அத்தியாயம்-45
I HAD SEEN EARTH BREAKING..
SHATTERING.. ALL THE WEAKNESS OF MY EARTH.
ONE THING I LEARNED EVERYTIME IS THAT MY EARTH IS MUCH STRONGER AFTER EVERY SHATTERING.
MEANWHILE WHEN I FALL ON HER SHE ABSORBS ME WITHOUT A SINGLE DROP.
NOTHING STOPS HER.
I DON’T HAVE ANY OTHER CHOICE BUT LOST IN HERSELF.
நீண்ட நேரம் படித்துக் கொண்டு இரவெல்லாம் உறங்காதப் பிருத்விகா நடு நிசிக்கு மேல் உறங்கி இருக்க காலை ஏழு மணி வாக்கில் காலிங்க் பெல் சத்தம் கேட்டது.
சத்தத்தில் கண் விழித்தவள், “தேவகிக்காகிட்ட சாவி இருக்கே? இப்ப யாரு?” என யோசித்தபடியே கதவைத் திறந்தாள்.
கதவைத் திறந்தவள் உடனே எதிரில் இருந்த நபரைப் பாய்ந்து கட்டிக் கொண்டாள்.
“டாடி..” அவள் முகத்தில் அப்படி ஒரு மலர்வு. நீண்ட நாட்கள் கழித்து தந்தையை சந்தித்த மகிழ்ச்சியை வார்த்தைகளால் சொல்ல முடியாது.
“என்ன டாடி இளைச்சுப் போயிட்டீங்க? சாப்பிடறது இல்லையா?” அவரது தோளில் தொங்கியபடி செல்லம் கொஞ்சினாள். ரமணன் பிருத்விகா ஸ்ரீக்கு மிகவும் செல்லம் கொடுப்பார். இவளும் அவர் தோளில் தொங்கிக் கொண்டே திரிவாள். எதெற்கெடுத்தாலும் தந்தை வேண்டும். வெங்கடரமணனும் மனைவி மற்றும் மகளின் மீது உயிரையே வைத்தார். அவர் மனைவியின் இறப்பு அவரது ஒரு கண்ணைப் பறித்தது போலாகி விட்டது.
அதே வீட்டில் இருக்க அவரால் வேறு எதுவும் செய்ய இயலாத நிலை. மனச் சோர்வில் விழுந்து விட பிருத்வி டாக்டர். வசுந்தராவிடம் அழைத்துச் செல்ல அவர் வேறு இடத்திற்கு மாறி இருக்கும் படி பரிந்துரை செய்தார்.
அதன்படி அவரை பிருத்விகா மனதை மாற்றி டிரான்ஸ்பர் வாங்கி வட இந்தியாவிற்கு அனுப்பி விட்டாள்.
அப்படி சென்றவர் இன்று தான் வந்திருக்கிறார். முன்பை விட முகத்தில் தெளிவு வந்திருந்தது.
“என்ன ஸ்ரீக்குட்டி?”
அவருக்கு நீர் பருக கொடுத்தவர் அமர வைத்தாள்.
“டாடி இரண்டு நாள் கழிச்சுதான் வரன்னு சொன்னீங்க?”
“ஆமா.. ஆனால் லஷ்மி தங்கச்சிதான். நாளைக்கு காலையில் நல்ல நாள். அப்பவே பொண்ணு பார்த்தால் நல்லதுனு சொன்னாங்க.”
இதைக் கேட்டதும் பிருத்விகாவின் முகம் லேசாக மாறுதல் அடைந்தது. ஆனாலும் மறைத்து விட்டாள்.
“ஒ சரி.. சரிப்பா.”
அவளுக்கு வாங்கிக் கொண்டு வந்த பொருட்களை அடங்கிய பேக்கை எடுத்து நீட்டியவர், “நார்த் இண்டியா ஸ்பெஷல்ஸ் இருக்கு. யூஸ் பண்ணிக்கோ.” என்றார்.
