• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

என்னுள் நீயடி உன்னுள் நானடி பாகம் 31

Vaishnavi Vijayaraghavan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2024
288
111
43
Maduravoyal
பாகம் 61


சாரி ஷைலு, இதுக்கு மேல நான் அப்படி எல்லாம் பண்ண மாட்டேன்.

சாரி எனக்கு சொல்லாதடா லூசு, போய் நம்ம வசு கிட்ட சொல்லு.

ஓகே ஷைலு, குட் நைட் நான் போய் படுக்கவா.
ஆனாலும் எனக்கு தூக்கம் வருமான்னு தெரியல.

ஏன்டா.

என்ன புரியாத மாதிரி கேக்குற. உனக்கே தெரியும் நான் அவளை தொடவில்லை என்று. அப்புறம் எப்படி அந்த குழந்தை.

ஏய் நீயா எல்லாத்தையும் கற்பனை பண்ணிக்காத, எவ்வளவோ பாசிபிலிடிஸ் இருக்கு தெரியுமா.

என்ன சொல்ற எனக்கு ஒண்ணுமே புரியல.

பிரக்னன்சி ஸ்டிக் ப்ராப்ளமா இருக்கலாம், அதனால அவ நார்மலா இருந்தும் ரெண்டு கோடு காட்டி இருக்கலாம்.

அனா அவ சந்தோஷமா கிஃப்ட் உள்ள வச்சு பேக் பண்ணி இருக்காளே அப்படின்னா அவ அதை எதிர்பார்த்து இருந்து அது நடக்கவே தானே பேக் பண்ணி இருக்கா.

நீ சொல்றது ஒரு வகையில கரெக்டு தான் ஆனா இன்னொன்னு யோசிச்சு பாத்தியா ஆதி,

என்ன ஷைலு.

அது வேற யாரோவோட குழந்தையா இருந்தா அது உன்கிட்ட இருந்து மறைக்க தான் நினைச்சிருப்பாளே தவிர, அதை கிஃப்ட் பேக் பண்ணி உன்கிட்ட காட்டணும்னு நினைச்சு இருக்க மாட்டா இல்ல.

கரெக்ட் தான், ஆனா,

ஆனா என்ன?

நீ என்ன சொல்ல வர அது என்னோட குழந்தைனா, நான்தான் அவளை தொடவில்லை என்று சொன்னேன்ல.

ஏய் லூசு, நீ சொன்ன இல்ல ஆர்ட்டிஃபிஷியல் இன்ஸெப்ஷன், அத அவ பண்ணியிருந்தான்னா?

அதுக்கும் என் உதவி வேணும் இல்ல.

நீயே இந்த மாதிரி எல்லாம் திங்க் பண்ணி மனசை போட்டு குழப்பிக்கிறதுக்கு பதிலா நேரா அவ கிட்ட பொறுமையா பேசு.

சரி ஷைலு, தேங்க்ஸ் டி.

எதுக்கு டா?

எனக்கு புரிய வச்சதுக்கு.

ஆமாம், எப்போ பார்த்தாலும் நானே உனக்கு சொல்லிக் கொடுக்கனும். நீ காலேஜ்ல கோல்டு மெடல்னு சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க.

இப்போ எதுக்கு அதைப் பற்றி பேசுற.

சாரி சாரி, நீ அத பத்தி பேசினா டென்ஷன் ஆகுவ என்பதை மறந்துட்டேன்.

அன்று நடந்ததை நினைத்துப் பார்த்தான் ஆதித்யா.

காலேஜில் ஆதித்யா கோல்ட் மெடல் வாங்கியதும், ஷைலஜாவின் அப்பாவிற்கு இதுவரை அவள் காலேஜ் ஸ்காலர்ஷிப்பில் படிக்கவில்லை என்றும் அந்த பணம் வந்தது ஆதித்யா கொடுத்தது என்றும் மேலும் அவர்கள் இருவரும் இரண்டு வருடத்திற்கு மேல் காதலிக்கிறார்கள் என்றும் தெரியவந்தது.

ஆதித்யா கோல்ட் மெடலும், ஷைலஜா சில்வர் மெடலும் வாங்கினார்கள். எப்படியோ அவரை அவார்ட் வாங்கும் ஃபங்ஷனுக்கு வர விடாமல் தடுத்தனர் ஷைலஜா மற்றும் ஷகீலா. ஆனால் அவர் வந்து விட்டார். உண்மை தெரிந்ததால் ஷைலஜாவை பயங்கரமாக திட்டினார்.

