• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

என்னுள் நீயடி, உன்னுள் நானடி -24

Vaishnavi Vijayaraghavan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2024
288
111
43
Maduravoyal
பாகம் 47


அவனை தடுத்து. சாரி வேண்டாம் என்றாள் மந்த்ரா.

நீங்க தான புக் பண்ணீங்க. இப்ப என்ன இப்படி சொல்றீங்க. பயமா இருக்கா.

ஆமாம் என்று சொன்னால் விட்டு விடுவான் என்று நினைத்து ஆமாம் என்றாள்.

ஃபர்ஸ்ட் டைமா.

ஆமாம்.

ஃபர்ஸ்ட் டைமா சூப்பர், உங்களுக்கு பெஸ்ட்டா இருக்கும். டோன்ட் ஒரி பயப்படாம வாங்க என்றான்.

இல்ல மிஸ்டர், எனக்கு இப்ப வேண்டாம். ஐ அம் நாட் இன் குட் மூடு.

ஓகே, நோ ப்ராப்ளம். கேன்சல் பண்ணினா பேமண்ட் டபுள் சார்ஜஸ் ஓகேவா.

தன் பர்சை எடுத்து மூன்று மடங்கு பணத்தை கொடுத்தாள் மந்தரா.

ப்ளீஸ் லீவ் மீ.

ஓகே, தேங்க்யூ என்று சொல்லிவிட்டு அந்த பணத்தை வாங்கிக் கொண்டு அவள் கன்னத்தில் முத்தமிட்டு பை, எப்ப மூட சரியாகுதோ அப்ப சொல்லுங்க அப்ப வரேன், பை டார்லிங் என்று சொல்லிவிட்டு சென்றான் அவன்.

அவன் சென்றதும் ரூம் கதவை தாழ்ப்பாள் போட்டுவிட்டு வந்து பெட்டில் படுத்தாள்.

மிச், நான் ஏன் இப்படி ஆனேன். வீட்டிலேயே தைரியமா ஒரு ஆளை கூட்டிட்டு வந்தேன். அப்போ அக்கா வந்து தடுத்துட்டா. இப்ப யாருமே டிஸ்டர்பன்ஸ் பண்றதுக்கு இல்லைன்னாலும் ஏன் என் மனசு கேட்க மாட்டேங்குது என்று தன்னிடமே பேசிக் கொண்டாள் மந்தரா.

பிறகு அங்கு இருந்து கிளம்பி தன் வீட்டிற்கு சென்று விட்டாள்.

என்னம்மா நைட் ஸ்டடி பண்ண போறேன், காலையில தான் வருவேன்னு சொன்ன சீக்கிரமா வந்துட்ட என்றார் தனலட்சுமி.

இல்லமா ஒரே தலைவலியா இருக்கு அதனால நான் வீட்டுக்கு போறேன்னு சொல்லிட்டு வந்துட்டேன்.

டீ போட்டு தரவா மா.

வேண்டாம் அம்மா.

சரிமா நீ போய் தூங்கு ரெஸ்ட் எடு. அமிர்தாஞ்சன் ரோலான் இருக்கு பாரு அத தடவிட்டு படுத்து தூங்கி எழுந்திரு.

சரி மா.

மந்தரா,

என்னம்மா.

கண்ணுல ஏதாவது டவல் கட்டிக்கிட்டு தூங்கு தலைவலியும் குறையும்.

சரி மா, நீங்க பேசி பேசி தலைவலி அதிகமாக ஆக்கிடாதீங்க என்றாள் மந்த்ரா ஸ்மைல் செய்து கொண்டே.

ஏய் ஓவரா பேசாத, உதை வாங்குவ என்று சிரித்துக் கொண்டே சொன்னார் தனலட்சுமி.

அந்த முழுவதும் வெகு நேரமாக தூக்கமே வராமல் பிரண்டு படுத்துக் கொண்டிருந்தாள்.

அர்ஜுனுக்கு மெசேஜ் செய்தாள்.

சாரி அர்ஜுன்.

நீங்க எதுக்கு எனக்கு சாரி சொல்றீங்க.

இல்ல உங்க கிட்ட இன்னைக்கு அப்படி பேசினதுக்கு.