“அப்பா..”
“பிருத்வி நான் ரொம்ப சந்தோஷமாக இருக்கேன். நீ மட்டும் நல்ல படியா கல்யாணம் பண்ணிட்டு வாழறதைப் பார்த்தால் மட்டும் போதும். இந்த மாப்பிள்ளையை உனக்கு கண்டிப்பா பிடிக்கும். உன்னை ரொம்ப நல்லாப் பார்த்துப்பான்.”
“ம்ம்ம்.. சரிப்பா.. நீங்க ரெஸ்ட் எடுங்க. நான் இன்னிக்கு குக் பண்றேன்.”
“வேணாம்மா.. நீ போய் படி. நானே சாப்பாடு செய்யறேன்.”
“டாடி..”
“போ ஸ்ரீ. நான் பார்த்துக்கிறேன்.” என்றார்.
ஸ்ரீயும் மேலேறிச் சென்றவள் குளித்து முடித்து தயாராகி வந்தாள். கீழே அவர் தந்தை சமைத்துக் கொண்டிருந்தார்.
இருவரும் சேர்ந்து சிரித்தபடி பேசிக் கொண்டே சாப்பிட்டனர். வழக்கம் போல் கிருஷ் வந்து வாகனத்தை நிறுத்த பிருத்விகா அவனை உள்ளே அழைத்து தன் தந்தையைப் பார்க்க வைத்தாள்.
சில நிமிடங்கள் அவனுடனும் பேச இருவரும் விடை பெற்றனர். ஜீப்பில் இருவரும் கல்லூரிக்குப் பயணம் செய்தனர்.
“கிருஷ்.. நாளைக்கு பொண்ணுப் பார்க்க வராங்க. கரக்டா லீவ் நாள். முன்னாடியே மாத்தி வச்சுட்டாங்க. நாளைக்கு நீயும் இருக்கறியா? மித்ராவையும் கூப்பிடப் போறேன்.”
“வருணை கூப்பிட மாட்டியா?”
“வருண் கண்டிப்பா இருப்பான். அவனைத் தனியா கூப்பிட வேண்டியது இல்லை.” என்றாள்.
அடுத்த நாள் காலை.
தேவகி அம்மாளும், லஷ்மி அம்மாளும் பிருத்விகாவைப் பார்த்து பார்த்து அலங்காரம் செய்து கொண்டிருந்தனர். வெளிர் நிறத்தில் முத்துகள் சேர்த்து தைத்த புடவையைக் கட்டி விட்டு அதற்குப் பொருத்தமான நெக்லேசை அணிவித்து விட்டு பின்னர் அவள் கூந்தலை அலங்காரம் செய்து கொண்டிருந்தனர்.
மித்ராவோ கோயிலுக்குச் சென்று விட்டு வெளிர் நிறம் மட்டும், வான் நீல நிறம், தங்க நிறம் கோடுகளாக போடப்பட்ட புடவை ஹாப் சேரி மாடலில் கட்டியிருந்தவள் சிம்பிளாக உள்ளே நுழைந்தாள். கையில் சாமி பிரசாதமும் இருந்தது.
ஹாலில் இருந்த ரமணனுக்கு கொடுத்தவள் மேலே சென்று விட்டு கதவைத் தட்டி விட்டு நுழைந்தாள்.
“இந்தா பிருத்விகா. இது சாமி பிரசாதம். சாப்பிடு.” என்றபடி கொடுக்க பிருத்விகாவும் நன்றி கூறி எடுத்துக் கொள்ள பிருத்விகாவுக்கு கூந்தல் அலங்காரம் செய்ய அவளும் உதவ ஆரம்பித்தாள்.
கிருஷ் வீட்டை அலங்காரம் செய்து கொண்டிருந்தான்.
“பாப்பா.. நீயும் இதே புடவையோட இருக்க. காலையில் இருந்து வேலை செஞ்சுட்டு இருக்க. போய் டிரஸ் மாத்து. பக்கத்து ரூமுக்கு போய்க்கோ.”
