• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

என்னுள் நீயடி உன்னுள் நானடி, பாகம் 28

Vaishnavi Vijayaraghavan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2024
288
111
43
Maduravoyal
அப்போது கண் விழித்தான் ஆதித்யா.

அவளைப் பார்த்து குட்மார்னிங் வசு என்றான்.

குட் மார்னிங் ஆதி.

சாரி வசு, நேத்து நைட்டு வர்றதுக்கும் லேட் ஆயிடுச்சு.

பரவால்ல ஆதி, ஆனா உங்க கிட்ட பேசணும்னு ரொம்ப நேரம் முழிச்சிட்டு இருந்தேன்.

இன்னைக்கு லேட் பண்ண மாட்டேன் பிராமிஸ்.

உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்.

என்ன சொல்லு.

இல்ல இப்ப இல்ல, இன்னைக்கு நைட்.

ஓகே, என்று சொல்லிவிட்டு அவன் ஆஃபீசுக்கு கிளம்பி சென்றான்.

தன் மாமியாரிடம், கடைக்குச் சென்று சில பொருட்கள் வாங்க வேண்டும் என்று சொல்லி விட்டு சென்றாள் வசுந்தரா.

தனக்குத் தேவையான சில பொருட்களை வாங்கிக் கொண்டு அப்படியே பிரக்னன்சி டெஸ்ட் ஸ்டிக்கையும் வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்தாள்.

அவளுக்கு ஆர்வம் தாங்க முடியவில்லை. ஸ்டிக்கு போனா போகுதுன்னு இப்போ ஒரு முறை டெஸ்ட் பண்ணி விடலாமா என்று நினைத்தாள்.
இல்ல இல்ல வேண்டாம், ஃபர்ஸ்ட் யூரின்ல எடுத்தா பெஸ்ட் ரிசல்ட் கிடைக்கும் என்று சொல்கிறார்கள், ஒருவேளை இப்ப எடுத்துட்டு லைன் கிளியரா தெரியலனா அப்புறம் கஷ்டம் ஆயிடும். அதுவும் இல்லாம நாளைக்கு என்னோட பர்த்டே, என் பர்த் டே அன்னைக்கு நல்ல ஒரு விஷயம் நடந்தா அந்த சந்தோஷம் தானே என்று தன்னிடமே சொல்லிக் கொண்டாள்.

ஆனால் அன்று இரவு எப்பொழுது முடியும் காலை எப்பொழுது வரும் என்று அவளுக்குள் ஒரு ஆர்வம் இருந்தது. மேலும் தன் கணவன் பர்த்டேக்கு ஏதாவது தருவானா அவனுக்கு பர்த்டே பற்றி தெரியுமா என்றெல்லாம் சிந்தித்து கொண்டு இருந்தாள்.

பதினொன்றரை மணி அளவில் வீட்டிற்கு வந்த ஆதித்யா, தன் அம்மாவிடம் சென்று தன் மனைவிக்காக வாங்கிய கிஃப்ட்டை வாங்கிக்கொண்டு மெதுவாக படியேறி 11:50 மணி அளவில் தன் ரூமுக்கு சென்றான்.

அவனுக்காக விழித்து காத்திருந்தாள் வசுந்தரா.

லேப்டாப் பேக்கில் வைத்திருந்த கிஃப்டை தன் ஆபீஸ் ரூமில் வைத்து விட்டு அவள் பக்கத்தில் வந்த அமர்ந்தான்.

சாப்பாடு கொண்டு வரட்டுமா ஆதி.

நான் வரும்போது இப்ப சாப்பிட்டுட்டு தான் வந்தேன் வசு.

வெளியவே சாப்பிட்டு வந்துட்டீங்களா.

இல்ல இல்ல நான் 11:30க்கு வந்தேன் கீழேவே கை கால் முகம் கழுவிட்டு, அம்மா டின்னர் கொடுத்தாங்க சாப்பிட்டு விட்டு தான் மேல ஏறி வந்தேன்.

ஏன் ஆதி, அத்தையை டிஸ்டர்ப் பண்ணீங்க. நான் வந்து கொடுத்திருப்பேன்ல. எனக்கு ஒரு கால் பண்ணி இருக்கலாம் இல்ல.

