• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

என்னுள் நீயடி உன்னுள் நானடி, பாகம் 26

Vaishnavi Vijayaraghavan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2024
288
111
43
Maduravoyal
பாகம் 51


போமா தங்கச்சி கூப்பிடுறா இல்ல, போய் என்னன்னு கேட்டு அவளுக்கு செஞ்சி கொடு என்றார் பாலமுருகன்.

சரிப்பா நீங்க தூங்கி ரெஸ்ட் எடுங்க. மாத்திரை எல்லாம் கரெக்டா போடுங்க. நாளை காலையில நான் வந்து பார்க்கிறேன் என்றாள் வசுந்தரா.

சரி மா.

மந்திராவும் வசுந்தராவும் ஒரே ரூமில் தான் தூங்குவார்கள்.

வசுந்தரா உள்ளே வந்ததும் மந்த்ரா கதவை சாத்திவிட்டு அவள் பக்கத்தில் வந்து அமர்ந்தாள்.

அக்கா என்கிட்ட பேசாம மட்டும் இருக்காதா அக்கா.

நீ ஏன் அவர் முன்னாடி அப்படி பேசின.

என்னக்கா இது கூட புரிஞ்சுக்க மாட்டாரா மாமா.

புரிஞ்சுக்கல இல்ல, பார்த்த இல்ல.

பணக்காரங்களா இருந்தாலும் அவங்க எல்லாரும் அர்த்தோடாக்ஸ். நீ சொல்ற இந்த ஃபாரின் கல்ச்சர் எல்லாம் நமக்கு செட்டாகாது.

புரிஞ்சுக்கோ அக்கா, எனக்கு அர்ஜுன புடிச்சிருக்கு. அவன் கூட வாழ்ந்து பார்க்கிறேன். எனக்கு செட்டாச்சுன்னா கல்யாணம் பண்ணிக்கிறேன். இல்லன்னா மிஸ் அண்டர் ஸ்டாண்டிங், ஃபைட்டிங், மிஸ் கம்யூனிகேஷன் எல்லாத்துக்கும் மேல டைவர்ஸ் வரைக்கும் போக வேண்டி வந்துரும். உண்மையிலேயே எனக்கு 3 டு 6 மந்த் கூட போதும். அவன் கூட வாழ்ந்தேன்னா என்னோட டேஸ்ட் கேட்ட மாதிரி இருக்கானா லைஃப் லாங் அவன் கூட வாழறது எனக்கு செட் ஆகுமா எல்லாம் தெரிஞ்சுப்பேன்.

என்னை என்னடி பண்ண சொல்ற.

நீ மாமா கிட்ட பேசு, மாமாவ அர்ஜுன் கிட்ட பேச சொல்லு.

நான் சொன்னா கேட்பார் என்று நினைக்கிறாயா.

கண்டிப்பா, அவருக்கு உன் மேல அவ்ளோ லவ்வு இருக்கு.

லவ்வா, காமெடி பண்ணாத.

அவர் கண்ணுல நான் அதை பார்த்தேன் அக்கா. அந்த மாதிரி தான் எனக்கு வரப் போறவனும் என்னைய முழுசா லவ் பண்ணனும் என் மேல உயிரையே வச்சிருக்கணும்னு ஆசைப்படுறேன்.

நான் உங்க யார்கிட்டயும் சொல்லல. ஷகிலா கிட்ட சொன்னேன். அவர் இன்னமும் ஷைலஜா தான் லவ் பண்றாரு.

வாட், ஷகிலா அக்காவோட அக்காவா.

ஆமாம்.

அவங்களுக்கும் மாமாக்கும் என்ன சம்பந்தம்.

பெருமூச்சு விட்டபடி அனைத்தையும் சொல்லி முடித்தாள்.

இதையெல்லாம் தெரிஞ்சு நீ கல்யாணம் பண்ணிக்கிட்டியா.

கல்யாணம் பண்ணிக்கும்போது பாதி விஷயம் தெரியும். அதுவும் அவர பத்தி தப்பா தான் நெனச்சிட்டு இருந்தேன். அதுக்கப்புறம் தான் எனக்கு உண்மை தெரிஞ்சது.

