• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

என் மாண்புறு மங்கையே-Meenakshi Murugappan

Admin 01

Administrator
Vaigai - Tamizh Novelist (Admin Crew)
Joined
Jul 30, 2021
Messages
562
என் மாண்புறு மங்கையே - வீர மங்கை என்றாலே, என் நினைவில் வருவது வேலு நாச்சியார்தான். அவளைப் பற்றிய சிறு கட்டுரைதான் இது.

தென்னகத்தின் ‌ஜான்சி ராணியாம் வேலுநாச்சியார். ஆகா! என்ன ஒரு அடைமொழி. அதன் உட்பொருள் எம்மைக் கொல்லாமல் கொல்கின்றது. வேலு நாச்சியாரின் காலம் 1730. ஜான்சி ராணியின் காலம் 1828. ஒரு நூற்றாண்டு புரண்டதில் எமது வீரமங்கை வேலு நாச்சியின் வரலாறும் மறைக்கப்பட்டிருக்கிறது. மறைக்கப்பட்டதா?, இல்லை அவளுக்கு வரலாறு மறுக்கப்பட்டதா?.

ஜான்சிராணியின் பிறப்பிற்கு முன்னரே வெள்ளையனை எதிர்த்துப் போராடி தனது நாட்டைக் கைப்பற்றிய எமது வீரமங்கையின் சுவடுகளை வரலாற்றில் இருந்துக் களைந்ததன் முகாந்திரம் யாதோ?. முதன்முதலில் வெள்ளையனின் அரக்கத்தனமான ஆளுமைக்கும் ஆணவத்துக்கும் முத்தாய்ப்பாக அவனை வென்று ஆட்சியை நிலைநாட்டி சரித்திரம் படைத்தவளின் சரித்திரம் ஏடுகளில் கூட இல்லாமல் போயிற்றே. இனி ஜான்சி ராணியை வடக்கத்திய வேலு நாச்சியார் என்று விளிப்போம். இது ஜான்சியின் வீரத்தைக் கலங்கப்படுத்த அல்ல. ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே அவளை உரித்து வைத்தவள் பிறந்து விட்டாள் என்பதை உலகிற்குப் பறைசாற்ற.

அவளின் வீரம், விவேகம், மொழியறிவு என ஒவ்வொன்றும் பிரம்மிக்கத் தக்கவை. உருது, தமிழ், ஆங்கிலம் மற்றும் பல மொழிகள் புலமை உடையவள்‌. வளரி, வில் வித்தை, வாள் வீச்சு என்று பல கலைகளின் கலைவாணி அவள்.

ராமநாதபுரத்தின் ராணியான அவள் சிவகங்கைச் சீமையின் ராஜா முத்துவடுகத்தேவரை மணந்து சீமையின் மகாராணியானாள். இருவரின் இல்லறம் நல்லறமாக செல்ல, அதற்குச் சாட்சியாக அழகின் உருவாய் வெள்ளச்சி நாச்சியார் என்றொரு பெண் குழந்தைப் பிறந்தாள். மருது சகோதரர்களின் தலைமையில் சிம்ம சொப்பனமாக விளங்கியது கோட்டை. பெரிய மருதுவின் வீரமும், சின்ன மருதுவின் விவேகமும் கோட்டையை அரணாக பாதுகாத்தது. வெள்ளையனுக்கோ நவாபுக்கோ வரி செலுத்த இயலாது என்று தீரக்கமாக அறிவித்திட, எஃகைத் தகர்த்தெறியும் நவாப் மற்றும் ஆங்கிலேயர்களால் இவர்களின் கோட்டையைப் பணிய வைக்க இயலவில்லை. அவரின் மாட்சிமை பொருந்திய ஆட்சியைக் கலைக்கவும் இயலவில்லை. அதனால் அவரை சூழ்ச்சியால் வீழ்த்தத் திட்டம் தீட்டினர்.

வெள்ளையர்களின் உதவியோடு, ஆற்காடு நவாப் முத்துவடுகத்தேவரைப் புற முதுகில் நவீன ஆயுதம்‌ கொண்டு தாக்கி, அவரைக் கொன்றனர். வெள்ளையனின் வாரிசு இழப்பு கோட்பாடு சட்டத்தின்படி, சீமை ஆங்கிலேயர் வசமானது.ன

எட்டு வருடம் காத்திருந்து படைகள் திரட்டி சிவகங்கை சீமையைக் கைப்பற்ற தயாரானாள். திப்பு சுல்தான் ஐயாயிரம் குதிரை வீரர்களையும், பீரங்கி படையும் கொடுத்து உதவ முன் வந்தார். உடையாள் காளிப் படை மற்றும் திப்பு சுல்தானின் படையின் உதவியுடன் காளையார்மங்களத்தைக் கைப்பற்றியது. காளையார்மங்களத்திலிருந்து படைகள் அனைத்தும் சிவகங்கை நோக்கி புறப்பட்டது. ஆனால் வெள்ளைத் தளபதி பாஞ்சோர் திமிராய் இருந்தான். காளையார்மங்களம் கைவிட்டு சென்றிருந்தாலும், தனது படையை வேலுநாச்சி‌ அழித்திருந்தாலும், இங்கு அவளால் ஒன்றும் செய்ய முடியாது என்று நினைத்தான். இந்த சிறுபடை கோட்டைக்குள் எப்படி பிரவேசிக்க முடியும் என்ற திண்ணக்கம். அப்படியே உள் நுழைந்தாலும், தோட்டாக்களுக்குப் பலியாகப் போகின்றனர். அவன்தான் அடிக்கொரு துப்பாக்கி வீரனை நிறுத்தியிருந்தானே. எழுச்சியை உருவாக்கும் நாச்சியாரை வதைக்க, அவளின் சிலம்பு வாத்தியார் வெற்றிவேலை ஏற்பாடு செய்திருந்தான். காலைச் சுற்றியிருக்கும் நச்சுப்பாம்பாய் இருந்தவனை குயிலி வேல் சொருகிக் கொன்றுவிட்டாள். அடுத்தடுத்து நடந்த முயற்சிகளும் வீண். ஒன்றும் பலிக்கவில்லை. குயிலி பலிக்கவிடவில்லை. அதனால் இதை ஒரு அரிய சந்தர்ப்பமாகக் கருதினான். அவனுடைய மாபெரும் தவறு வேலுநாச்சியாரைக் குறைத்து மதிப்பீடு செய்ததுதான்.

விஜயதசமியன்று கோட்டைக்குள் பெண்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. குயிலி மற்றும் அவளது படையினர் கோட்டைக்குள் மாறுவேடங்களில் பிரவேசித்தனர்.

கோவிலின் வலப்புறம் இருந்த ஆயுதக் கிடங்கிற்குப் பாதுகாப்புகள் அதிகமாய் இருந்தது. அந்தப் பாதுகாப்பு வளையத்தை எவரும் தகர்க்க முடியாத வகையில் அரணாய்த் துப்பாக்கி வீரர்கள் நின்றிருந்தனர்.

அம்மனுக்கு விளக்கேற்ற வைத்திருந்த நெய்யை எடுத்து தன் மேல் கவிழ்த்துக் கொண்டு ஆடினாள் குயிலி. தீப்பந்தம் எடுத்துக் கொண்டு, ஆயுதக் கிடங்கில் நுழைந்து அங்கிருந்த ஆயுதங்கள் அனைத்தையும் தீக்கிறையாக்கினாள். ஆயுதக் கிடங்கு வெடித்துச் சிதறியது.

கோட்டைக்கு வெளியிலும் அந்த எதிரொலி ஒலிக்க, ஆங்கிலேய வீரர்கள் திண்டாடினர். அவர்களின் ஒழுங்குநிலை கலைந்தது. கவனம்‌ சிதறியது.

அந்தக் குழப்பங்களைப்‌ பயன்படுத்தி, திப்பு சுல்தானின் படையினர் கோட்டைக் கதவுகளைத் தகர்த்தெறிந்தனர். நாச்சியாரின் படைகள் ஆவேசத்துடன் கோட்டைக்குள்‌ பிரவேசித்தது. அகழியில் பசித்திருக்கும் முதலைகள்போல் இரை தேடி அலைந்தனர். குதிரை‌ வீரர்கள் சூறாவளியாய் உள்நுழைந்து புழுதியைப் படர விட ஆங்கிலேயர்கள் சற்று திணறிப் போயினர். மேலே எழும்பியிருந்த புழுதித் திரையொன்றை நெய்திருந்தது. அதில் பார்க்கும் திறன் இழந்து தவித்தனர் ஆங்கிலேய வீரர்கள். அவர்களை மேலும் திணறடிக்க, வளரி பாய்ந்து உயிர்நிலையில் தாக்கியது. புரவியில்‌ வீற்றிருந்த வீரர்களோ அணிவகுத்து சங்கிலித்தொடராய் சென்று வெள்ளையரின் தலை கொய்தனர். தோட்டாக்களில் இருந்து தப்ப குதிரையின் கடிவாளத்தை‌ ஏற்றிப் பிடிக்க, குதிரை முன்னங்கால் இரண்டையும் தூக்கித் திமிறி ஒலியெழுப்ப, தோட்டாக்கள் இலக்கை அடையவில்லை.‌ அதற்குள் அவர்களைக் கவண் கற்கள் மாரி போல் தாக்க, நிலைகுலைந்து போயினர் ஆங்கிலேயப் படையினர். உடையாள்‌‌ காளிப்படைப் பிரிவினர் பாதிக்கும் மேல் மாளிகையின் மேன்‌மாடத்தில் இருந்தனர். முன்பே முடிவுகட்டியிருந்ததுதான். எப்படி மேல்மாடம் செல்வது என்று தவித்திருக்க, குயிலி வழிவகை செய்துவிட்டாள்.