ஓகே

என்ன ஓகே மட்டும் சொல்றீங்க.

வேற என்ன சொல்லணும்.

நீங்க இன்னும் என் மேல கோவமா தான் இருக்கீங்க போல.

நான் யாருங்க உங்க மேல கோபப்பட. எனக்கு என்ன உரிமை இருக்கு.

ஒரு சின்ன ரெக்வெஸ்ட்.

என்ன.

தயவு செஞ்சு நான் இன்னைக்கு பேசினதை வேற யார்கிட்டயும் சொல்லிடாதீங்க.

சரி,

தேங்க்ஸ்.

பை, இதுக்கு மேல எனக்கு மெசேஜ் பண்ணாதீங்க, கால் பண்ணாதீங்க.

ஏன்.

எனக்கு பிடிக்கல.

அகைன் சாரி.

எனக்கு உங்க சாரியும் வேண்டாம் உங்க கால் மெசேஜ் எதுவும் வேண்டாம்.

நான் அப்புறமா உங்களுக்கு கால் பண்றேன்.

அதைத்தான் வேண்டான்னு சொன்னேன்.

ஓகே, கால் பண்ண மாட்டேன். ஆனா ஆஸ் ஏ ஃபிரண்டா உங்க கூட மெசேஜ் பண்ணனும்னு நினைக்கிறேன் அதை மட்டும் வேண்டாம்னு சொல்லாதீங்க ப்ளீஸ். ஏன்னு தெரியல.

வெகு நேரமாக டைப்பிங் என்று வந்தது.
ஆனால் எந்த மெசேஜும் வரவில்லை.

பதில் என்ன சொல்வது என்று தெரியாமல் டைப் செய்து டைப் செய்து டெலிட் செய்து கொண்டிருந்தான் அர்ஜுன்.

வெகு நேரத்துக்கு பிறகு ஓகே என்று மட்டும் ரிப்ளை செய்து விட்டு ஃபோனை ஃபிலைட் மோடில் போட்டுவிட்டு படுத்தான் அர்ஜுன்.

இந்த நேரத்தில் எப்படி கால் பண்றா.
இன்னைக்கு நைட் தான் எஸ்கார்ட் ஓட இருக்க போறேன்னு சொன்னாளே. என்ன பொண்ணு இவ. அண்ணி கூட பொறந்திட்டு இப்படி இருக்காளே என்றெல்லாம் வெகு நேரமாக சிந்தித்துவிட்டு அப்படியே தூங்கி விட்டான் அர்ஜுன்.

மறுநாள் மத்தியானம் ஆதித்யா மற்றும் வசுந்தரா வீட்டிற்கு வந்தனர்.

இருவரையும் வரவேற்று ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்தார் மகேஸ்வரி.

அம்மா எதுக்குமா இதெல்லாம் என்றான் ஆதித்யா.

கல்யாணம் ஆகி முதல் முறையா வெளியே போயிட்டு வந்திருக்கீங்களா அதனால.

என்னவோ புதுசு புதுசா பண்ணுங்க.

ஆதித்யா தன் ரூமிற்கு சென்று ரெடி ஆகினான்.

மகேஸ்வரி தன் மருமகளை கிச்சனுக்கு அழைத்துச் சென்று,

என்னம்மா ரெண்டு பேரும் சந்தோஷமா இருந்தீங்களா என்றார்.

அவர் என்ன கேட்க வருகிறார் என்பதை புரிந்தாலும், நல்லா சுத்தி பார்த்தோம் அத்தை என்றாள்.

சரிம்மா நீயும் ஆதித்யாவும் ரெஸ்ட் எடுங்க நான் லஞ்ச் ரெடியானதும் கூப்பிடுறேன்.

அம்மா எனக்கு லஞ்சம் எல்லாம் வேண்டாம் நான் கிளம்பிட்டேன் சொல்றதுக்கு தான் வந்தேன் என்று கிச்சனின் உள்ளே எட்டிப் பார்த்து பை அம்மா, பை வசு என்று சொல்லிவிட்டு கிளம்பினான் ஆதித்யா.

ஆதி ஆதி டயர்டா இல்ல, ஏன் இப்போ உடனே கிளம்புற.

நாலு நாள் ஆபீஸ் போகாததே எனக்கு பைத்தியம் பிடிக்கிற மாதிரி இருக்குமா.

சரிடா லஞ்ச் சாப்பிட்டுட்டு சாயந்திரமா போயேன்.

இல்லம்மா நான் அர்ஜுன் கூடவும் அப்பா கூடவும் சாப்பிடுறேன்.

சரிப்பா ஜாக்கிரதை பை.

இந்த பையன் இருக்கானே, என்று தன் மருமகளிடம் பேசினார் மகேஸ்வரி.

அத்தை கொஞ்சம் வாங்களேன் என்று சொல்லி அவளுடைய ரூமுக்கு அழைத்து சென்றாள் வசுந்தரா.

பிறகு அந்தமானில் இருந்து அனைவருக்கும் வாங்கி வந்ததை மகேஸ்வரி இடம் காட்டினாள்.

அத்தை இது உங்களுக்கும் என் அம்மாவுக்கும் என்று சொல்லி இரண்டு ஜூட் ஹேண்ட்பேகுகளை காட்டினாள்.

சூப்பரா இருக்குமா.

இது அஸ்வினிக்கும் மந்திராவுக்கும் என்று சொல்லி இரண்டு சுடிதார் மெட்டீரியலும் மற்றும் பியர்ல் ஜுவல்லரியும் காட்டினாள்.

வாவ், ரொம்ப நல்லா இருக்கு.

இது அர்ஜுன் தம்பிக்கு என்று சொல்லி ஒரு ஹெட் ஃபோன்ஸ் காட்டினாள்.

ஏம்மா, இது சென்னையிலேயே கிடைக்குமே. இது எதுக்கு மா அங்க போய் வாங்கிட்டு வந்த.

அத்தை, சான்சே இல்ல.

என்னம்மா சொல்ற என்றார் மகேஸ்வரி.

நீங்களும் உங்க பையன் ஆதியும் ஒரே மாதிரி என்று சொல்லி சிரித்தாள் வசுந்தரா .

பாகம் 48



ஏம்மா, இது சென்னையிலேயே கிடைக்குமே. இது எதுக்கு மா அங்க போய் வாங்கிட்டு வந்த என்று மகேஸ்வரி கேட்டதற்கு நீங்களும் உங்க பையனும் ஒரே மாதிரி என்று வசுந்தரா சொன்னவுடன்,ஏன் அவனும் இதே தான் சொன்னானா என்றார் மகேஸ்வரி ஸ்மைல் செய்து கொண்டே.



ஆமாம் ஆமாம் என்றாள் வசுந்தரா சிரித்துக் கொண்டே .



அப்ப நீ என்ன சொன்ன.



நம்ம வெளியே போய் வாங்கிட்டு வரும்போது, அதுல இருக்க அன்பு தான் தெரியணும். அது எங்க கிடைக்கும் அங்க கிடைக்கும் அதெல்லாம் பார்க்க கூடாது, அவ்வளவு ஏன் மனசுக்கு ரொம்ப புடிச்சி இருந்தா அது நம்மளால வாங்க முடியும்னா அதோட பிரைஸ் கூட பாக்க கூடாது.



நீ சொல்றது கரெக்டு தான் மா.



ஸ்மைல் செய்தாள் வசுந்தரா.



அப்புறம் இது எங்க அப்பாவுக்கும் மாமாவுக்கும் என்று சொல்லி இரண்டு கேஷுவல் ஷேர்ட்டை காண்பித்தாள்.



அப்புறம் இது இவருக்கு. இவருக்கே தெரியாம சர்ப்ரைஸா வாங்கி இருக்கேன்.



அது எப்படி அவன் கூடவே போயிட்டு அவனுக்கு தெரியாமல் வாங்கின.



அதெல்லாம் அப்படித்தான் அத்தை.



கில்லாடி தான் மா நீ.

சரி சர்ப்ரைஸ்னா எப்ப குடுக்க போற.



அது வந்து வர சண்டே என்னோட பர்த் டே.