அக்கா எது எப்படியோ எனக்கு தெரியல. ஆனா மாமா உன்ன லவ் பண்றாரு. ஷைலஜா நெனச்சு அந்த டெடி பேர் லவ் பண்றாரோ இல்லையோ. உன்னை லவ் பண்றாரு. அது ஒவ்வொரு முறையும் அவர் உன்னை பார்த்த பார்வையிலேயே தெரியுது.

சரி என் கதையை விடு அத அப்புறம் பாத்துக்கலாம். நான் ஒரு முறை பேசி பார்க்கிறேன். செட் ஆகவில்லை என்றால் நீ அதோடு விட்டுடணும்.

கவலைப்படாத அக்கா என்னால உன் வாழ்க்கைக்கு எந்த பிரச்சனையும் வராது.
நான் இந்த முடிவு எடுத்ததற்கு காரணம் கூட ஒரு வகையில் நீதான். எதிர்பார்க்காமல் திடீர்னு அன்னைக்கு ஃபோன் பண்ணி மீட் பண்ணனும்னு சொன்னான் அர்ஜுன்.

அப்புறம்.

அன்னைக்கு நைட் மீட் பண்ணலாம்னு சொன்னான். உனக்கு வாக்கு கொடுத்ததினால் நான் வேற யார் கூடவும் நான் ஒன்னும் பண்ணல. அன்னைக்கு நைட்டு தான் நான் எஸ்கார்ட் புக் பண்ணி இருந்தேன்.

அடிப்பாவி. அது எல்லாம் அர்ஜுன் கிட்ட சொல்லிட்டியா.

ஆமாம்.

அச்சச்சோ, அர்ஜுன் என்னடி சொன்னாரு.

அவன் நம்ம ரெண்டு பேருக்கும் செட் ஆகாதுன்னு சொல்லிட்டு போயிட்டான்.

சரி அப்புறம் அன்னைக்கு நைட்டு நீ என்று இழுத்தாள் வசுந்தரா.

கவலைப்படாத அக்கா, நான் ஒன்னும் பண்ணல. அதுக்கு காரணம் அர்ஜுன் தான். எனக்கு அவனை ரொம்ப புடிச்சிருக்கு. அதனாலதான் அவன் கூட ரிலேஷன்ஷிப்ல இருக்கணும்னு நினைக்கிறேன்.

தேங்க் காட், இதுக்கு ஒரு நாளும் உங்க மாமாவும் சம்மதிக்க மாட்டாரு அர்ஜுனன் சம்மதிக்க மாட்டாரு.

அதையும் தான் பார்க்கலாமே.

உன்ன திருத்தவே முடியாது.

ஓகே அக்கா நீ டயர்டா இருப்ப தூங்கு, குட் நைட்.

குட் நைட் என்று சொல்லிவிட்டு வசுந்தராவும் படுத்தாள். வெகு நேரமாக சிந்தித்துக் கொண்டிருந்தாள் வசுந்தரா. கல்யாணமே வேண்டாம்னு சொன்னவ இப்ப பண்ணிக்கரேன்னு சொல்றா, அதுவும் அர்ஜுன் மாதிரி ஒரு நல்ல பையன் கிடைக்கிறதுக்கு உண்மையாவே இவ கொடுத்து தான் வச்சிருக்கணும். எப்படியாவது பேசி இவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வச்சிடனும் என்று யோசித்துக் கொண்டே அப்படியே தூங்கி விட்டாள்.

மறுநாள் காலை டிபன் சாப்பிட்டுவிட்டு தன் வீட்டிற்கு கிளம்புவதாக கூறினாள்.

ஏன்மா, ஈவினிங் தான் போயேன் என்றார் தனலட்சுமி.

ஈவினிங்ல திடீர் திடீர்னு மழை வருது மா. இப்ப போனா சரியா இருக்கும்னு நினைக்கிறேன்.

அதற்கு மேல் யாரும் மறுப்பு சொல்லாததால் மந்திரா காலேஜுக்கு போகும்போது பஸ் ஸ்டாண்டில் விட்டாள். அங்கு இருந்து பஸ் பிடித்து சென்றாள் வசுந்தரா.

காலேஜுக்கு சென்ற மந்த்ராவுக்கு தன் மாமாவிடம் பேச வந்ததையே மறந்து விட்டோமே என்று நினைத்து மெசேஜ் செய்தாள்.

