• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

என் சிரிப்பின் முகவரியே..11

Brindha Murugan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Nov 26, 2023
90
146
33
Madurai
அவளுள் முளைத்து தளிர் விட்ட சந்தோசத்தின் காரணத்தை உணர்ந்து கொள்ள முடியவில்லை என்றாலும் அது கொடுத்த தாக்கத்தின் வெளிப்பாடாக இன்று தன்னை சிறத்தை எடுத்து அலங்கரித்து கொள்ள தொடங்கியவள்...


உடுத்தும் உடுப்பில் இருந்து வெறும் இரண்டு காலணிகள் மட்டுமே அடுக்கிவைத்திருந்த இருந்த சிறு பெட்டி போலான ஷெல்பில் இருந்த அந்த இரண்டு காலணிகளில் ஒன்றை பெரும் யோசனையோடு அனிந்தது வரை சிறத்தையோடு செய்து முடித்தவள்..
அடுத்ததும் இன்னும் கொஞ்சம் ஒப்பனை மிச்சம் இருப்பதாய் முகத்தை மெருகேற்ற தொடங்கியிருந்தாள்...


கிலோ கணக்கில் பெயின்ட் வார்னிஷை அப்பி கொள்ளாவிட்டாலும் கண்கனின் இரப்பையான மெல்லிய வெள்ளை கோட்டை அஞ்சனத்தால் நிறப்பிவிட்டு இறக்கையிலேயே சிவந்திருந்த இதழின் பளபளப்பை மேன்படுத்தும் வகையில் லிப் மாஸ்டராய்ஸர் தடவி கன்னத்தில் கொஞ்சமாக பவுடர் பூசி கொண்டு கடைசியில் முழு நிறைவுக்காக நெற்றியில் பொட்டு வைக்கும் நேரம் அவளுள் இருந்த வெளி வந்தது அவளின் மனசாட்சி..


தேங்கஸ் தான யாழி சொல்ல போற அப்பறம் எதுக்கு இத்தனை அலரங்காரம் என மனசாட்சி முன் வைத்த கேள்விக்கு விடைத் தெரியாமல் விழிதாலும் சட்டென..


ஒரு பெரிய ஆப்பிஸ் போகும் போது எப்பையும் போல சும்ம போக முடியாதே அதான் என மனசாட்சியோடு தன்னையும் ஏமாற்றி கொண்டவளுக்கே தன் புது அவதாரம் புதிராக இருக்கும் போது மனசாட்சி முன் வைத்த கேள்விக்கு மட்டும் எங்கனம் தெளிந்த பதில் வரப்போகிறது ஆதலால் மழுப்பலாகவே கூறிவைத்தவளுக்கும் தன் போக்கு நெஞ்சில் உறுத்தலை ஏற்படுத்தியது என்னவோ உண்மை தான்..


அதை எல்லாம் பாதி அலட்சியமாக கடந்து மீதி பாதியை உறுத்தலாக சுமந்து கொண்டு கெளம்பியவளின் மனசாட்சி அவளின் மழுப்பலான பதிலை நம்பியதோ என்னவோ தழும்பி வந்து கேள்வியை அடுக்கிய அவளின் மனசாட்சி அவள் பதிலில் உள்ளோடே அமிழ்ந்து போனது...


இரவாக இருந்தால் மறைந்து மறைந்து எப்படியாது ஒடி விடலாம் ஆனால் இது காலை பொழுதாக இருப்பதில் வார்டனிடம் பல பொய்களை திணறளோடு அவிழ்த்து விட்டு அவர் சம்மதம் கூறும் வரை ஒற்றை காலில் தவம் செய்யாத குறை தான்...


அவரை சாமாளித்த பின் வாட்ச்மேனை கடப்பது அத்தனை பெரிய காரியம் இல்லை என்பதால் வெறும் தகவலாக தான் வெளி செல்வதையும் அதற்கு வார்டன் ஒப்புதல் கொடுத்ததையும் கூறிவிட்டு கிளம்பி சீட்டாக பறந்து வந்து நேற்று முழுவதும் தான் தூக்கத்தை தொலைத்தது மட்டும் இன்றி கூகுல் ஆண்டவரின் நிம்மதியையும் சேர்த்து பிடிங்கி கொண்டு அவரை கசக்கி பிழியாத குறையாக தகவலை சேமித்தபடி அந்த இடத்திற்கு வந்திருந்தாள்...