மறுநாள், ஆதித்யாவை பார்க்க வேண்டும் என்று ஷைலஜா மெசேஜ் செய்தாள். ஆதித்யா அவனுடைய அப்பா கம்பெனியில் இன்டர்ன்ஷிப் பண்ணிக் கொண்டிருந்ததால் அவன் அவளுடைய மெசேஜை பார்க்கவில்லை.

எதேச்சையாக பார்த்தார் லோகேஸ்வரன்.
தன் மகன் காதலிக்கிறான் என்று தெரிந்து கொண்டார். அன்று முக்கியமான மீட்டிங் இருக்கவே அவனிடம் அதை அப்புறமாக சொல்ல வேண்டும் என்று நினைத்தவர் மறந்துவிட்டார்.
இதுவும் ஒரு காரணம் ஆதித்யா தன் அப்பாவிடம் பேசாமல் இருப்பதற்கு.

அவர்கள் இருவரும் வழக்கமாக மீட் செய்யும் ஓஎம்ஆர் பீச் ரோட்டில் அவனுக்காக வெகு நேரமாக காத்துக் கொண்டிருந்தாள்.

கம்பெனி மீட்டிங் இருக்கவே அனைவரது ஃபோனையும் சைலண்டில் போடச் சொன்னார் லோகேஸ்வரன்.

அதனால், பலமுறை ஷைலஜா கால் செய்தும் ஆதித்யா எடுக்கவில்லை.

அப்போதுதான் ஷைலஜாவுக்கு அந்த கோர சம்பவம் நடந்தது.

அப்போது இரவு நேரம் தொடங்கும் சமையம்.
இதற்கு மேல் ஆதித்யா வரமாட்டான் என்று நினைத்தவள், அங்கிருந்து கிளம்ப நடந்து வந்தாள். அப்போது ஆஜானுபாகுவாக குடிபோதையில் ஒருவன் தள்ளாடி வந்தான்.

அவனைப் பார்த்ததும் சற்றே நடுக்கம் கொண்டாள் ஷைலஜா.

அவன் ஷைலஜாவை அடித்து, துன்புறுத்தி கற்பழித்து விட்டான். அவனிடமிருந்து தப்பிக்க நினைத்தவள் வழியின்றி தவித்தாள். பிறகு அவளுடைய துப்பட்டாவாலேயே அவள் கழுத்தை நெரித்து கொன்றான்.

மீட்டிங் முடிந்து வந்த ஆதித்யா, ஷைலஜாவின் மெசேஜ்களை பார்த்தான்.

ஆதி, எங்க அப்பாவுக்கு உண்மை தெரிஞ்சிடுச்சு. என்னை அடிச்சாரு திட்டினாரு.
என்னால இதுக்கு மேல அந்த வீட்ல இருக்க முடியாது, தயவு செஞ்சு வந்து என்னை கூட்டிட்டு போயிடு. எப்படியாவது என் தங்கச்சியும் எங்க அப்பா கிட்ட இருந்து மீட்டு நான் கொண்டு வந்துடறேன். இல்லனா அவளும் கஷ்டப்படுவா. பாவம் என் தங்கச்சி. நம்ம வழக்கமா மீட் பண்ற இடத்துல நான் வெயிட் பண்றேன் சீக்கிரமா வா.

இந்த மெசேஜ் தான் ஓப்பன் செய்யப்பட்டு இருந்தது. இதில் கோல்டு மெடல் சில்வர் மெடல் பற்றி எதுவும் குறிப்பிடப்படாததால், இவர்கள் இருவரும் காதலிப்பது அவளுடைய அப்பாவுக்கு தெரிந்தது என்று நினைத்துக் கொண்டார் லோகேஸ்வரன். மேலும் மீட்டிங் முடிந்ததும் அவனிடம் சொல்ல நினைத்தவர் மறந்து போனார். ஆனால் வேண்டுமென்றே தன் அப்பா சொல்லவில்லை என்று நினைத்துக் கொண்டான் ஆதித்யா.

