• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

என்னுள் நீயடி, உன்னுள் நானடி. பாகம் -25

Vaishnavi Vijayaraghavan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2024
288
111
43
Maduravoyal
பாகம் 49

சரி அவன் ஏதோ மன குழப்பத்தில் இருக்கிறான். மந்த்ரா அப்படி சொல்லி இருப்பாள் போல. அதனால் மனது உடைந்து போய் இருக்கிறான். இரண்டு நாள் கழித்து கேட்டுக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டான் ஆதித்யா.

தன் கணவனுக்கு அந்த வாட்சைப் கிஃப்ட் ராப் செய்து அவளுடைய துணி இருக்கும் கப்போர்ட்டில் மறைத்து வைத்தாள். கண்டிப்பாக அவன் அங்கு பார்க்க மாட்டேன் என்ற அவளுக்கு நன்றாகவே தெரியும்.

தன் பர்த்டேக்கு என்ன கொடுக்கப் போகிறான் என்று ஆர்வமாக யோசித்துக் கொண்டிருந்தாள் வசுந்தரா.

சண்டே நம்ம பர்த்டேன்னு அவருக்கு தெரியுமா தெரியாதா. ஒருவேளை தெரியவில்லை என்றால்.
அத்தை சொல்லிடுவாங்க, ஒரு வேளை அவங்க மறந்துட்டாங்கன்னா. இல்ல இல்ல மறக்க மாட்டாங்க அவங்க தான் எனக்கு பட்டு புடவை வாங்கி தரேன்னு சொல்லி இருக்காங்களே. என்றெல்லாம் தனக்குள்ளே பேசிக்கொண்டும் யோசித்துக் கொண்டும் இருந்தாள் வசுந்தரா.

மாலை 5 மணி அளவில் மந்திராவுக்கு கால் செய்தாள்.

ஹாய் அக்கா ஹனிமூன்ல இருந்து எப்ப வந்த.

மதியம் தான் வந்தேன்.

என்ன சூப்பரா இருந்துச்சா நல்லா என்ஜாய் பண்ணீங்களா.

உனக்கு என்ன வாங்கிட்டு வந்தேன் கேட்பேன்னு நினைச்சேன். பரவாயில்லையே ரொம்ப மெச்சூர்டா பேசுற.

அப்படியா எனக்கு எதாவது வாங்கிட்டு வந்து இருக்கியா என்ன அக்கா வாங்கிட்டு வந்து இருக்க.

சுடிதார் மெட்டீரியலும் பியர்ல் செட்.

சூப்பர் அக்கா. தேங்க்யூ சோ மச்.
சரி உன் பர்த்டேக்கு என்ன அக்கா வேணும்.

நீ வந்து என்னை கட்டிப்பிடிச்சு விஷ் பண்ணினாலே போதும் மந்தரா.

சொல்லுக்கா பரவால்ல.

அப்படியா, சரி ஓகே. எனக்கு என் மாமியார் ஃபேண்டா ஆரஞ்சு வித் டார்க் கிரீன் பார்டர்ல பட்டுப்புடவை எடுத்து தர்றதா சொல்லி இருக்காங்க. சோ அதுக்கு மேட்ச்சா எனக்கு கிளாஸ் பேங்கில்ஸ் வாங்கி கொடு.

என்ன அக்கா இவ்வளவு சிம்பிளா சொல்லிட்ட.

அது போதும் மந்த்ரா. உனக்கு தான் என்ன பத்தி தெரியும் இல்ல. நிறைய கிளாஸ் பாங்கில்ஸ் போட்டுக்கணும்னா எனக்கு பிடிக்கும்னு.

ஓகே ஓகே, கண்டிப்பா வாங்கிட்டு வரேன்.
ஆமா, மாமா என்ன உனக்கு பர்த்டே பார்ட்டி ஸ்பெஷலா ஏதாவது அரேஞ்ச் பண்ணி இருக்காரா.

அப்படி எதுவும் எனக்கு தெரியல.

சர்ப்ரைஸா பண்ணி இருப்பாரு.

தெரியல மந்த்ரா.

சரி நான் மாமா கிட்ட ஃபோன் பண்ணி கேட்டுக்குறேன்.