வினோதமான வடிவமைப்பை கொண்டு நீண்டிருந்த இந்த ஏழு அடுக்குகளை கொண்டிருந்த அடுக்குமாடியை வாயை பிளக்காத குறையாக நிமிர்ந்து பார்த்தவளுக்கு அப்பாடா என்ன உயரம் என்ற மலைப்பையும் தாண்டி நல்லா ரசனையா கட்டிருங்கால என்று அந்த கட்டிடத்தின் வடிவமைப்பில் ரசனையோடு லயிக்காமலும் இல்லை அவள்....


உயர்த்திய கழுத்தை வலி கண்ட பின்பே தாழ்த்தி கொண்டவளாய் கெட்டை தாண்டி ரிசப்ஷன் வரை வந்திருந்தாள்..
அங்கே ரிசப்ஷனிஷ்ட் என்ற பலகையை முன்பாக வைத்து கொண்டு அமர்ந்திருந்த அந்த பெண்ணை நோக்கி சென்றவளுக்கு அவன் பெயரை கூறி அடையாளப்படுத்தி கேட்கவே தயக்கமாக இருந்தது..


அடுக்கான‌ பளிங்கு கட்டிடமே அவனின் உயரத்தை ஓர் அளவிற்கு அப்பட்டமாக காட்டிவிட்ட பின் அவர்களிடம் அவன் பெயரை கூறி கேட்டால் கண்டிப்பாக அவர்கள் கண்கள் தன் மேல் அலட்ச்சியமாக தான் படியும் என்று அவள் மனதோடு எண்ணி தீர்மானித்து கொண்ட போதும் அவனை பார்க்காமல் செல்ல கூடாது என்ற தீர்மானமும் அனையை உடைக்கும் நதியாக புரண்டதில் ஒரு வழியாக அவள் தயக்கத்தை விட்டு கேட்டிருந்தாள்..


மிஸ்டர் தீலிப் தூரியனை பார்க்கனும் என் அவள் கூறவும் பட்டென அவளை ஏறிட்டு நிமிர்ந்து பார்த்த ரிசப்ஷனில் இருந்த பெண் பட்டென அலட்ச்சியம் செய்து அவளை விலக்காது அவளுக்கு அளிக்கப்பட்ட வேலையில் பொறுப்பாக நீங்க ஏதுக்கு அவரை பார்க்கனும் என்ற கேள்வியை முன்‌ வைத்திருந்தாள்..
அப்பாய்ன்மென்ட் இருக்கா..


இல்லை நா அவுங்களுக்கு என்ன நல்லா தெரியும் நீங்க இதழியாழ் எ.ஜீ.எஸ் காலெஜ்ல படிக்கிற பொண்ணுன்னு சொன்னா அவருக்கு தெரியும் என நம்பிக்கையாக கூறியவளை ஒரு நொடி உறுத்து பார்த்தவள் பின் தலை அசைத்து தூரியனுக்கு இன்டர்காம் மூலம் தொடர்பு கொண்டாள் அவளுக்காக அனுமதி கோரும் நோக்கில்‌...


இவள் வந்தது முதல் இப்போது ரிசப்ஷனிஷ்ட் முன் நின்று பேசிக்கொண்டு இருப்பது வரை அசராது எந்த உணர்வும் இன்றி கேமராவின் வழி பதிவிடப்பட்டு திறையில் பிரசன்னப்படுத்திய அவளின் அத்தனை பாவங்களையும் உள்வாங்கி கொண்டவன் ஏதிர்பார்த்த ஐந்து நிமிடத்தில் தன் இன்டர்காம் அழைக்கவும் மெல்ல ஆச்சியரமாக புருவம் உயர்த்துவதை போல் உயர்த்தி தலை அசைத்து எடுத்தவன் ஏதிர்பக்கம் சொல்லபட்ட விஷயங்களை குறிக்கிடாது கேட்டு கொண்டதை அடுத்து இல்லை எனக்கு அப்படி யாரையும் தெரியாது என கூறி அவன் அழைப்பை துண்டித்து கொண்டதில்..


கேட்ட பெண்ணிற்கு எந்த உணர்ச்சியும் மேல் தழும்பவில்லை என்றாலும் அவள் மூலம் அவன் வார்த்தையை கேட்டு கொண்டு இதழுக்கு உள்ளுக்குள் அவமானமும் ஏமாற்றமும் பொங்கியதின் வெளிப்பாட்டாய் கண்களில் கண்ணீர் தழும்பிய போதும் அதை அவளிடமிருந்து சாமர்த்தியமாக மறைத்து கொண்டுசரி என ஏற்று கொண்டதாய் தலை அசைத்து கொண்டு திரும்பியவள்..


நானா அன்னைக்கு எனக்கு வந்து உதவ சொன்னேன் இல்லை கெஞ்சுனேனா யாருனே தெரியாத எனக்கு அவரா வந்து உதவி செஞ்சாரு அதுக்காக நா பட்ட கடனை உடனே அடைக்க முடியலேனாலும் சும்மா தெங்கஸ் சொல்ல தான வந்தேன் அதை ஏற்றுக்கொள்ள இவருக்கு மனசு இல்லையா..தான் கொடுத்த காசோடு இன்னேரம் நா வந்துருந்தா அப்போ தெரியும்னு சொல்லிருப்பாருல..என மனதோடு கண்டதையும் எண்ணி குழப்பி கொண்டவளுக்கு அவளின் சுற்றித்தாரின் சூழலும் கண்களும் அவளையே ஏளனமாய் பார்ப்பதாய் ஓர் பிரம்மை...

அவனே அவளை யார் என தெரியாது என சொல்லிவிட்ட பின் அங்கு நிற்பதில் நியாயம் இல்லை என்பதை விட நிமிடத்திற்கு ஏகிறும் ஏளனத்தையும் அவமானத்தையும் சுமக்க முடியாதவளாய் ஆப்பீஸின் வாசலை எட்டிய நேரம் வேகவேகமாக ஒடி வந்து அவள் முன் நின்று அவள் நடையை தடை செய்திருந்தான் தீலிப் தூரியன்...

கண்களில் திரையிட்டு போயிருந்த கண்ணீர் முன்னால் நிற்பவனை கலங்கலாக காட்டியிருந்தது..


தீடிரென தன் முன்னால் நின்ற கலங்கலான உருவத்தை கண்டு அது யார் என பட்டென உணர்ந்து கொள்ள முடியவில்லை என்றாலும் அவனின் முன் தன் கண்ணீரை காட்ட விரும்பாது குனிந்து தன் கண்ணீரை விளித்தெடுத்து நிமிர்ந்து பார்த்த நேரம் செற்று இனியதாக அதிர்ந்து தான் போனாள்..

எங்க போற பப்ளி என உரிமையாக செல்ல பெயரிட்டு அழைத்ததை எல்லாம் உணர்ந்து கொண்டும் அவனையே வெறித்தாளா அல்லாது அவனை வெறித்ததில் உணர தவறினாளா என்பது அவளுக்கே வெளிச்சம்..

தன்னையே பார்த்து நின்றவளை நிதானமாக அளவிட்ட அவனுக்கு அவள் முன் வந்து நிற்க்க சில காரணங்கள் உண்டு என்றாலும் முதலில் மறுத்தற்கான காரணம் அவனுக்கே என்ன மாதிரியாக இருந்ததோ தெரியவில்லை அப்படி ஒருவளை தெரியவே தெரியாது என அழைப்பை துண்டித்து வைத்து விட்ட பின் நெற்றியை வருடியும் தட்டியும் மூளைக்குள் ஏதோ ஓர் யோசனையை உருட்டியவன் இதோ அவள் முன் வந்து நின்றிருந்தான்...

