• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

என் மேல் விழுந்த மழையே!-21

Meenakshi Rajendran

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jun 22, 2024
153
51
28
Tiruppur
அத்தியாயம்-21

இரண்டு நாட்கள் கழிந்தது. வருணும் அதிகம் பிருத்விகாவினை சீண்டவில்லை. பிருத்விகா வகுப்புக்குச் சென்றாள். வீட்டுக்கு வந்தாள். படிப்பிலும் தூக்கத்திலும் நேரம் கழிந்தது. சந்திர விலாசத்துக்காரன் அவளை என்ன நினைத்தானோ அதிகம் வம்பிழுக்கவில்லை.


கிருஷ் இருப்பதால் பிருத்விகாவுக்கு கலகலப்புக்கு பஞ்சம் இல்லை. எதையாவது பேசி சிரிக்க வைத்துவிடுவான். இயல்பாக பேசுவதால் அவனை அப்பாவி என்று நினைக்கவே கூடாது. அவன் புத்திசாலி என்பதே அவன் கலகலப்பு குணத்தில் மறைந்து விடும். யாருக்கு எதைச் செய்ய வேண்டுமே அதை சரியாக செய்து விடுவான். அதனால் அவ்வளவு எளிதில் பிருத்விகாவின் வம்புக்கு வந்து விட இயலாது.
தன் நண்பனைப் பற்றி நன்றாக உணர்ந்திருந்த பிருத்விகாவுக்கு தஸ்வியால் வரும் பிரச்சினைகள் பற்றி அதிகம் கவலை இருந்தது இல்லை.

அவள் அன்னை இறந்த பிறகு கிருஷ்தான் அவளை தாங்கிப் பிடித்தது என்று கூறலாம். அவள் கூறவில்லை என்றாலும் அவளுக்காக அவன் வந்து நிற்பான்.

கிருஷ்ஷூடன் இரண்டு நாட்கள் நன்றாகக் கழிந்தது. இருவரும் கோவை இரவு டின்னருக்கு சென்று வந்தார்கள்.
அன்றைய இரவு பால்கனியில் அமர்ந்து பிருத்விகா தன் மடிக்கணினியில் மெயில் பார்த்துக் கொண்டிருந்தாள்.
வரும் ஞாயிறு நடக்கும் செமினாருக்கும், பார்ட்டிக்கும் இன்னும் அவள் அக்னாலஜ்மெண்ட் மெயில் அனுப்பவில்லை. கடந்த வருடம் இதே பார்ட்டியில் போது தான் அவளுடைய அன்னை இறந்திருந்தார். ஏனோ அன்னையின் நினைவு மனதில் எழுந்தது.
அப்போது அவளுடைய கைப்பேசிக்கு வருண் மெசேஜ் அனுப்பினான்.

‘டோண்ட் திங்க். சே யெஸ்.”’
தன் மனதில் ஓடும் யோசனையை உணர்ந்தவன் போல் வருண் அவளுக்கு செய்தி அனுப்பி இருந்தான். கிருஷ் அவளிடம் செமினாருக்கு வருகிறாயா? என்று கேட்டு வைத்திருந்தான். அதனால் தான் இப்போது மெயிலுடன் அமர்ந்திருக்கிறாள்.

‘டாக்டர். வசுந்தரா இஸ் அட்டண்டிங்க்.’ எதிர் வீட்டு பால்கனியில் இருந்து அவள் கைப்பேசிக்கு செய்தி குதித்தது. நிமிர்ந்து பார்த்தாள். அவனுடைய அறை பால்கனியில் ஊஞ்சலில் அமர்ந்து கொண்டிருந்தான் வருண்.
தோட்டத்து விளக்குகள் மற்றும் அவன் பால்கனி விளக்கு மட்டும் ஒளிர்ந்து கொண்டிருந்தது. அவனுடைய சிவப்பு டீசர்ட் அவளுக்கு தெரிந்தது. மஞ்சள் நிற முகம் மட்டும் தெரிந்தது. ஆனாலும் அந்த இருளில் அவளைக் அந்தக் கண்கள் துளைத்துக் கொண்டிருப்பதை அவள் உணர்ந்தாள்.

அவள் எங்கிருந்தாலும் அவன் கண்டுபிடித்து விடுவான். அது எப்படி என்று அவளுக்குத் தெரியாது. அவனுடைய கண்களில் இருந்தது இதுவரை அவளால் தப்பிக்க முடிந்தது இல்லை.

சலிப்பாக ஒரு பெருமூச்சு விட்டவள் கணினியை மூடி விட்டு எழுந்து சென்றாள். பால்கனியில் விளக்கணைத்துச் செல்வளை ஒரு புன் முறுவலோடு பார்த்துக் கொண்டு வருண் பிறகு வானத்தைப் பார்க்க ஆரம்பித்தான்.

அறையினுள் நுழைந்த பிருத்விகா போர்வையை எடுத்து நன்றாக மூடிப் படுத்துக் கொண்டாள். மீண்டும் அவனுடைய செய்தியை எடுத்துப் படித்துப் பார்த்தாள். அவனால் எப்படி தன் மனதைப் படித்தது போல் கூற முடிகிறதோ என நினைத்தவள் கைப்பேசியை வைத்து விட்டு மீண்டும் உறங்க முயன்றாள்.
பிருத்விகா அந்த பார்ட்டியில் கலந்து கொள்ளவில்லை என்றாலும் அவளை யாரும் எதுவும் கூறப் போவது இல்லை. ஆனாலும் அவள் கலந்து கொள்ள வேண்டும் என்று கிருஷ் விருப்பப்பட்டான். ஆனாலும் பிருத்விகா இன்னும் அந்த நிகழ்வுக்கு வருகிறேன் என்று ஒப்புக் கொள்கிறேன். இது ஒரே நேரத்தில் பல துறையில் புகழ் பெற்றிருக்கும் மருத்துவர்களை சந்தித்து உரையாடலாம். இந்த நிகழ்வு கடந்த ஐந்து வருடங்களாக டாக்டர் மதுபாலன் மற்றும் டாக்டர் இர்சாத் (நிறம் மாறும் வானம் கதை மாந்தர்கள்.) தலைமையில் நடந்து வருகிறது. அவர்களுடன் படித்த பலரும் இந்த நிகழ்வில் பங்கு கொள்வர். அதனால் பலரால் எதிர்பார்க்கப்படும் நிகழ்வு அது.
ஞாயிறு வரை பிருத்விகா அந்த நிகழ்வைப் பற்றி மூச்சு விடவில்லை. கிருஷ்ஷூம் கேட்கவில்லை. அவள் வருவதாக இருந்தால் வருவேன் என்று அவனிடம் கூறி இருப்பாள் என்பதால் கிருஷ்ஷூம் தனியாக செல்ல முடிவெடுத்துக் கொண்டான். வருணுக்கும் அவள் வருவது போல் தெரியவில்லை.
கோயம்புத்தூரில் உள்ள பிரபல ஹோட்டலில் கான்பிரன்ஸ் அறை. வருண், கிருஷ் அனைவரும் கேசுவல் உடையில் அதில் பங்கு பெற்றிருந்தனர்.


மதியம் வரை சென்றது. பிருத்விகா தலையைக் காட்டவில்லை. அவள் நிச்சயம் வரப் போவதில்லை என்று உணர்ந்த கிருஷ், வருண் இருவருமே அமைதியாக இருந்தனர். அவர்களுக்கு இடையில் பாலமாக மித்ரா அமர்ந்திருந்தாள். தன் அருகில் இருக்கும் இருவருமே கான்பிரன்ஸ் அறைக் கதவு திறக்கப்படும் போது எல்லாம் யார் உள்ளே வருகிறார்கள் என்பதைக் கவனிப்பதையும் கவனித்துக் கொண்டிருந்தாள்.

‘பிருத்விகா நீ வந்திருக்கலாம். உனக்காக இங்க இரண்டு பேரு காத்திட்டு இருக்காங்க.’ என்று மனதில் நினைத்தை செய்தியாக வாட்ஸப்பின் வழியாக அனுப்பியும் விட்டாள்.
மாலை நேரம். அந்த ஹோட்டலின் கார்டனில் மருத்துவர்கள் தங்களுக்குப் பிடித்ததை உண்டு விட்டு மாக்டெயில், காக்டெயிலுடன் அமர்ந்திருந்தனர்.
மதுபாலன் தனக்குத் தெரிந்தவர்களுடன் பேசிக் கொண்டிருந்தவர் வருண் இருக்குமிடத்திற்கு வந்தார். வருண், மித்ரா, கிருஷ், அவர்களுடைய வகுப்பில் பயிலும் சிலர் அதே மேசையில் அமர்ந்திருந்தனர்.

