• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

என்னுள் நீயடி, உன்னுள் நானடி. பாகம் -27

Vaishnavi Vijayaraghavan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2024
288
111
43
Maduravoyal
பாகம் 53

வசுந்தரா வெகு நேரமாக விழித்துக் கொண்டிருந்தாள். 11:30 மணி வரை விழித்து காத்திருந்தும் ஆதித்யா வரவில்லை.

மெசேஜ் அனுப்பலாமா வேண்டாமா என்று யோசித்தாள். பின்னர் வாய்ஸ் அனுப்பினாள்.

சாரி ஆதி, நீங்க வேலையா இருக்கும்போது டிஸ்டர்ப் பண்ணி இருந்தா என்னை மன்னிச்சிடுங்க. நான் நம்ம வீட்டுக்கு வந்துட்டேன். மெசேஜ் அனுப்பி இருந்தேன் நீங்க பார்க்கல அதான் இப்ப வாய்ஸ் மெசேஜ் அனுப்புறேன். ப்ளீஸ் ரிப்ளை பண்ணுங்க.

அதற்கும் ரிப்ளை இல்லை. நேத்து நான் என் தங்கச்சி மந்தராவுக்கு சப்போர்ட் பண்ணினதுனால தான் என் மேல கோபமாக இருக்காரோ என்று நினைத்துக் கொண்டாள்.
பின்னர் அப்படியே தூங்கி விட்டாள்.

12:30 மணி அளவில் வீட்டிற்கு வந்தான் ஆதித்யா. குளித்துவிட்டு வந்து சோஃபாவில் அமர்ந்து கொண்டு கட்டிலில் படுத்திருக்கும் தன் மனைவியை பார்த்துக் கொண்டிருந்தான்.

நல்ல வேளை நீ உன் தங்கச்சி மாதிரி இல்ல.
தேங்க் காட். நிறைய முறை வசுந்தரா பேசுவதிலும் அவனுக்கு ஷைலஜா நினைப்பு வருவதால் தன்னையும் அறியாமல் தன் மனைவியை காதலித்துக் கொண்டிருந்தான். இப்போது கூட ஷைலஜாவின் முகம் வசுந்தராவின் முகத்திற்கு பதிலாக அவன் கண் முன் வந்து சென்றது.

மெல்ல சென்று அவள் தலையை கோதி விட்டுவிட்டு, போர்வையை ஒழுங்காக போர்த்தி விட்டு அவள் பக்கத்தில் சென்று படுத்து உறங்கினான்.

இரண்டு மணி அளவில் பாத்ரூம் செல்ல எழுந்த வசுந்தரா தன் கணவன் ஆதித்யா பக்கத்தில் படுத்திருப்பதை பார்த்து மிகவும் சந்தோஷப்பட்டாள். ஏனென்றால் அவன் வழக்கமாக படுக்கும் இடத்தை விட சற்று நெருக்கமாக அவள் அருகில் படுத்திருந்தான். மேலும் அவனுக்கு அவள் மேல் கோபம் இருந்திருந்தால் கண்டிப்பாக சோஃபாவிலேயே படுத்து தூங்கி இருப்பான். அதனால அவள் மீது அவனுக்கு கோபம் இல்லை என்று தெரிந்து கொண்டாள்.

பாத்ரூம் சென்று விட்டு வந்து படுக்கும்போது அவனுடைய மூச்சுக்காற்று அவள் முகத்தில் மேல் படும் அளவிற்கு மிக நெருக்கமாக படுத்துக் கொண்டாள். ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததால் ஆதித்யாவிற்கு அவன் அவ்வளவு நெருக்கமாக படுத்தது தெரியவில்லை. பிறகு இருவரும் அப்படியே தூங்கினார்கள்.

காலை எழுந்து குளிக்க சென்றாள் வசுந்தரா.

குளித்துவிட்டு சோஃபாவில் அமர்ந்து இப்போது அவள் அவனை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாள்.

அப்போது கண் விழித்தான் ஆதித்யா.

குட் மார்னிங் ஆதி என்றாள்.

குட் மார்னிங் வசு.

நீங்க என் மேல கோவமா எல்லாம் இல்லையே.

அதெல்லாம் ஒன்னும் இல்ல.

