• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

என்னுள் நீயடி உன்னுள் நானடி பாகம் 30

Vaishnavi Vijayaraghavan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2024
288
111
43
Maduravoyal
பாகம் 59

அந்தப் பிரக்னன்சி ஸ்டிக்கை பார்த்த ஆதித்யாவின் கண்கள் விரிந்தது.

என்னது இது வசு,

அவன் அவ்வாறு ஆச்சரியப்படுவதை பார்த்த வசுந்தரா பயந்துவிட்டாள். கண்டிப்பாக அவனுக்கு அன்று இரவு அவர்கள் இருவரும் ஒன்றாக இருந்தது நினைவில் இல்லை.

ஆதி நான் சொல்றது ஒரு நிமிஷம் கேளுங்க.

உன் தங்கச்சி சொன்னா, நீ செஞ்சிட்டியா.

வாட்,

உன் மேல எவ்வளவு மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தேன், ஆனா நீ உன்னால நமக்கு டைவர்ஸ் ஆகுற இந்த ஒரு வருஷம் கூட பொறுத்துக்க முடியலையா.

போதும் ஆதி ஸ்டாப் இட், டோன்ட் ஜட்ஜ் மீ.

என் விரல் கூட உன் மேல படல, அப்புறம் இது எப்படி.

வசுந்தராவின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து ஓடியது.

இதற்கு மேல் இவள் என்ன சொன்னாலும் அவன் நம்ப மாட்டான் என்று தெரிந்து கொண்டாள். அதற்கு மேல் எதுவும் பேசி பிரயோஜனம் இல்லை என்று நினைத்தவள் தன் ஹேண்ட்பேக் மற்றும் ஃபோனை எடுத்துக் கொண்டு கீழே இறங்கினாள்.

நில்லு, எங்க போற? என்று கேட்பான் என்று நினைத்தவள் ஏமாற்றம் தான் அடைந்தாள்.

அவன் கோபமாக தன் ஆஃபீஸ் ரூமுக்கு சென்றான்.

இரவு நேரம் என்பதால் அனைவரும் தூங்கி விட்டிருந்தனர் இவள் வெளியில் சென்றதை யாரும் கவனிக்கவில்லை.

செக்யூரிட்டி என்னம்மா தனியா போறீங்க என்று கேட்டதற்கு,

கண்களை துடைத்துக் கொண்டு ஒன்னும் இல்ல அண்ணா, நாளைக்கு வந்து விடுவேன் எங்க அம்மா வீட்டுக்கு போறேன் அப்பாக்கு உடம்பு சரி இல்லையாம். ஃபோன் வந்துச்சு, கேட்டுட்டு போகாம இருக்க மனசு வரல.

சரிமா ஆதி சார் கிட்ட சொல்லியிருந்தீங்கன்னா அவரே கூட்டிட்டு போயிருப்பார் இல்ல?

இல்லன்னா அவர் கூட தூங்கிட்டாரு டிஸ்டர்ப் பண்ண வேணாம்னு தோணுச்சு.

சரிமா ஒரு ரெண்டு நிமிஷம் இங்கேயே இருங்க நான் போய் ஆட்டோ புடுச்சுட்டு வரேன்.

சரிங்க அண்ணா என்று சொல்லி அங்கு நின்று இருந்தாள் வசுந்தரா.

தெருமுனையில் இருந்து ஆட்டோ எடுத்து வந்தார் செக்யூரிட்டி.

தேங்க்ஸ் அண்ணா என்று செக்யூரிட்டி இடம் சொல்லிவிட்டு, தன் அம்மா வீட்டு அட்ரஸை சொல்லி ஆட்டோ டிரைவரிடம் தன் வீட்டிற்கு போகச் சொன்னாள் வசுந்தரா.

அடுத்த அரை மணி நேரத்தில் அவளுடைய அம்மா வீட்டில் இருந்தாள் வசுந்தரா.

தனலட்சுமி தான் வந்து கதவை திறந்தார்.

தன் மகளைப் பார்த்தவருக்கு அதிர்ச்சி.

என்னம்மா இந்த நேரத்துல வந்து இருக்க,

ஒன்னும் இல்லம்மா உங்கள எல்லாம் பாக்கணும் போல இருந்துச்சு.

அதுக்காக ஏம்மா இந்த நேரத்துல தனியா வந்து இருக்க.

இல்லம்மா தனியா வரல இவர் தான் விட்டுட்டு போனாரு.

மாப்பிள்ளை வந்தாரா எங்க,

இப்பதான் திரும்பி போனாரு இந்த தெரு திரும்பி இருப்பார்,

உள்ள கூட வராம இந்த நேரத்துல உன்னை வாசல் வரைக்கும் விட்டுட்டு போயிருக்காருன்னா ஏதாவது பிரச்சனையாமா.

அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா இன்னைக்கு பர்த்டே செலிப்ரேஷன் பண்ணிட்டு எனக்கு உங்க ஞாபகமாயிடுச்சு, அதனால கண்கள் கலங்கிட்டேன். நீ அழாத வேணும்னா நீ கொஞ்ச நாளைக்கு உங்க அம்மா வீட்ல இருந்துட்டு வான்னு சொல்லி அவரு தான் கூட்டிட்டு வந்து விட்டார்.

தன்மகள் சொல்வதில் எதுவும் உண்மை இல்லை என்று அவருக்கு புரிந்தது. ஏதோ பிரச்சனை அதை மறைக்கிறாள் என்று தெரிந்தது. அதற்கு மேல் அந்த நேரத்தில் பேச வேண்டாம் என்று நினைத்தவர்

சரிமா நீ போய் மந்திராவோட படு என்றார்.

சரிமா, சாரி உங்களை இந்த நேரத்துல டிஸ்டர்ப் பண்ணதுக்கு.

அதெல்லாம் ஒன்னும் இல்ல மா, நீ தூங்கி ரெஸ்ட் எடு கண்ணெல்லாம் கலங்கி இருக்கு, எனக்கு ரொம்ப கவலையா இருக்கு நாளைக்கு காலையில மத்ததை பேசிக்கலாம் நீ போய் இப்போ தூங்கு என்று சொல்லி அனுப்பிவிட்டு அவர் போய் தூங்கினார்.

ரூமிற்கு சென்ற போது மந்த்ரா நன்றாக தூங்கிக் கொண்டிருந்ததால், கட்டிலின் நடுவில் படுத்து இருந்தாள். கட்டிலில் இடம் இல்லை, அவளை தள்ளி படுக்க எழுப்ப வேண்டும் அதனால் டிஸ்டர்ப் செய்ய மனம் இல்லாமல் தரையில் பாய் போட்டு படுத்துக்கொண்டாள் வசுந்தரா .

படுத்துக்கொண்டு அவள் கணவன் சொன்னதை நினைத்துக் கொண்டாள். ஒரு நொடியில் எப்படி தன்னை தவறாக நினைத்து விட்டானே என்று நினைத்து வருந்தினாள்.

கடவுளே வந்து சொன்னால்தான் நம்புவானா இல்லை அப்போது கூட நம்ப மாட்டானா தெரியல என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டாள். கலங்கிய தன் கண்களை துடைத்துக் கொண்டு தன் வயிற்றை தடவி பேசினாள்.

உங்க அப்பாவுக்கு உன்ன பத்தி தெரியல. அவர் மேல இருக்க கோபத்துனால உன்னை நான் பழி வாங்க மாட்டேன் செல்லம், நல்ல ஹெல்தியானது சாப்பிட்டா தான் நீ ஹெல்தியா போறப்ப. நாளைக்கு ஒரு நல்ல லேடி டாக்டர் கிட்ட போய் நாம பார்க்கலாம் என்று சொல்லிவிட்டு ஃபோனை சிறிது நேரம் பார்த்துவிட்டு அப்படியே தூங்கினாள் வசுந்தரா.

ஆபீஸ் ரூமுக்கு சென்ற ஆதித்யா, டெடி பேர் இடம் பேசினான்.

ஷைலு, பாத்தியா வசுந்தரா என்ன பண்ணான்னு.