“ஹே வருண் ராமசந்திரன். மார்னிங்கே பார்த்தேன். பேச முடியலை. அம்மா அப்பா எப்படி இருக்காங்க?” முப்பத்தி ஐந்து மதுபாலன் இன்னும் அதே போன்று இளமையாக இருந்தார். வருண் பள்ளியில் படிக்கும் போது அவர் தலையில் ஒரு கட்டி இருந்தது. அதை அறுவை சிகிச்சை செய்து எடுத்தது மதுபாலன். வருண் டாக்டராக வேண்டும் என்று முடிவெடுத்ததுக்கு மதுபாலனும் ஒரு காரணம்.

“ஹலோ.. டாக்டர். தெய் ஆர் ஃபைன். மருதி மேடம் வரலையா?”

“மருதி பேபி கூட அவங்க அப்பா வீட்டுக்கு போயிருக்காங்க. அப்புறம் உன்னோட பிரண்ட் எப்படி இருக்காங்க? இந்த இயர் பார்ட்டிக்கு வரலை போல?”

“லாஸ்ட் இயர்.. யூ நோ… அதான் வர….” வருணின் பார்வை எங்கோ சென்றது.

அடர்த்தியான பர்ப்பிள் மேக்ஸியில் அலையாக அலையாக விரியும் கூந்தல் அசைய அங்கு நுழைந்து கொண்டிருந்தாள் பிருத்விகா. கார்டனில் இருந்த வண்ண விளக்குகள் அவள் அழகை மின்னி மின்னி காட்டிக் கொண்டிருந்தன. கையில் ஒரு கிளட்ச். ஹை ஹீல்ஸ் அணிந்து முகத்தில் லேசான புன்னகையுடன் நுழைந்து கொண்டிருந்தாள்.
1000132902.jpg

மதுபாலனும் அவன் கண்கள் செல்லும் திசையில் கவனித்தான்.

“கிரேட்.. லாஸ்ட் மினிட்டில் அக்சப்ட் செஞ்சுருந்தாங்க. ஆப்டர்நூன் செசன் வரமுடியும்னு சொல்லி இருந்தாங்க. நானும் ஓகேனு சொல்லி இருந்தேன். ஆப்டர்நூன் பார்த்தேன். பார்ட்டிக்கு வர சொன்னேன்.”

அவள் மதியம் அங்கு இருந்தாள் என்பதே அவர்களுக்குப் புதிய செய்தி. அவள் வருகை வருண், கிருஷ் மற்றும் மித்ராவின் முகத்தில் அவள் முகத்தில் இருந்ததை விட பெரிய புன்னகையை வர வைத்தது.

மித்ரா அனைவருக்கும் முன் எழுந்தவள், “ஹேய் லுக்கிங்க் கார்ஜியஸ். கம் சிட் ஹியர். அருகில் இருந்த ஒரு நாற்காலியைக் காட்டினாள்.”

“யூ ஆர் அஸ் புயூட்டிபுள் எவர்.” என்று இரண்டு பெண்களும் ஒருவரை ஒருவர் பாராட்டிக் கொள்வதை அங்கிருந்த அனைவருமே புருவத்தை உயர்த்தியபடி பார்த்தனர்.

“டாக்டர் தேங்க் யூ.” என மதுபாலனைப் பார்த்து பிருத்விகா நன்றி கூறவும் அதை தலை அசைத்து ஏற்றுக் கொண்டார். அதே சமயம் அவரை யாரோ அழைக்கவும் அவர்களிடமிருந்து விடை பெற்றார்.

மித்ராவுக்கு அருகில் அமர்ந்து எதிரில் இருந்த கிருஷ்ஷை நோக்கினாள் பிருத்விகா.

“என்னடா?”

“இல்லை இரண்டு பொண்ணுங்க நீ அழகா.. நான் அழகானு அடிச்சுகிட்டுத்தான் பார்த்திருக்கோம். இதான் முதல் தடவை புகழ்ந்து பார்த்துக்கிறோம். அதுவும் ஜென்யூனா?” கிருஷ் தன் சந்தேகத்தை முன் வைத்தாள்.

மெலிதாக ஒரு சிரிப்பை சிதறவிட்ட பிருத்விகா, “அது ஒன்னுமில்லைடா.. இரண்டு பொண்ணுங்கனா பொறாமைபட்டுட்டு சுத்திகிட்டே இருக்கனுமா என்ன? நாங்க எல்லாம் எம்பவர்ட் வுமன். டாக்சிக் கிடையாது. சொல்லப் போனால் மித்ரா என்னை விட ரொம்ப அழகு.” கூறிவிட்டு மித்ராவினை நோக்கி கையை உயர்த்தினாள் பிருத்விகா ஸ்ரீ.


மித்ராவும் ஹைபை கொடுத்துட்டு புன்னகையுடன் அருகில் இருந்த மாக்டெயிலை எடுத்து மெதுவாக உறிஞ்ச ஆரம்பித்தாள்.
கல்லூரியில் அதிகம் கூட பேசிக் கொள்ளாத இரண்டு பெண்கள் இப்படி நடந்து கொள்வது வருணுக்கே ஆச்சரியத்தைக் கொடுத்தது.
வருணின் பார்வை மெச்சுதலாக மித்ராவினை நோக்கிப் படிந்தது. இப்போது பிருத்விகாவின் அருகில் இருக்கும் நாற்காலிக்கு கிருஷ் இடம் மாறி இருந்தான்.

“ஹே.. நீ வரலை நான் ரொம்ப எதிர்பார்த்தேன் தெரியுமா?.. குட் ஜாப் பக்கி.”

தன் தோழியிடம் பேச ஆரம்பித்தான் கிருஷ்.
கிருஷ்ஷின் காதருகில், “டேய் நான் வரலைனாலும் உன்னோட பார்வை யார் மேல் இருக்கும்னு எனக்குத் தெரியும்டா பிராட்.” என முனு முனுத்தாள்.

“ஹான்.. நிஜமா.. நான்?”

“தெரியும்.. திரும்பி திரும்பி டோரைப் பார்த்திட்டு இருந்தது. சைக்கியாட்ரி படிச்சுட்டு நம்ம டிராமாஸ் நாமலே ஓவர்கம் செய்ய முடியலை என்ன செய்யறது? அதான்.. சரி சரி.. போ எனக்குப் பிடிச்ச ஐட்டம்ஸ் எல்லாம் பபேவிலிருந்து எடுத்துட்டு வா.” நண்பனிடம் இறுதியாக செல்லமாக கட்டளை இடவும், “உன்னை.. வருண் பேபினு கூப்டறது தப்பே இல்லை..” முனகினான் கிருஷ்.

“போ.. திட்டாமல் போயிட்டு வருவியாம்.” பிருத்விகா அவனை சென்று வரக் கூறினாள்.

கிருஷ் எழுந்து தன் தோழி சொல்லைத் தட்டமால் அவ்விடத்தை விட்டு அகன்றான். இப்போது திரும்பியவளின் எதிரில் நின்றது வருணின் கூர்மையான விழிகள்.

அவனுக்கு சளைக்காமல் புருவத்தை உயர்த்திப் பார்த்தவள் அருகில் கிருஷ் வைத்திருந்த மாக்டெயிலை எடுத்து அருந்திவிட்டாள். பிங்க் நிறத்தில் அந்த திரவம், இனிப்பாகவும் சற்று வித்தியாசமாகவும் இறங்கியது.

அது மாக்டெயில் இல்லை. காஸ்மோ போலிட்டன் காக்டெயில். கிருஷ்ஷிற்கு முன்பு அந்த இடத்தில் அமர்ந்திருந்த வகுப்பில் படிப்பவன் ஒருவம் அதை விட்டு தன் அலைபேசியில் ஏதோ பேச சென்றிருக்க அந்த திரவம் அங்கேயே இருந்தது.
வருணைப் பார்த்துக் கொண்டே அதை முழுவதுமாக அருந்தி இருந்தாள் பிருத்விகா.


அவளின் கண்களைக் கவனித்துக் கொண்டிருந்த வருணும் அதை உணரவில்லை. அவன் தான் அவள் கண்கள் என்னும் கருந்துளையில் விழுந்து கிடந்தானே..

அருகில் இருந்த இன்னொரு கண்ணாடிக் கோப்பையும் பிருத்விகா அருந்தினாள். அது மஞ்சள் நிறத்தில் இருந்த மிமோசா. அவன் கண்களில் இருந்து தப்பித்து மங்கையவள் நிஜ போதையில் மூழ்கிக் கொண்டிருந்தாள்.
1000132905.jpg

இப்போது அவளருகில் கிருஷ் அவளுக்குப் பிடித்த உணவு வகைகளுடன் வந்திருந்தான்.



-மழை கொட்டும்..