• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

என் மாண்புறு மங்கையே...-ஹேமா ஶ்ரீ தீனதயாளன்.

Admin 01

Administrator
Vaigai - Tamizh Novelist (Admin Crew)
Joined
Jul 30, 2021
Messages
566
தன் வழியை தானே அமைத்துக் கொள்ளும் நதி போல,

தன்னைத் தானே திருத்திக்
கொள்ளும் வரலாற்றைப் போல,
தன்னைத் தானே செதுக்கிக்
கொள்வாள் பெண்.

ஓவ்வொரு ஆணின் வெற்றிக் பின்னும் ஒரு பெண் இருக்கலாம். ஒவ்வொரு பெண்ணோட வெற்றிக் பின்னாடி ஒரு ஆண் இருக்கலாம். இல்லை அந்த ஆணோட இழப்பு இருக்கலாம். ஆனால் எந்த இழப்பிலிருந்தும் தன்னை மீட்டுக் கொள்ளும் வலிமை நிச்சயம் பெண்ணுக்கு இருக்கு.

இந்தியாவின் மிகப்பெரிய தொழில் சாம்ராஜ்யம் cafe coffee day. அதன் நிறுவனர் சித்தார்த்தா. 3,000 ஏக்கர் காபி தோட்டங்கள், நாடு முழுவதும் 1,600 காபி டே கடைகள் , மிகப் பெரும் செல்வந்த குடும்ப பின்புலம் என அனைத்துக்கும் சொந்தக்காரரான சித்தார்த்தா, கடன் தொல்லையால் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

அவரது இறுதி சடங்குகளில், தன் கணவரின் உயிரற்ற உடலை பார்க்க அஞ்சி முகத்தை மறைத்து ஓடிய மாளவிகாவையே முதன் முதலில் பார்த்தது உலகம். கர்நாடக முன்னாள் முதல்வர் குடும்பத்தில் பிறந்து, பெரும் செல்வந்த குடும்பத்தில் பிறந்த சித்தார்த்தாவை திருமணம் செய்து, இரு குழந்தைகளின் வளர்ப்பு என தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்தவரின் தலையில் கணவரின் இழப்புடன் அவரது 7000 கோடி கடனும், ஆயிரக் கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் சேர்ந்தே விழுந்தது..

எந்த கடனைப் பார்த்து சித்தார்த்தா தற்கொலை செய்து கொண்டாரோ அந்தக் கடனால் மாளவிகா பயமுறுத்த முடியவில்லை. தன் ஐம்பதுகளில் தொழிலில் நுழைந்தார் மாளவிகா.
முதலில் பெரிய கடன்களை அடைக்க வங்கிகளிடம் அவகாசம் வாங்கினார். தன்னால் இயன்ற சிறு, சிறு கடன்களை உடனே அடைத்தார்.

அதிக இலாபம் தராத, மக்கள் புழக்கம் குறைவாக இருந்த இடங்களில் இருந்த 'காஃபி டே' கிளைகளை மூடிவிட்டு, மக்கள் புழக்கம் அதிகம் உள்ள இடங்களில், புதிய கிளைகளைத் திறந்தார்.

கொரோனா கால கட்டத்தில் தங்கள் நிறுவனத்தின் பெயரில் காபி தூள் தயாரித்து விற்பனை செய்தார்.

அவரது முயற்சிகளுக்கு பலன் கிடைக்க ஆரம்பித்தது..

2019 மார்ச், 'காஃபி டே' நிறுவனத்தின் கடன் ரூ.7,000 கோடி. அதுவே 2020 மார்ச்சில் ரூ.2,900 கோடி. 2021ன் மார்ச்சில் 1,731 கோடி ரூபாயாக கஃபே காபி டே நிறுவனத்தின் கடன் குறைந்தது.

தன் கணவரின் கனவு காபி டேக்காக இன்று வரை விடா முயற்சியுடன் போராடி வரும் மாளவிகா, தங்கள் நிறுவனத்தின் ஒவ்வொரு தொழிலாளருக்கும் அந்த வெற்றியையும் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்து இருந்தார்.

கனவுகளுக்காக போராடும் அத்தனை பெண்களுக்கும் மாளவிகா வாழும் சரித்திரம்.

அந்த மாண்புறு மங்கைக்கு இந்த மகளிர் தின வாழ்த்துகளை உரித்தாக்குகின்றேன்.


அன்பும் நன்றியும்
ஹேமா ஶ்ரீ தீனதயாளன்.
 
Top