என்ன நடந்துச்சு நீ பொறுமையா அவகிட்ட பேசாம ஏன் இப்படி பண்ண ஆதி.

தப்பு அவ மேல இருக்கு அது தெரிஞ்சும் நீ எப்படி என்னை சமாதானமா பேச சொல்ற.

என்னதான் இருந்தாலும் ஒரு பொண்ணு, இப்போ உன் பொண்டாட்டி, அதுவும் இல்லாம பிரக்னண்டா வேற இருக்கா. இந்த நேரத்துல அவளை வீட்டை விட்டு நீ தனியா வெளிய அனுப்பிச்சி இருக்கியே, ஒருவேளை எனக்கு நடந்த மாதிரி அவளுக்கு நடந்துச்சுன்னா என்ன பண்ணுவ.

அந்த வார்த்தையை கேட்டவுடன், அவன் கண்களில் இருந்து நீர் வழிந்து ஓடியது.

சாரி ஷைலு, நான் இதை யோசிக்கவே இல்ல.
இப்ப என்னை என்ன பண்ண சொல்ற?

முதல்ல அவளுக்கு ஃபோனை போடு.

கால் பண்ணி,

எல்லாம் நானே சொல்லனுமா.

நீயே சொல்லு ஷைலு, எனக்கு மைண்டே இப்ப பிளாங்கா இருக்கு.

ஆதி ஆதி, முதல்ல போன் பண்ணி அவ சேஃபா இருக்காளான்னு தெரிஞ்சுக்கோ.

ஓகே இரு நான் ஃபோனை எடுத்துகிட்டு வரேன் என்று சொல்லி தன் ஃபோனில் இருந்து வசுந்தராவுக்கு கால் செய்தான் ஆதித்யா.

வசுந்தரா ஃபோனை சைலண்ட்டில் போட்டுவிட்டு தூங்கி விட்டாள்.



பாகம் 60





மறுபடியும் கால் செய்தான்.



அவள் எடுக்கவில்லை.



அவ ஃபோன் எடுக்கல என்றான் டெடிபேரை பார்த்து .



இந்த நேரத்துல எங்க போய் இருப்பா அவங்க அம்மா வீட்டுக்கு தான் போயிருப்பா, என்ற ஷைலஜா சொல்வது போல கற்பனை செய்து கொண்டான்.



இப்ப நான் என்ன பண்றது,



நேரா போய் பாரு, அவ சேஃபா இருக்கணும், இல்லையென்றால் நான் மறுபடியும் உங்கிட்ட பேசமாட்டேன்.



ஐயோ ஷைலு, அப்படி எல்லாம் சொல்லாதே.



அவ ஒரு பொண்ணு என்றதை மறந்துட்ட இல்ல,

இந்த நேரத்துல அவ வெளிய போனா அவளோட கற்பு மற்றும் உயிருக்கு ஆபத்து என்பதை கூட மறந்துட்ட இல்ல.



இல்ல ஷைலு, இந்த மாதிரி எல்லாம் பேசி என்னை சாகடிக்காத.



அப்ப முதல்ல கிளம்பு,



சரி, நான் உடனே போய் அவ எப்படி இருக்கான்னு பார்த்துட்டு வரேன் என்று சொல்லிவிட்டு வேகமாக கார் சாவி எடுத்துக் கொண்டு கீழே இறங்கி வந்தான்.



வாசலில் செக்யூரிட்டியை பார்த்த ஆதித்யா.



வணக்கம் சார் என்றான் செக்யூரிட்டி.



வசுந்தரா,



நெனச்சேன் சார்,



என்ன சொல்றீங்க முருகா.



இந்த நேரத்துல உங்க கிட்ட கூட சொல்லாம போறாங்களே, நீங்க தூக்கத்திலிருந்து எழுந்து உடனே அவங்கள காணோம்னு பயந்து இருப்பீங்க, அவங்கள வீடு ஃபுல்லா தேடி இருப்பீங்க, காணும்ன்றதுனால இங்க வந்து இருக்கீங்க சரியா சார்.



என்ன சொல்றீங்க முருகன் எனக்கு ஒண்ணுமே புரியல.



