• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

என் மேல் விழுந்த மழையே!-27

Meenakshi Rajendran

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jun 22, 2024
98
40
18
Tiruppur
அத்தியாயம்-27

மாலை மகிழ்வாய் இரவினை பிரசவித்துக் கொண்டிருந்தது. சிவப்பு நிற பாத்ரோபில் தரையில் காலைப் பிடித்துக் கொண்டு “ஆ..ஆ..” என்று கத்திக் கொண்டிருந்தாள் பிருத்விகா.

கூடவே இடுப்பையும் பிடித்துக் கொண்டிருந்தாள். பாத்டப்பிற்கு அருகில் இருக்கும் மேடையில் இருந்து கைப்பேசியை எம்பி எடுத்தாள். எடுத்தவள் வருணிற்கு அழைக்க அவனும் அழைப்பை எடுத்தான்.

“வருண்.. வீட்டுக்கு வா..டா.. அம்மா…”

அழைப்பைத் துண்டித்தவள் மெதுவாக எழ முயன்றாள். பிருத்விகா அழைக்கும் போது சாப்பிட்டுக் கொண்டிருந்த வருண் உடனே அவசரமாக கைகழுவி விட்டு கார் சாவியினை எடுத்துக் கொண்டு விரைந்தான். அவள் வீட்டு முன் காரை நிறுத்தியவன் உடனே வீட்டுக்குள் ஓடினான்.
மெதுவாக முனகல் சத்தம் வீட்டில் கேட்டது.

“பிருத்விகா...” என அழைத்தப்படி மாடிக்கு விரைந்தான். திறந்து வைத்திருந்த அறைக்குள் நுழைந்தவன் நேராக பாத்ரூமுக்குள் சென்றாள். அதையும் திறந்துதான் வைத்திருந்தாள் பிருத்விகா.

‘பரவாயில்லை.. பேபி ரொம்ப சூப்பரா ஆக்ட் பன்னறா.. அப்படியே ஒரிஜினலா இருக்கு…’ என மனதுக்குள் மொச்சியப்படி உள்ளே நுழைந்தவன், “பேபி.. பிச்சு உதறுற..”

“என்னடா.. பிச்சு உதறாங்க.. ஆ.. நிஜமாவே விழுந்துட்டேன். ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போடா.. அம்ம்மா..”
வலியில் துடித்துக் கொண்டிருந்தவளை உடனே தூக்கினான்.

“டேய்.. கையைப் பிடிச்சு தாங்கி கூட்டிட்டுப் போனா.. போதும்..”

வருணின் முகம் கடினமாக மாறி இருந்தது.

“பேபி.. ஷட் யுவர் மவுத்..”
அவளை ஏதோ தலையைணையைத் தூக்கிக் கொண்டு போவது போல் சுலபமாகத் தூக்கிக் கொண்டு படிகளில் இறங்கியவன் வெளியில் நிறுத்தப்பட்டுள்ள காரை நோக்கி விரைந்தான்.

முன் சீட்டில் காரில் அவளை அமர வைத்தவன் அவனும் டிரைவிங்க் சீட்டை அமர்ந்தவன் தன் ப்ளூ டூத் மூலம் செக்யூரிட்டியை அழைத்தவன் “அண்ணா.. பிருத்விகா வீட்டைப் பூட்டி சாவியை தேவகிம்மா கொடுத்துடுங்க..” என்று தகவல் கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்தான்.

“பேபி.. ரொம்ப வலிக்குதா?” என்ற அவன் குரலிலும் செய்கையிலும் இருந்த அக்கறையில் அவனை தன் வலியை மறந்து உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
முட்டி வரை இருக்கும் பாத்ரோப் லேசாக முட்டி தெரியும்படி விலகி இருந்தது. தன் ஹூடியை உடனே கழட்டியவன் அவள் மடி மேல் போட்டு மூடினான்.
காரை அதிவேகத்தில் எடுத்தவன் அடுத்த நொடியே பாலன் மருத்துவனையை நேவிகேசனில் போட்டு விட்டு காரை செலுத்த ஆரம்பித்தான்.

கார் எடுக்கும் போது உண்டான அசைவில் பிருத்விகா கால் வலி மீண்டும் நினைவுக்கு வந்தது. உதடுகளை இறுக்கி, கைகளை இறுக்கி வலியைப் பொறுத்துக் கொண்டாள். கண்களில் லேசாக கண்ணீர் படலம் இருந்தாலும் கண்ணீர் வெளியில் வரவில்லை.
வருண் பாதையில் கவனத்தை வைத்துக் கொண்டே பாலன் மருத்துவமனைக்கு அழைத்து ஷரணியிடம் கடைசி நிமிடத்தில் அப்பாயின்மெண்ட் வாங்கியும் விட்டாள்.

வீட்டுக்குள் கிளம்ப இருந்த ஷரணி வருண், பிருத்விகா என்ற பெயரைக் கேட்டதும் அவளும் மருத்துவமனையில் இருப்பதாகக் கூறிவிட்டாள். அவர்கள் இருவரையும் இதற்கு முன்பே பார்த்திருப்பதால் ஷரிணியும் காத்திருந்தாள்.
இடையில் கார் ஓட்டும் போது பிருத்விகாவின் கையைப் பற்றினான் வருண்.

“சீக்கிரம் போயிடலாம்.” கைகளை அழுத்திவிட்டு மீண்டும் வாகனம் ஓட்டுவதில் கவனத்தைச் செலுத்தினான்.
வருணை வித்யாசமாகப் பார்த்தவள் அமைதியாக மீண்டும் வலியைப் பொறுக்கக் கண்களை மூடினாள்.

மருத்துவமனையின் எமர்ஜென்சி வார்டின் முன் காரை நிறுத்தினான் வருண். நிறுத்தியவுடன் மறு பக்கம் கதவைத் திறந்து பிருத்விகாவைத் தூக்க முயன்றான்.

“வருண்.. நான் நடக்கறேன். நீ என்னை தாங்கி மட்டும் பிடி.. இல்லை வீல் சேர் எடுத்துட்டு வா.” அவள் கூறுவது அவன் செவிகளைத் தீண்டினாலும் அவன் உடலில் அதற்கு எந்த எதிர் வினையும் இல்லை. வேறு வழியின்றி அவன் கழுத்தில் மாலையாகக் கைகளைக் கோர்த்துப் பிடித்துக் கொண்டாள்.

அவள் கால்களை அவனுடைய ஹூடி இன்னும் தழுவியிருந்தது. அவன் மருத்துவமனை படிகளுக்குச் செல்லும் முன் மருத்துவமனை பணியாளர்கள் வீல் சேருடன் வந்து விட்டனர். வீல் சேரில் வருண் அவளை அமர வைக்க அவர்களே தள்ளிச் சென்றனர்.
அவர்கள் பின்னாலேயே வருணும் நடந்தான். வருண் வார்டில் உள்ள அனைத்தையும் ஆராய்ந்து கொண்டிருந்தான். அவனைப் பின்னால் தலையைத் திருப்பிப் பார்த்துக் கொண்டிருந்தாள் பிருத்விகா. தீடிரென்று வருணின் முகம் மலர்ந்தது.

“ஹாய் அக்கா..”

“ஹலோ.. டாக்டர் வருண்..”

“இது பிருத்விகா. பாத்ரூமில் வழுக்கி விழுந்துட்டா.. எனக்கு ஸ்ட்ரைனா இருக்குமோ டவுட்டா இருக்கு..”

“ம்ம்… ஐ வில் சி.. பர்ஸ்ட் யூ சிட்..”

ஷரணி பிருத்விகாவிடம் கேள்விகளைக் கேட்டுக் கொண்டே தன் பணியைச் செய்தாள். ஷரணியையும் பிருத்விகாவின் கால்களையும் பார்த்தப்படி அமர்ந்திருந்தான் வருண். ஷரணியிடம் பதில்களைக் கூறிக் கொண்டே இடை இடையே வருணைப் பார்த்துக் கொண்டிருந்தாள் பிருத்விகா.

“கரக்ட்தான்.. புட் ஸ்ட்ரெயின். பர்தர் இஞ்சுரி இருக்கானு ஒரு சிடி பாத்திரலாம்.” என்று வருணைப் பார்த்துக் கூறினாள் ஷரணி.

“யெஸ்..”
அவள் சிடி ஸ்கேன் ரூமுக்கு அழைத்துச் செல்லப்பட அவளுடன் செல்லப்பட்ட வருணைத் தடுத்தாள் ஷரணி.

“வருண்.. நீ என்னோட கேபினுக்கு வா..”

“இல்லை பிருத்விகா..”

“பிருத்விகாவை நர்ஸ் பார்த்துக்குவாங்க.. நீ வா..”
பிருத்விகாவைப் பார்த்து தலை அசைத்தவன் அங்கிருந்து நகர்ந்தான்.
இரண்டு மணி நேரம் கழித்து பிருத்விகாவுக்கு குளுக்கோஸ் பாட்டில் முடிந்து விட்டிருந்தது. அதிலேயே வலி நிவாரணியும் கொடுக்கப்பட்டிருக்க அவளுக்கு வலி பெரும்பாலும் நீங்கி இருந்தது.
ஆனால் பிருத்விகாவுக்குத் தூக்கம் வரவில்லை.

வார்டில் ஒரு பெட்டில் படுக்க வைக்கப்பட்டிருந்தாள். இடையில் ஷரணி மட்டும் வந்து அவளைப் பார்த்துச் சென்றாள். ஆனால் வருண் வரவே இல்லை.
இரண்டு மணி நேரமும் அவன் எங்கு சென்றிருப்பான்? அப்படி என்ன ஷரணியிடம் பேசிக் கொண்டிருப்பான்? என்ற எண்ணம் எழுந்தாலும், அவளுடைய கைப்பேசி அருகில் இருந்தாலும் அவனுக்கு அழைக்க மனமில்லை. அமைதியாகப் படுத்திருந்தாள்.

இரண்டு மணி நேரம் கழித்து அவளுக்குத் தேவையான மருந்துகளுடனும், காலில் போடக் கூடிய இம்மொபிலைசருடனும் வந்தான்.

அவனைப் பார்த்ததும் பிருத்விகாவின் முகம் மலர்ந்தது. ஆனால் அடுத்த நொடியே இயல்பாக முகத்தை வைத்துக் கொண்டாள்.

“பேபி… ஆர் யூ மிஸ்ஸிங்க் மி?”

படுத்துக் கொண்டே புருவத்தை உயர்த்தியவள், “அந்த நினைப்பு வேற உனக்கு இருக்கா?.. சீக்கிரம் வீட்டுக்குக் கூட்டிட்டுப் போ.. ஐ மிஸ் மை ஹோம்..” என்றாள்.

“அதுக்கு இனி வாய்ப்பில்லை. என்னோட வீடுதான் இப்போதைக்கு உன்னோட வீடு. டூ வீக்ஸ்.. நீ காலை ரொம்ப அசைக்கக் கூடாது. எய்ட் வீக்ஸ் வெயிட் போடக் கூடக் கூடாது. அதனால் இரண்டு மாசம் என்னோட வீட்டில் தான். உன்னோட அப்பாகிட்டேயும் பேசிட்டேன். என்னோட டாடும் அப்ப அப்ப வருவார்.”
ஷரணியும் அவள் அருகில் வந்தாள்.

“பிருத்விகா இரண்டு நாள் நல்லா பெட் ரெஸ்ட் எடுக்கனும். அப்புறம் மூவ் பண்ணும் போது ரொம்ப கேர்ஃபுல்லா இருக்கனும். எந்த வெயிட்டும் தூக்க வேண்டாம். பெயின் ரீலிவர் கொடுத்துருக்கேன்…” வருண் கூறியதைப் போல் வார்த்தைகளை மாற்றி ஷரணி கூறினாள்.

“வருணும் இதேதான் சொன்னான்.”

“டாக்டர் வருண் தான் சொல்லி இருப்பார். ஆர்த்தோ மேல் ரொம்ப இண்டர்ஸ்ட். டெல்லில சீட் கிடைச்சது. ஆனால் லாஸ்ட் மினிட்டில் அதை கேன்சல் செஞ்சுட்டு சைக்கியாட்ரி படிக்கனும்னு முடிவெடுத்துட்டான்.”
வருணைப் பற்றி தனக்கே தெரியாத விஷயத்தைக் கூறியதும் பிருத்விகா அவளை ஆச்சரியத்துடன் நோக்கினாள்.

“ஓ.. ஒகே..” என்பது மட்டும் பதிலாக இருந்தது.
அப்போது வருணை அருகில் வரச் சொன்ன ஷரணி அவன் காதருகே பிருத்விகாவுக்குக் கேட்காதபடி முனு முனுத்தாள்.

“நல்ல அழுத்தம்தான். ஒரு சொட்டு கண்ணீர் வரலை. பயம் எனக்கு தெரிஞ்சு கமிதான். அதனால் தான் மருதி அக்காவுக்கு இவளைப் பிடிச்சுருச்சு போல. உனக்கும்தான்..”
ஷரணி பேசிய விஷயம் வருணின் முகத்தில் புன்னகையைத் தோற்றுவிக்க பிருத்விகா முகத்தில் யோசனை ரேகைகள் ஓடியது.

“சும்மா இருக்கா..”
என்று இயல்பாக வருண் பதில் கூறினான்.

“அங்க இருக்கற எக்ஸ்பிரசன் பார்த்தால் ஒன் சைட் மாதிரி தெரியலை.”

“டபுள் சைட்தான். ஆனால் அது இன்னும் அவங்களே ரியலைஸ் செய்யலை. பார்க்கலாம். பியூட்சரில் என்ன நடக்கும்னு?”
ஷரணி. முப்பது வயதைத் தாண்டி விட்டாலும் இன்னும் இருபதுகளில் இருப்பது போன்று தோற்றத்தைக் கொண்டிருந்தாள். வருண் இவ்வளவு இயல்பாக ஒருவருடன் சிரித்துப் பேசி பிருத்விகா பார்த்தது இல்லை என்றே தோன்றியது.

அவர்கள் இருவர் இறுதியாகப் பேசுவதைக் கவனித்தாலும் கைப்பேசியில் தன் கவனத்தை வைத்திருப்பது போல் காட்டிக் கொண்டாள்.

“சரிக்கா.. தேங்க்ஸ். கால் பன்றேன்.”

“ம்ம்.. ஒகே டேக் கேர் ஆஃப் ஹெர்.” என்று அவனை ஒரு பக்க தோளாடு கை போட்டு அணைத்து விடுவித்தாள் ஷரணி.

வருணும் அவளை கூர்மையுடன் உற்று நோக்கினாலும் அவனும் அனைத்து ஷரணியை விடுவித்தான்.
பிருத்விகாவை மருத்துமனை பணியாளர்கள் வீல் சேரில் ஏற்றி பார்க்கிங்க் வரை வர உதவினர். அவர்கள் நடந்து வரும் போது தன் கைப்பேசியை எடுத்த வருண், ‘வாட் வாஸ் ஃபார் தட்?’ என்ற குறுஞ்செய்தியை ஷரணிக்கு அனுப்பினாள்.
ஷரணியின் கைப்பேசியில் பிங்க் என்ற ஒலி பிருத்விகாவின் காதுகளில் தெளிவாக விழுந்தது. திரும்பிப் பார்க்க வருணைப் பார்த்தப்படி குறுஞ் செய்தியை டைப் செய்து கொண்டிருந்தாள் ஷரணி.

‘ஜஸ்ட் அ டெஸ்ட். ரிசல்ட்ஸ் வில் பி ரிவியல்ட் லேட்டர்.’ என்பதைப் படித்த வருணின் முகத்திலும் புன்னகை.
பதிலாக ஒரு எமோஜியை அனுப்பி விட்டு பிருத்விகாவின் பக்கம் திரும்பினான்.

அவளைப் பார்த்து இரண்டு புருவங்களையும் தூக்கியவன், “என்ன பிருத்விகா எங்கிட்ட கேட்கனும்?” என்றான்.

“ஹான் ஒன்னும் இல்லை..”

“கமான் ஸ்பிட் இட் அவுட்..”

“ஒன்னுமில்லை.. பசிக்குது..”

“கண்டிப்பா இருக்கு. ஆனால் நீ பசிக்குதுனு சொல்றதால் விடறேன்.”
காரில் அவளை ஏற்றியவன், “வெயிட் பன்னு வந்திடறேன்.” என நகர்ந்தான்.

“எங்க போற வருண்?” என்ற கேள்விக்கு பதில் சொல்ல அவன் அந்த இடத்தில் இல்லை.
ஐந்து நிமிடம் கழித்து வந்தான். அவன் கையில் ஒரு பேப்பர் டம்ளர் இருந்தது.

“இந்தா.. மாதுளம் பழம் ஜூஸ்..”

மாதுளம் பழம் என்றதும் அவள் முகம் சுருங்கியது.
“ஜில்.. மஸ்க்மெலன் ஜூஸ்.. குடி. அப்புறம் வீட்டில் போய் சாப்பிட்டுக்கலாம்.”
இரவு குளிருவது போல் தோன்றியதால் வருணின் ஹூடியை மருத்துவமனையில் இருக்கும் போதே அணிந்தவள் ஹூடியின் சைட் பாக்கெட்டில் போனை திணித்தவள் அவன் கொடுத்த பழ ரசத்தைப் பருக ஆரம்பித்தாள்.

அவள் பருகி முடித்ததும் அந்த பேப்பர் டம்பளரை வாங்கி அருகில் உள்ள குப்பைத் தொட்டியில் போட்டவன் காரை எடுத்தான். காரில் மெலடி இசை மட்டும் ஒலிக்கத் தொடங்கியது. பாடல் வரிகள் அற்ற அக்வஸ்டிக் கிடாரும், பியானோவும் கலந்து ஒலித்தது. கண்களை மூடிக் கொண்டாள் பிருத்விகா.