ஏய் வேண்டாம்.

ஏன்.

இல்ல அவருக்கு என் பர்த்டே பத்தி தெரியுமா தெரியாதா என்று தெரியவில்லை.

அப்படின்னா நான் சொல்லிடறேன் என்று சொல்லி ஃபோனை வைத்து விட்டாள் மந்தரா.

ஏய் இரு இரு என்று வசுந்தரா சொல்லிக் கொண்டிருக்க காதில் வாங்காமல் ஃபோனை வைத்து விட்டாள் மந்த்ரா.

ஆதித்யாவுக்கு கால் செய்தாள்.

ஹலோ யாருங்க.

மாமா நான் மந்த்ரா. என் நம்பரை நீங்க சேவ் பண்ணலையா.

ஓ, மந்த்ரா எப்படிம்மா இருக்க.

நல்லா இருக்கேன் ஆனா நான் கேட்ட கேள்விக்கு நீங்க பதிலே சொல்லலையே.

இல்லை என்கிட்ட உன் நம்பர் இல்ல.

ஓகே இப்பவாது சேவ் பண்ணிப்பீங்களா.

கண்டிப்பா மா.
நானே உன் கிட்ட பேசணும்னு இருந்தேன்.

என்னாச்சு மாமா.

அர்ஜுனன் உன்னை மீட் பண்ண போறேன்னு சொல்லியிருந்தான். ஆனா உன்ன மீட் பண்ணலாம் இல்லையா பேசினானா இல்லையா ஒன்னும் தெரியல. அத பத்தி கேட்டாலே எனக்கு சரியா பதில் சொல்ல மாட்டேங்குறான். என்ன நடந்துச்சுன்னு நான் தெரிஞ்சுக்கலாமா.

அது வந்து மாமா.

உனக்கு ஃபோன்ல பேச கஷ்டமா இருந்ததுனா கேஃபிட் ஏரியால மீட் பண்ணலாமா.

ஓகே மாமா என்று சொல்லிவிட்டு ஃபோனை வைத்து விட்டாள்.

மாமா, கிட்ட என்ன சொல்றது. உண்மைய சொல்லணும்னா, இப்ப எனக்கு அர்ஜுன பிடிச்சிருக்கு. ஆனா என்னை பத்தி தெரிஞ்சதுனால அவன் என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதிப்பானா. அது எப்படி ஒரு ஆள பார்த்த உடனே உன் மேல காதல் வந்துடுமா. இல்ல ஜஸ்ட் இன்பாக்சுவேஷனா. அவன பார்த்ததினால் தான் என்னால அன்னைக்கு அந்த எஸ்கார்ட் ஓட ஒண்ணா இருக்க முடியல. இன்ஃபாக்ட் அவன் என் கன்னத்துல கிஸ் பண்ணதே அருவருப்பா இருந்தது என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருந்தாள்.

அப்போது மறுபடியும் வசுந்தராவே கால் செய்தாள்.

மந்தரா.

சொல்லு அக்கா.

அவர்கிட்ட சொல்லிட்டியா என்ன.

இல்ல அக்கா ஆனா மீட் பண்ண போறோம்.

வாட்.

ஆமா அக்கா நான் உன்கிட்டயும் சொல்லி இருக்கணும்.

என்னடி சொல்ற எனக்கு ஒண்ணுமே புரியல.

சரி மாமா சொன்ன இடத்துக்கு நீயும் வரியா உங்க ரெண்டு பேர் கிட்டயும் சொல்லிடறேன்.

இரு இரு எனக்கு முதல்ல சொல்லு ஆதி எதுக்காக உன்ன பாக்கணும்னு சொன்னாரு.

அர்ஜுன் கிட்ட நான் பேசினதை பத்தி தெரிஞ்சுக்க.

என்ன நீ அர்ஜுன் கிட்ட பேசினியா.

ஆமா அக்கா அது ஒரு பெரிய கதை அது நான் ஸ்ட்ரைட்டா சொல்றேன் நீ வா நான் லொகேஷன் அனுப்புறேன் என்று சொல்லி ஃபோனை வைத்து விட்டாள் மந்தரா.

