• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

என்னுள் நீயடி என்னுள் நானடி, பாகம் 32

Vaishnavi Vijayaraghavan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2024
288
111
43
Maduravoyal
பாகம் 63

உங்க காஃபி ஷாப்புக்கு உள்ளே செல்லும்போது தன் மகன் ஆதித்யா அங்கு யாருடனோ பேசிக் கொண்டிருப்பதை பார்த்தார் மகேஸ்வரி.

முதலில் பிசினஸ் மீட்டிங் என்று நினைத்தவர் எதிரே ஒரு புடவை கட்டிய பெண் உட்கார்ந்திருப்பதை பார்த்து மெதுவாக நடந்து அவர்களுக்கு தெரியாமல் சுவற்றின் பின்புறமாக நின்று பார்த்தார். 50 வயது மிக்க அந்த பெண்ணிடம் தன் மகன் என்ன பேசுகிறான் என்ற அவருக்கு புரியவில்லை. முகம் தெரிந்ததே தவிர அவர்கள் பேசுவது சுத்தமாக அவருடைய காதில் விழவில்லை.

பேசிவிட்டு தன் விசிட்டிங் கார்டை அந்தப் பெண்ணிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றான் ஆதித்யா.

அந்த பெண் ஜூஸ் குடித்துக் கொண்டு அங்கேயே அமர்ந்து இருந்தாள்.

இதுதான் சந்தர்ப்பம் என்று புரிந்து கொண்டு தன் மகன் காரில் ஏறி செல்வதை பார்த்துவிட்டு அந்த பெண்ணின் முன்னால் வந்து அமர்ந்தார் மகேஸ்வரி.

ஹலோ யாருங்க நீங்க எதுக்கு இங்க வந்து உட்காருரீங்க. அதான் அங்க எல்லாம் அவ்வளவு டேபிளில் காலியா இருக்கு இல்ல.

நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்.

நீங்க யாரு எவருன்னே தெரியாது அப்பாயின்மென்ட் கூட இல்ல எப்படி என்னை மீட் பண்ண விடுவேன் நான்.

ஓ சாரி நீங்க பிசினஸ் உமெனா?

அப்படியும் சொல்லலாம்.

தயவுசெஞ்சு குழப்பாமல் கொஞ்சம் சொல்லுங்க.

அதெல்லாம் இருக்கட்டும் உங்களுக்கு என்ன வேணும்.

சரி நானும் நேரடியாக விஷயத்தை சொல்லிடுறேன். இப்ப இவ்வளவு நேரம் உங்க கிட்ட வந்து பேசிட்டு போனான் இல்ல அவன் என் பையன். அவன் என்ன சொன்னான்.

அது தொழில் சம்பந்தப்பட்ட விஷயம் உங்க கிட்ட சொல்ல முடியாது.

ப்ளீஸ் நான் ஒரு அம்மாவா கேட்கிறேன். என் நிலைமையை கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க. அவன் எந்த தப்பான முடிவும் எடுத்து விடக்கூடாது என்று நினைக்கிறேன்.

தப்பான முடிவுன்னு சொல்ற அளவுக்கு நாங்க என்ன பண்றோம்?

அதுதானே கேட்கிறேன் ப்ளீஸ் சொல்லுங்க.

என்னமா உங்ககிட்ட ஒரே வம்பா போச்சு நான் கிளம்புறேன் என்று சொல்லி எழுந்த போது தனலட்சுமி அங்கே வந்தார்.

ஏய் பரிமளா நீ எங்க இங்கே என்றார் தனலட்சுமி அந்த 50 வயது மதிக்கத்தக்க அந்த பெண்ணை பார்த்து.

தனம் நீ எங்கடி இங்க.

நான் இவங்கள பார்க்க வந்தேன் என்று மகேஸ்வரியை காட்டினார் தனலட்சுமி.

ஏய் இவங்க உன் ஃபிரண்டா அது தெரியாம இவங்க கிட்ட கொஞ்சம் கோபமா பேசிட்டேன் சாரி மேடம்.

