• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

என் மேல் விழுந்த மழையே!-44

Meenakshi Rajendran

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jun 22, 2024
153
51
28
Tiruppur
அத்தியாயம்-44

KISS…
KISS..
IT IS AN ALCHEMY OF LOVE.
IT SUCKS THE SOUL OUT OF MY BODY.
AND TRANSFORMS HER SOUL INTO MINE.
I AM HER. SHE IS ME.

முன்பு போல் பிருத்விகாவிடம் பேசுவது இல்லை வருண். அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அவளை அவன் அதிகம் சீண்டுவதில்லை. அவள் வந்ததை வருண் கவனித்தாலும் கண்டு கொள்ளவில்லை.
பிருத்விகாவே இறங்கி நடந்து வந்தாள். அவளைக் கேள்வியாகப் பார்த்தான் வருண்.

“வருண் உங்கிட்ட பேசனும்?”
தன் கைக்கடிகாரத்தைப் பார்த்த வருண், “கிளாஸ்க்கு டைம் ஆச்சு.” என்றான். பேசு என்றும் கூறவில்லை. பேச வேண்டாம் என்றும் கூறவில்லை.

“ஈவினிங்க்?”

“எனக்கு கொஞ்சம் பிளான்ஸ் இருக்கு?”

“எப்பதான் பீரியா இருப்ப?”

“நைட் டென் ஃப்ரியா இருப்பேன்.”

“சரி அப்ப பார்க்கலாம்.”

“நானே வீட்டுக்கு வரேன்.” என்றான் வருண்.

“ஓகே..”
பிருத்விகாவின் முகத்தை அவனும் கவனித்துக் கொண்டிருந்தான் அவள் முகம் ஏதோ யோசனையில் இருந்தது.

அவளுக்காகக் காத்திருந்த கிருஷ்ஷுடன் சேர்ந்து நடக்க ஆரம்பித்தாள் பிருத்விகா.

அன்று இரவு.
பிருத்விகா வீட்டின் காலிங்க் பெல்லை அடித்தான் வருண்.
கதவைத் திறந்தாள் பிருத்விகா.

“வா வருண். உட்காரு.”

“என்ன வரவேற்பு பலமா இருக்கு? என்ன விஷயம்?”

“என்ன சாப்பிடற?”

“எதுவும் வேண்டாம். மித்ரா கூட வெளியில் சாப்பிட்டேன்.”

“சொல்லு என்ன விஷயம்?” சோபாவில் அமர்ந்து கால் மேல் போட்டான் வருண்.

“அது.. அது.. அப்பா எனக்கு கல்யாணம் பிக்ஸ் பண்ணி இருக்காங்க.”

“சோ..” அவன் முகத்தில் எந்த உணர்வும் இல்லை.

“நமக்குள்ள.. நடந்த…”

“அது மிஸ்டேக் மறந்துருனு சொல்லற கரக்டா?”

“இல்லை..”

“அதனால் உன்னோட மேரேஜ் லைஃப்க்கு எந்த பிராபளமும் வராது. நீ தாரளமா அப்பா சொல்ற மாப்பிள்ளையைக் கல்யாணம் பண்ணிக்கோ..”

“வருண்..” பிருத்விகாவின் முகத்தில் கோபம் தெரிந்தது. குரலிலும் வெளிப்பட்டது.
1000157291.jpg


“நாளைக்கு முக்கியமான ஒருத்தங்ளோட எனக்கு டேட் இருக்கு. நான் போய் தூங்கனும். குட் நைட்.” எழுந்தவன் அமைதியாக வெளியேறினான்.

அடுத்த நாள் கல்லூரி.
மித்ரா லாண்டரி ரூமிற்கு செல்லும் காரிடாரில் நின்று கொண்டிருந்தாள்.
அப்போது அந்த வழியே கிருஷ் வந்தான்.

“கிருஷ்.”
அவள் குரலைக் கேட்டும் அவன் கண்டு கொள்ளவில்லை.

“நான் சொல்றதைக் கேளு.”
அவன் அவளைக் கண்டு கொள்ளாமல் முன்னால் நடந்து சென்று விட்டான். மித்ராவின் கண்களில் இருந்து ஒரு துளி கண்ணீர் சொட்டியது. கண்ணீரைத் துடைத்தவள் அருகில் உள்ள நாற்காலியில் அமர்ந்தாள். பிருத்விகா கடத்தப்படுவதற்கு முந்தைய நாள் நடந்த சம்பவங்கள் அவள் மனதில் ஓடியது.

