அத்தியாயம் -59
பிருத்விகா அந்த அமைதியான அறையில் விட்டத்தை வெறித்தப்படி பார்த்து அமர்ந்திருந்தாள். அந்த அறை முழுக்க எந்த சத்தமும் இல்லை. பிருத்விகாவின் கையில் இருக்கும் வாட்ச்சின் முள் சத்தம் மட்டும் கேட்டது. இன்று பார்த்து அவள் எந்த ஸ்மார்ட் வாட்சும் அணியவில்லை. அவளிடம் இருக்கும் டிராக்கர்களும் பலனற்றுப் போயிருந்தது. அவள் தானாக அவன் வலைக்குள் வந்து விழுந்திருந்தாள்.
பிருத்விகாவுக்கு எத்தனை நாட்கள் இப்படி வாழ முடியும் என்று தோன்றியது. எவ்வளவு மகிழ்ச்சியாக வாழ்ந்தாலும் மனதில் ஒரு மூலையில் இந்த விஷயம் உறுத்திக் கொண்டிருந்தது. இன்று தஸ்வி அழைக்கும் போதே ஒரு சந்தேகம் முளைத்தது. வருணிடம் கூறினால் எப்படியும் தன்னை அவன் வெளியில் விடப் போவதில்லை. பிருத்விகாவுக்கு இதற்கு முடிவு கட்டி விட வேண்டும் என உறுதியாகத் தோன்றியது. அதனால் கிளம்பிவிட்டாள்.
எப்படியும் அவனிடம் ஜாமர் இருக்கும் என்று எதிர்பார்த்திருந்தாள். அவன் சாதாரண ஆள் இல்லை என்று அவளுமே அறிவாளே.
அவள் நினைத்தப்படியே எல்லாம் நடந்தது. அவனின் முகத்தையும் பார்த்து விட்டாள். அவன் நினைத்திருந்தால் தன்னை எப்போதோ நிச்சயம் கடத்தி இருக்க முடியும். தன்னை விட்டு வைக்க ஏதோ காரணம் இருந்திருக்கும் என்று தோன்றியது. அவள் வீட்டு முன்பே, ஆட்கள் இருக்கும் போதே தைரியமாகக் கடத்தியவன் மீண்டும் நிச்சயம் அதை செய்திருப்பான். ஆனால் செய்யவில்லை.
அவனுக்கு பிருத்விகாவின் மீது ஈர்ப்பு இருப்பது போல் தெரிந்தது. நடப்பதைப் பார்த்துக் கொள்ளலாம் என்ற மன நிலையோடு அமர்ந்திருந்தாள்.
அங்கு வருணோ சிசிடிவி அறையில் பார்த்திருந்தாள். சரியாக லாண்ட்ரி ரூமுக்கு முன்னால் இருக்கும் கேமரா, லான்ட்ரி ரூமின் கேமரா இரண்டும் வேலை செய்யவில்லை.
ஆனால் அந்தத் திசையில் தான் பிருத்விகா நடந்து சென்றிருந்தாள். அதற்குள் அவளுடைய கைப்பேசியின் சிக்னல் கட் ஆகி இருக்கும் இடத்தின் லொகேசனும் வந்து சேர்ந்திருந்தது. டிராக்கர், கைப்பேசி எதற்கும் பலனில்லை.
அப்போது நேராக மருதிக்கு அழைத்து விஷயத்தைச் சொன்னான் வருண்.
“குட் வருண். இப்ப மணி எத்தனை?”
“செவன் தேர்ட்டி.”
“ஓகே. மித்ராவை கிட்நாப் செஞ்சது எல்லாம் டைவர்சன். பிருத்விகா இல்லைனா வசுந்தராவும் இருக்க மாட்டாங்க. அவனுக்கு அந்த இரகசியம் தெரிஞ்சுருக்கலாம். அவன் உடனே இரண்டு பேரையும் கொல்லமாட்டான். சோ ரிலாக்ஸ். பிருத்விகா வேற என்ன கார்டுகிட்ட சொல்லிட்டு போனாள்.”
“வேற.. எதுவும் இல்லை..”
“வருண்.. நல்லா யோசி…”
யோசித்து யோசித்து தலைவலி வந்து விடும் போலிருந்தது அவனுக்கு.