ஆதித்யா அந்த இடத்திற்கு இரவு சென்றான். அங்கு அவள் இல்லை. ஒருவேளை வெகு நேரமாக காத்து விட்டு வீட்டுக்கு சென்று விட்டாள் என்று நினைத்தவன் அவளுடைய நம்பருக்கு கால் செய்தான்.

ஃபுல் ரிங் போய் கட் ஆகியது. அவளிடமிருந்து 10 மிஸ்டு கால்ஸ் வந்தது. இவன் 20 முறைக்கு மேல் கால் செய்து விட்டான். அந்த பீச்சில் இருந்தே தான் கால் செய்தான் ஆனால் ஷைலஜா ஃபோனை எடுக்கவில்லை.

பிறகு வீட்டிற்கு சென்றான். ஆனால் ஷைலஜா என்ன ஆனது என்று தெரியாமல் அவனால் நிம்மதியாக இருக்க முடியவில்லை.

மறுநாள் அவள் இறந்து கிடந்தது தெரிந்து அங்கே சென்றவன், அவள் உடலைப் பார்த்து அதிர்ச்சி ஆனான். உயிரே போனது போல உணர்ந்தான். இரண்டு நாட்கள் நடை பிணம் போல இருந்தான். பிறகு போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் வந்துவிட்டது என்று கூறி அவள் ரேப் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்கிறாள் என்று தெரிந்ததும், ஆதித்யா தான் இப்படி செய்திருப்பான் என்று நினைத்த ஷைலஜாவின் அப்பா ஆதித்யாவின் மேல் கேஸ் போட்டார்.

இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை ஆதித்யாவின் குடும்பத்தினர்.


பாகம் 62



ஆதித்யா மற்றும் ஷைலஜா இருவரும் எடுத்துக் கொண்ட போட்டோஸ் வீடியோஸ். மேலும் அவனை அவள் அங்கு வர சொன்ன மெசேஜ், மற்றும் அவன் அவளுக்கு பீச்சிலிருந்தே கால் ட்ரை செய்தபோது டவர் லொகேஷன் எல்லாம் முதல் கட்ட ஆதாரமாக எடுத்துக்கொண்டு அரெஸ்ட் செய்யப்பட்டான் ஆதித்யா.



இதனால் லோகேஸ்வரன் கம்பெனி ஷேர்ஸ் டவுன் ஆகியது. பிறகு ஆதரங்களைத் திரட்டி ஷைலஜாவின் கொலைக்கும் ஆதித்யாவுக்கும் சம்பந்தமில்லை என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. கொலை செய்யப்பட்ட நேரத்தில் ஆதித்யா அங்கு இல்லை என்ற டவர் லொகேஷனில் தெரிந்தது,

முக்கியமான ஆதாரமாக அவளுடைய உடம்பிலிருந்து எடுக்கப்பட்ட சீமன் ஆதித்யா உடையது இல்லை என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.



தீர்ப்பு வழங்கிய நிரபராதி என்று நிரூபிக்கப்பட்டாலும் ஆதித்யாவினால் ஷைலஜாவின் இழப்பை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தினமும் குடிப்பது, ஷைலஜாவையே நினைத்து நினைத்து அழுது கொண்டு இருந்தான். ஒரு வருடத்திற்கு பிறகு,



தங்கள் மகனை அவ்வாறே பார்க்க முடியாத மகேஸ்வரி மற்றும் லோகேஸ்வரன் ஆதித்யாவிடம் பேசினார்கள்.



அப்போது கூட ஆதித்யா தன் அப்பாவிடம் பேசவில்லை.



தன் அம்மா அழுது கொண்டே கேட்டுக்கொண்டதால் குடிப்பழக்கத்தை விட்டு விட சம்மதித்தான் ஆதித்யா. பின்னர் குலதெய்வ கோவிலுக்கு சென்றனர். அப்போது தான் அவர்கள் குடும்பத்திற்கு பயங்கரமாக ஆக்சிடென்ட் நடந்தது.

அன்று தான் நம் வசுந்திரா எக்ஸாம் எழுத ஊருக்கு செல்ல சென்றபோது இவர்களுக்கு உதவி செய்து அனைவரையும் ஹாஸ்பிடலில் சேர்த்து ரத்த தானம் செய்து காப்பாற்றினாள்.