இல்லை 2 டேஸ் பார்க்கிறேன் நீ தூங்கிட்டு இருந்த. அதனால நீ தூங்கி இருப்பியோ, டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு நினைச்சேன்.

அதுக்காக அத்தை டிஸ்டர்ப் பண்ணுவீங்களா.

இல்ல இல்ல அம்மாவை நான் எழுப்பல அம்மாவே வெளிய வந்து கதவை திறந்தாங்க.

ஓகே, இதுக்கு மேல எனக்கு கால் பண்ணுங்க நான் வந்து கதவை திறக்கிறேன். காலிங் பெல் அடிக்காதீங்க. மத்தியானத்தில் கூட அத்தை தூங்குவதில்லை, சப்போஸ் அவங்க தூங்கி இருந்து நீங்க காலிங் பெல் அடிச்சதுனால அவங்க டிஸ்டர்ப் ஆகி இருந்தா.

ஓகே மேடம் ஓகே உங்க விருப்பப்படியே இதுக்கு மேல கால் பண்றேன் என்று சொல்லி சிரித்தான் ஆதித்யா.

கிண்டல் பண்ணாதீங்க ஆதி.

இல்ல இல்ல உண்மையா தான் சொல்றேன், என்று அவன் பேசிக் கொண்டிருக்கும்போதே அவன் வாட்சில் அலாரம் அடித்தது.

அவளை ஹக் செய்து ஹாப்பி பர்த்டே வசு என்றான் ஆதித்யா.

ஸ்மைல் செய்து, தேங்க்யூ சோ மச் ஆதி.
நீங்க நம்புவீங்களா நம்ப மாட்டீங்களா எனக்கு தெரியல, ஆனா இந்த வருஷம் முதல் விஷ் உங்ககிட்ட இருந்து வரணும்னு நினைச்சேன். தேங்க் காட், நான் நெனச்சபடியே கிடைச்சிடுச்சு. இந்த வருஷம் எனக்கு ரொம்ப நல்லா இருக்கும்னு நினைக்கிறேன் என்று சொல்லி அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.

ஒன் மினிட் என்று சொல்லிவிட்டு தன் ஆபீஸ் ரூமுக்கு சென்றான்.

தன் லேப்டாப் பேக்கிலிருந்து அந்த டைமண்ட் செட்டை எடுத்தான்.

என்னடா ரொம்ப ஓவரா பண்ற, என்னோட பர்த்டேக்கு ஒரே ஒரு டைமண்ட் ரிங் தான் கொடுத்த, இப்ப அவளோட பர்த்டேக்கு மட்டும் இவ்வளவு வாங்கி கொடுக்கிற.

ஷைலஜா, என்ன ஆச்சு உனக்கு. நம்ம ரெண்டு பேரோட ஃபிரண்டு தானே அவ. பிரண்டுக்கு கிஃப்ட் கொடுக்கிறது இப்படித்தான் நினைப்பியா.

நீ பிரண்டு பிரண்டுன்னு சொல்லிட்டு ரொம்ப அதிகமா போற மாதிரி தெரியுது.

ஷைலு, நீ பொசசிவா இருக்க தெரியும், அதுக்காக என்னை சந்தேகப்படாதே.

சரி சரி நான் உன்னை நம்புறேன். என் சார்பா அவளுக்கு விஷ் பண்ணிடு.

தட்ஸ் மை ஷைலு, ஐ லவ் யூ டி.

ஐ லவ் யூ ஆதி, குட் நைட்.

குட் நைட் ஷைலு, என்று சொல்லி அந்த டெடி பேரை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து விட்டு ஜுவல்லரி பாக்ஸ் எடுத்துக்கொண்டு வெளியே வந்தான் ஆதித்யா.

என்னாச்சு ஆதி என்றாள் வசுந்தரா.

ஒன்னும் இல்ல நீ ஒரு நிமிஷம் கண்ணை மூடு.

ஓகே என்று கண்களை மூடி கொண்டாள் வசுந்தரா.

கழுத்திற்கு மட்டும் அந்த நெக்லஸ் ஐ போட்டு விட்டு, மற்ற ஜுவல்லரிகளை பாக்ஸோட அவள் மடியில் வைத்து,

இப்ப கண்ணை திற, என்றான் ஆதித்யா.

கண்களை திறக்கும் பொழுது அவள் முன்னால் கண்ணாடியை காண்பித்தான்.

அந்த டைமண்ட் நெக்லஸ் ஜொலித்தது.

எப்படி இருக்கு பிடிச்சிருக்கா, ஹாப்பி பர்த்டே என்றான்.

கண்கள் கலங்க அவன் தோளில் சாய்ந்து கொண்டு.

ஆதி, இதையெல்லாம் போட்டுக்குற அளவுக்கு நான் தகுதியானவளா என்று எனக்கு தெரியல. இதையெல்லாம் நான் டிவில பார்த்ததோடு சரி. எப்பவாது நகை கடைக்கு போனா கூட இந்த டைமண்ட் செக்ஷனுக்கு போய் பார்த்தது கூட இல்ல. இதையெல்லாம் வாங்கற வசதியும் எங்களுக்கு கிடையாது. வாங்க முடியாத விஷயத்தை எதுக்கு போய் பார்க்கணும்னு நாங்க பார்க்க கூட மாட்டோம். ஆனா அட்வர்டைஸ்மென்ட்ல வரும்போது பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்கும். இதையெல்லாம் எப்படி போடுறாங்க, இவ்வளவு திக்கா, இவங்களுக்கு கழுத்து வலிக்காதா அப்படின்னு நானும் என் தங்கச்சி மந்த்ராவும் பேசிப்போம் என்று சொல்லி சிரித்தாள்.

மந்திராவை பற்றி பேசியதால் அவன் அமைதியாக ஆனான்.

அவனுடைய முகம் மாறியதை கவனித்தவள்

சாரி சாரி, தெரியாம மந்திராவை பற்றி பேசிட்டேன் என்றாள் வசுந்தரா .

சரி உனக்கு புடிச்சிருக்கா இல்லையா அத முதல்ல சொல்லு என்றான் ஆதித்யா .



பாகம் 56



ஆதி, உண்மைய சொல்லனும்னா, எனக்கு வார்த்தையே தெரியல. எப்படி நான் பதில் சொல்லுவேன். பியாண்டு வேர்ட்ஸ் என்று சொல்லுவாங்க இல்ல. அதைத்தான் நான் இப்ப ஃபீல் பண்றேன். ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு.



ஸ்மைல் செய்தான் அதித்யா.



எனக்கு ஒரு டவுட் இருந்தது, உனக்கு இந்த நெக்லஸ் டிசைன் பிடிக்குமோ பிடிக்காதோன்னு,

எனக்கு இதெல்லாம் செலக்ட் பண்ண தெரியாது. அதனாலதான் அம்மாவ கூட்டிட்டு போய் செலக்ட் பண்ணினேன்.



அத்தையை கூட்டிட்டு போனீங்களா.



எப்போ.



வெள்ளிக்கிழமை மத்தியானம்.



ஓ இப்ப புரியுது, என்னடா கோவிலுக்கு நான் வரேன்னு சொல்லியும் அவங்க வேண்டாம்னு சொல்றாங்களே என்று யோசிச்சேன். அதுவும் இல்லாம இன்னைக்கு அஸ்வினி வேற வந்து உளறுனா பசிக்குது சாப்பிட்டேன் என்னமோ என்ற சொல்லி சிரித்தாள்.



கம்மல் பிரேஸ்லெட் அப்புறம் மோதிரம் எல்லாம் போட்டு பாரு.



அதெல்லாம் நாளைக்கு குளிச்சிட்டு போட்டுக்குறேன் ஆதி.



மோதிரம் சைஸ் சரியா இருக்கான்னு போட்டு பாரு.



ஓகே என்று சொல்லி போட நினைத்தவள்.



அவனிடம் அந்த மோதிரத்தை கொடுத்து, நீங்களே போட்டு விடுங்க என்று தன் விரல்களை நீட்டினாள்.



ஸ்மைல் செய்து கொண்டே அவளுக்கு போட்டு விட்டான் ஆதித்யா.



சரியாக இருந்தது.



எப்படி ஆதி, இவ்வளவு கரெக்டா வாங்கி இருக்கீங்க.



அதற்கும் ஸ்மைல் செய்தான்.



நான் கடைக்கு நேரா போய் வாங்கின மாதிரி இவ்ளோ கரெக்ட்டா இருக்கு சைஸ், இதுவும் அத்தை தான் சொன்னாங்களா.



