுமே ஒரு பத்து நிமிஷம் கழிச்சு தான் சாப்பிட போறேன் பசிக்கல.

சரிங்க அத்தை நான் மாடிக்கு என் ரூமுக்கு போகட்டுமா என்றாள்.

போமா போய் ரெஸ்ட் எடு.

சரிங்க அத்தை, என்று சொல்லிவிட்டு மாடி எறி சென்றாள் வசுந்தரா.

அவளுடைய ஃபோனில் இருந்து ஆதித்யாவிற்கு கால் செய்தாள். அப்போதும் அவன் எடுக்கவில்லை சைலண்டில் போட்டு இருந்ததால் அவன் கவனிக்கவில்லை. நான்கு மணி அளவில் கீழே இறங்கி வந்து சாப்பிட்டுவிட்டு மறுபடியும் தன் ரூமுக்கு சென்றாள்.

மிகவும் கடுப்பாக இருந்தது. டிவி பார்க்க தோன்றவில்லை, ஃபோனை பார்க்கவும் தோன்றவில்லை. அவ்வளவு ஏன் அவளுக்கு மிகவும் பிடித்த இளையராஜா பாடல்களை கூட கேட்க தோன்றவில்லை.

என்ன செய்வது எங்கே போயிருப்பார் என் மேல் கோபித்துக் கொண்டு எங்காவது சென்று விட்டாரா என்றெல்லாம் யோசித்து கொண்டிருந்தாள் வசுந்தரா.

அப்போது திறந்திருந்த கதவை தட்டி,

மே ஐ கம் இன் அண்ணி என்றாள் அஸ்வினி.

மெதுவாக தாங்கி தாங்கி நடந்து வந்தாள்.

வா அஸ்வினி. சொல்லியிருந்தால் நானே ஒரு ரூமுக்கு வந்து இருப்பேன் இல்ல.

அண்ணி காலேஜ் முடிச்சிட்டு இப்பதான் வரேன். உங்க ரூம தாண்டி தான் என் ரூமுக்கே போக முடியும் என்று சொல்லி சிரித்தாள் அஸ்வினி.

ஸ்மைல் செய்தாள் வசுந்தரா.

என்னாச்சு அண்ணி, ஏன் டல்லா இருக்கீங்க.

ஒன்னும் இல்ல அஸ்வினி. உங்க அண்ணன் விடியற்காலையிலே கிளம்பிட்டாரு. ஃபோன் எடுக்கல, மெசேஜ் பண்ணல, கால் பண்ணல அதனாலதான் ஒரே கவலையா இருக்கு.

அண்ணி இதுக்கா டென்ஷனா இருக்கீங்க. ஆதி அண்ணா எப்பவுமே இப்படித்தான். அவருக்கு பிசினஸ் தான் ரொம்ப முக்கியம் குடும்பம் கூட அப்புறம் தான். அவர் எப்பவுமே இப்படித்தான் பண்ணுவாரு.

அதுவும் வேலைக்காக போயிட்டாருன்னா எவ்வளவு முக்கியமான விஷயம் இருந்தாலும் நம்ம தான் அவர் வேலை முடிஞ்சதும் கால் பண்ணனும். அப்படி நடுவுல எடுத்துட்டாரு, நம்ம செத்தோம். பயங்கரமா திட்டுவாரு அது முக்கியமான விஷயமா இல்லன்னா.

அப்படியா. உங்க அண்ணனுக்கு அவ்வளவு கோபம் வருமா.

எங்க அண்ணன் கோபப்பட்டு இதுவரைக்கும் நீங்க பார்த்திருக்க மாட்டீங்க. அதனாலதான் உங்களுக்கு ஒன்னும் தெரியல.

ஓஹோ.

இதுவரைக்கும் அண்ணா லேட்டா வர்றதுனால அம்மா தான் ரொம்ப டென்ஷனா இருப்பாங்க. இப்ப அந்த டென்ஷன் உங்களுக்கு டிரான்ஸ்பர் பண்ணிட்டு அவங்க நிம்மதியா இருக்காங்கன்னு நினைக்கிறேன்.