இல்ல நேத்து நான் மெசேஜ் பண்ண அதுக்கு ரிப்ளை பண்ணல நைட் வாய்ஸ் மெசேஜ் அனுப்பினேன். அப்பவும் நீங்க ரிப்ளை பண்ணல அதான் நீங்க ஒருவேளை என் மேல கோவமா இருக்கீங்களா என்று நினைத்து பயந்துட்டேன்.

நேத்து ரொம்ப பிசியா இருந்தேன். ஆபீஸ் ஒர்க் நிறைய டென்ஷன் வேற அதனாலதான் உன்னோட மெசேஜ் ரிப்ளை பண்ண முடியல. இன்ஃபாக்ட் நீ கால் பண்ணி இருந்தா கூட ஒன் மினிட் உன்கிட்ட பேச டைம் இருந்திருக்கும் ஆனா என்னோட ஃபோனை எடுத்து மெசேஜ் பண்ண தான் டைம் இல்ல.

மெசேஜ பாத்தீங்களா.

பாப் அப் ஆகும்போது மெசேஜ் வந்திருக்குன்னு பார்த்தேன் ஆனா ஓப்பன் பண்ண டைம் இல்ல.
ஏதாவது முக்கியமான விஷயமா.

இல்ல இல்ல நான் வீட்டுக்கு வந்துட்டேன்னு சொல்றதுக்கு தான்.

ஓகே ஓகே.

அப்புறம் மந்திரா பேசுனத நீங்க மனசுல வச்சுக்காதீங்க.

வசு, இதுக்கு மேல இதை பத்தி நம்ம பேச வேண்டாமே. எனக்கு இன்ட்ரஸ்ட் இல்ல. தயவு செஞ்சு மந்திரா பத்தி என்கிட்ட இதுக்கு மேல எதுவும் பேசாத.

ஆனா ஆதி.

பிளீஸ் என்றான் ஆதித்யா மறுபடியும்.

அதற்கு மேல் ஒன்றும் பேசாமல் அமைதியாக இருந்து விட்டாள் வசுந்தரா.

அடுத்த இரண்டு நாட்கள் சாதாரணமாகவே சென்றது.

வெள்ளிக்கிழமை மதியம் தன் அம்மாவிற்கு ஃபோன் செய்து வர சொன்னான் ஆதித்யா.

மகேஸ்வரி வசுந்தராவிடம்,
அம்மாடி நான் கோவிலுக்கு போயிட்டு வரேன்,

நானும் உங்க கூட வரட்டுமா அத்தை.

வரலாம்மா ஆனா,

என்னாச்சு அத்தை.

இல்ல அஸ்வினி வீட்டுக்கு வரேன்னு சொன்னா. ரொம்ப பசிக்குதுன்னு சொன்னா. சரிமா நான் கோவிலுக்கு போறேன் அண்ணி வீட்ல தான் இருப்பாங்க உனக்கு ஏதாவது செஞ்சு தருவாங்கன்னு அவகிட்ட சொல்லிட்டேன்.

ஓ அப்படியா, சரி அத்தை நான் பார்த்துக்கிறேன் நீங்க போயிட்டு வாங்க.

சரிமா உனக்கு எதுவும் பிரச்சனை இல்ல இல்ல.

அச்சச்சோ எனக்கு அதெல்லாம் ஒன்னும் இல்ல அத்தை. மந்திரா மாதிரி தான் எனக்கு அஸ்வினியும்.

சரி மா சந்தோஷம். நீ பாத்துக்கோ நான் சீக்கிரமா வந்துடுறேன்.

சரிங்க அத்தை பை.

மகேஸ்வரி காரில் சென்றதும், வசுந்தரா தன் நாத்தனாருக்காக சாண்ட்விச் ரெடி செய்து வைத்திருந்தாள். அவள் வந்ததும் சூடாக போட்டுக் கொடுக்கலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தாள்.

அரை மணி நேரத்திற்கு பிறகு வந்த அஸ்வினி.

ஹாய் அண்ணி குட் ஈவினிங் என்றாள்.

குட் ஈவினிங் அஸ்வினி. ஹவ் வாஸ் யுவர் டே.

குட் அண்ணி,

ரொம்ப பசியா இருக்கியா, இரு நான் போய் சூடா சாண்ட்விச் கொண்டுவரேன்.

பசியா பசியெல்லாம் ஒன்னும் இல்லையே அண்ணி.

அப்போது சரியாக அஸ்வினியின் ஃபோன் அடித்தது.

எடுத்து ஹலோ சொல்லுங்க அம்மா என்றாள்.

அஸ்வினியிடம் சுருக்கமாக விஷயத்தை சொன்னார் மகேஸ்வரி.

அண்ணியோட பர்த்டேக்காக சர்ப்ரைஸாக அண்ணா கிஃப்ட் வாங்க போகிறார், அதனால் என்னை கடைக்கு கூப்பிட்டு இருக்கிறார். நீ அண்ணிகிட்ட உளறிவிடாதே, உனக்கு பசிக்குது ஏதாவது செஞ்சு கொடுக்க சொல்லிவிட்டு நான் கோவிலுக்கு போறேன்னு வந்தேன்.

என்ன முதலிலேயே சொல்ல மாட்டீங்களா .

ஏன் உளறிட்டியா.

இல்ல இல்ல, எனக்கு பசிக்கலைன்னு.

அதெல்லாம் எனக்கு தெரியாது ஏதாவது சொல்லி சமாளி என்று சொல்லி ஃபோனை வைத்து விட்டார் மகேஸ்வரி.

ஃபோனை வைத்துவிட்டு தன் அண்ணியிடம் வந்து,

சாரி அண்ணி நான் அம்மாகிட்ட பசிக்குதுன்னு சொன்னது உங்க கிட்ட சொல்லிட்டாங்களா.

ஆமாமா ஏன்.

இல்ல அண்ணி, நான் பசிக்குது ஏதாவது செஞ்சு வைங்க அம்மா வீட்டுக்கு வரேன்னு சொன்னேன், அதுக்கு அம்மா போடி நான் கோவிலுக்கு கிளம்பனும் அப்படின்னு சொன்னாங்க. சரி அதனால வீட்ல எதுவும் இருக்காதுன்னு நினைச்சு என் பிரெண்ட்ஸ் கூட சேர்ந்து சமோசா சாப்பிட்டு வந்துட்டேன் என்றாள் அஸ்வினி.



பாகம் 54



ஓ அதனால என்னம்மா. பரவால்ல, கொஞ்ச நேரம் கழிச்சு சாப்பிடுறியா.



ஓகே அண்ணி, சாரி அண்ணி.



எதுக்குமா சாரி எல்லாம் சொல்ற. நான் செஞ்சு வெச்சிருப்பேன் உனக்கு தெரியாது இல்ல.



சரி கொஞ்ச நேரம் கழிச்சு, நம்ம ரெண்டு பேரும் சாப்பிடலாம் அண்ணி.



ஓகே மா, நீ போய் ரெஃப்ரெஷ்ஷா ஆகு, நானும் கொஞ்ச நேரம் என் ரூம்ல போய் புக்ஸ் படிச்சிட்டு அப்புறமா வரேன்.



ஓகே அண்ணி.



அவள் என்னதான் சமாளித்தாலும் எதையோ மறைக்கிறாள் என்று புரிந்து கொண்டாள் வசுந்தரா.



ஆதித்யா சொன்ன கடைக்கு வந்தார் மகேஸ்வரி.



ஆதித்யா வசுந்தராவுக்கு டைமண்ட் நெக்லஸ் கம்மல் மோதிரம் பிரேஸ்லெட் ஒரு செட்டாக வாங்கினான்.



மகேஸ்வரி சந்தோஷப்பட்டார். தன் மகனுக்கு தன் மருமகள் மேல் காதல் அன்பு பாசம் எல்லாம் வந்து விட்டது. ஆகையால் தான் இவ்வாறு வாங்குகிறான் என்று நினைத்துக் கொண்டார்.



மூன்று நான்கு டிசைன்களை பார்த்துவிட்டு, என் அம்மாவிடம் எது அவளுக்கு சரியாக இருக்கும் என்று கேட்டு அதை வாங்கினான் ஆதித்யா.



நகை கடையில் பர்சேஸ் முடிந்ததும் சரிமா நான் ஆபீஸ்க்கு போயிடறேன். நானே வச்சுக்கிறேன். சாட்டர்டே நைட் எடுத்துட்டு வரேன் வீட்டுக்கு.



இல்லடா ஆபீஸ்ல எல்லாம் எதுக்கு சேஃபா இருக்காது. நான் வீட்டுக்கு எடுத்துட்டு போறேன் பீரோவில் வைக்கிறேன். சாட்டர்டே ஈவினிங் உன்கிட்ட கொடுக்கிறேன்.



ஓகே அம்மா. சரி நான் கிளம்பவா.



உன் வேலை முடிஞ்சதும் கிளம்பறேன்னு சொல்ற.



ஏம்மா வேற என்ன வாங்கணும். உங்களுக்கு ஏதாவது வாங்க வேண்டி இருக்கா.



எனக்கு எதுவும் வேண்டாம். என் மருமகளுக்கு ஒரு பட்டுப் புடவை எடுக்க நினைக்கிறேன்.



நீங்க வேற எதுக்கு மா தனியா கொடுக்கணும். நம்ம எல்லாரும் சேர்ந்து இதை கொடுக்கலாம்.



ஏய் லூசாடா நீ. இது நீ உன் பொண்டாட்டிக்காக வாங்குறது. நானும் அப்பாவும் கொடுக்குறதுக்கு ஒரு புடவை வாங்கலாம்னு நினைக்கிறேன். அதுக்கு என்கூட நீ வா.



சரிமா சீக்கிரமா முடிச்சிருவீங்களா.



ஏன்டா நிறைய சீக்கிரமா தானடா முடிச்சேன் அந்த மாதிரி முடிச்சிடுவேன்.



நகை எல்லாம் சீக்கிரம் முடிச்சிடுவீங்க. புடவைனா லேட் ஆகும்னு தோணுது.



ஒரு நாளாவது என் கூட போய் ஷாப்பிங் வந்து இருந்தா தானே தெரியும். உங்க அப்பாவ கேட்டு பாரு, நான் எவ்வளவு சீக்கிரமா ஷாப்பிங் பண்ணுவேன்னு.



சரிம்மா வாங்க. ஆறு மணிக்கு நான் கம்பெனியில் இருக்கணும். மீட்டிங் இருக்கு. இங்க இருந்து எனக்கு போறதுக்கு ஹாஃப் அன் ஹவர் ஆகும். அதனால 5:15 வரைக்கும் உங்களுக்கு டைம் என்றான் ஆதித்யா.



உன் பொண்டாட்டி கலரை கூட சொல்லிட்டா. அதனால போன உடனே எடுத்திடலாம்.



என்ன கலர் சொன்னா.



பேண்டா ஆரஞ்சு வித் டார்க் கிரீன் பார்டர்.



ஓ ஓகே ஓகே.



பிறகு பட்டு புடவை கடையில் அரை மணி நேரத்திற்குப் பிறகு புடவை எடுத்தனர்.



தன் அம்மாவிற்கும் தன் தங்கைக்கும் ஒரு ஒரு பட்டுப் புடவை எடுத்தான் ஆதித்யா.



எங்களுக்கு எதுக்குப்பா என்று மகேஸ்வரி சொன்னாலும் மனதிற்குள் மிகவும் சந்தோஷப்பட்டார்.



எனக்கு இந்த ரெண்டு கலரும் புடிச்சி இருக்கு அம்மா. உங்களுக்கும் அஸ்வினிக்கும் இது ரெண்டும் நல்லா இருக்கும். எடுத்துக்கோங்க.



சரிப்பா என்று சொல்லி அனைத்தையும் பில் போட்டனர். ஆதித்யாவே அனைத்திற்கும் பே செய்தான்.



ஆதி நான் வாங்குற கிஃப்ட் இந்த புடவை. இதுக்கு நான் பில் பே பண்றேன்.



அம்மா, நீங்க வாங்குனா என்ன நான் வாங்குனா என்ன எல்லாம் ஒன்னு தான்.



இல்ல இல்ல நான் அவகிட்ட நான் தான் வாங்கி தருவேன்னு சொன்னேன்.



சரி மா அப்புறமா எனக்கு ஜி பே பண்ணிடுங்க.



சரி என்று சொல்லி, ஷாப்பிங் முடித்துவிட்டு தன் அம்மாவை டிரைவருடன் வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டு தன் ஆபீஸ்க்கு சென்றான் ஆதித்யா.



போகும் வழியில், கோவிலை பார்த்த மகேஸ்வரி.



கோவிலுக்கு போறோம்னு பொய் சொல்லிட்டு வந்துட்டோம். அதை எதுக்கு பொய்யாக்கனும். உண்மையிலேயே கோவிலுக்கு போயிட்டு போயிடலாம் என்று நினைத்த மகேஸ்வரி டிரைவரிடம் சொல்லி கோவிலுக்கு போகச் சொன்னார்.



கோவிலுக்கு போய் அர்ச்சனை செய்து பிரசாதம் வாங்கிக்கொண்டு தன் வீட்டிற்கு சென்றார்.



வசுந்தரா அவளுடைய ரூமில் இருப்பதை பார்த்துவிட்டு, வாங்கிய பொருட்கள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு தன்ரூமில் வந்து கப்போர்ட்டில் வைத்தார் மகேஸ்வரி.



பிறகு பிரசாதத்தை மட்டும் எடுத்துக்கொண்டு மாடிக்கு சென்று தன் மகள் மற்றும் மருமகளுக்கு கொடுத்தார்.



பிறகு வசுந்தரா கீழே சென்று கிச்சனில் சாண்ட்விச் செய்து எடுத்து வருவதற்குள், அஸ்வினியிடம் அவரும் ஆதித்யாவும் சேர்ந்து வாங்கியதையும் புடவை பற்றியும் கூறினார். மேலும் இன்று காண்பித்தால் அனைத்தையும் காட்ட வேண்டி வரும் அதனால் ஞாயிற்றுக்கிழமையை பார்த்துக் கொள்ளலாம் என்று சொன்னார்.



ஓகே அம்மா என்றாள் அஸ்வினி.



வசுந்தரா சாண்ட்விச் செய்து மாடிக்கே எடுத்து வர அஸ்வினி ரூமில் அமர்ந்து மூவரும் பேசிக்கொண்டே சாப்பிட்டனர்.



ஒரு வாரமாகவே வசுந்தராவிற்கு மயக்கமாக இருந்தது. அப்போதுதான் மாதாந்திர தேதி தள்ளி போனதை கவனித்தாள். எதையும் உறுதிப்படுத்தாமல் யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று நினைத்த வசுந்தரா மறுநாள் கடைக்கு சென்று பிரக்னன்சி டெஸ்ட் ஸ்டிக்கை வாங்க நினைத்தாள். அதுவும் இல்லாமல் ஒரே ஒரு நாள் மட்டுமே ஆதித்யாவின் ஃபிரண்ட் விக்னேஷ் வீட்டில் ஆதித்யாவும் வசுந்தராவும் ஒன்றாக இருந்தனர். அதில் எப்படி தங்கியிருக்கும் என்று அவளையே கேட்டுக் கொண்டாள்.



அன்று இரவு ஆதித்யாவிடம் அந்த விஷயத்தை சொல்லி விட வேண்டும் என்று நினைத்தாள். மேலும் அவள் சந்தேகத்தையும் சொல்லிவிட நினைத்தாள்.



அன்றும் ஆதித்யா பன்னிரண்டு முப்பது மணிக்கு தான் வந்தான். வழக்கம்போல அவள் தூங்கி விட்டாள். காலை எழுந்த வசுந்தரா அவன் தூங்கிக் கொண்டிருப்பதை பார்த்தாள். காலை முதல் யூரினில் டெஸ்ட் எடுத்தால் சரியாகத் தெரியும் என்று கூகுளில் பார்த்தாள். அதனால் நாளை டெஸ்ட் எடுத்துக் கொள்ளலாம் என்று நினைத்தாள்.



ஆதி, நான் பிரக்னண்டா இருக்கிறேனா இல்லையா என்று தெரியவில்லை. ஆனா நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். உங்கள மாதிரி நல்ல மனசுள்ள குழந்தை பிறக்கணும். அது ஆணா இருந்தாலும் பரவால்ல பொண்ணா இருந்தாலும் பரவால்ல என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டே அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள் வசுந்தரா.







தொடரும்....

அ. வைஷ்ணவி விஜயராகவன்.