இல்ல இல்ல, மோதிரம் நான் செலக்ட் செஞ்சேன். ஐ மீன் சைஸ் நான் தான் இதை சொன்னேன்.



எப்படி அவ்ளோ கரெக்ட்டா சொன்னீங்கன்னு கேட்கிறேன்.



சொன்னா நீ கோச்சுக்க கூடாது.



நான் ஏன் கோச்சுக்க போறேன்.



ஷைலஜாவோட சைஸ் இதுதான். நீயும் ஓரளவுக்கு அவ மாதிரியே இருக்கிறதுனால அந்த சைஸ் உனக்கு செட் ஆகும்னு தோணுச்சு. அதனாலதான் அந்த சைஸ் கேட்டு வாங்கிட்டு வந்தேன்.



அவ்வளவு நேரம் ஸ்மைல் செய்து கொண்டிருந்த வசுந்தரா, ஆதித்யா இவ்வாறு சொன்னதும் அமைதியாக ஆனாள். அவளுடைய முகம் மாறியது. பிறகு தன்னையே சமாதானம் செய்து கொண்டு கஷ்டப்பட்டு புன்னகையை வரவழைத்தாள். அதை புரிந்து கொண்ட ஆதித்யா பேச்சை மாற்றினான்.



நாளைக்கு எங்கெல்லாம் போகணும்னு சொல்லு.



நாளைக்கா.



ஐ மீன் இன்னைக்கு தான், விடிஞ்சதும் எங்கெல்லாம் போகணும்னு சொல்லு.



கோவிலுக்கு போகணும், முடிஞ்சா எங்க அப்பா அம்மாவை பார்த்துட்டு வரணும்.



அவ்வளவுதானா வேற எதுவும் வேண்டாமா.



போதும்.



நாளைக்கு ஃபுல் டே நா உன்கூட தான் ஸ்பென்ட் பண்ண போறேன். ஹாப்பியா.



ரொம்ப ரொம்ப ரொம்ப ஹேப்பி.



ஓகே நீ கேட்டதும் கிடைக்கும், நீ எதிர்பார்க்காததும் கிடைக்கும்.



என்னது,



அது சர்ப்ரைஸ்.



ஓகே ஆதி, நாளைக்கு நானும் உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் கொடுப்பேன்,



என்ன.



அது சர்ப்ரைஸா இல்லையான்னு எனக்கே நாளைக்கு தான் தெரியும்.



என்ன சொல்ற எனக்கு ஒண்ணுமே புரியல.



நாளைக்கு சொல்றேனே ஆதி,



ஓகே, சரி தூங்கலாமா. இன்னைக்கு ஆபீஸ்ல நிறைய வேலை ரொம்ப டயர்டா இருக்கு.



ஓகே ஆதி, குட் நைட்டு.



குட் நைட் என்று சொல்லிவிட்டு, அவளுடைய நெற்றியில் முத்தமிட்டு மறுபடியும் ஹாப்பி பர்த்டே டூ யூ மை டியர் வைஃப் என்று சொல்லிவிட்டு தூங்கினான் ஆதித்யா.



அன்றுதான் அவள் வாழ்க்கையிலேயே மிகவும் நல்ல நாளாக நினைத்தாள் வசுந்தரா.



ஆறு மணி அளவில் எழுந்த வசுந்தரா,



தன் ஹேண்ட்பேக் இல் இருந்து பிரக்னன்சி டெஸ்ட் ஸ்டிக்கை எடுத்துக் கொண்டு பாத்ரூமுக்கு சென்றாள். டெஸ்ட் செய்து பார்த்தாள்.



இரண்டு கோடுகள். அவள் கண்கள் விரிந்தது.

உதட்டில் சிரிப்பு மலர்ந்தது, மிகவும் சந்தோஷமாக இருந்தது.



அந்த டெஸ்ட் ஸ்டிக்கை எடுத்துக்கொண்டு, தன் கணவனுக்கு அவள் வாங்கி வைத்த ரிட்டன் கிப்ட் ஆன வாட்ச் உடன் சேர்த்து கிஃப்ட் ராப் செய்தாள்.



அவர் நமக்கு கிஃப்ட் கொடுத்துட்டாரு, இப்ப அவர் எழுந்த உடனே ரிட்டன் கிஃப்ட் என்று சொல்லி இதை கொடுத்திடலாமா.