எங்க போற பப்ளி என்று கேட்டதும் தயக்கமின்றி கண்களில் கண்ணீரை தேக்கி கொண்டு என்ன நீங்க தெரியாதுனு சொன்னாதா அவுங்க கிட்ட சொல்லி என்கிட்ட சொல்ல சொன்னீங்கள அப்பறம் எப்படி நா இங்க இருக்க முடியும் அதான் கிளப்புறேன் என புகார் பத்திரம் வாசிக்கும் பிள்ளையாக அவள் கூறவும் ரிசப்ஷனிஷ்டம் பார்வையை திருப்பியிருந்தவனை பார்த்து எழுந்து நின்ற ரிசஷப்ஷனிஷ்ட்
தன் வேலையில் திருத்தத்தை கடைப்பிடித்திருந்ததால் தாழ்வின்றி நிமிர்ந்தே அவனை பார்த்தவள் உங்கிட்ட இதழியாழ்னு தான் சொன்னேன் சார் அப்பறமும் நீங்க தெரியாதுனு சொன்னதுனால தான் அவுங்களை தடுக்கலை என்றதும் புருவத்தை சிறு நெளிவோடு உயர்த்தியவனின் பார்வையில் மெச்சுதல்..


தன் நெஞ்சுக்கும் சற்று கிழாகவே இருந்தவளின் உயரத்திற்கு குனிந்து கொண்டு பேசியவனின் பாவம் அங்கிருந்த அனைவரின் பார்வையிலும் ஆச்சரியத்தை தொற்றுவிப்பதாய்..


பெண்கள் என்றால் பத்தடி தூரம் விலகி நிற்கும் மாக உத்தமன் இல்லை தான் அவன்.. அது அங்கிருந்த அனைவருக்கும் தெரிந்திருந்த போதும் அவர்கள் கண்களில் ஆச்சரயம் குடியேரவும் சில காரணிகள் உள்ளதே...


உத்தமன் என்ற வகைறாக்குள்ளும் சேராமல் பெண் பித்தன் என்ற வகைறாக்குள்ளும் சேராமல் தனி ரகமாக தோற்றம் காட்டுபவனின் தோற்றம் இன்று முற்றிலும் வினோதமாய் குழந்தையை தூக்கி வைத்து சமாதானம் செய்வது போலான அவனின் இலகிய பேச்சும் ஒரு சிறு பெண்ணிற்காக ஒடிவந்ததும் தான் ஆச்சரம் அவர்கள் கண்களில் தொற்றி கொள்ள காரணமா என்றால் இருக்கலாம் அதுக்கான வாய்ப்பின் விகிதம் அதிகம் தான்...


இதழில் துளி சிரிப்பு இல்லாத போதும் குறும்போடு உருண்ட அவன் சிறு கண்கள் அவளை அளவிட்டு விழுங்கியது..


என்ன தானே பார்க்க இவ்வளவு தூரம் முயற்ச்சி எடுத்து வந்து இப்போ நா உன் முன்னால வந்துட்டேன்ல உள்ள போகலாமா...


என்று கேட்டவனை பார்த்தவள் இதழை பிதுக்கி நீங்க தான் என தெரியாதுனு சொன்னிங்கல என்றவள் என்ன கோவிக்க தெரியாத குமரியா என்ன இருந்தாலும் கோபப்படாமல் குழந்தையாக தேம்பி நின்றாள்...


காம் டவுன் நா தான் உன்னை தெரியாதுனு சொன்னேன் அது உன்மை தான் இப்போ நானே தானே கூப்பிடுறேன் வா பப்ளி என உரிமையாக அவள் கன்னத்தில் கோலமிட்ட கண்ணீரை துடைத்து விட்டு தன் அறைக்கு இழுத்து சென்றவனின் விசைக்கு அவளும் அடம் இல்லாது சமத்தாக தொடர்ந்தாள்...