அன்று இருவருக்கும் வார்டில் டியூட்டி இருந்ததால் முடித்து விட்டு ஒன்றாக வருதாக இருந்தது. இருவரும் அதிகம் பேசிக் கொள்ள மாட்டார்கள். கிருஷ் காத்திருந்து அவளை அழைத்து வந்தான். வானம் மேக மூட்டமாக இருந்தது. எந்த நேரத்திலும் மழை வரலாம்.
வழியில் ஒரு டீக்கடையைப் பார்த்தாள் மித்ரா. அருகில் ஒரு டைல்ஸ் போட்ட நிழற்குடை.

“டீ குடிக்கனும் போலிருக்கு.”
அவள் கூறியதைக் கேட்டதும் காரை ஓரம் கட்டினான் கிருஷ். காரை சாலையின் ஒரு புறம் நிறுத்திவிட்டு சாலையைக் கடந்து சென்றனர்.

டீக்கடையில் ஒரு பெஞ்ச் போடப்பட்டிருந்தது.

“அண்ணா.. எனக்கு ஒரு பிளாக் டீ.” என ஆர்டர் செய்து விட்டு காத்திருந்தாள். கிருஷ் எதுவும் ஆர்டர் செய்யவில்லை.
அவரும் தயாரித்துக் கொடுக்க கையில் வாங்கும் போது மழை வேகமாக வர ஆரம்பித்தது. பெருந்துளிகளாக விழுந்தது.

“நிழற்குடையில் நின்னு குடிங்கம்மா..” என கடை நனையாமல் இருக்க ஆயத்த வேலைகளை செய்ய ஆரம்பித்தார் அவர். அதற்குள் பாதி நனைந்திருந்திருந்தனர் இருவரும்.

டீ கிளாஸுடன் அருகில் உள்ள நிழற்குடைக்குச் சென்றனர்.
கிளாஸ் சூடாக இருந்ததால் அதைக் கீழே வைத்தாள் மித்ரா.

கொஞ்சம் முன்னே நிழற்குடையின் படி அருகே நின்று தன் புடவையின் முந்தானையை பிழிந்ததில் லேசாக தண்ணீர் சொட்டியது.

திரும்பி மீண்டும் டீயை எடுக்க வரும் போது ஏற்கனவே மழையில் நனைந்திருந்த அவளுடைய காலணி டைல்ஸ் தரையில் வழுக்கி விட அவள் நேராக தஞ்சம் அடைந்தது அந்த மாயவனின் கரங்களில்.

இதை எதிர்பார்க்காத அவனுமே பின்னால் சாய இருவரின் இதழ்களும் மோதிக் கொண்டன.
பட்டென கண்களைத் திறந்தாள் மித்ரா.


அவனுடைய கைகள் அவள் இடையை அழுத்திப் பிடித்திருந்தது. அவனும் அவள் விழிகளில் எதையோ தேடிக் கொண்டிருந்தான். மழைத்துளி முகத்தில் ஆங்காங்கே மஞ்சள் தாமரையில் உள்ள நீர்த் துளியாய் பூத்திருக்க கழுத்து வளைவில் சிறிது வழிந்து கொண்டிருந்தது.

அதுவோ தாகத்தை அதிகப்படுத்திக் கொண்டிருந்தது.

அவளை நேராக நிறுத்தியவன் இன்னும் அவளை விடுவிக்கவில்லை. அவள் கண்களை நோக்கினான். அவன் தேடியது அவனுக்கு கிடைக்கவும் அடுத்த சில நொடிகளில் அவன் இதழ்கள் அவள் மேல் போர்த்தொடுத்திருந்தது. அவன் கைகளுக்கும் இதழ்களுக்கும் அவளும் ஒப்புக் கொடுத்திருந்தாள். முதலில் சீண்டலாக ஆரம்பித்து தீராத் தேடலாகத் தொடர்ந்தது. அவள் இதழ் தொட்டு தொட்டு தான் உயிரை அவளிடம் சரண் செய்து கொண்டிருந்தான். இத்தனை வருடங்கள் அவளிடம் பேசாவதவற்றை நேரடியாக அவள் இதழ்களிடமிருந்து வாங்கிக் கொண்டிருந்தான். அவளும் இதுவரை கூறாதவற்றைக் கூறிக் கொண்டிருந்தாள். மழையைப் போல அவர்களின் உணர்வுகளும் எல்லையை மீறிக் கொண்டிருந்தது.

ஒரு கோப்பை தேநீரும், கொட்டித் தீர்த்த மழையும், மட்டுப்படாத மனமும், மாயங்கள் அற்ற நிஜ உலகில் இருந்தனர். இருவரின் கண்ணாம்பூச்சி அங்கில்லை. மித்ராவும் அவள் ஆழ் மனதில் இருப்பதை அவனுக்கு ஒத்துழைத்து வெளிப்படுத்தி இருந்தாள்.


கிருஷ்ஷின் கையும் அவள் இடையில் ஊர்வலம் நடத்திக் கொண்டிருந்தது. அவளின் கைகளும் அவன் கழுத்து வளைவைப் பற்றிக் கொண்டிருந்தது. அவள் விரல் நகங்கள் ஆங்காங்கே சிறு கீறல்களையும் உண்டாக்கியது.
1000157290.jpg


இடி ஒன்று இடித்தது. அந்த இடி செவியைத் தீண்ட கிருஷ் அவளை விடுவித்து விலகி நின்றான்.

இருவரின் முகத்திலும் செம்மை படர்ந்திருந்தது. வேறு பக்கம் திரும்பி மூச்சு வாங்கினர். மித்ராவுக்கு அப்போதுதான் சுற்றுப்புறம் உரைத்தது. சுற்றும் முற்றும் பார்த்தாள்.

பாதி நனைந்திருந்த தலையைக் கோதிக் கொண்டான் கிருஷ். இதற்கு மேலும் தள்ளிப் போடுவதில் அவனுக்கு விருப்பமில்லை.

“ஐ லவ் யூ. நான் உன்னை கிஸ் பண்ணேன். நீ எதுக்கு பண்ண?”
அவன் கேள்வியில் அவள் மஞ்சள் நிற முகத்தில் இருந்த கருமையான வில்லாய் வளைந்த புருவங்கள் இரண்டும் சுருங்கியது. தலையைக் குனிந்தவள் உதடுகளை மட்டும் கடித்தாள்.

“சொல்லு மித்ரா. நான் என்ன தப்பு செஞ்சேன்? நான் உனக்கு புரப்போஸ் பண்ணேன். பிடிக்கலைனா ஓகே. அதுக்கு என்னை அப்படி ஒதுக்க வேண்டிய அவசியம் என்ன? அப்படி பிடிக்கலைனா இப்ப நடந்ததுக்குப் பேர் என்ன? ல..”

மித்ரா கண்களில் நீர்க்கசிவதைப் பார்த்து விட்டு அப்படியே நிறுத்தினான் கிருஷ்.

“டைம் ஆச்சு கிளம்பலாம்.”
என்றவன் கடையில் தேநீருக்கான பணத்தைக் கொடுத்து விட்டு வேகமாக காருக்குள் சென்றான். அந்த தேநீரை அப்படியே வாயில் கவிழ்த்துக் கொண்ட மித்ராவுக்கு அதை விட மனதில் இருந்த கசப்பு அதிகமாக இருந்தது.
கடைக்குச் சென்று கிளாசைக் கொடுத்து விட்டு பணத்தை மித்ரா எடுக்க அவர் பணம் வாங்கி விட்டதாகக் கூறினார்.

காரில் முன் கதவைத் திறந்து வைத்திருக்க பின் பகுதியில் ஏறி அமர்ந்தாள் மித்ரா. அமர்ந்து கண்களை மூடிக் கொண்டாள். பிறகு இரவு நடந்த அத்தனையும் நினைத்துப் பார்த்தாள்.
பிருத்விகா கடத்தப்பட்ட அந்த நாளில் அவளுடன் பேசியவன் அதற்குப் பிறகு அவளிடம் பேச முனையவில்லை. அவள் எதாவது கேட்க முயன்றாலும் அவன் பதில் கூறுவது இல்லை.
சில நாட்கள் கழித்து பிருத்விகாவும், கிருஷ்ஷூம் கல்லூரியில் புல் வெளிக்கு நடுவில் ஒரு பெஞ்சில் அமர்ந்திருந்தனர்.

“சொல்லு பிருத்விகா.. என்ன சொல்லனும்?”

“எனக்கு அப்பா கல்யாணம் பிக்ஸ் பண்ணி இருக்கார். இன்னும் கொஞ்ச நாளில் அவர் இங்க வந்திடுவார். அதுக்கப்பறம் டேரக்டா மேரேஜ்தான்.”

“வாட்?” கிருஷ் அதிர்ச்சியில் கண்களை விரித்தான்.

“என்ன சொல்ற?”

“ம்ம்ம்.. அப்பாகிட்ட பேசும் போது நீங்க யாரைப் பார்த்தாலும் கல்யாணம் பண்ணிக்கிறேன் சொல்லி இருந்தேன்.”

“உனக்கு என்ன பைத்தியமா? பிருத்விகா. இந்த காலத்தில் போய்?”

“இல்லைடா.. அம்மா இறந்தப்ப என்னைக் கேட்டார் நானும் சேரினு அப்ப சொல்லிட்டேன். எனக்கு யாரு மேலையும் ஒப்பினியன் இல்லை.”

“சரி யார் மேலவாது இன்ட்ர்ஸ்ட் இருக்கா?”

“இல்லை.. அது வந்து.. எப்படி சொல்றது? எனக்கு இப்ப மேரேஜில் இண்டர்ஸ்ட் இல்லை..”

“அவ்வளவுதானா? பண்ணா வந்தறப் போகுது. இதுக்குப் போய்.. நானும் என்னமோ ஏதோனு பயந்துட்டேன்.”
கூறிவிட்டு அவளிடம் பல கொட்டுகளையும் வாங்கிக் கொண்டான்.

“இதுக்குத்தான்.. உங்க அப்பா தப்பு பன்றார். உன்னை கல்யாணம் பண்ணிக் கொடுத்து ஒரு அப்பாவியைக் கொல்லத் திட்டம் போடுறார். பாரு கொட்டிலேயே என்னோட தலை வீங்கிடுச்சு. பணியாரம் மாதிரி பெரிசாகிடுச்சு.” என தலையைத் தேய்த்துக் கொண்டே அவளிடம் பேசி மேலும் சில அடிகளை வாங்கிக் கொண்டான்.

“இப்படியே பண்ணிட்டு சுத்து வர மாப்பிள்ளை ஓடிருவான். உனக்கு கல்யாணம் நடக்காது.” என அவளைப் பதிலுக்கு கொட்டி விட்டு கிருஷ் ஓட ஆரம்பித்தான்.
அவன் பின்னாலேயே துரத்திக் கொண்டு பிருத்விகா ஓடினாள்.

“டேய் நில்லுடா.. ஓடாத..”

“போ.. போ உங்கிட்ட யாரு கொட்டு வாங்கறது..” அவன் போக்குக் காட்டிக் கொண்டு ஓடினான். பார்க்கை விட்டு வெளியே ஓடி விட அதற்குள் பிருத்விகாவுக்கு செருப்பு காலில் இருந்து கழன்று விட்டது. எடுத்து மாட்டிக் கொண்டு ஓடியவள் சட்டென்று திரும்பி மோதினாள்.

“ஆ.. யாருடா.. இது குறுக்க?” என விலகி ஓட முற்பட அவளால் நகர முடியவில்லை. அவள் கைதான் வருணின் கைப் பிடியில் சிக்கி இருந்தது.
அப்போதுதான் திரும்பி பார்த்தாள். வருண் அவளை முறைத்தப்படி நின்று கொண்டிருந்தான்.

‘அச்சோ.. இந்த மைதா மாவு வேற முறைக்குதே..’

“கையை விடு வருண்.”

“உனக்கு இன்னும் முழுசா சரியாகலை. அப்புறம் எதுக்கு இப்படி ஓடிட்டு இருக்க.”
பிருத்விகா பின்னால் வரவில்லை என்பதைப் பார்த்த கிருஷ் பிருத்விகாவைத் தேட அவள் வருணின் கைப்பிடியில் இருந்ததைக் கவனித்தான்.

“ஆஹா.. மாட்டிக்கிட்டா.. இரண்டும் சண்டை போடறதுக்குள்ள போய் பிரிச்சு விடுவோம்.”

உடனே அவர்கள் அருகில் வேகமாகச் சென்றான்.
“ஸ்டாப்.. ஸ்டாப்.. சண்டை போடக் கூடாது கிட்ஸ்.” என்றான். இருவரும் அவனை ஒரே நேரத்தில் திரும்பிப் பார்த்து முறைத்து, “யாரு சண்டை போட்டா?” என்றனர்.

‘ஆஹா.. இன்னிக்கு நாமதான் அவுட் போல.’
“என்னமோ பண்ணுங்க. நோட்ஸ் எடுக்கப் போகனும். நீ வர்ரியா? இல்லையா?” என பிருத்விகாவைப் பார்த்து கேட்க வருண் அவள் கையை விட்டான்.

இருவரும் தங்கள் பேக்கைத் தூக்கியபடி நடந்தனர்.
 
Last edited: