• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

என் மான்புறு மங்கையே- Alamu Giri

Admin 01

Administrator
Vaigai - Tamizh Novelist (Admin Crew)
Jul 30, 2021
583
376
63
Tamil Nadu, India
என் மான்புறு மங்கையே... எல்லையற்றவள் ....
🌸
🌸
🌸
🌸
🌸
🌸
🌸

18+ பற்றிய தொகுப்பு விருப்ப மற்றவர்கள் தவிர்க்கவும்

வாரம் ஒருமுறை வருவாள் அவள்....
" அவள் பெயர் என்னவென்று நான் இதுவரை கேட்டதே இல்லை"

"கேட்க தோன்றியதும் இல்லை"

என்னை பொறுத்தவரை "அவளொரு சிறு குடிசை தொழிலாளி"

பாசி மணிகளை தானே கோர்த்தும், சிறு முதலீடு வைத்து சில பொருட்களை வாங்கி தோளில் நேர்த்தியாய் அடுக்கி எடுத்து வந்து வியாபாரம் செய்வாள்..

அந்தப் பெயர் தெரியாத அவளுக்கு நான் என்றால் ஏனோ ஒரு பாசம் இருக்கும் ...

அவளுக்கு நான்கு பெண் குழந்தைகளோடு ஐந்தாவதாக ஒரு ஆண் குழந்தை .. அவளை பார்க்கும்போதே எனக்கு ஏனோ மனதை பிசையும்.....

அந்த அவளின் கணவன் தன் தொழிலுக்கு போகும் போதும் கூட அவளை கங்காரு தன் குட்டியை சுமந்து போவதுபோல கூடவே அழைத்துக்கொண்டு திரிவான் ....

அவனும் பாசத்தில் குறைந்தவன் அல்ல .... தங்கச்சி தங்கச்சி என்று பாசத்தை தருபவன். அவனை எனக்கு சம்மந்தியாய் என் ஏரியா முழுவதும் அவனாலே அறிமுகப்படுத்தப்பட்டவன். அவன் மகள்களில் ஒருத்தியை என் மகனுக்கு மணமுடிக்க வேண்டும் என்று மனதில் ஆசைகள் வரும் அளவிற்கு பாசக்காரன்.

சில மாதங்களுக்கு முன் தனிப்பட்ட காரணங்களால் நானும் என் மகனும் தனித்து இருந்தோம் . அப்போது அந்த அவள் அவ்வளவு ஆறுதலாய் சில வார்த்தைகளை கூறிவிட்டு, சில கணங்கள் தயங்கி தயங்கி பேச ஆரம்பித்தாள் "ஏன் கண்ணு நான் ஒரு விஷயம் கேட்கிறேன் எனக்கு உதவி பண்ணுவியா" என்று கேட்டாள்....

நான் சொல்லுங்க அக்கா என்றேன். சில நிமிட அமைதிக்குப் பிறகு ஆரம்பித்தாள். என் பெரிய பொண்ணுக்கே கல்யாணம் முடிஞ்சிடுச்சு. இன்னும் நான் குடும்ப கட்டுப்பாடு ஆப்பரேஷன் பன்னிக்கல, இதுக்கு மேல பிள்ளை வந்தா என்ன பண்றது வெளியே தலைய காட்ட முடியாது என்று எங்கோ பார்வையைப் பதித்து கொண்டு சொல்லி முடித்தாள்....

"அச்சோ இதுக்கு ஏன் தயங்குற அக்கா உன் புருஷன் கிட்ட காண்டம் பத்தி சொல்லி அத உபயோகித்துக்கோ அக்கா என்று சொன்னதும்,

வேணாம் கண்ணு அந்த மனுஷனுக்கு தெரிஞ்சா அவ்வளவுதான். "அவருக்கு இதெல்லாம் புடிக்காது, சொன்னாலும் புரியாது என்றாள்"

சில கணங்கள் யோசித்த நான் நீங்க போங்க அக்கா அடுத்தவாரம் வரும்போது ஏதாவது சொல்லுறேன் என்று சொல்லி அனுப்பி வைத்தேன்...

"எனக்குமே உடனுக்குடன் இதற்கான தீர்வும் தெளிவும் இல்லை காரணம் ஒற்றை பெற்றோராய் இருப்பதாலோ என்னவோ"...

அந்த வாரத்திலேயே அண்ணியின் மாதாந்திர பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு போனபோது எங்க ஊரின் செவியரிடம் இந்த காரணங்களையும் இதற்கான தீர்வையும் சற்று தயக்கத்துடன் கேட்டேன் அந்தம்மா உடனடி தீர்வாய் சில அட்டை கருத்தடை மாத்திரைகளை என் கையில் திணித்து விட்டு சிரித்துக் கொண்டே போனாள்...

அடுத்த வாரத்தில் கணவனுடன் வந்தவளிடம் அந்த மாத்திரைகள் அடங்கிய அட்டைகளை கொடுக்க நானும், வாங்க அவளும் பட்ட பாடுகள் சொல்லிமாலாது. "கடைசியாக அரிசி இல்லை சமைக்க என்னவளின் சாதுரியத்தை புரிந்துகொண்டு" 5கிலோ ரேஷன் அரிசியில் மறைத்து தந்த அவளம் நானும் அவளும் மட்டுமே அறிந்த ரகசியம்.....

அவளிடம் நான் சொன்ன சில அறிவுரைகள். "இது தீர்வல்லடி பெண்ணே"... "இதுபோன்ற அவல நிலை உன் பெண்ணிற்கு வர விட்டுவிடாதே" .... படிக்கவை அதுதான் அவள்களின் தலையெழுத்தையே மாற்றும்....

உன் மகனிடம் சொல்லி சொல்லி வள "பெண் என்பவள் பிள்ளை பெற மட்டுமல்ல, உன்னில் சரிபாதி உன் உணர்வுகளை பகிர்ந்து, அவள் உணர்வுகளை புரிந்து நட அவளை பாதுகாக்காதே, அவளை சிந்திக்க விட்டு அவள் சிந்தனைகளை மதித்து நட, பெண்ணை நீ தெய்வமாய் கொண்டாட வேண்டாம். அவளை சக மனிதியாய் மதித்தால் போதும்.... என்று சொன்னதும் அவள் கண்ணில் சிறு ஒலியின் பிரதிபலிப்பு ....

என் உள்ளத்தில் இருந்து வந்த வரிகள் ...
🌸
🌸
🌸
🌸
🌸
🌸
🌸
🌸
🌸

ஐந்து வயதில்
அத்தையின் ஆண்
பிள்ளையோடு
விளையாடினேன்
அடங்கியிறு
என்றாள் அத்தை.....

பத்து வயதில்
சத்தமிடும்கொலுசை
அணிந்தேன் இது
என்ன திருட்டு
மாட்டின் சலங்கையை
போல என்று
சாடினாள் பாட்டி....

பதினைந்தில் பூப்பெய்தினேன்
" பாரதியின் கவிதை பித்து சற்று ஏறி"

"நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்"

என்று நிமிர்ந்த நடை
பழகினேன் அக்கம்
பக்கத்தவள்கள்
பெண் பிள்ளைக்கு
என்ன நெஞ்சை
நிமிர்த்திய நடை
என்று அன்னையிடம்
கூறபழுக்க காய்ச்சிய
கம்பி என் காலில்
தடம் பதித்தது...

இருபதில் தோளில்
பையை மாட்டிக்கொண்டு
அலுவலகம் சென்று,
விரல்களால் கணினியில்
நாட்டிய மாட ஆசை
கொண்டேன்...
படிக்க வைத்ததே
பெரியது இதோ
இவனிடம் தான்
உன் மீத வாழ்வு
அடங்கி பிழைக்க
கற்றுக்கொள் என்று
கடமை முடித்தார் அப்பா ...

"திருமணம் என்றால் என்னவென உணரும் முன் கையில் பிள்ளை"...

அடங்கி இரு,
பேச்சைக் குறை,
விட்டுக்கொடு,
என்ற சுயத்தை தொலைக்கும் வார்த்தைகளை செயல்களை எதிர்த்து எழுந்து வருபவருக்கு திமிர் பிடித்தவள் அடங்காப்பிடாரி என்ற வசை மொழிகள்...

பெருமையாய் தலைகுனிந்து
உங்கள் வசை மொழியை ஏற்று ..

தடைகளை உடைத்து வெளி வந்து எனக்கே எனக்கான என் வாழ்வில் சுயம் நோக்கி நான்..,. மகிழ்ந்திருப்பேன்......
🔥
🔥
🔥

AOh14GhCPSHgKwVHmbOvqc0Cb_ynREMdzSWjs37ayFxn=s40
 
  • Love
Reactions: Admin 02

Admin 02

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 31, 2021
320
54
63
Tamil nadu, India

ரெண்டாவது முறை படிக்கிறேன் சூப்பர் மா தொடந்து எழுதுடா