ட்ரீட்மெண்டில் இருக்கும் போது கொஞ்சம் கொஞ்சமாக சரி ஆகினான் ஆதித்யா.



அவனுக்கு, சிஇஓ பதவியை கொடுத்தார் லோகேஸ்வரன். ஆறு மாதத்திற்கு மேல் வேலை செய்து கொண்டிருந்தவனை, இப்படியே விட்டால் அவன் வாழ்க்கையில் திருமணம் செய்ய கொள்ள மாட்டான் என்று நினைத்த லோகேஸ்வரன், உனக்கு கல்யாணம் ஆகி குழந்தை பிறந்த அப்புறமா இந்த கம்பெனியை உன் பெயரில் எழுதி வைக்கிறேன் ஆதி என்றார்.



தன் அம்மாவை பார்த்து, இந்த கம்பெனி சொத்துக்கெல்லாம் ஆசைப்படறவன் நான் கிடையாது என்றான்.



ஆதி அவசரப்பட்டு வார்த்தையை விடாத என்றார் மகேஸ்வரி.



இல்லம்மா, நான் இப்போது தான் கொஞ்சம் நார்மல் ஆகிக் கொண்டு இருக்கேன் இப்ப போய் கல்யாணம் அது இதுன்னு பேசுறாரே. சரி இந்த கம்பனியை எனக்கு எழுதி கொடுத்தா அர்ஜூன் அஸ்வினிக்கு என்ன?



அதெல்லாம் நாங்க ஏற்கனவே பேசியது தான் டா.



இப்போதைக்கு நீதான் இந்த கம்பெனியை எடுத்து நடத்தணும். அர்ஜுனுக்கு அஸ்வினிக்கும் அந்த அளவுக்கு எக்ஸ்பீரியன்ஸ் கிடையாது. இப்பதான் படிக்கிறாங்க. அதனால அவங்க போர்ட் ஆஃப் மெம்பர்ஸ்ல இருப்பாங்களே தவிர இந்த கம்பெனி முழுசா உனக்கு தான் கொடுக்கப் போறோம் என்றார் லோகேஸ்வரன்.



அர்ஜுன் நாளைக்கு கேள்வி கேட்டான்னா.



அவன் உன் தம்பி, அதனால நீ எல்லாமே அவனுக்கும் செய்வேன்னு தெரியும். அஸ்வினி பார்த்துப்பேன்னு தெரியும். அதனாலதான் நாங்க இந்த முடிவை எடுத்தோம்.



சரி நான் கல்யாணம் அனுப்புற மாறிவிட்டேனா? எனக்கு வரப்போற பொண்டாட்டி அர்ஜுனுக்கும் அஸ்வினிக்கும் கொடுக்க கூடாதுன்னு சொன்னா?



உன்ன பத்தி எங்களுக்கு தெரியாதா ஆதி, இத்தனை வருஷத்துல ஒரு நாள் கூட எங்க பேச்சை நீ கேட்டதில்லை, உனக்கு எது சரின்னு தோணுதோ அதைத்தான் செய்வ. அப்படி இருக்கும் போது வரப்போற மனைவி பேச்சைக் கேட்டால் நீ நடந்துப்ப.



என்னம்மா நீங்களும் அவருக்கு சப்போர்ட் பண்ணியே பேசுறீங்க. என்னால கல்யாணம் எல்லாம் திங்க் பண்ணி கூட பார்க்க முடியாது மா.



இல்லாது ஆதி, இந்த விஷயத்துல நான் உங்க அப்பாவுக்கு தான் சப்போர்ட் பண்ணுவேன்.



அம்மா நீங்களுமா.



என் பையன் இந்த மாதிரி, தனியா கஷ்டப்பட்டு இருக்கிறதே என்னால பார்த்துக்கிட்டு இருக்க முடியாது.



அதற்கு மேல் பதில் எதுவும் பேசாமல் அமைதியாக அங்கிருந்து சென்று விட்டான் ஆதி.



மகேஸ்வரி ஹாஸ்பிடலுக்கு செல்லும் போது அங்கே பாலமுருகன் மற்றும் தனலட்சுமியை பார்த்தார். பாலமுருகனுக்கு ஆப்ரேஷன் செய்ய வேண்டும் என்று டாக்டர் சொன்னதால் அந்த அளவிற்கு வசதி இல்லையே என்று மன வருத்தத்தில் இருந்தனர் இருவரும்.



முதலில் பாலமுருகனுக்கு மகேஸ்வரியை அடையாளம் தெரியவில்லை. பிறகு குலதெய்வ கோவிலுக்கு போகும் போது நடந்த விபத்து பற்றியும் அவரும் அவர் மகளும் தான் காப்பாற்றினார்கள் என்று நினைவு படுத்தினார்.



நீங்களா, மன்னிச்சிடுங்க மறந்துட்டேன்.



பரவாயில்லைங்க அண்ணா, நீங்க செஞ்ச உதவியை நாங்க மறக்கவே மாட்டோம். சரி என்ன ஆச்சு யாருக்கு உடம்பு சரியில்லை இங்க இருக்கீங்க.



இவருக்குத்தான் என்று பேச முயன்ற தன் மனைவி தனலட்சுமியை தடுத்து,



ஒன்னும் இல்லைங்க ஜென்ரல் செக்கப் தான்.



நல்லா இருக்கீங்களா எதுவும் பிரச்சினை இல்லை இல்ல.



அதெல்லாம் ஒன்னும் இல்லீங்க.



உங்க பொண்ணு என்ன பண்றாங்க.



யாரை கேக்குறீங்க வசுந்தராவா.



அன்னைக்கு வந்து எங்களுக்கு ரத்தம் கொடுத்தாளே அந்த பொண்ணு.



ஆமாங்க, அவ பேரு வசுந்தரா. காலேஜ் முடிச்சிட்டா. வீட்டு பக்கத்துல ஒரு ஸ்கூல்ல வேலை பண்ணிக்கிட்டு இருக்கா.



ஓ, சரிங்க அண்ணா. உங்களுக்கு ஏதாவது உதவி வேணும்னா கண்டிப்பா கேளுங்க.



சரிங்கம்மா, சாரை கேட்டதா சொல்லுங்க. பசங்க எல்லாரும் நல்லா இருக்காங்க இல்ல.



எல்லாரும் நல்லா இருக்காங்க அண்ணா.

சரி நான் கிளம்புறேன். அப்புறமா ஒரு நாள் எல்லாரும் வீட்டுக்கு வாங்க.



சரி மா.



இதுதான் இவரோட கம்பெனி கார்டு என்று சொல்லி தனலட்சுமி இடம் கொடுத்தார் மகேஸ்வரி.



அண்ணி, என்னோட ஃபோன் நம்பரை எடுத்துக்கோங்க என்று மகேஸ்வரி சொல்லவும்,



தனலட்சுமி சரிங்க கொடுங்க என்று சொல்லி அவருடைய நம்பரை வாங்கிக்கொண்டு தன்னுடைய நம்பரையும் கொடுத்தார்.



ஒரு வாரத்திற்கு பிறகு தனலட்சுமிக்கு வேறு வழி தெரியாமல் மகேஸ்வரிக்கு கால் செய்தார்.



ஹலோ.



ஹலோ சொல்லுங்க அண்ணி.



நீங்க என்னை உரிமையோட கூப்பிடுறதுனால நானும் உரிமையோடு உங்ககிட்ட ஒன்னு கேட்கலாமா?



கேளுங்க அதனால என்ன?.



நேரா பார்த்து பேசலாமா?.



சரி நீங்க சொல்லுங்க எங்க வரணும்னு உங்க வீட்டுக்கு வரட்டுமா?



இல்ல இல்ல வேண்டாம் ஏதாவது ஒரு காஃபி ஷாப்ல.



சரி எப்பன்னு சொல்லுங்க நான் வந்துடறேன்.



என்ன கேட்க போகிறார் என்று நினைத்தார் மகேஸ்வரி. மனதிற்குள் ஆதித்யாவிற்கு அவர்களுடைய பெண் வசுந்தராவை திருமணம் செய்ய நினைத்தார் மகேஸ்வரி. நம்ம நெனச்சத மட்டும் அவங்க கேட்டாங்கன்னா ரொம்ப சந்தோஷம் என்று நினைத்துக் கொண்டே அந்த அட்ரஸுக்கு கிளம்பி சென்றார் மகேஸ்வரி.





தொடரும்.....

அ. வைஷ்ணவி விஜயராகவன்.