ஹலோ மாமா, குட் மார்னிங். நீங்க எனக்கு ரிப்ளை பண்ணனும்னு அவசியம் இல்ல. நீங்க நான் நேத்து பேசுனதுல கோபமா இருப்பீங்கன்னு நினைக்கிறேன். நான் ஒரு முக்கியமான விஷயம் பேச வந்தேன், அது சொல்ல மறந்துட்டேன். வர சண்டே அக்காவோட பர்த்டே அதுதான் உங்க கிட்ட சொல்றதுக்கு நேரா வந்து பேசினேன். மற்ற விஷயங்கள் எல்லாம் பேசவே அத பத்தி சொல்ல மறந்துட்டேன். பை, டேக் கேர் ஆஃப் மை சிஸ்டர். ஷீ ஈஸ் பிரெஷ்யியஸ். என்று மெசேஜ் செய்துவிட்டு ஃபோனை சைலன்டில் போட்டுவிட்டு காலேஜுக்குள் சென்றாள் மந்த்ரா.

நம்பரை சேவ் செய்ததால் மந்த்ரா என்று வரவே, அதை ஓப்பன் செய்ய அவனுக்கு கடுப்பாக இருந்தது. இருப்பினும் ஒருவேளை வசுந்தரா அவளுடைய ஃபோன் சார்ஜ் இல்லை என்று மந்த்ராவின் ஃபோனில் இருந்து மெசேஜ் செய்கிறாளோ என்று நினைத்து அதை ஓப்பன் செய்தான் ஆதித்யா.

மெஸேஜை படித்தவன்.

தேங்க்ஸ் ஃபார் தி இன்ஃபர்மேஷன். டோண்ட் மெஸேஜ் ஆர் கால் அன்லெஸ் இட் ஈஸ் ரிகார்டிங் வசுந்தரா(தகவலுக்கு நன்றி, வசுந்தராவை பற்றி இருந்தாலே தவிர இதுக்கு மேல கால் இல்ல மெஸேஜ் பண்ணாதீங்க, ) என்று ரிப்ளை செய்தான் ஆதித்யா.



பாகம் -52



மெசேஜை பார்த்து வருத்தமாக இருந்தாலும், தன் அக்காவிற்காக அமைதியாக இருந்து விட்டாள்.



ரிப்ளை கூட செய்யாமல் அமைதியாகவே ஃபோனை வைத்து விட்டாள் மந்தரா.



மாமாவுக்கு விஷயம் தெரிஞ்சிருச்சு அது போதும், அக்காவுக்கு ஏதாவது வாங்கித் தருவாரு. அக்கா சந்தோஷமா இருந்தா அதுவே போதும். யார் என்னை பத்தி என்ன நெனச்சாலும் எனக்கு கவலை இல்லை என்று தன்னிடமே சொல்லிக் கொண்டாள்.



ஆதித்யா அன்று சீக்கிரமாகவே கம்பெனிக்கு சென்று விட்டான். சிஇஓ பதவி வேறு வழங்கப்பட்டதால் ஏற்கனவே இருக்கும் வேலைகளையும் சேர்த்து இப்பொழுது பன்மடங்கு வேலையாகி விட்டது. கம்பெனியில் வேலை அதிகமாக இருந்ததால் அவனால் அவன் வீட்டில் இருக்கும் ஆபீஸ் ரூமுக்கு சென்று தன் காதலி ஆன ஷைலஜாவிடம் கூட பேசவோ அவ்வளவு ஏன் பார்க்க கூட நேரம் இல்லை. அது ஓரளவுக்கு அவனுடைய மனநிலையை மாற்றினாலும் இன்னும் அவன் ஆழ்மனதில் அந்த டெடி பேர் தான் தன் ஷைலஜா என்று நினைத்துக் கொண்டிருந்தான். அது டெடி பேர் தான் என்று அவனுக்கே தெரிந்தாலும். அவனுடைய கண்ணுக்கு அது ஷைலஜாவாகத் தான் தெரியும்.



வசுந்தரா வீட்டிற்கு வந்ததும்,



என்னமா அதுக்குள்ளேயே வந்துட்ட, என்றார் மகேஸ்வரி.



வாங்கிட்டு வந்த திங்ஸ் கொடுத்துட்டு வர்றதுக்கு தான் அத்தை போனேன். கொடுத்துட்டேன் அதான் ஒரு நைட் ஸ்டே பண்ணிட்டு வந்துட்டேன்.



சரி மா, டிபன் சாப்டியா.



சாப்பிட்டேன் அத்தை. நீங்க.



நானும் சாப்பிட்டேன் மா சமையல் கூட முடிஞ்சிடுச்சு.



ஓ ஓகே, இவர் கிளம்பிட்டாரா அத்தை.



ஆமாம்மா இன்னைக்கு காலையில சீக்கிரமாவே கிளம்பிட்டான். டிபன் கூட சாப்பிடல. காஃபி மட்டும் குடிச்சிட்டு கிளம்பிட்டான்.



ஓ சரி அத்தை.



வேலை எதுவுமே இல்ல மா. நீ போய் ரெஸ்ட் எடு.



டயர்டா இருந்தா தானே அத்தை ரெஸ்ட் எடுக்குறதுக்கு. நான் தான் வேலையே பண்ணாம வீட்டிலேயே ரெஸ்ட் எடுத்துக்கிட்டு இருக்கேனே.

அன்னியன் படத்துல சொல்லுவார் இல்ல சார்லி சார் ரெஸ்ட் எடுத்து ரெஸ்ட் எடுத்து டயர்டு ஆகி ரெஸ்ட் எடுத்துக்கிட்டு இருக்கேன். அந்த மாதிரி தான் நானும் என்று சொல்லி சிரித்தாள் வசுந்தரா .



ஏம்மா அப்படி எல்லாம் சொல்ற.



அத்தை ஒன்னு கேட்கவா.



கேளுமா.



நான் வேலைக்கு போகட்டுமா.



தாராளமா போ மா. உனக்கு என்ன விருப்பமோ அந்த வேலைக்கு போ.



எனக்கு கம்பெனி எல்லாம் அவ்வளவா இன்ட்ரஸ்ட் இல்ல.



சரி அப்ப என்ன வேலைக்கு போக போற.



டீச்சரா போகலாம்னு நினைக்கிறேன்.



ஓ சூப்பர்மா. தாராளமா போயிட்டு வா.



சரிங்க அத்தை மாமா கிட்ட இன்னைக்கு ஈவினிங் கேட்கிறேன். அப்புறமா இவர்கிட்ட கேட்கிறேன்.



மாமா கிட்ட நான் சொல்லிக்கிறேன் மா நீ ஆதி கிட்ட மட்டும் கேட்டுக்கோ.



இல்ல அத்தை மாமா கிட்ட நான் பர்மிஷன் கேட்கலைன்னா அது தப்பா ஆயிடும் இல்ல.



அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா. இந்த மாதிரி ஃபார்மாலிட்டி பாக்குற ஆளுங்க இல்ல நாங்க எல்லாம்.



தெரியும் அத்தை. வந்த கொஞ்ச நாளிலேயே இதெல்லாம் நான் தெரிஞ்சுகிட்டேன். எங்க வீட்ல இருக்கும் போது எங்க அப்பா கிட்ட எப்படி நான் கேட்டு செய்யுறேனோ, அதே மாதிரி தான் இங்க வந்து அப்புறமா என்னோட அப்பா அம்மா மாதிரி உங்க ரெண்டு பேர் கிட்டயும் எல்லாத்தையும் கேட்டு செய்யணும்னு நினைக்கிறேன்.



ரொம்ப சந்தோஷம்டா கண்ணு என்று சொல்லி அவளைக் கட்டிக் கொண்டார் மகேஸ்வரி.



பிறகு தன் ரூமிற்கு வந்து ஒரு படம் பார்த்தாள். பின்னர் தன் ஃபோனை பார்த்தாள். காலையில் அவள் வீட்டிற்கு வந்தவுடன் ஆதித்யாவுக்கு அனுப்பிய மெசேஜையே அவன் இன்னும் பார்க்கவில்லை.



நான் வீட்டிற்கு வந்து விட்டேன் ஃப்ரீயா இருக்கும்போது கால் பண்ணுங்க என்று மெசேஜ் அனுப்பி இருந்தாள் வசுந்தரா.



புளூ டிக்கு கூட வரவில்லை.