ஒரு வழியாக தன் தங்கை மந்திராவிற்கு நல்ல வாழ்க்கை அமையப் போகிறது என்று நினைத்து சந்தோஷம் கொண்டாள் வசுந்தரா.

மந்த்ராவை பார்த்துவிட்டு அப்படியே தன் அம்மா வீட்டிற்கு போய் அவள் வாங்கி வந்ததை கொடுத்து விட்டு வருவதாக தன் மாமியாரிடம் சொன்னாள் வசுந்தரா.

அவள் சொன்ன பத்து நிமிடத்திற்கு முன்னாடியே வந்து இருந்தாள் வசுந்தரா.

அப்போது அங்கே வந்த ஆதித்யா வசுந்தராவை பார்த்து.

நீ என்ன இங்க,

மந்த்ரா தாங்க என்னையும் வர சொன்னா.

ஓகே ஓகே. நானே உனக்கு சர்ப்ரைஸா சொல்லலாம்னு நெனச்சேன். உன் தங்கச்சி எல்லாத்தையும் போட்டு சொதப்பிட்டாளா.

அப்போ நீங்க தான் வந்து அவங்க ரெண்டு பேரையும் மீட் பண்ண சொன்னீங்களா என்று சொல்லி சிரித்தாள் வசுந்தரா.

ஆமாம் ஆமாம்.

அர்ஜுன் தம்பிக்கு ஓகேவா.

தெரியல உன் தங்கச்சி என்ன சொன்னான்னு.

என்ன சொன்னீங்க.

சரி மா சரி, மந்திரா என்ன சொன்னான்னு தெரியல. உன் தங்கச்சின்னு சொல்லல போதுமா.

ஸ்மைல் செய்தாள் வசுந்தரா.

அப்போது எக்ஸ்கியூஸ் மீ என்று சொல்லி இருவருக்கும் எதிரே இருந்த சேரில் அமர்ந்தாள் மந்த்ரா.



பாகம் 50



இன்னும் ஹனிமூன் மூடிலேயே இருக்கீங்க போல, பப்ளிக் பிளேஸ்ல ரொமான்ஸ் பண்ணிக்கிட்டு இருக்கீங்க என்று சொல்லி சிரித்தாள் மந்தரா.



ஏய் உதை வாங்க போற ஓவரா பேசாத என்றாள் வசுந்தரா.



உன் தங்கச்சியா இது.



ஏன் அப்படி கேக்குறீங்க மாமா.



உங்க அக்கா இந்த மாதிரி எல்லாம் பேசி நான் பார்த்ததே இல்லை.



அவ அப்படி எல்லாம் பேச மாட்டா. எல்லாத்துக்கும் பயப்படுவா, தைரியமா எந்த முடிவும் எடுக்க மாட்டா. ஆனா நான் அப்படியே அவளுக்கு நேர் ஆப்போசிட். மனசுல பட்டதை சொல்லிடுவேன், மனசுல பட்டதை செஞ்சிடுவேன். அது யாரு என்னன்னு எல்லாம் பார்க்க மாட்டேன்.



ஹூம், ஓகே இன்ட்ரஸ்டிங்.



சரி சொல்லுமா, என்னாச்சு அர்ஜுன் என்ன சொன்னான்.



நான் இப்ப எதுக்கு உங்க ரெண்டு பேரையும் பார்த்து பேசுறேன்னா. அன்னைக்கு நான் அர்ஜுன் கிட்ட பேசும் போது எனக்கு கல்யாணம் என்ற ஒரு விஷயத்துல இன்ட்ரஸ்ட்டோ நம்பிக்கையோ இல்லாம இருந்துச்சு. ஆனா இப்போ.



ஆனா இப்போ என்று ஆர்வமாக கேட்டாள் வசுந்தரா.



இப்பவுமே எனக்கு கல்யாணம் மேல பெருசா ஒரு ஈடுபாடு இல்ல. ஆனா எனக்கு அர்ஜுன புடிச்சிருக்கு. கொஞ்ச நாள் நாங்க பேசி பழகிட்டு, எல்லா விதத்திலும் எங்களுக்கு ஒத்து வந்துச்சுன்னா அவருக்கும் அதுல இன்ட்ரஸ்ட் இருந்ததுனா ஒன் இயர் கழிச்சு கல்யாணத்தை பத்தி திங்க் பண்ணுகிறேன்.



அதுவரைக்கும் என்றான் ஆதித்யா.



ரிலேஷன்ஷிப்ல இருக்கலாம்னு நினைக்கிறேன்.



வாட், ஏன் இப்படி எல்லாம் பேசுற நீ என்றான் ஆதித்யா.



என்ன மாமா நீங்களும் இது புரிஞ்சிக்க மாட்டேங்கறீங்க. இந்த காலத்தில் இதெல்லாம் சகஜம் தானே.



இந்த காலத்தில் அது சகஜமா இருந்தாலும் என்னோட ஃபேமிலிக்கு செட்டாகாது.



நீங்க உங்க வீட்ல எல்லார்கிட்டயும் பேசுவீங்க நினைச்சு தான் நான் உங்க கிட்ட சொன்னேன். நீங்களே இப்படி நினைக்கிறீங்கனா அப்ப சுத்தம் மத்த யாரும் ஒத்துக்க போறதில்லை.



என்னது இது ஏன் இப்படி எல்லாம் பேசுற நீ என்றாள் வசுந்தரா கண்கள் கலங்க.



அக்கா நான் பிராக்டிக்கலா இருக்கணும்னு நினைக்கிறேன். லவ் அதுக்கப்புறம் மேரேஜ் அதுக்கப்புறம் டைவர்ஸ் இதெல்லாம் இல்லாம, எதுக்கும் ரெஸ்பான்சிபிலிட்டி எடுத்துக்காம ஃப்ரீயா இருக்கணும்னு நினைக்கிறேன்.



வசுந்தரா நான் கிளம்ப போறேன் நீ வரியா இல்லையா.



இல்ல ஆதி நான் இன்னைக்கு எங்க அம்மா வீட்டுக்கு போயிட்டு நாளைக்கு வரட்டுமா.



உன் இஷ்டம் என்று கோபமாக சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினான் ஆதித்யா.



என்னடி நீ என்றாள் வசுந்தரா மந்தராவை பார்த்து கண்கள் கலங்க.



அக்கா, என்ன நீ என்னை பத்தி தெரியாத மாதிரி பேசுற.



சரி, இரு ஒரு நிமிஷம் என்று சொல்லிவிட்டு வேகமாக கார் பார்க்கிங்கிற்கு சென்றாள் வசுந்தரா.



அப்போது காரை ஸ்டார்ட் செய்து கொண்டிருந்தவனிடம்.



ஒரு நிமிஷம் ஆதி, பிளீஸ்.



என்ன உன் தங்கச்சி அப்படி பேசுறா நீ சைலன்ட்டா இருக்க.



நான் என்ன சொல்றது.



அப்ப அவ சொல்றது எல்லாம் சரியா.



சரின்னு நான் சொல்ல வரல, ஆனா அது தப்பும் கிடையாது.



தப்பு இல்லையா. என்ன சொல்ற நீ. அப்போ அவ அந்த மாதிரி போனா உனக்கு சம்மதமா.



சம்மதம் சொல்றதுக்கு நான் யாரு ஆதி. அவ வாழ்க்கை அவ இஷ்டம்.



ஒரு அக்காவா இருக்கிறவ எது நல்லது எது கெட்டதுன்னு தங்கச்சிக்கு சொல்ல மாட்டியா.



அவ ஒன்னும் சின்ன குழந்தை இல்லையே, நல்லது கெட்டது சொல்லிக் கொடுக்கிறதுக்கு.



இப்ப அவ நடந்துக்குறதும் சின்ன குழந்தைத்தனமா தான் இருக்கு. இதெல்லாம் நடைமுறை வாழ்க்கைக்கு ஒத்து வருமா.



ஒத்து வரும்னு நினைக்கிறாளே.



என் மேல தான் தப்பு. நீ சொன்னன்னு நான் போய் அர்ஜுன் கிட்ட பேசினேன்ல.



அர்ஜுன் தம்பிக்கும் ரிலேஷன்ஷிப் பிடிச்சிருந்ததுன்னா, ரெண்டு பேரும் ஒன்னா சேரலாம்ல இல்ல.



வசுந்தரா, என் தம்பி அப்படி எல்லாம் பண்ண மாட்டான். எங்க அப்பா அம்மாவை பத்தி யோசிப்பான். குடும்ப கௌரவம்னு ஒன்னு இருக்கு, அதுக்கு முக்கியத்துவம் கொடுப்பான். உன் தங்கச்சி மாதிரி பண்ண மாட்டான்.

உன் தங்கச்சி என்று தான் சொல்லுவேன். நானும் தங்கச்சியா நினைக்கிற அளவுக்கு அவ தகுதியானவ இல்லை .



என்ன ஆதி, இப்படி எல்லாம் பேசுறீங்க .



நான் வீட்டுக்கு போறேன் வசு, இதுக்கு மேல இங்க இருந்தேன்னா, வீணா உனக்கும் எனக்கும் தான் சண்டை வரும். அதை நான் விரும்பல. பை.



நானும் உங்க கூட வந்தரவா.



இல்ல வேண்டாம் நீ தான் அங்க போறேன்னு சொன்ன இல்ல. போயிட்டு நாளைக்கு வா.



உங்களுக்கு ஒன்னும் மன வருத்தம் இல்லையே.



நீ உங்க அம்மா வீட்டுக்கு போறதுக்கு எனக்கு எந்தவிதமான மன வருத்தமும் இல்லை. மத்ததை பற்றி கேட்காத என்று சொல்லிவிட்டு கிளம்பி வீட்டிற்கு சென்றான் ஆதித்யா.



மந்திரா உடன் தன் அம்மா வீட்டிற்கு சென்றாள் வசுந்தரா.



மந்திர எவ்வளவு பேசியும் வசுந்தரா அவளிடம் பேசவில்லை.



ஆனால் தன் அம்மா தனலட்சுமிக்கு அது தெரியாதது போல பார்த்துக் கொண்டாள் வசுந்தரா.



அனைவருக்கும் வாங்கி வந்ததை கொடுத்துவிட்டு. தன் அப்பாவுடன் பேசிக் கொண்டிருந்தாள்.



அப்போது அங்கே வந்த மந்த்ரா.



அப்பா எப்படி இருக்கீங்க அப்பா.



மூணு நாளா என்னை வந்து நீ பார்க்கவே இல்லை மந்த்ரா. இன்னைக்கு உங்க அக்கா வந்துட்டாளேன்னு இன்னைக்கு வரியா.



இல்லப்பா அதெல்லாம் ஒன்னும் இல்ல. காலேஜ் ப்ராஜெக்ட் விஷயமா பிஸியா இருந்தேன். நிறைய நோட்ஸ் எழுத வேண்டி இருந்தது. அதனால வீட்டுக்கு வர்றதே லேட் ஆயிடும். நீங்க தூங்கி இருப்பீங்க உங்கள டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு தான் வந்து பேசல கேட்கல. இன்னைக்கு சீக்கிரம் அக்கா கூட வரவே உங்களை வந்து பார்த்தேன்.



சும்மா சொன்னேன் டா மந்த்ரா கண்ணு. நீங்க ரெண்டு பேரும் இரண்டு கண்ணுங்க மாதிரி. உங்கள பத்தி எனக்கு தெரியாதா. நீங்க ரெண்டு பேரும் என் மேல எவ்வளவு பாசமா இருக்கீங்கன்னு.



சரிப்பா நீங்க ரெஸ்ட் எடுங்க. அக்கா வரியா நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்.



அப்பா கிட்ட பேசிட்டு இருக்கேன் இல்ல மந்த்ரா கொஞ்ச நேரம் கழிச்சு வரேன்.



இல்லக்கா முக்கியமான விஷயம். காலேஜ் பத்தி என்றாள் மந்திரா .



நான் வரேன் நீ போ என்றாள் வசுந்தரா .







தொடரும்.....

அ. வைஷ்ணவி விஜயராகவன்.