உயிரற்ற சடலங்களின் மேல் சட்டை செய்யாமல் குதிரைகள் பாய்ந்தோட எங்கும் குருதி வெள்ளம். மரண ஓலங்கள் எதிரொலி செய்ய, இரவுப் பொழுது காளி அவதாரம் எடுத்தது போல் இருந்தது. காலாட்படை வீரர்கள் ஒருபுறம் கோட்டைக்குள் வில்லையும் வேலையும் கொண்டு எதிரியின் நெஞ்சினைப் பதம் பார்த்தனர். கோட்டை இப்பொழுது உதிரத்தால் குடமுழுக்கு ஏற்றுக் கொடூரமாய்க் காட்சியளித்தது. கொடுத்தாயிற்று. தாபம் கொண்ட மண்ணிற்கு வெள்ளையனின் கழுத்துத் திருகி, உதிரம் பிழிந்து அருந்த வழி செய்து முடித்தனர்.

வேங்கையெனச் சீறிப் பாய்ந்தாள் வேலுநாச்சியார். அவள் உடல் முழுக்க குருதியால் அபிஷேகம் செய்யப்பட்டிருந்தது. மஞ்சள் பூசிய வதனம் முழுக்க எதிரியின் உதிரம். விழிகளில் சீற்றம் மின்னியது.

கொத்துக்கொத்தாய் எதிரிகளைக் கொன்று குவித்தாயிற்று. களையெடுப்பதுதான் அவளுக்குக் கைவந்த கலையாயிற்றே. காளியின் அவதாரம் எடுத்திருந்தாள் அவள். திரும்பிய திக்கெங்கும் தலைகளும் முண்டங்களும் தனித்தனியே கிடந்தது. கோட்டை முழுக்க அவளது வெற்றியின் சின்னங்கள். கோட்டை வாயிலிலிருந்து அரியணை வரை அவள் செல்லும் இடங்களில் எல்லாம் தலைகள் உருண்டன. தளபதி பாஞ்சோர் அவளிடம் சரண் புகுந்தான். சீமையைக் கைப்பற்றினாள் வேலு நாச்சியார்.

ஆங்கிலேயரிடம் அடிபணிந்த பல மீப்பெரு சமஸ்தானங்களுக்கு மத்தியில் தனியொருத்தியாய் தன் தாய் மண்ணை மீட்டு, ஆங்கிலேயனுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய வேலு நாச்சியார் என்றும் சரித்திரத்தில் நிலைத்திருக்க வேண்டும்.

2014ஆம் ஆண்டு, சிவகங்கை மாவட்டம் அருகில் சூரக்குளம் என்னும் கிராமத்தில், தமிழ்நாடு அரசால், வேலு நாச்சியாருக்கு நினைவு மண்டபம் எழுப்பப்பட்டது. 2008 ஆம் ஆண்டு இந்திய அரசால் வேலு நாச்சியாரின் பெயரில் தபால்தலை வெளியிடப்பட்டது.

அவளின் வீரத்திற்கு என்னால் இயன்ற சிறிய சமர்ப்பணம். இதை நீண்ட நெடிய கதையாக எழுத ஆவல் இருந்தாலும், அவளை எமது எழுதுகோளில் வடிக்கும் நாளுக்காக நானும் காத்திருக்கிறேன்.

Admin 02

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
320

வாழ்த்துக்கள் கா...சீக்கிரமா எழுதுங்க வாசிக்க ஆவலா காத்திருக்கோம்
 
Top