பாகம் 37
அவர்களுக்கு தனிமையை கொடுத்து விட்டு ஃபோனை எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள் வசுந்தரா.
வெளியே இருந்த பார்க் பென்சில் அமர்ந்தாள்.
தன் ஃபோனை எடுத்து ஆதித்யாவிடம் இருந்து ஏதாவது மெசேஜ் வந்திருக்கிறதா என்று பார்த்தாள்.
எதுவும் இல்லை. ஏனோ வசுந்தராவுக்கு அவனிடம் பேச வேண்டும் போல இருந்தது.
திட்டினாலும் பரவாயில்லை என்று நினைத்து தன் ஃபோனை எடுத்து கால் செய்தாள்.
மூன்று நான்கு ரிங்கு போனது. அவன் எடுக்கவில்லை. கட் செய்யலாம் என்று நினைத்தாள் அப்போது ஹலோ என்று சத்தம் கேட்டது.
எடுத்து காதில் சரியாக வைத்து ஹலோ ஹலோ என்றாள் வசுந்தரா.
சாரி ஆதி, நீங்க கால் பண்ண வேண்டாம்னு தான் சொன்னீங்க. ஆனா என்னால உங்க கிட்ட பேசாம இருக்க முடியல. ஒரே ஒரு வார்த்தை மட்டும் சொல்லுங்க அதை கேட்டுட்டு நான் வச்சிடுறேன்.
வசு, ப்ளீஸ் ஹெல்ப் மீ.
என்று முனகினான் ஆதித்யா.
ஆதி என்ன ஆச்சு உங்களுக்கு ஏன் இப்படி பேசுறீங்க.
வசு எனக்கு ஆக்சிடென்ட் ஆயிடுச்சு,
வாட், எங்க இருக்கீங்க ஆதி.
ஏலகிரி எஸ்டேட்ல. அர்ஜுனுக்கு தெரியும்.
அவன கொஞ்சம் அனுப்பி விடு. என்று சொல்லிக் கொண்டு அப்படியே மயங்கி விட்டது போல தோன்றியது வசுந்தராவுக்கு.
அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை.
ஆதி ப்ளீஸ் ஸ்பீக் , எப்படி இருக்கீங்க கேக்குதா நான் பேசுறது, என்றாள்.
லைன் கட்டாகியது. மறுபடியும் கால் செய்தாள்.
நாட் ரீச்சபிள் என்று வந்தது.
உடனே ஃபோனில் அர்ஜுனுக்கு கால் செய்தாள்.
தன் அப்பாவுடன் மீட்டிங் இல் இருந்ததால் அவன் ஃபோனை கட் செய்தான்.
மறுபடியும் கால் செய்தாள்.
இதுவரை தன் அண்ணி கால் செய்ததில்லை. அப்படி இருக்க மறுபடியும் கால் செய்கிறார் என்றால் முக்கியமான விஷயமாகத்தான் இருக்கும் என்று நினைத்து எக்ஸ்கியூஸ் மீ என்று சொல்லிவிட்டு ஃபோனை எடுத்துக் கொண்டு வெளியே வந்தான்.
ஹலோ சொல்லுங்க அண்ணி என்ன ஆச்சு.
அர்ஜுன் அர்ஜுன்,
ஏன் அண்ணி பதட்டமா இருக்கீங்க என்ன ஆச்சு சொல்லுங்க.
உங்க அண்ணன் ஆதிக்கு ஆக்சிடென்ட் ஆயிடுச்சு.
வாட். இப்ப அண்ணா எங்க இருக்காரு.
எனக்கு தெரியல அது ஏதோ நீலகிரி எஸ்டேட் என்று சொன்னாரு.
நீலகிரி எஸ்டேட்டா.
ஆமா அப்படித்தான் சொன்னாரு.
ஏலகிரி எஸ்டேட்டா அண்ணி.
ஆமா அர்ஜுன் அப்படித்தான் ஏதோ சொன்னாரு.
எனக்கு ரொம்ப பயமா இருக்கு. நானும் உன் கூட வரேன். தயவு செஞ்சு என்னையும் கூட்டிட்டு போறியா.
ஆனா அண்ணி.
ப்ளீஸ் அர்ஜுன் ப்ளீஸ்.
ஓகே அண்ணி. இப்ப எங்க இருக்கீங்க. உங்க அம்மா வீட்டிலையா.
இல்ல எங்க அப்பா அட்மிட் பண்ணிருக்க ஹாஸ்பிடல்ல.
சரி நானே வந்து பிக்கப் பண்ணிக்கிறேன்.
ஓகே அர்ஜுன் தேங்க்ஸ் என்று சொல்லிவிட்டு உடனே மகேஸ்வரிக்கு கால் செய்தாள்.
விஷயத்தை அவரிடம் சொல்ல அவர் அதிர்ச்சி அடைந்தார். அழ ஆரம்பித்து விட்டார். நானும் உங்க கூட வரேன் என்றார்.
இல்ல அத்தை கவலைப்படாதீங்க, நானும் அர்ஜுனும் போய் பார்த்துட்டு உங்களுக்கு உடனே ஃபோன் பண்றோம். அஸ்வினி காலேஜ்ல இருந்து வருவா அவளை வேற நீங்க பாக்கணும்.
சரிமா ஜாக்கிரதையா போங்க பாத்துட்டு என்னன்னு சொல்லுங்க.
சரிங்க அத்தை நீங்க கவலைப்படாதீங்க மாமா கிட்டயும் சொல்லிடுங்க என்று சொல்லிவிட்டு உள்ளே சென்று தன் அப்பா அம்மாவிடம் சொல்லலாம் என்று நினைத்தாள்.
அவளுடைய அப்பா தூங்கிக் கொண்டிருந்தார்.
தன் அம்மாவை வெளியே அழைத்து விஷயத்தை சொல்லி. அம்மா அப்பா கிட்ட சொல்ல வேண்டாம். அப்பாவுக்கு ஏற்கனவே உடம்பு சரியில்லை, பயந்துட போறாரு. அதனால எங்க வீட்டுக்கு போயிட்டு ஏதோ ஒரு வேலை இருக்கு முடிச்சுட்டு வரேன்னு சொல்லிடுங்க.
சரி மா கவலப்படாத மாப்பிள்ளைக்கு ஒன்னும் ஆகாது தைரியமா போ.
சரிங்க அம்மா நீங்க அப்பாவை பார்த்துக்கோங்க என்று சொல்லி கண்கள் கலங்க அங்கிருந்து வெளியே வந்து காத்திருந்தாள்.
அர்ஜுன் காரில் வர, அவனுடன் சென்றாள் வசுந்தரா.
தன் அண்ணி கண்கள் கலங்க அடிக்கடி கண்களை துடைத்து கொண்டிருப்பதை பார்த்து.
அண்ணி, அண்ணாவுக்கு ஒன்னும் ஆகாது. அவர் ரொம்ப தைரியமானவரு. நீங்க கவலைப்படாதீங்க.
சரிப்பா என்று சொல்லி கண்களை துடைத்தாலும் உள்ளுக்குள் அவளுக்கு பயமாகவே இருந்தது. அவள் அழுதால் அர்ஜுனுக்கு டிஸ்டர்ப் ஆக இருக்குமே என்று நினைத்து தன் அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டாள்.
அடுத்த மூன்று மணி நேரத்தில் ஏலகிரியில் அவர்கள் எஸ்டேட்டை அடைந்தனர்.
அங்கே வீடு பூட்டி இருந்தது. வாட்ச்மேன் இடம் கேட்டதற்கு.
ஆதி தம்பி விடியற்காலையில் பைக்கை எடுத்துக்கிட்டு கிளம்புனாரு ஆனா இன்னும் திரும்ப வரலையே என்றார்.
அண்ணா கார்ல போகலையா பைக்ல போய் இருக்காரா.
ஆமாம் தம்பி.
ஹெல்மெட் போட்டு போயிருக்காரா.
அதை நான் சரியா கவனிக்கலையே தம்பி.
உடனே அங்கிருந்து கிளம்பி போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றனர் அர்ஜுனன் வசுந்தராவும் .
ஏதாவது ஆக்சிடென்ட் கேஸ் வந்ததா, அப்படி இருந்தால் எந்த இடத்தில், எந்த ஹாஸ்பிடல் அட்மிட் செய்திருக்கிறார்கள் என்று யாருக்காவது எதாவது தெரியுமா என்று கேட்டான் அர்ஜுன்.
காலையிலிருந்து அப்படியே ஒரு விஷயம் நடந்ததாக இதுவரை எதுவும் இன்ஃபர்மேஷன் வரவில்லை என்றார் போலீஸ் கான்ஸ்டபிள்.
இங்க மொத்தம் எத்தனை ஹாஸ்பிடல் இருக்கு சார்.
பெரிய ஹாஸ்பிடல்ல பார்த்தா ஒன்னு தான் இருக்கும். சின்ன சின்ன கிளினிக் ரெண்டு மூணு இருக்கு.
பெரிய ஹாஸ்பிடல் எங்க இருக்கு சார்.
ரைட்ல போய் மூன்றரை கிலோமீட்டர் போனீங்கன்னா வந்துரும்.
ஓகே சார் தேங்க்ஸ் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி சென்றனர்.
போகும் வழி எல்லாம் பார்த்துக் கொண்டே இருந்தாள் வசுந்தரா.
அழுது கொண்டே வெளியே பார்த்துக் கொண்டிருந்தாள் வசுந்தரா.
அப்போது ஒரு இடம் தாண்டும் போது அர்ஜுன் வண்டியை நிறுத்துங்க என்றாள்.
அர்ஜுன் காரை நிறுத்தியதும்.
வேகமாக இறங்கி சென்று பார்த்தாள்.
அங்கே ஆதித்யாவின் ஒரு ஷூ இருந்தது.
அர்ஜுன் இது உங்க அண்ணனது தான். இந்த ஷூவை நான் பார்த்து இருக்கேன் என்றாள் வசுந்தரா.
ஆமாம் அண்ணி இது அண்ணாவோடது தான் எனக்கும் தெரியும் என்று சொல்லி அங்கே பார்த்தபோது, எதிர்பக்கமாக இருந்த சரிவில் புதர்களின் நடுவில் விழுந்திருந்தான் ஆதித்யா.
பாகம் 38
நான்கு மணி நேரத்திற்கு மேல் ஆகியும் யாரும் பார்க்காததால் மயக்கத்தில் இருந்தான். நல்ல வேலையாக ஹெல்மெட் போட்டு இருந்ததால் தலையில் எந்த அடியும் படவில்லை. கை கால்களில் நன்றாக தேய்த்துக் கொண்டு ரத்தம் வழிந்து இருந்தது.
ஆதி என்ற சொல்லி அவனை தூக்கி தன் மடியில் வைத்து அழுதாள் வசுந்தரா.
அர்ஜுன் உடனே ஆம்புலன்ஸ்க்கு கால் செய்து அடுத்த 10 நிமிடத்தில் அங்கே வந்தது.
ஆம்புலன்ஸில் ஆதித்யா உடன் வசுந்தரா செல்ல, கீழே இருந்த ஃபோன் மற்றும் அவனுடைய பை, ஹெல்மெட், ஷூ என்ற அனைத்தையும் எடுத்து காரில் போட்டுக்கொண்டு வேகமாக ஆம்புலன்சை ஃபாலோ செய்து வந்தான் அர்ஜுன்.
ஹாஸ்பிடலில் அட்மிட் செய்தனர்.
உயிருக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என்று டாக்டர் சொன்னார். அதைக் கேட்ட பிறகுதான் வசுந்தராவுக்கு உயிரே வந்தது போல இருந்தது.
ஒரு வாரத்துக்கு முன்னாடி யாருன்னே தெரியாத ஒருத்தர் மேல எனக்கு எப்படி இவ்வளவு காதல் வந்துச்சு. அவருக்கு ஒன்னுனா ஏன் என் மனசு இப்படி பதைபதைக்குது என்று நினைத்துக் கொண்டாள்.
உடனே தன் மாமியாருக்கும் அம்மாவுக்கும் கால் செய்து ஆதித்யா நன்றாகத்தான் இருக்கிறார் என்று கூறினாள்.
அவர்கள் இருவரும் கடவுளுக்கு நன்றி சொன்னார்கள். வசுந்தராவை அவன் உடன் இருந்து பார்த்து கொள்ளும்படி இருவரும் சொன்னார்கள்.
இரண்டு மணி நேரத்திற்கு பிறகு ஆதித்யா கண்விழித்தான்.
அர்ஜுன் அவன் அருகில் சென்று.
என்ன ஆச்சுன்னா. எப்படி நடந்துச்சு இதெல்லாம்.
ஆதித்யாவால் பேச முடியவில்லை. கண்கள் கலங்கினான்.
சரி சரி விடுங்க அண்ணா. நடந்தது நடந்திருச்சு.
அத பத்தி யோசிக்க வேண்டாம்.
எப்படி தெரியும் யார் சொன்னது என்று மெதுவாக திக்கி பேசினான் ஆதித்யா.
அண்ணி தான் அண்ணா சொன்னாங்க.
அவளுக்கு எப்படி தெரியும் எனக்கு ஆக்சிடென்ட் ஆயிடுச்சுன்னு.
நீங்க ஃபோன்ல அவங்க கிட்ட பேசினீங்களே.
நான் ஃபோன் பண்ணனா, என்னால ஃபோனை எடுக்க கூட முடியலையே. கை கால்களில் பயங்கரமா அடிபட்டு இருந்தது. ஃபோன் எகிரி தள்ளி விழுந்திருந்தது. எடுக்க ட்ரை பண்ணேன். ஆனா என்னால எடுக்க முடியல.
அண்ணா, அண்ணி தான் எனக்கு ஃபோன் பண்ணி சொன்னாங்க அண்ணா. உங்களுக்கு ஆக்சிடென்ட் ஆயிடுச்சு ஏலகிரி எஸ்டேட் எல்லாம் அவங்க தான் அண்ணா சொன்னாங்க.
பிறகு தான் யோசித்துப் பார்த்தான் அர்ஜுன்.
ஆதித்யா சொன்னது சரிதான். அவனை ஆம்புலன்சில் ஏற்றிய பிறகு நான்கு அடி தூரத்தில் ஃபோன் விழுந்திருந்தது. எடுக்க ட்ரை செய்தபடி கைகள் அந்தப் பக்கமாக நீட்டியிருந்தான் ஆதித்யா. அப்படியே மயங்கி இருந்தான்.
ஃபோன் உடைந்திருந்ததால் இன்கமிங் அவுட் கோயிங் எதுவுமே பார்க்க முடியவில்லை ஆதித்யாவின் ஃபோனில்.
ஆதித்யாவும் அர்ஜுன் சொன்னதையே நினைத்து யோசித்துக் கொண்டிருந்தான்.
அண்ணா, கடவுள் கொடுத்த கிஃப்ட் உங்களுக்கு அண்ணி. உங்களுக்கு இங்க அடிபட்டது அவங்களுக்கு எப்படி தெரியும். அந்த அளவுக்கு உங்க மனசோட ஒன்னா இருந்து இருக்காங்க. அவங்கள நல்லா பாத்துக்கோங்க. எக்காரணத்துக்காகவும் அவங்களை விட்டுக் கொடுத்துவிடாதீர்கள் என்று சொல்லிவிட்டு.
அண்ணி வெளியே தான் இருக்காங்க நான் வர சொல்றேன் என்று சொல்லிவிட்டு வெளியே சென்றான் அர்ஜுன்.
ஃபோனில் பேசிக் கொண்டிருந்த தன் அண்ணியிடம்.
அண்ணி அண்ணா கண்ணு முழிச்சுட்டாரு.
போய் பாருங்க என்றான்.
நான் அப்புறமா பேசறேன் அத்தை என்று சொன்ன வசுந்தராவிடம்
ஃபோனை அர்ஜுனிடம் கொடுமா என்றார் மகேஸ்வரி.
சரிங்க அத்தை என்று சொல்லி ஃபோனை அர்ஜுனிடம் கொடுத்துவிட்டு,
வேகமாக உள்ளே ஓடிச் சென்றாள்.
கண்கள் கலங்க அவள் பக்கத்தில் போய் அமர்ந்தாள்.
தேங்க்ஸ் என்றான் ஆதித்யா.
எதுக்கு ஆதி.
என்ன காப்பாத்துனதுக்கு.
நான் என்ன பண்ணேன்.
உனக்கு எப்படி தெரியும் எனக்கு ஆக்சிடென்ட் ஆச்சுன்னு.
நீங்க தானே ஃபோன்ல சொன்னீங்க.
இல்லையே என்னால ஃபோனை எடுக்க முடியலையே.
நான் உங்களுக்கு டயல் பண்ண உடனே எனக்கு உங்க குரல் தான் கேட்டுச்சு. வசு ப்ளீஸ் ஹெல்ப் பண்ணு எனக்கு ஆக்சிடென்ட் ஆயிடுச்சுன்னு சொன்னீங்க.
நான் பதட்டமா எங்கே இருக்கீங்க என்று கேட்டதற்கு.
ஏலகிரி எஸ்டேட் அர்ஜுனுக்கு தெரியும் அர்ஜுன் கிட்ட சொல்லுன்னு சொன்னீங்க.
நீங்க சொல்லலைன்னா உங்களுக்கு ஏலகிரியில் எஸ்டேட் இருக்குன்னு எனக்கு எப்படி தெரியும் ஆதித்யா.
அவள் சொல்வதும் சரிதான், ஒருவேளை ஃபோன்ல சொல்லி இருப்பேனோ என்று நினைத்துக் கொண்டான் ஆதித்யா.
ஒரு நிமிஷம் உங்க கையை புடிச்சுக்கலாமா என்றாள் வசுந்தரா.
சரி என்று தலையசைத்தான் ஆதித்யா.
அவன் இரு கைகளையும் பிடித்து தன் கண்களில் வைத்துக் கொண்டு, பின்னர் விடுவித்து விட்டாள்.
ஆதித்யாவிற்கு வசுந்தரா தன் மேல் உயிரையே வைத்திருக்கிறாள் என்ற நன்றாக புரிந்தது. இருப்பினும் அவனால் ஷைலஜாவை மறக்க முடியவில்லை. அதனால் அமைதியாக இருந்து விட்டான்.
அர்ஜுன் தன் அண்ணியின் ஃபோனில் தன் அம்மாவிடம் பேசிவிட்டு,
இன்கமிங் கால் லிஸ்டில் ஆதித்யாவின் பெயர் இருக்கிறதா என்று பார்த்தான்.
இல்லை.
அவுட்கோயிங் காலில் பார்த்தான், டயல்டில் இருந்ததே தவிர இருவரும் பேசிக் கொண்ட கான்வர்சேஷன் டைம் இல்லை. ஒன்று ரிங் அடித்து கட்டாகி இருக்கும் அல்லது நாட் ரீச்சபிள் என்று வந்திருக்கும். டாக்கிங் ஜீரோ செகண்ட்ஸ் என்றே காட்டியது. இது எப்படி சாத்தியம் என்று வியந்தான் அர்ஜுன்.
பின்னர் தன் அண்ணியிடம் ஃபோனை கொடுத்துவிட்டு டாக்டரிடம் பேசச் சென்றான்.
சாயந்திரமாக ஆதித்யாவை அழைத்து செல்லலாம் என்று டாக்டர் கூறினார்.
பிறகு மூவரும் கிளம்பி சென்னைக்கு வந்தனர்.
வீட்டிற்கு வந்ததும் ஆரத்தி எடுத்தார் மகேஸ்வரி.
பிறகு கிரவுண்ட் ஃப்ளோரில் இருக்கும் கெஸ்ட் ரூமிலேயே ஆதித்யா மற்றும் வசுந்தராவை தங்கச் சொன்னார் மகேஸ்வரி.
காலில் அடிபட்டு பேண்டேஜ் போட்டு இருந்தான். மற்றபடி பிராக்சுவரோ அடியோ எதுவும் இல்லை.
அம்மா என்னோட ரூமுக்கே போறேன். கால்ல பிராக்சர் ஆன அஸ்வினியே மாடி ஏறி அவ ரூமுக்கு போறா, எனக்கு எதுவும் பிரச்சனை இல்லை என்று சொல்லி மெதுவாக படியேறி சென்றான் ஆதித்யா.
அவனைத் தொடர்ந்து சென்றாள் வசுந்தரா.
பிறகு கட்டிலில் படுத்து தூங்கி விட்டான் ஆதித்யா.
ஃபோனை பார்த்து கொண்டே அவன் அருகில் அமர்ந்து இருந்தாள் வசுந்தரா.
அப்போது வசுந்த்ராவின் ஃபோன் அடித்தது.
தன் அம்மா என்று நினைத்து ஃபோனை எடுத்துப் பார்த்தாள்.
ஃபோனில் ஷகிலா என்று வந்தது.