இல்ல இல்ல அத்தையும் தான் சொல்லிட்டு இருந்தாங்க, இவ்ளோ நேரம் ஆச்சு வரலையே ஃபோன் பண்ணி பாருமா என்று.

எங்க அம்மா பயங்கர கில்லாடி. நீங்க கால் பண்ணா அண்ணா திட்ட மாட்டாருன்னு உங்கள கால் பண்ண சொல்லிட்டாங்க. அவங்க கால் பண்ணி இருந்தா பயங்கரமா வாங்கி கட்டியிருப்பாங்க. அதனால நைஸா உங்க கிட்ட சொல்லிட்டு இருக்காங்க என்று சொல்லி சிரித்தாள் அஸ்வினி.

சரி அஸ்வினி எப்படி எழுதின எக்ஸாம் எல்லாம்.

நல்லா எழுதி இருக்கேன் அண்ணி.

குட், நாளைக்கு என்ன எக்ஸாம்.

நாளைக்கு இல்ல நாளான்னிக்கு தான்.

ஓகே ஓகே,

சரி அண்ணி, நீங்க ரெஸ்ட் எடுங்க நான் போய் ரெப்ரஷ் ஆகிட்டு அடுத்த எக்ஸாம்ஸுக்கு ப்ரிபேர் ஆகுறேன்.

சரி மா.

அவள் சென்றதும் மறுபடியும் தன் ஃபோனை எடுத்துப் பார்த்தாள் வசுந்தரா.

மெசேஜ் செய்தாள்.

ஆதி, பிளீஸ் என்கிட்ட பேசாம மட்டும் இருந்திடாதீங்க. இதுக்கு மேல உங்க விருப்பம் இல்லாம உங்க பக்கத்துல கூட நான் உட்கார மாட்டேன். நான் இன்னைக்கு பண்ணதுக்கு என்ன மன்னிச்சிடுங்க என்று அனுப்பி விட்டாள்.

இரவு 11 மணி அளவில் ஆதித்யா வந்தான்.

தன் அம்மாவை பார்த்துவிட்டு.

சாரிமா, காலையில உங்க கிட்ட சொல்லாமையே கிளம்பிட்டேன்.

பரவால்லப்பா ஏதோ முக்கியமான வேலைல இருக்கவே தானே கிளம்பிட்ட. அட்லீஸ்ட் வசுந்தரா கிட்டயாவது சொல்லிவிட்டு போய் இருக்கலாம் இல்ல.

இல்லம்மா அவளும் தூங்கிட்டு இருந்தா டிஸ்டர்ப் பண்ண வேண்டாம் என்று.

சரி இப்ப கூட தூங்கிட்டு இருப்பான்னு நினைக்கிறேன். வா நானே சாப்பாடு போடறேன்.

இல்லம்மா நான் சாப்பிட்டேன். இப்போ நீங்க தூங்கி இருக்க மாட்டீங்கன்னு சொல்லி தான் இப்பவே வந்து உங்க கிட்ட பேசுறேன்.

சொல்லுப்பா என்ன.

இன்னும் ஒரு ரெண்டு மூணு நாளைக்கு இதே மாதிரி தான் இருக்கும். நான் அன்னைக்கு சனிக்கிழமை தானப்பா சனி ஞாயிறு கூடவா இருக்கு.

ஆமாம்மா. அவளுக்கு தெரிஞ்சா ரொம்ப கஷ்டப்படுவா. அதனாலதான் நான் அவ கிட்ட சொல்லாம உங்க கிட்ட சொல்றேன்.

இதில் என்னப்பா கஷ்டப்பட வேண்டி இருக்கு.

இல்லம்மா கல்யாணம் ஆன உடனே அவ கூட டைம் ஸ்பென்ட் பண்ணாம வேலை இருக்குன்னு போயிடுறேன் இல்ல என்றான் ஆதித்யா.

ஆமாப்பா நீ சொல்றதும் சரிதான் என்றார் மகேஸ்வரி.