“வருண்.. மித்ராவைத் தேடி நீங்க இரண்டு பேரும் டையர்ட் ஆகி இருப்பீங்க. இப்ப பிருத்விகா காணாமல் போனால் கன்புயூசனில் நீங்க மிஸ்டேக் செய்வீங்க. நல்லா யோசிங்க.”
“எஸ்.. யுவி பவுடரை மறக்க வேண்டாம்னு சொல்லிட்டு போயிருக்காள்.”
“யுவி பவுடர்.. யுவி பவுடர்.”
“அதே தான். போ.. இது நைட் டைம். நான் சொல்றது எல்லாத்தையும் எடுத்துட்டுப் போ. நானும் வரேன்.” வருணுக்கு ஒரு வழி கிடைத்தது போலிருந்தது.
***
கடிகாரத்தைப் பார்த்தாள் பிருத்விகா.
அவள் கடத்தப்பட்டு ஒரு மணி நேரம் கடந்திருந்தது. மீண்டும் கதவு திறக்கும் சத்தம் கேட்டது. ஒரு மூட்டையைத் தோளில் போட்டப்படி இறங்கிக் கொண்டிருந்தான் அவன்.
மூட்டையில் இருப்பது மனித உருவம் என்று தெள்ளத் தெளிவாகப் புரிந்தது. இறங்கி அந்த மூட்டையைப் பிரித்து ஒரு பெண்ணைத் தூக்கி வெளியில் கிடத்தினான். அந்தப் பெண்மணியைப் பார்த்ததும் அதிர்ந்தாள் பிருத்விகா.
“வசுந்தரா மேம்.” எழுந்து அவர் கன்னங்களைத் தட்ட ஆரம்பித்தாள்.
அவள் கையை மென்மையாகப் பிடித்தான் அவன்.
“ஸ்டாப். உனக்கு கை வலிக்கும். இன்னும் ஐஞ்சு நிமிஷத்தில் அவங்களே எழுந்துருவாங்க.”
“இவங்களை எதுக்கு கடத்திட்டு வந்த? இவங்க உனக்கு என்ன செஞ்சாங்க?”
“ஹனி.. இவங்கதான் இது வரைக்கும் நான் செஞ்ச கொலை அத்தனைக்கும் காரணம்.”
“இவங்க காரணமா? வசுந்தரா மேம் எவ்வளவு நல்லவங்க தெரியுமாடா?”
சத்தமாக சிரித்தான் அவன். அந்த அறையே எதிரொலித்தது.
“ஹனி.. நீ ரொம்ப புத்திசாலி. ஆனால் உங்க அம்மாவைப் பத்தி உனக்குத் தெரியலை.”
“என்ன அம்மாவா?”
“எனக்கு ஒரு சந்தேகம் இருக்கு. இன்னும் கொஞ்ச நேரத்தில் அது கிளியர் ஆகிடும்.”
“காட்.. இத்தனை செய்யறியே? உன்னோட பேர் என்னனாவது சொல்லித் தொலை. தெரிஞ்சுட்டாவது செத்துப் போறேன்.”
“ஹனி.. என்னைப் பத்தி தெரிஞ்சுக்க.. ரொம்ப ஆசைப்படற. என்னோட பேர் அர்ஜூன் ராத்தோர். இந்தியாவில் இருக்கற ரகசிய ஆர்மி படைகளில் நானும் ஒரு காலத்தில் இருந்தேன். அப்ப நான் செஞ்சதை இப்ப இங்க செஞ்சுட்டு இருக்கேன். முதலில் நீ ரொம்ப எதார்த்தமாக என்னைக் கிராஸ் செஞ்ச.”
“என்ன சொல்ற? நான் எப்ப உன்னோட.. வாழ்க்கையில்..”
நான்கு வருடங்களுக்கு முன்பு,
அர்ஜூன் ராத்தோர். முதன் முதலாக கோயம்புத்தூர் வந்திருந்தான். அவன் உடல் முழுக்க பழி வெறி. தன் அண்ணன் இறந்தது பல மாதங்களுக்குப் பிறகு தெரிந்திருந்தது அவனுக்கு. அந்த இறப்பில் பல சந்தேகங்கள் இருக்கையில் வழக்கு கோல்ட் கேஸ் என முடிக்கப்பட்டிருந்தது. இல்லை அன்சால்வ்டாக இருந்தது. கடைசியாக வழக்கு ஒப்படைக்கப்பட்டது மருதி வீரேந்தர் சிங்க் எனவும் அறிந்திருந்தான். அவளைப் பற்றி அவனுமே கேள்விப்பட்டிருக்கிறானே.