கண்டிப்பா அவரு ஏதாவது எனக்கு ஒரு பெரிய கிஃப்ட் கொடுப்பாரு. அதுக்கு ரிட்டன் கிஃப்ட்டா இந்த வாட்ச்ச நான் கொடுக்க போறேன்.



கேட்கிறேன்னு தப்பா நினைச்சுக்காத. எவ்வளவுமா இது.



இதுல என்னத்த தப்பா நினைக்க இருக்கு.



இல்ல நீ தான் வேல்யூ பாக்க கூடாது பிடிச்சிருந்தா வாங்கிடனும் சொன்னியா. அதனால சொன்னேன்.



அத்தை உங்ககிட்ட சொல்ல மாட்டேனா. வாட்ச் கேக்குறீங்களா மத்ததெல்லாம் கேக்குறீங்களா.



வாட்ச் 5000 ருபீஸ். மத்ததெல்லாம் அவர்தான் வாங்கினார் அதனால எனக்கு தெரியாது.



ஓ சரி சரி மா.

சரி உன்னோட பர்த்டேக்கு ஏன் சார்பா என்ன கிஃப்ட் வேணும் சொல்லு.



நீங்க, என்னோட பர்த் டே அன்னைக்கு கோவிலுக்கு கூட்டிட்டு போங்க. உங்க கூட கோவிலுக்கு போறது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.



சரி மா கண்டிப்பா கூட்டிட்டு போறேன். ஆனா அது கிஃப்ட் இல்ல இல்ல. கிஃப்ட் என்ன வேணும்னு சொல்லு.



அது வந்து, எனக்கு ஒரு சேரி வாங்கி தரீங்களா.

ஃபேன்டா ஆரஞ்சு கலர்ல டார்க் கிரீன் பார்டர்.



கண்டிப்பா மா, பட்டுப்புடவையே வாங்கி கொடுக்கிறேன்.



தேங்க்ஸ் அத்தை.



சரி ஹஸ்பண்டுக்கு மட்டும்தான் ரிட்டன் கிஃப்ட்டா, இல்ல உனக்கு கிஃப்ட் கொடுக்கிற எல்லாருக்குமே ரிட்டன் கிஃப்ட் தருவியா.



ஸ்மைல் செய்தாள் வசுந்தரா.



சும்மா தான் மா சொன்னேன். நீயும் ஆதியும் சந்தோஷமா இருந்தாலே அதுவே எங்களுக்கு பெரிய ரிட்டன் கிஃப்ட் என்றார் மகேஸ்வரி.



கண்டிப்பா அத்தை.



பிறகு மகேஸ்வரி கீழே இறங்கி சென்றதும். தன் அம்மாவிற்கு கால் செய்து தாங்கள் சென்று வந்ததைப் பற்றி கூறி மற்றும் அனைவருக்கும் எல்லாம் வாங்கி வந்ததைப் பற்றியும் கூறினாள். மேலும் தன் அம்மா கொடுத்த காசில் தான் ஆதித்யாவுக்கு வாட்ச் வாங்கியதாக கூறினாள்.

தேங்க்ஸ் அம்மா என்றாள். என்னம்மா நீ இதுக்கெல்லாம் தேங்க்ஸ் சொல்ற.



இல்லம்மா நீங்க கரெக்டா சொன்னீங்க. அவருக்கு கொடுக்கணும்னா நீ அது உன் காசுல தான வாங்கணும்னு. சரிதான். நான் என் பர்த்டே முடிஞ்சப்புறம் இவங்க எல்லார்கிட்டயும் கேட்டு

விட்டு வேலைக்கு போகப் போகிறேன் என்றாள் வசுந்தரா.



சரி மா, உன் விருப்பம்.



நாளைக்கு நான் வரேன் அம்மா வீட்டுக்கு.



சரி மா, வா, பை



பை அம்மா.



கம்பெனியில் தன் வேலைகளை முடித்துவிட்டு அர்ஜுனை பார்க்க சென்றான் ஆதித்யா.



அண்ணா எப்ப வந்தீங்க. ஏன் அதுக்குள்ள ஆபீஸ்க்கு வந்தீங்க.



இல்லடா நாலு நாளைக்கு கம்பெனிக்கு வராததே எனக்கு பைத்தியம் புடிச்ச மாதிரி இருக்குனு அம்மாகிட்ட சொல்லிட்டு தான் வந்தேன்.



அதானே கம்பெனி தானே உங்களுக்கு பர்ஸ்ட் வைஃப்.



டேய்,



அண்ணி எப்படி ஓகே சொன்னாங்க.



எதுக்கு.



வீட்டுக்கு வந்த உடனே கம்பெனிக்கு நீங்க கிளம்பி வருவதற்கு.



அவ என்ன நல்லா புரிஞ்சு வச்சிருக்காடா. இன்ஃபாக்ட் அவ ரொம்ப நல்ல பொண்ணு அதனாலதான் அவ தங்கச்சியை உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு நான் யோசிச்சேன்.



அர்ஜுனின் முகம் மாறியதை கவனித்தான் ஆதித்யா.



என்னாச்சு அர்ஜுன்.



ஒன்னும் இல்ல அண்ணா.



நீ என்ன திடீர்னு டல்லாயிட்ட, நான் கவனிச்சேன்.



அது வந்து அண்ணா,



என்னடா சொல்லு.



மந்திரா ரெகவஸ்ட் செய்து கேட்டது ஞாபகம் வந்தது, அதனால் மறுபடியும் ஒன்றுமில்லை அண்ணா என்று சொல்லிவிட்டு தன் வேலைகளை பார்க்கச் சென்றான்.



அர்ஜூன், சொல்லிட்டு போ. உனக்கு மந்தராவை பிடிக்கலையா. இல்ல அவ உன்னை வேண்டாம்னு சொல்லிட்டாளா.



அண்ணா, இது ஒத்துவராது, விட்டிடுங்க.



உனக்கு அவளை பிடிக்கலையா.



இல்லண்ணா அப்படி எல்லாம் இல்ல.



அப்புறம் என்னடா. அவ வேற அம்மாவுக்கு பிறந்தவன்னு யோசிக்கிறீயா.



வாட் அவ அம்மா வேற, அண்ணியோட அம்மா வேற வா. ஆனா அண்ணி அவங்களை தான அம்மான்னு கூப்பிடறாங்க.



ஆமாம். அது ஊனக்கு தெரியாதா.

அவ சின்ன வயசில் இருந்தே அப்படி தான் கூப்பிடுவாளாம். அவங்க அம்மா இருந்திருந்தா கூட இந்த அளவுக்கு நல்லா பார்த்தக்கிட்டு இருப்பாங்களான்னு தெரியலன்னு சொல்லி இருக்கா.



ஓ, ஓகே,

இல்லண்ணா, இந்த விஷயம் எல்லாம் எனக்கு தெரியாது அதுவும் இல்லாம அதை எல்லாம் ஒரு ரீசனா திங்க் பண்ணி வேண்டாம்னு சொல்ல நான் என்ன இம்மெச்சூர் பர்சனா என்ன?.



பின்ன என்ன காரணம்னு சொல்லு.



மனதிற்குள், அட இவ அம்மா வேறவா அதான் அண்ணி மாதிரி இவ இல்ல. ஆனா அந்த ஆன்டி கூட நல்லவங்களா தான் இருக்காங்க. இவ மட்டும் ஏன் இப்படி இருக்கா என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருந்தான் அர்ஜூன்.



அர்ஜூன், அர்ஜூன் என்று சொல்லி அவனை உளுக்கினான் ஆதித்யா.



என்னடா ஆச்சு. இப்போ உண்மையை சொல்லப் போறீயா இல்லையா. நீ அன்னைக்கு மந்தராவை மீட் பண்ணப் போறன்னு தான எனக்கு மெசேஜ் பண்ண. சரி நேரா வந்து பேசிக்கலாம்னு விட்டுட்டேன் என்றான் ஆதித்யா.



அண்ணா, செட் ஆகாது. மந்தரா வோட லைஃப் ஸ்டைல் வேற என்னோடது வேற, பிளீஸ் இதுக்கு மேல என்னை எதுவும் கேட்காதீங்க என்று சொல்லிவிட்டு வேகமாக அங்கிருந்து சென்றான் அர்ஜூன்.





தொடரும்....

அ. வைஷ்ணவி விஜயராகவன்.