சார் வசுந்தரா மேடம் கண்கள் கலந்த வந்தாங்க,

என்னாச்சுமான்னு கேட்டதுக்கு என்று ஆரம்பித்து வசுந்தரா சொன்னதை சொல்லி முடித்தான் செக்யூரிட்டி.



ஆதித்யாவுக்கு என்னவோ போல இருந்தது. தன்னை விட்டுக் கொடுக்காமல் இவ்வாறு அவள் பேசியிருக்கிறாளே என்று நினைத்துக் கொண்டான்.



ஆட்டோ நம்பர் பார்த்தீங்களா,



ஏன் என்ன ஆச்சு, ஆதி சார்.



இல்ல வசுந்தராவுக்கு கால் பண்ணேன் அவ எடுக்கல.



சார் இந்த நேரத்துல அவங்க போனதுனால எனக்கு தெரிந்த ஆட்டோவில் தான் சார் அனுப்பினேன், அவங்க பத்திரமா வீட்டுக்கு போயிட்டாங்க. என்னோட சொந்தக்கார பையன் தான் அந்த ஆட்டோ டிரைவர். வசுந்தரா மேடம் வீட்டுக்குள்ள போனதும் அதுக்கு அப்புறமா ஆட்டோ எடுத்துட்டு கிளம்ப சொல்லி நான் அவன்கிட்ட சொன்னேன்.



அவங்க தெருமுனையிலே இறங்கி நடந்து போனாங்களாம், அவங்க வீட்டுக்குள்ள போற வரைக்கும் நின்னு பார்த்துட்டு கிளம்பி வந்ததா எனக்கு ஃபோன் பண்ணி சொன்னான் அவன்.



ரொம்ப சந்தோஷம் முருகா.



இதுல என்ன சார் இருக்கு. வார்த்தைக்கு வார்த்தை என்னை அண்ணா என்று தான் கூப்பிடுவாங்க. அதனால எனக்கும் அவங்க மேல அக்கறை இருக்கு சார்.



அந்த செக்யூரிட்டி சொன்னது ஆதித்யாவிற்கு செருப்பால அடித்தது போல இருந்தது. அண்ணா என்று கூப்பிட்டதற்கே அவளை பாதுகாப்பாக வீட்டிற்கு அனுப்பியவன் எங்கே, தொட்டு தாலி கட்டிய தன் மனைவியை அர்த்த ராத்திரியில் திட்டி வீட்டை விட்டு அவள் சென்றபோது அவளை தடுக்காமல் இருந்த நான் இங்கே என்று நினைத்து தன்னையே நொந்து கொண்டான்.



ஓகே முருகா நான் போய் அவங்கள பாத்துட்டு வந்துடறேன்.



சரிங்க சார் உங்க அக்கறை எனக்கு புரியுது. போயிட்டு வாங்க வீட்டில் இருந்து யாராவது கேட்டாங்கன்னா நான் சொல்றேன்.



ஓகே முருகா, என்று சொல்லிவிட்டு தன் காரை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.



20 நிமிடத்தில் அவள் வீட்டை அடைந்தவன், வெளியே நின்று கொண்டு மறுபடியும் அவளுக்கு கால் செய்தான்.



அவள் ஃபோனை எடுக்கவில்லை.



என்னதான் ஆட்டோ டிரைவர் கால் செய்தார் என்று செக்யூரிட்டி கூறினாலும், ஷைலு சொன்னது போல வசுந்தராவிற்கு ஏதாவது ஆகி இருக்குமோ என்று பயந்தான் ஆதித்யா.



காலிங் பெல் அடித்தான்.



தனலட்சுமி தூங்காததால், இந்த நேரத்தில் யார் மறுபடியும் காலிங் பெல் அடிக்கிறார்கள் என்று சற்று பயம் கொண்டார்.



உடம்பு முடியாத தன் கணவனை எழுப்புவதா, அல்லது தானே கதவை திறந்து பார்ப்பதா என்று யோசித்துக் கொண்டே கதவின் முன் வந்து நின்றார்.



கதவை திறக்காமல் யாரது என்றார் தனலட்சுமி கதவின் அருகில் சென்று.



அத்தை நான் தான் ஆதித்யா என்றான்.



உடனே கதவை திறந்தார் தனலட்சுமி.



மாப்பிள்ளை வாங்க, உள்ள வாங்க,

நான் அப்பவே அவ கிட்ட கேட்டேன். உன்ன டிராப் பண்ணிட்டு எப்படி மாப்பிள்ளை வீட்டுக்குள்ள வராம போறாருன்னு. அவதான் என்னென்னமோ சொன்னா.



தனலட்சுமி அவ்வாறு கூறியதால் இங்கேயும் தன்னை விட்டுக் கொடுக்காமல் பேசியிருக்கிறாள் என்பதை புரிந்து கொண்ட ஆதித்யா மனம் வருந்தினான்.



ஒரு நிமிஷம் இங்க உட்காருங்க மாப்பிள்ளை நான் அவளை எழுப்பி கூட்டிட்டு வரேன்.



இல்ல இல்ல அத்தை, வேண்டாம் அவ தூங்கட்டும் டிஸ்டர்ப் பண்ண வேண்டாம். என்னவோ அவள பாக்கணும்னு தோணுச்சு அதனாலதான் வந்தேன். சரி வீட்டை போட்டுக்கோங்க நான் கிளம்புறேன்.



அன் டைமாயிடுச்சே மாப்பிள்ளை, தங்கிட்டு காலையில் தான் போங்களேன்.



இல்ல அத்தை வேண்டாம்.



ஒரு ரெண்டு நிமிஷம் இருங்க நான் மந்தராவை எழுப்பி வெளியே வர சொல்றேன், நீங்களும் வசுந்தராவும் உள்ள ரூம்ல படுங்க.



இல்ல இல்ல வேண்டாம், யாரையும் எழுப்பாதீங்க. இந்த டைம்ல வந்து டிஸ்டர்ப் பண்ணதுக்கு நான் தான் சாரி சொல்லணும். காலையில அவ எழுந்த உடனே எனக்கு கால் பண்ண சொல்லுங்க. நாளைக்கு நானே வந்து அவளை கூட்டிட்டு போறேன்.



கொஞ்ச நாளைக்கு இங்க இருக்க போறேன்னு சொன்னாளே.



அவ இருக்கனும்னா இருக்கட்டும். ஒருவேளை வரணும் நெனச்சான்னா, எனக்கு கால் பண்ண சொல்லுங்க நான் வந்து கூட்டிட்டு போறேன்.



சரிங்க மாப்ள நீங்க ஜாக்கிரதையா வீட்டுக்கு போங்க.



சரிங்க அத்தை, மறுபடியும் சாரி சொல்லிக்கிறேன் நீங்களும் தூங்கி இருப்பீங்க, டிஸ்டர்ப் பண்ணிட்டேன்.



அச்சச்சோ அதெல்லாம் ஒன்னும் இல்ல மாப்ள.



அவன் சென்றதும் கதவை தாழ்ப்பாள் போட்டுக் கொண்டு உள்ளே வந்து படுத்தார் தனலட்சுமி.



என்னவோ ரெண்டு பேருக்குள்ள இருக்கு ரெண்டு பேரும் மறைக்கிறாங்க என்று நினைத்துக் கொண்டார் தனலட்சுமி.



வீட்டிற்கு சென்ற ஆதித்யா, தன் ஆபீஸ் ரூமுக்கு சென்று.



இப்பதான் எனக்கு நிம்மதியா இருக்கு ஷைலு.



வசுந்தரா சேஃபா இருக்கா இல்ல.



ஆமா ஷைலு, அவ சேஃப் தான் என்றான் ஆதித்யா .



அதனாலதான் நீ சேஃபா இருக்க, இல்ல நான் உன்னை என்ன பண்ணி இருப்பேன்னு எனக்கே தெரியாது என்று ஷைலஜா சொல்வது போல கற்பனை செய்து கொண்டான் ஆதித்யா.









தொடரும்....

அ. வைஷ்ணவி விஜயராகவன்.