இல்லை இல்லை தெரிஞ்சவங்க தான் என்று தனலட்சுமி சொல்ல நினைத்தபோது அவர் கையைப் பிடித்து ஆமாம் நானும் இவங்களும் ஃபிரண்ட்ஸ் என்றார் மகேஸ்வரி.

அமைதியாக இருந்தார் தனலட்சுமி.

மூன்று பேரும் ஒரு டேபிளில் அமர. மறுபடியும் ஜூஸ் ஆர்டர் செய்தார் பரிமளா.

இது பரிமளா என்னோட ஸ்கூல் ஃப்ரெண்ட்.

ஹாய் என்று இருவரும் கைகுலுக்கி கொண்டனர்.

என்ன ஆச்சுடி எதுக்காக இவங்க கிட்ட நீ பிரச்சினை பண்ண.

ஃபிரெண்டுன்னு சொல்ற அவங்க இவங்கன்னு பேசுற.

அது அவங்க ஹஸ்பண்டும் என்னோட ஹஸ்பண்டும் பிரெண்ட்ஸ் அதனால நாங்க ரெண்டு பேரும் பிரண்ட்ஸ்.

ஓகே ஓகே இப்ப புரியுது என்றார் பரிமளா.

அது ஒன்னும் இல்ல மேடம், உங்க பையன் ஒரு வருஷத்துக்கு மட்டும் வைஃபா இருக்கிற மாதிரி காண்ட்ராக்ட் போட கேட்கிறார். இதுல அந்த பொண்ணு குழந்தை வேற பெத்துக்கணுமாம். அதுக்கு அப்புறமா இவருக்கு அந்த பொண்ணுக்கும் சம்பந்தம் இல்லைன்னு கையெழுத்து போட்டுக் கொடுத்திட்டு அந்த பொண்ணு போயிடனுமாம். இதெல்லாம் வேலைக்காகுமா சொல்லுங்க. அதான் ரொம்ப கஷ்டம்ன்னு சொன்னேன். எவ்வளவு பணமானாலும் பரவால்ல ன்னு சொல்றாரு. 50 லட்சம் தரத்துக்கு ரெடியா இருக்காரு.

வாட் என்று அதிர்ச்சியானார் மகேஸ்வரி.

தனலட்சுமிக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் அமைதியாக இருந்தார்.

பிறகு மகேஸ்வரியே பேச ஆரம்பித்தார்.

மேடம் ஒரு 2 மினிட்ஸ் நான் தனலட்சுமி கிட்ட தனியா பேசணும்.

ஓகே டேக் யுவர் டைம் எனக்கும் ஒரு கால் பண்ண வேண்டி இருக்கு நான் பேசிட்டு வரேன் என்று சொல்லி தன் ஃபோனை எடுத்துக்கொண்டு வெளியே சென்றார் பரிமளா.

பரிமளா சென்றதும் மகேஸ்வரி என்னிடம் என்ன பேச போகிறார் என்று நினைத்துக் கொண்டே அவரைப் பார்த்தார் தனலட்சுமி.

சொல்லுங்க.

உங்கள இப்போ தான் பார்த்தேன். அதுக்குள்ளே இவ்வளவு உரிமை எடுத்து இதெல்லாம் கேட்கிறேன் நினைக்காதீங்க.

என்ன பணம் கேட்கிறதுக்கு நம்ம பேச வேண்டிய டயலாக் எல்லாம் இந்த அம்மா பேசுறாங்க என்று நினைத்துக் கொண்டார் தனலட்சுமி.

என்னோட பையன் ஆதிக்கு உங்க பொண்ணு வசுந்தராவை கட்டி தரீங்களா?

என்ன? என்று அதிர்ச்சியானார் தனலட்சுமி.

தப்பா நினைக்காதீங்க, உண்மையிலேயே என் பையன் ரொம்ப நல்லவன்.

அதுக்காக என் பொண்ணை ஒரு வருஷத்துக்கு மட்டும் பொண்டாட்டியா வச்சு பாரு, குழந்தை பெத்துட்டு திருப்பி அனுப்பி விடுவாரு, இதுக்கெல்லாம் நான் சம்மதிக்கணுமா?

இல்ல இல்ல ஆதி அப்படிப்பட்டவன் கிடையாது, நான் ஏதோ இப்ப யாருன்னு தெரியாது அதனால அப்படி சொல்றான். வசுந்தரா மாதிரி ஒரு நல்ல பொண்ணு கிடைச்சா கண்டிப்பா அவளை விட மாட்டான்.

ஒருவேளை விட்டுட்டார் என்றால் என்ன பண்றது?

நானும் என் வீட்டுக்காரரும் அது நடக்க விடமாட்டோம்.

முதலே அக்ரீமெண்ட்ல சைன் பண்ணா தான் கல்யாணம்னு சொல்லிட்டாரு அக்ரிமெண்ட் தானே கோர்ட்ல செல்லும் நீங்க சொல்றதா செல்லும்.

அமைதியாக கண்கள் கலங்கினார் மகேஸ்வரி.

நான் உங்ககிட்ட வேற உதவி கேட்கலாம் என்று வந்தேன். என் புருஷனுக்கு ஹார்ட் ஆப்பரேஷன் அதுக்கு தேவையான பணத்தை கடனா கேட்கலாம் என்று நினைத்து வந்தேன் கொஞ்சம் கொஞ்சமா திருப்பி கொடுத்துவிடுகிறேன் என்று. ஆனா இப்ப நான் பணத்தை வாங்கினேன் என்றால் அது நான் என் பொண்ணுக்கு செய்ற துரோகம்.

அய்யோ ஏன் இப்படி எல்லாம் சொல்றீங்க, அண்ணனோட ஆபரேஷனுக்கு பணம் நான் தரேன். அவரும் வசுந்தராவும் எங்க எல்லாரோட உயிரை காப்பாத்துனதுக்கு நாங்க செய்ற சின்ன கைமாறாக இருக்கட்டும். நீங்க உங்க பொண்ணை என் பையனுக்கு கல்யாணம் பண்ணி கொடுக்கவில்லை என்றாலும் பரவாயில்லை, தயவு செஞ்சு பணத்தை வேண்டாம் என்று சொல்லாதீங்க எவ்வளவுன்னு சொல்லுங்க நான் இப்பவே செக் எழுதி தரேன் என்றார் மகேஸ்வரி .

இல்ல எனக்கு வேண்டாம். பரிமளா வந்ததும் நான் சொல்லிட்டு கிளம்புறேன் என்றார் தனலட்சுமி.



பாகம் 64





ப்ளீஸ் எங்க உயிரை காப்பாத்தினவருடைய உயிரை காப்பாத்துறதுக்கு நான் கொடுத்ததா இருக்கட்டும் என்று சொல்லி தன் பேகில் இருந்து

செக் புக் எடுத்து 10 லட்சம் என்று சைன் செய்து தனலட்சுமி கையில் கொடுத்து விட்டு அங்கிருந்து வேகமாக சென்றார் மகேஸ்வரி.



மேடம் மேடம் ஒரு நிமிஷம் நில்லுங்க நில்லுங்க என்று சொல்லிக் கொண்டே பின்னாலேயே சென்றார் தனலட்சுமி.



நீங்க என்ன சொன்னாலும் நான் திரும்ப அந்த செக்கை வாங்கிக்க மாட்டேன் என்று சொல்லிக் கொண்டே நடந்தார் மகேஸ்வரி.



இல்ல நான் திருப்பி கொடுக்கலை நான் செக்கை வாங்கிக்கிறேன் நில்லுங்க ஒரு நிமிஷம் என்று தனலட்சுமி சொன்னதும் நின்றார்.



உள்ள வாங்க உங்க கிட்ட நான் கொஞ்சம் பேசணும்.



சரி என்று உள்ளே சென்று அமர்ந்து பேசினார்கள்.



எனக்கு முதல்ல உங்க பையன பத்தி எல்லாமே சொல்லுங்க. உங்க பையன பத்தி நாங்க நிறைய கேள்விப்பட்டிருக்கிறோம். அது எவ்வளவு தூரம் உண்மை என்று எனக்கு தெரியாது. ஆனா இன்னைக்கு நீங்க பேசுறது உண்மைனு உங்க கண்ணிலையே தெரியுது. அதனால நீங்க அவரை பற்றி சொல்லுங்க என்றார் தனலட்சுமி.



மகேஸ்வரி தன் மகனைப் பற்றி அனைத்தையும் சொல்லி முடித்தார்.



அந்த பொண்ண லவ் பண்ணதை தவிர என் பையன் வேற எதுவுமே பண்ணல, உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால் வக்கீல் கிட்ட எல்லா ஆதாரங்களோட காப்பி இருக்கு அதை பார்த்தீங்கன்னா உங்களுக்கே தெரியும். என் பையனுக்கும் அந்த பொண்ணு கொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.



அந்தப் பொண்ண மறக்க முடியாமல் தன்னையே அழிச்சுகிட்டு இருந்தவனை நீங்க தான் பேசி இப்போ கம்பெனியை பார்த்துக்கிற அளவுக்கு கொண்டு வந்து இருக்கோம். அவன் எங்கே இதே மாதிரி இருந்திருவானோன்னு நினைச்சு தான் இவர் கண்டிஷன் போட்டாரு.



ஆனா அதுக்கு இப்படி ஒரு ஏற்பாடு பண்ணுவான் என்று சத்தியமா நினைக்கல. உங்க பொண்ண பத்தி எனக்கு தெரியும். அவளோட நல்ல மனச புரிஞ்சுகிட்டு என் பையன் அவளோட சேர்ந்து வாழ்வான் அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு. ஆனா நான் உங்களுக்கு வாக்கு கொடுக்கிறேன். நீங்க எல்லாரும் சம்மதித்து வசந்தராவுக்கும் ஆதித்யாவுக்கும் கல்யாணம் ஆச்சுன்னா, ஒரு நாளும் அவங்களுக்கு டைவர்ஸ் வாங்க நான் விட மாட்டேன். என் பையன தடுக்க என்னால முடியும்.



ஒரு நிமிடம் யோசித்தார் தனலட்சுமி. ஒரு நாளும் அவர் வசுந்தராவை தன் வயிற்றில் பிறந்த மகள் இல்லை என்று நினைத்தது கூட இல்லை. அப்படி இருக்க அவளுடைய வாழ்க்கையை எப்படி இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலைக்கு கொண்டு விட வேண்டுமா என்று சிந்தித்தார்.



சரி நான் உங்க பையன நேரா பார்த்து பேசணும்.



ஆனா அவன் நார்மலான கல்யாணத்துக்கு கண்டிப்பா ஒத்துக்க மாட்டான்.



நான் நேரா பார்த்து பேசிட்டு எனக்கு உங்க பையன் மேல நல்லா அபிப்பிராயம் வந்துச்சுன்னா என் பொண்ணு வசுந்தராவை கட்டிக் கொடுக்கிறத பத்தி யோசிக்கிறேன். இல்லனா உங்க கிட்ட வந்து இந்த செக்கை கொடுத்துடுறேன்.



இல்ல நான் தான் சொன்னேன்ல அதுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லைன்னு. நீங்க கல்யாணம் பண்ணி கொடுக்கலன்னாலும் இந்த செக்கு வைத்து அவருக்கு ஆபரேஷன் நல்லபடியா முடிங்க.



சரி என்று சொன்னாலும், மனதிற்குள் எப்படியாவது இந்த காசை திருப்பிக் கொடுத்து விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டார் தனலட்சுமி.



பரிமளா உள்ளே வந்ததும், தங்களது திட்டத்தை சொன்னார்கள் மகேஸ்வரி மற்றும் தனலட்சுமி.



பெண்ணின் அம்மா என்று சொல்லி தனலட்சுமி ஆதித்யாவுக்கு அறிமுகப்படுத்த சொல்லி கேட்டார் மகேஸ்வரி.



ஒன்றும் புரியாமல் விழித்தார் பரிமளா.



நான் சொல்றேன் என்று கண்ணசைத்தார் தனலட்சுமி.



மகேஸ்வரி மனதிருப்தியுடன் வீட்டிற்கு கிளம்பி சென்றார்.