மழுப்பல் இல்லாத அவன் பேச்சில் இந்த நிலையிலும் ஈர்க்கப்பட்டவள் மெல்ல சிரித்தபடியே அவனை பின் தொடர்ந்து உள் சென்றிருந்தாள்...


தனக்காக பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட அறையினுள் அவளை அழைத்து வந்து சிறிதும் யோசனை இன்றி அவளை தனக்கான இருக்கையில் அமர்த்தி விட்டு அவளுக்கு நேர் ஏதிரே மன்டியிட்டு அமர்ந்தவனை பார்த்து பட்டென எழப்பார்த்தவளின் தோளை பற்றி..


உக்காரு என்னை பார்க்க கஷ்டப்பட்டு நிறைய எபர்ட் போட்டு மேடம் வந்துருக்கீங்க அப்போ உங்களை நல்லபடியா உபச்சாரம் பண்ணனும்ல என்றவனின் பேச்சில் உள்ளது நக்கலா அல்லது பரிவா என புரிந்து கொள்ள முடியாது சிறுமியாக மலங்க மலங்க விழித்திருந்தவளின் பாவனை அவன் இதழில் சிரிப்பை தொற்றுவிக்க மறந்தாலும் கண்களில் அதனை நிறைவாக காட்டி கொடுத்தது..

தன்னை காண அவள் எடுத்த அத்தனை முற்ச்சியையும் தவறாது உணர்ந்திருந்தவனுக்கு உள்ளோடு ஏதோ ஓர் சிலிர்ப்பு தொன்றி அவனை குழைந்த மண்பன்டமாக இலக்கினும் இறுகியே நின்ற சாராம்சம் யாதோ..

இப்போ சொல்லு எதுக்கு என்னை பார்க்க வந்த என்றவனை பார்த்து மெல்ல தலையை கவிழ்த்தி கொண்டு நீங்க அன்னைக்கு எனக்காக திரும்பி பீஸ் கட்டி எக்ஸாம் எழுத ஹெல்ப் பண்ணிங்கல அப்போ நா உங்களுக்கு ஒரு வகைல கடன் பட்டுருகேனு தான அர்த்தம்..

அதை என்னால உடனே அடைக்க முடியலேனாலும் அதுக்கு தேங்கஸ் கூட சொல்லாம எப்படி இருக்க முடியும் அதான் வந்தேன் என்றவளை இன்னும் கூட அவளின் கீழ் மண்டியிட்டு அமர்ந்தபடி மிக சிறத்தையாக கேட்டு கொண்டவன்..

ஓஓ அப்போ சொல்லு..

அவன் கூறியது புரியாமல் புருவ நெளிவோடு ஹான் என்னது என நிமிர்ந்தவளை பார்த்து கண்களால் பாவம் காட்டி சிரித்தவன் இதழை இறுக்கி வைத்து கொண்டே தேங்கஸ் தான சொல்ல வந்த சொல்லு என்றதும்..
மெல்ல தலையை குனிந்து கொண்டு அசட்டு தனமாக சிரித்து வைத்தவள் தேங்கஸ் என்றதும்..

ம்ம் ஓகே என்றவன் பின் அப்பறம் நீ கடனை பனமா இல்லாம நமக்கு சாதகமான முறையில கூட அடைக்கலாம் என்றவனை இப்போதும் புரியாமல் பார்த்து வைத்தாளுக்கு அவனின் பேச்சு வேறு உள்ளுற புரியாமையோடு திகிலையும் லேசாக தூவி விட்டதில் கொஞ்சமே கொஞ்சம் அவளின் இதயம் குலுங்கி அடங்கியது..

இறு குழப்பிக்காது நானே சொல்லுறேன் நீ எப்பையும் என் கூடவே இருக்கனும் இப்போனு இல்லை எப்பையும்...ஆன்ட் ஒன் திங்க இதை நா ரெக்வேஷ்டா மட்டும் கேட்டகலை காட் இட் என்றவனை பார்த்து ரொம்பவே தடுமாறியபடி யூ மீன் ல..ல.லவ் என்று கேட்டிருந்தாள்..

தொடரும்...
 
Last edited: