• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

என் மேல் விழுந்த மழையே!-20

Meenakshi Rajendran

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jun 22, 2024
153
51
28
Tiruppur
அத்தியாயம்-20

கிருஷூம், பிருத்விகாவும் நூலகத்தில் ஒருவரை ஒருவர் பார்த்தப்படி அமர்ந்திருந்தனர். மணி ஆறைத் தாண்டி இருந்தது. அந்தக் கனமான மருத்துவ நூலைப் புரட்டிக் கொண்டிருந்தாள். மாலை நேரம் என்பதால் இதமான இசை வேறு நூலகத்தில் ஒலித்துக் கொண்டிருந்தது. அங்காங்கு சிலர் மட்டுமே படித்துக் கொண்டிருந்ததால் பெரும்பாலான இடம் காலியாக இருந்தது.
பிருத்விகா தன் கையில் உள்ள பேனாவைக் சுழற்றியவள் எதையோ யோசித்தாள்.

அவளைக் கவனித்துக் கொண்டிருந்தான் கிருஷ். நூலகத்தில் அமைதி காக்க வேண்டும் என்ற காரணத்தால் அமைதியாக பேனாவைச் சுழற்றும் கையின் மீது தன் கையை வைத்தான். உடனே நிமிர்ந்து பார்த்தாள் பிருத்விகா.
தன் கைப்பேசியை எடுத்தவன் அவள் முன்னே ஆட்டி விட்டு டைப் செய்ய ஆரம்பித்தான்.

‘என்ன டீப் திங்கிங்க்?”
அவனை நிமிர்ந்து பார்த்தவள் கைப்பேசியை எடுத்து, ‘நத்திங்க்.’ என்று பதிலுக்கு அனுப்பினாள்.
‘நோ.. காண்ட் பீலிவ். மார்னிங்கில் இருந்து நீ இப்படித்தான் இருக்க. வாட் ஹேப்பண்ட்? ஸ்பிட் இட் அவுட் நவ். என்ன நடந்தது? எதனால் நீ அப்சட்டா இருக்க?

‘நோ.. அப்படி எல்லாம் எதுவும் இல்லை. ஐஸ்ட் லேக் ஆஃப் ஸ்லீப். கொஞ்சம் இரிட்டேசனா இருக்கு. அவ்வளவுதான்.’

‘ஓகே நம்பிட்டேன்.’

என்று இறுதியாக அவளுக்கு ரிப்ளை அனுப்பிவிட்டு அவளைக் கூர்ந்து பார்த்தான் கிரிஷ்.

தன் தோழியைப் பற்றி அவனுக்குத் தெரியாததா?
ஒற்றைப் புருவத்தைத் தூக்கி அவனைப் பார்த்தான். பதிலுக்கு தன் இரண்டு புருவங்களையும் தூக்கினாள் பிருத்விகா.

அப்போது அருகில் இருந்த டேபிளில் ஸ்டீல் ஸ்கேல் கீழே விழுந்தது. உடனே நண்பர்கள் இருவரது பார்வையும் அங்கே திரும்பியது. குனிந்து அதை எடுத்தபடியே அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தான் வருண். அவன் அருகில் இருந்த மித்ராவும் தான்.
இவர்கள் எப்போது இங்கு வந்து அமர்ந்தார்கள் என்று பிருத்விகாவுக்குத் தெரியவில்லை. ஆனால் கிருஷ் முகத்தில் எந்த உணர்வையும் காட்டவில்லை. அமைதியாக அவர்கள் பார்வையை எதிர் கொண்டான்.

பிருத்விகா ஒரு நொடி திகைத்தாலும் பின்பு தன் பார்வையை மீண்டும் புத்தகத்தின் மீது திருப்பினாள். தன் முன் விரித்து வைத்திருந்த புத்தகங்களை மூடியவள் கிருஷ்ஷைப் பார்த்து இடது கையில் மணியாகிவிட்டது ஆள்காட்டி விரலால் தட்டிக் காட்டினாள். அதன் அர்த்தம் அவள் வீட்டுக்குச் செல்ல விரும்புகிறாள் என்பதால் தன் புத்தகங்களை அவனும் எடுத்து தன் பைக்குள் போட்டான்.

இருவரும் அமைதியாக நூலகத்தை விட்டு வெளியே வந்தனர். வெளியே வந்ததும் தன் பேச்சை ஆரம்பித்தான் கிருஷ்.

“பிருத்வி.. ஏன் கிளம்பிட்ட? வருணாலயா?”

“ப்ச்ச்.. ஆமாம்.. அவன் எதுக்கு ஸ்கேலை தூக்கிப் போட்டான் தெரியுமா?.. சேட் பண்ணாமல் படி. இல்லை வீட்டுக்கு கிளம்புனு அர்த்தம். இன்னும் இருபது செகண்டில் வெளிய வருவான் பாரு.” என அவனிடம் உறுதியாகக் கூறினாள்.

“ஹே… சும்மா சொல்லாத..” சிரித்தப்படியே அவனிடம் மறுத்துக் கொண்டிருந்தான் கிருஷ். அவர்களுடைய இந்த பூனை எலி ஆட்டம் அவனுக்கு பழக்கமாகி இருந்தது.

“நீ வேணா பாரு.. என்னை இன்னிக்கு அவன்தான் வீட்டுக்குக் கூட்டிட்டுப் போவான்.”

நண்பனிடம் அவள் மெதுவான குரலில் பேசிக் கொண்டிருக்கும் போதே உடனே அந்தக் கண்ணாடிக் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தான் வருண். அவள் பின்னே மித்ராவும் வந்தாள்.

அதைப் பார்த்ததும் கிருஷ்ஷைப் பார்த்து ஒரு வெற்றிப் புன்னகையை வெளிப்படுத்தினாள் பிருத்விகா. கிருஷ்ஷும் ஆச்சரியத்துடன் அவளைப் பார்த்தாள்.

“ஹவ்?” என்று வாயசைத்தவனுக்கு பதிலாக ‘ அது அப்படித்தான்’ என்று இவளும் வாயசைத்தாள்.

“பிருத்விகா.. கிளம்பலாம் வா.” வருண் வெளியே வந்ததும் அவளை அழைத்தான்.

‘நான் சொல்லலை.’ என்பது போல் கிருஷ்ஷை நோக்கிப் புருவத்தை உயர்த்தினாள் பிருத்விகா.

“ஓகே…” என்று பதில் அளித்தவள் அருகில் இருக்கும் பார்க்கிங்கை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். நேற்று இரவு நடந்தது இப்போது நினைத்தாலும் கனவு போல் இருக்கிறது. தவறு செய்த அவனைத் தானே சென்று அழைத்து வந்திருக்கிறாள். அவளுக்கே தான் செய்தது சரியா என்ற குழப்பம் இருந்தது. அவனுடன் தனியாகச் சென்று எதுவும் வம்பு வளர்க்க தற்போது அவளுக்கு சக்தி இல்லை.
கிருஷ்ஷின் பைக்கும் அங்கே இருப்பதால் அவனும் உடன் நடந்தான்.

சுற்றி இருக்கும் மலை முகட்டுகளைப் பார்த்தபடி நால்வரும் அந்த மலர்களும், இலைகளும் கொட்டிக் கிடந்த பாதையில் நடக்க ஆரம்பித்தனர்.
பார்க்கிங்க் வந்ததும் முதலில் கிருஷ் பைக் முன்னால் இருந்ததால் , “ஓகே..டா.. நைட் மெசேஜ் பன்றேன். பாய்..” என அவனிடம் விடை பெற்றாள்.

“பிருத்வி… இன்னிக்கு எங்கிட்ட சொல்லல. ஆனால் ஐம் வெயிட்டிங்க். கண்டிப்பா நீ சொல்லுவனு எனக்குத் தெரியும். எதா இருந்தாலும் பார்த்துக்கலாம். டோண்ட் வொர்ரி.”

“ஓகே.. ஓகே.. நீ இருக்கும் போது எனக்கு என்ன கவலை? கண்டிப்பா உங்கிட்ட சொல்றேன். இப்ப கிளம்பு.” என்று சிரித்தபடி விடை பெற்று வருண் காரை நோக்கிச் சென்றாள் பிருத்விகா.

அதன் முன் பக்கத்தில் மித்ரா அமர்ந்திருந்தாள். அவளை எதிர்பார்க்கவில்லை என்றாலும் அவள் இருப்பது நல்லதுதான் எனத் தோன்றியது. அவளைப் பார்த்தப்படி பின் பக்கத்தில் ஏறி அமர்ந்தாள் பிருத்விகா.

“முதலில் மித்ராவை டிராப் பன்னிட்டு நம்ம வீட்டுக்குப் போறோம்” என்று வருண் அறிவித்தான்.

“ஓகே” என்றபடி காதிற்குள் ஏர்பட்ஸ்களை மாட்டியவள் தன் அலைபேசியில் பாடல்களை ஓடவிட்டாள். அப்போது அவளுக்குத் அந்தத் தனிமை தேவைப்பட்டது.
மித்ராவும், வருணும் சிரித்து பேசியபடி வர பிருத்விகா அதைக் கவனித்தாலும் வெளியில் வேடிக்கைப் பார்ப்பதிலும் பாடலைக் கேட்பதிலும் தன் கவனத்தைச் செலுத்தினாள்.

மித்ராவிடம் அவளுக்கு எந்தப் பகையும் கிடையாது. ஹாய் பாய் கூறுமளவுதான் பிருத்விகா பழக்கம் வைத்திருந்தாள். அவளிடம் அதிகம் பழகாத காரணம் வருணின் தோழி என்பதே. மற்றபடி அவளுக்கும் மித்ராவின் மீது எந்த அபிப்ராயமும் இல்லை.
மித்ராவின் வீடு வந்து விடவும் அவள் பாய் சொல்லி இறங்கிக் கொண்டாள். வருண் காரை எடுப்பான் என்று பார்க்க அவன் எடுக்கவே இல்லை. தலையைத் திருப்பி இவளைப் பார்த்து கொண்டிருக்க அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

“பிருத்விகா.. முன்னாடி வந்து உட்காரு.”

“எதுக்கு?”

“எனக்குத் தூக்கம் வருது. அதனால் முன்னாடி வா.”

“ஓ…”

அவனிடம் சண்டை இடாமல் அமைதியாக முன் பக்கம் ஏறிக் கொண்டாள். தான் கூறுவதை உடனே ஏற்றுக் கொண்ட பிருத்விகா ஆச்சர்யமாகத் தெரிந்தாள்.

“என்னாச்சு உனக்கு?”

“என்னாச்சு எனக்கு?” வருண் கேட்டதை அப்படியே ஒரு எழுத்து மாற்றிக் கேட்டாள். காரை எடுத்தப்படியே, “இன்னிக்கு மார்னிங்கில் இருந்து நீ நார்மலா இல்லை. எதையோ யோசிச்சுட்டே இருக்க?”

“அப்படி ஒன்னும் இல்லை.”

“யா… பார்த்தேன். என்னோட கேர்ள் பிரண்ட் ஏன் டல்லா இருக்கானும் சிலர் ஏங்கிட்ட கூட கேட்டாங்க?”

“ஸ்டாப் இட்.”
என்றவள் அமைதியாக அதற்கு மேல் பேசாமல் கண்களை மூடி இருக்கையில் சாய்ந்து கொண்டாள். சாய்ந்தவள் அப்படியே உறங்கியும் போனாள். டிரைவர் சீட்டில் முன்பு அமர்வதே பேசிக் கொண்டே ஓட்டுபவருக்கு வரும் உறக்கத்தைத் தடை செய்யத்தான். வருணுக்கு உறக்கம் வரவில்லை.

இருந்தாலும் பொய் கூறி அவளை முன்பு வர வைத்திருந்திருந்தான்.
ஆனால் அவனிடம் பேச மறுத்து கண்களை மூடிய பிருத்விகா உண்மையாகவே உறங்கி இருந்தாள்.

வருணுக்கு இன்று பிருத்விகாவின் அமைதி வித்யாசமாகத் தெரிந்தது. ஏனென்றால் அந்த மழை நீர் தொட்டியில் விழுந்த பிறகு பிருத்விகாவின் குணத்தில் ஏதோ மாற்றம் வந்தது போன்று அவனுக்குத் தோன்றியது. பிருத்விகா வழக்கமாக இப்படி இருக்க மாட்டாள். கிருஷ்ஷுடன் கூட அதிகம் பேசவில்லை. எதையோ யோசித்துக் கொண்டிருந்தாள்.
யோசித்துக் கொண்டே கார் ஓட்டியவனின் கவனத்தில் அவர்களைப் பின் தொடர்ந்து வரும் கார் பட்டது. நீண்ட நேரமாகவே அது அவர்களைப் பின் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.
சரியாக ஒரு யூ டர்ன் வரவும் காரை வளைத்துத் திருப்பினான். அந்தப் பாதையில் சென்றால் சற்று சுற்றித்தான் வீட்டுக்குச் செல்ல முடியும். அவன் யூ டர்ன் எடுத்தவுடன் பின்னால் வந்த கார் நேராக சென்று விட்டது. அதனால் வருணும் எதுவும் நினைக்காமல் காரைச் செலுத்த ஆரம்பித்தாள்.
ஆனால் அவன் யூ டர்ன் போட்டுத் திருப்பியதில் பிருத்விகா விழித்துக் கொண்டிருந்தாள்.

சீட் பெல்ட் போட்டிருந்தாலும் பக்கவாட்டில் தலையைச் சாய்த்து வைத்து உறங்கியதில் காரின் பக்கவாட்டில் தலையில் லேசாக இடித்திருந்தாள் பிருத்விகா.

“வருண்ண்ண்…” பிருத்விகா பல்லைக் கடித்தபடியே அவன் பெயரை உச்சரித்தான்.

“இப்ப எதுக்கு யூ டர்ன் போட்டு சுத்தி போயிட்டு இருக்க? வழக்கமாப் போற ரூட்டில் போக வேண்டியதுதானே?”
தலையைத் தேய்த்தப்படி அவனிடம் கேள்வி கேட்டாள். காரை நிறுத்தியவன் சீட் பெல்ட்டைக் கழற்றிவிட்டு லேசாக சாய்ந்தவுடன் அவளுடைய தலை அவன் கைகளுக்கு எட்டியது. அவன் தேய்த்து விட வருவதை உணர்ந்த பிருத்விகா அவனுடைய இரண்டு கைகளையும் தன் கைகளால் தடுத்தாள்.

“ப்ச்ச்.. இப்ப என்ன உனக்கு?”

“நீ ஒன்னும் தேய்ச்சு விட வேண்டாம்.”

அவள் கைகளெல்லாம் அவனை ஒன்றும் தடுத்துவிட முடியவில்லை. தேய்த்துவிட்டவன் மீண்டும் தன்னிடத்தில் அமர்ந்தான். அவனை அமைதியாக வேடிக்கை மட்டும் பார்க்க முடிந்தது அவளால்.

“யாரோ நம்மளை ஃபாலோ செஞ்ச மாதிரியே இருந்துச்சு. அதான் யூ டர்ன் எடுத்தேன். அவசரத்தில் உன்னோட தலையைப் பார்க்காமல் விட்டுட்டேன்.”

‘அப்புவும் வாயிலிருந்து சாரினு ஒரு வார்த்தை வருதா பாரு. எல்லாத்தையும் செஞ்சுட்டு எப்படி இருக்கான் பாரு. எருமை மாடு.’ என்று மனதிற்குள் அவனைத் திட்டியவள் வெளியில் வேடிக்கைப் பார்க்கும்படி திரும்பினாள்.
உடனே அவள் தாடையை லேசாகப் பற்றித் திருப்பினான் வருண்.

“இப்ப என்ன சொல்லி என்னைத் திட்டுன?”
அவன் கையைத் தட்டி விட்டவள், “சும்மா.. டச் பன்னிட்டே இருக்காத. இப்ப நீ காரை எடுக்கலைனா நான் இறங்கி நடக்க ஆரம்பிச்சுருவேன்.” என்று எச்சரிக்கும் குரலில் கூறினான்.

“வர வர ரொம்ப ஓவரா போயிட்டு இருக்கீங்க டாக்டர் மேடம். நீயும் நானும் டச் பன்னவே இல்லாத மாதிரி.” என்று முனகியவன் காரை எடுத்தான். அவன் முனகுவதைக் கேட்டாலும் அவள் இப்போது பதில் சொல்லும் நிலையில் இல்லை. அப்படியே அமைதியாக விட்டு விட்டாள்.

பிருத்விகா அமைதியாக வரவும், “பிருத்விகா.. மெயில் பார்த்தியா? செமினார் அப்புறம் இயர்லி டாக்டர்ஸ் பார்ட்டி இருக்கு. போலாமா?”


“செமினாரா…” உடனே தன் கைப்பேசியில் உள்ள மெயிலைப் பார்த்தாள்.
-கொட்டும்..