இல்ல இல்ல வேண்டாம், இன்னைக்கு நைட்டு எல்லாம் முடிச்ச அப்புறமா கொடுக்கலாம். ஆனா அதுவரைக்கும் என் வாய் சும்மா இருக்குமான்னு தெரியலையே. இல்ல இல்ல உளறக்கூடாது.

ஆனா அப்பா அம்மாவை பார்த்தால் எப்படி நான் சொல்லாம இருப்பேன். இன்னைக்கு ஒரு நாள் தானே, எப்படியாவது நம்ம வாயை மூடி கிட்டு இருக்கலாம் என்று தன்னிடமே சொல்லிக் கொண்டாள்.



காலை எழுந்து குளித்துவிட்டு, தன்னிடமிருந்த ஒரு புது சுடிதாரை போட்டுக் கொண்டு கீழே இறங்கி சென்ற பூஜை செய்து தன் மாமனார் மாமியார் இடம் ஆசிர்வாதம் வாங்கினாள் வசுந்தரா.



நல்லா இருமா, சீக்கிரமா நல்ல செய்தி சொல்லுமா என்று வாழ்த்தினார்கள் இருவரும்.



பட்டுப் புடவை வைத்து கொடுத்தனர்.



தன்னிடமிருந்த கோல்ட் பிளவுஸ் போட்டுக் கொண்டு அந்த புடவையை உடுத்திக் கொண்டாள். பிறகு அனைவரும் கோவிலுக்கு சென்றனர். ஒரு காரில் ஆதித்யாவும் வசுந்தராவும், மற்றொரு காரில் அர்ஜுன் ஓட்ட வாசுதேவன், மகேஸ்வரி மற்றும் அஸ்வினி அனைவரும் சென்றனர். அஸ்வினியும் அர்ஜுனும் சேர்ந்து ஒரு மொபைல் ப்ரெசென்ட் செய்தனர். கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்த பூஜை செய்துவிட்டு ஆதித்யா வசுந்தராவை தவிர அனைவரும் வீட்டிற்கு வந்து விட்டனர்.



ஆதித்யாவும் வசுந்தராவும் அங்கிருந்து வசுந்தராவின் அம்மா வீட்டிற்கு சென்றனர்.



அங்கே சென்று அவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கினாள் வசுந்தரா. வசுந்தராவின் அப்பா அம்மா ஒரு ஸ்மார்ட் வாட்ச் வாங்கி கொடுத்தனர். மந்திரா ஒரு வெள்ளி பிரேஸ்லெட் வாங்கி கொடுத்தாள்.



அப்பா அம்மா இவ்வளவு காசு போட்டு எதுக்கு இதெல்லாம் என்றாள்.



நீ வேற தனியா கொடுக்கணுமா மந்த்ரா.



நீ கல்யாணம் ஆகி போனதிலிருந்து நான் உன்ன ரொம்ப மிஸ் பண்றேன் அக்கா. அதான் உனக்கு நல்ல கிப்ட்டா குடுக்கணும்னு தோணுச்சு. தங்கத்திலே வாங்கணும்னு ஆசைதான், ஆனா அவ்வளவு சேவிங்ஸ் கிட்ட இல்ல.



ஏண்டி இப்படி எல்லாம் பேசுற, என்று சொல்லி தன் தங்கையை கட்டிப்பிடித்துக் கொண்டாள் வசுந்தரா.



ஆதித்யா மந்த்ராவிடம் எதுவுமே பேசவில்லை. தன் மாமனார் மாமியாரிடம் மட்டும் பேசிக் கொண்டிருந்தான்.



லஞ்ச் அவர்கள் வீட்டில் சாப்பிட்டனர். வசுந்தரா மந்த்ராவிடம் ரூமில் பேசிக் கொண்டிருக்கும் போது,



அத்தை மாமா, நான் வசுந்தராவுக்காக சின்னதா ஒரு சர்ப்ரைஸ் பர்த்டே பார்ட்டி அரேஞ்ச் பண்ணி இருக்கேன். நீங்க மூணு பேரும் வந்துடுங்க. மந்திரா கிட்ட சொல்லிடுங்க என்றான் ஆதித்யா.





தொடரும்....

அ. வைஷ்ணவி விஜயராகவன்.









 

Vaishnavi Vijayaraghavan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2024
288
111
43
Maduravoyal