ஆனால் கோயம்புத்தூர் வரை வந்த பின் வழக்கு அப்படியே கைவிடப்பட்டிருந்தது. மருதி திருமணமாகி அங்கேயே செட்டில் ஆகி இருந்தாள். மருதி மேல் அவனுக்கு சந்தேகமாகியது. அவள் எங்கெங்கு சென்று விசாரித்தாள் என்பது முதற்கொண்டு அறிந்தவன் அவள் விசாரணையை ஸ்பிரிங்க் மெண்டல் ஹெல்த் செண்டரோடு நிறுத்தி இருந்ததும் தெரிந்தது. அது மட்டும் இன்றி ஸ்பிரிங்க் மெண்டல் ஹெல்த் செண்டரின் வசுந்தராவை அவளது ஆட்கள் கவனிப்பதும் புரிந்தது.
அவன் கவர்ட் ஆப்ரேசனில் கை தேர்ந்தவன். மருதி விட்ட இடத்தில் இருந்து அவன் தொடர ஆரம்பிக்க அவனுக்கு வசுந்த்ராவின் மீது சந்தேகம் வலுத்தது. வசுந்தரா வெளியே நடந்து கொள்வதில் சில வித்யாசங்கள் தெரிந்தது.
அவளுடைய எரிந்து போன ஒரு பிராப்பர்டியில் அவன் ஆராய்ந்த போது எரிந்து போன அனைத்தும் சந்தேகமாக இருந்தது.
வசுந்தரா பற்றிய பல வருடத் தகவல்களைத் திரட்டிய போது சரியாக தன் அண்ணன் இறந்து போன சில நாட்கள் வசுந்தரா அந்த நகரில் இருப்பது அவன் பார்வையில் பட்டுவிட்டது. அவனைப் போல் இறந்தவர்கள் என ஆராய வசுந்த்ரா மாட்டி இருந்தார்.
அர்ஜூன் ராத்தோருக்கு இருந்த ஒரே சொந்தம் அவனது அண்ணன். அவனுடைய அண்ணன் வெளியில் எப்படி இருப்போனோ தெரியாது.
அர்ஜூன் என்றால் உயிரையும் தருவான். யார் உயிரை வேண்டுமானாலும் தருவான். இருவரும் உலகில் கஷ்டப்பட்டவர்கள். ஆர்மி அவர்களை தாங்கிக் கொண்டது. பல நாட்கள் பட்டினி கிடந்து அர்ஜூனுக்கு சாப்பாடு கொடுத்திருக்கிறான் அவன் சகோதரன். அவன் இப்போது இல்லை என்றதும் அவனுக்குள் வெறி உருவாகி இருந்தது. அந்த வெறியில் இரண்டு வருடங்கள் செலவு செய்து கண்டுபிடித்திருந்தான்.
வசுந்தராவைப் பழி வாங்க வேண்டும்.
அதற்காக திட்டம் போட்டுக் கொண்டிருக்கும் போது யோசித்தப்படியே நடக்க ஒருவன் பைக்கை அர்ஜூனின் மீது விட்டு விட்டான். அப்போதுதான் ஸ்கூட்டியில் வந்தாள் பிருத்விகா. கீழே விழுந்தவனைத் தூக்கி விட்டு அவன் சிராய்ப்பில் அவளுடைய புதுக் கைக்குட்டையில் கட்டும் போட்டுவிட்டாள். பைக்கை விட்டவன் அப்போதே அங்கே ஓடிவிட அவனைத் திட்டிக் கொண்டே இவனுக்கு கட்டுப் போட்டாள்.
கேப் ஒன்றை வர வைத்து மருத்துவமனையும் அனுப்பி வைத்தாள். சிறு வயதில் எங்காவது விழுந்தால் கட்டுப் போட பணம் இருக்காது. அருகில் இருக்கும் துணி, கைக்குட்டையில் அவன் அண்ணன் கட்டுப் போட்டு விடுவான். அதே போல் பிருத்விகாவும் செய்திருந்தாள். அவன் கோவை வந்த இரண்டு வருடத்தில் அவன் மீது காண்பிக்கப்பட்ட அன்பின் முதல் துளி.