பரிமளா தனலட்சுமி இடம்.



உனக்கு என்ன பைத்தியமாடி. எதுக்கு உன் பொண்ண அவனுக்கு கட்டி கொடுக்கணும்னு நினைக்கிற. அவன் பணம் இருந்தா எல்லாத்தையும் வாங்கிடலாம்னு நினைக்கிற ஆள் மாதிரி இருக்கான்.



இல்லடி எனக்கு அவங்க அம்மா அப்பாவை நல்லா தெரியும். அதுவும் இல்லாம அந்த பையனோட காதல் தோல்வி பற்றி உனக்கு தெரியாது என்று ஆரம்பித்து மகேஸ்வரி சொன்ன அனைத்தையும் சொல்லி முடித்தார் தனலட்சுமி.



சரிடி அவன் நல்லவனாவே இருக்கட்டும் அதுக்காக நீ உன் பொண்ணோட லைஃபை ரிஸ்க் எடுப்பியா.



எனக்கு வேற வழி தெரியல. என் கணவர் உயிருக்கு ஆபத்து. கண்டிப்பா ஆபரேஷன் செஞ்சே ஆகணும். அவங்க கிட்ட இனமா வாங்க எனக்கு மனசு வரல.



அதுக்காக உன் பொண்ண வித்துடுவியா.



பரி ஏன் இப்படி எல்லாம் பேசுற.



பின்ன என்னடி, நான்தான் அவனை பார்த்த உடனே சொல்றேன் இல்ல கண்டிப்பா அக்ரிமெண்ட் முடிஞ்சதும் அறுத்து விட்டிடுவான்.



நான் பேசிப் பார்க்கலாமென்று நினைக்கிறன்.



உனக்கு காசு தான் பிரச்சனைன்னா நான் அரேஞ்சு பண்ணி தரேன் நீ அதை கொஞ்சம் கொஞ்சமா வட்டியே இல்லாம திருப்பிக் கொடுத்தா போதும் என்றார் பரிமளா.



இல்ல பரி, என்னால என் பொண்ணுக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைக்கிறதுக்கு தடையாக இருக்க முடியாது.



அது நல்ல வாழ்க்கை இல்லடி, தெரிஞ்சே உன் பொண்ணு நரகத்தில் தள்ளி விடாதே.



இல்ல பரி, உனக்கு நல்லாவே என்ன பத்தி தெரியும். நான் போய் அவனை நேரா பாக்குறேன். என் பொண்ணு அவன் வீட்டில் சந்தோஷமா வாழ்வான்னு தெரிஞ்சா நான் கண்டிப்பா அவளை கல்யாணம் பண்ணி கொடுப்பேன்.



உன் முடிவு நீ மாத்திக்க மாட்டேன்னு எனக்கு நல்லாவே தெரியும். உன் இஷ்டம் என்னமோ செய். இப்ப நான் என்ன பண்ணனும்னு சொல்ற?



ஆதித்யாவுக்கு ஃபோன் போட்டு நீங்க கேக்குற கண்டிஷனுக்கு ஒத்துக்கிட்டு ஒரு பொண்ணு சம்மதிக்கிறான்னு சொல்லு.



ஒருவேளை உன் பொண்ணு சைன் பண்ணலைன்னா.



அத பத்தி நீ கவலைப்படாத நான் சைன் பண்ண வச்சிடுவேன்.



வசுந்தரா ஒத்துக்கலைன்னா.



மந்திரவை கல்யாணம் பண்ணி வைப்பேன் .



நீ ஏண்டி இவ்வளவு பிடிவாதமா இருக்க.

சுத்தமா மாறவே இல்லை நீ ஸ்கூல் படிக்கும்போது எப்படி இருந்தியோ அப்படியே இருக்க என்றார் பரிமளா.



சரி அதெல்லாம் விடு நீ எப்படி இருக்க உன் ஃபேமிலி பத்தி சொல்லு. இது என்ன புது பிசினஸ்? என்றார் தனலட்சுமி சிரித்துக் கொண்டே.





தொடரும்.....

அ. வைஷ்ணவி விஜயராகவன்.