ரொம்ப பிசியா இருக்காரு போல என்று நினைத்துக் கொண்டாள் வசுந்தரா.



மதியமாக ஆதித்யா தன் அம்மாவிற்கு ஃபோன் செய்தான்.



சொல்லுப்பா, சாப்பிட்டியா.



சாப்பிட்டுவிட்டேன் அம்மா, அம்மா வர வெள்ளிக்கிழமை மத்தியானமா ஆபீஸ்க்கு கிளம்பி வரீங்களா.



எதுக்குப்பா.



வர சண்டே வசுந்தராவோட பர்த்டே என்று தெரிஞ்சது.



ஆமா ஆதி நானே உன்கிட்ட சொல்லனும்னு நெனச்சேன் பாரேன் மறந்துட்டேன். நல்ல வேளை உனக்கு யார் சொன்னது.



வசுந்தராவோட தங்கச்சி சொன்னா.



ஓ, மந்திரா சொன்னாளா.



ஆமாம்மா.



அந்த பொண்ணு கூட ரொம்ப நல்ல பொண்ணா தெரியுறா. நம்ம அர்ஜுனுக்கு அந்த பொண்ண கல்யாணம் பண்ணி வச்சா நல்லா இருக்கும்னு தோணுது.



மிச், அம்மா எதுக்கு இப்ப இதெல்லாம் பேசுறீங்க.



ஆமா நீ கல்யாணம் பண்ணிக்கிட்டதே பெரிய விஷயம், இதுல அதே வீட்ல உன் தம்பிக்கும் பொண்ணு எடுக்கணும்னு சொன்னா நீ ஒத்துக்கவா போற.



அம்மா நான் பேச வந்ததை முதலில் கேளுங்க.



சரி சொல்லுப்பா.



நான் வசுந்தராவுக்கு சர்ப்ரைஸா கிஃப்ட் வாங்கலாம்னு நினைக்கிறேன். அதுக்கு அப்புறமா சின்னதா ஒரு பர்த்டே பார்ட்டி அரேஞ்ச் பண்ண போறேன்.



ஓ சூப்பர் சூப்பர்.



அதனால கிஃப்ட் வாங்குவதற்கு நீங்க என் கூட வாங்க.



சரிப்பா வரேன் நான் அவளுக்கு ஒரு புடவை வாங்கி தரேன்னு சொல்லி இருக்கேன்.



சரிமா வெள்ளிக்கிழமை நான் கால் பண்ணா அப்புறமா நீங்க கிளம்பி வாங்க. அவளுக்கு இந்த விஷயம் தெரிய வேண்டாம்.



சரிப்பா சரி.



எதேச்சையாக கீழே இறங்கி வந்த வசுந்திரா,



தன் மாமியார் யாரிடமோ பேசுவது தெரிந்தது.



தன் மகன்கள் இருவரில் யாரிடமோ ஒருவரிடம் பேசுகிறார் என்பது புரிந்தது.



வசுந்தராவை பார்த்தவுடன்,



ஓகே அர்ஜுன், ஓகே பை என்றார் மகேஸ்வரி.



தன் அம்மா சமாளிக்க தான் அப்படி சொல்கிறார் என்று புரிந்து கொண்ட ஆதித்யா சரிம்மா பை என்று சொல்லி ஃபோனை வைத்து விட்டான்.



அர்ஜுன் தம்பி பேசினாரா அத்தை.



ஆமாம்மா ஏன்.



இல்ல இவர்தான் நினைச்சேன்.



நீ வந்தது அவனுக்கு தெரியுமா தெரியாதா.



தெரியும் தான் என்று நினைக்கிறேன் அத்தை நான் மெசேஜ் அனுப்பிட்டேன். ஆனா அவரு அத பார்த்தாரா இல்லையான்னு தெரியல.



ஓ சரிமா, வேலையில பிஸியா இருந்திருப்பான்.



பிறகு இருவரும் பேசிக் கொண்டே லன்ச் சாப்பிட்டனர்.



எப்போது இரவு வரும், தன் கணவன் எப்போது வீட்டிற்கு வருவான் என்று நினைத்துக் கொண்டே தன் மாமியாருடன் சாப்பிட்டாள் வசுந்தரா.







தொடரும்....

அ. வைஷ்ணவி விஜயராகவன்.