அவன் கதையைக் கேட்டு பிருத்விகா விழித்தாள். அவள் இப்படி ஒரு திருப்புதலை எதிர்பார்க்கவில்லை. அந்த சம்பவம் நினைவு வருவதைப் போல் இருந்தது. ஆனால் இவன் முகம் நினைவில்லை.
“ஆனால் எதிர்பாராத விதமாக நீ இதே ஹாஸ்பிட்டலில் என் கண்ணில் பட்ட. தூரத்தில் இருந்தே பார்க்க ஆரம்பிச்சேன். ஆனால் என்னோட திட்டத்தில் உன்னை இழுக்க விரும்பலை. ஆனால் எதிர்பாராத விதமாக உன்னை என்னோட திட்டத்தில் இழுக்க ஒரு சான்ஸ் கிடைச்சது.”
“ஆர் யூ இன் லவ் வித் மி?”
“தெரியலை. இருக்கலாம். என்னோட டார்க் சோலுக்கு நீ லைட் மாதிரி. ஒரு பக்கம் நான் உன்னை எங்கூட வச்சுக்கனும். இன்னொரு பக்கம் என்னோட ரிவென்ஞ்ச். என்னோட பிரதருக்கு என்ன நடந்ததுனு தெரிஞ்சே ஆகனும். அதுக்கு நீ தேவைபட்டதால் உன்னைக் கொண்டு வர வேண்டியதாகிடுச்சு. இந்த விஷயத்தில் நீ கூட என்னைத் தடுக்க முடியாது.”
அவனைப் புரியாமல் பார்த்தாள் பிருத்விகா.
அவளை அவன் சுலபத்தில் கொல்லமாட்டான் என்பது மட்டும் புரிந்தது. ஆனாலும் எட்டுப் பேரை இரக்கமே இல்லாமல் கொன்றவன் அவன். வெறும் பழி உணர்ச்சிக்காக. அவன் தரப்பில் இருந்து பார்த்தால் அனைத்தும் சரியே. ஆனால் அந்த அப்பாவிகளின் உயிரை என்ன செய்வது?
“அப்ப அன்னைக்கு என்ன கடத்துனது யாரு?”
“அவன் ஜஸ்ட் யூஸ் அண்ட் திரோ. அவனுக்குள்ள இருக்கற கில்லர் இன்ஸ்டிங்கை ஸ்டிமுலேட் பன்னேன். அவ்வளவுதான். ஜஸ்ட் நான் மாஸ்டர் மைண்ட் மட்டும் தான். என்ன அண்ணன் பிரதாப் ராத்தோர் சாவுக்கு நான் பழி வாங்கியே தீருவேன்.”
“எனக்கு நடந்ததது என்னனு தெரியாது? பட் அதுக்கு எதுக்கு அப்பாவிகள் உயிரை எடுக்கனும்?”
“அண்ணனுக்கும் தம்பிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. உன் அண்ணனுக்கு நான் கவுன்சிலிங்க் கொடுத்துருக்கேன். இவ்வளவு கேட்கறதுனால் சொல்றேன். உன் அண்ணன் ஒரு சீரியல் ரேப்பிஸ்ட். ஒரு செக்ஸ்யுவல் அப்யூசர். ஆனால் இதை யாருக்கும் தெரியாமல் பார்த்துகிட்டான். ஹி ரேப்ஸ் மென். அவனோட சுப்பிரியர் யாருக்கும் தெரியாமல் எங்கிட்ட அழைச்சுட்டு வந்தார். பிரயோஜனம் இல்லை.”
எழுந்து அமர்ந்தப்படி கூறினார் வசுந்தரா.
அர்ஜூன் ராத்தோரின் கைகள் வசுந்தராவின் குரல்வளையைப் பற்றி இருந்தது.
“என்னோட அண்ணனை நீ என்ன செஞ்ச?”
“நான் உன்னோட அண்ணனை எதுவும் செய்யலை. இரண்டு செசன் மட்டும் தான் கவுன்சிலிங்க் கொடுத்தேன். அவ்வளவுதான். ஆனால் அதுக்கப்பறம் உன்னோட பிரதர் பாலோ அப்புக்கு வரலை.”
“பொய். அவனைக் கொன்னது நீதான்.”
“நான் எப்படி கொல்ல முடியும்?”
இப்போது துப்பாக்கி ஒன்றை எடுத்து பிருத்விகாவின் நெற்றியில் வைத்தான் அவன்.