மித்ராவிடம் லஷ்மி அம்மாள் கூறியது மித்ராவும் உடை மாற்ற பக்கத்து அறைக்குச் சென்றவள் உடனே வெளியே வந்தாள்.
அங்கே கிருஷ் நின்று அலைபேசியில் யாரிடமோ பேசிக் கொண்டிருந்தான். அவள் வெளியில் நிற்பதும் கண்கள் எதையோ தேடுவதைக் கவனித்ததையும் கண்ட கிருஷ் அறையை விட்டு வெளியே வந்தான். அவனும் தங்க நிற பார்டர் வைத்த வெள்ளை வேட்டி சட்டையில் இருந்தான்.
அறையை விட்டு வெளியே வந்தாலும் அவனுடைய கண்கள் இயல்பாக மிளிரும் அழகை ரசிக்கத் தவறவில்லை.
அறைக்குச் சென்று கதவைச் சாற்றிய மித்ரா பட படக்கும் இதயத்தைக் கட்டுப் படுத்திக் கொண்டவள் பிரஷ்ஷாகி விட்டு ஹாப்வைட்டில் பெரிய தங்க நிற பார்டர் போட்டு பச்சை நிறத்தில் புஷ் வைத்த பிளவுசை அணிந்தாள்.
வெளியே வரவும் மாடியில் சாய்ந்தபடி நின்று கொண்டிருந்தான் கிருஷ். அவளைப் பார்த்ததும் கீழே இறங்கி நடக்க ஆரம்பித்தான்.
பிருத்விகாவின் அறைக்குள் நுழைந்ததும், “இந்த சாரி உனக்கு நல்லாருக்கும்மா..” என தேவகி அம்மாள் கூறவும் நன்றி கூறினாள்.
“பாப்பா.. பூ இப்பத்தான் வந்துச்சு. ஹாலில் இருக்கற அந்த பாத்திரத்தில் உனக்குப் பிடிச்ச மாதிரி பூ மட்டும் மிதக்க விடறியா பாப்பா. எனக்கு கொஞ்சம் சமைக்கற வேலை இருக்கு.” என தேவகி அம்மாள் கேட்க மலர்க் கோலம் போடுவதில் தேர்ந்த மித்ரா சரி என்று தலையாட்டி விட்டு சென்றாள். பிருத்விகாவின் வீட்டில் ஏற்கனவே மலர்க் கோலத்தைப் போட்டு முடித்திருந்தாள்.
கையில் சில மலர்களை வைத்துக் கொண்டு ஹாலில் எதை அடுக்கலாம் என யோசித்த போது ஸ்வீட் பாக்ஸை தூக்கியபடி கிருஷ் வந்தான். கீழே ஒரு காலை மண்டியிட்டு அமர்ந்திருந்த மித்ராவின் சேலை விலகி இடை மட்டும் மஞ்சள் நிறத்தில் தெரிந்தது. சட்டென்று கண்களை விலக்கிக் கொண்டான் கிருஷ்.
‘இது வேற மைசூர்ப்பா மாதிரி..’ என முனகிக் கொண்டான்.
மித்ராவும் புடவையைத் தொங்கப் போட்டு சரி செய்து கொண்டாள். ஹாலில் ராமச் சந்திரன், ரமணன், லஷ்மி அம்மாள் வருண் முதற்கொண்டு அமர்ந்திருக்க பிருத்விகாவை அழைத்து வந்தனர்.
வெண்ணிற தேவதையாய் இறங்கி வந்தாள் பிருத்விகா. ஹாலில் பார்த்தவளுக்கு குழப்பம். அங்கே பட்டு வேட்டி சட்டையில் வருண் அமர்ந்திருந்தாள். கிருஷ் நின்று கொண்டிருந்தான். இது அவர்களின் தீம் டிரஸ் அதைப் பற்றிய பிரச்சினை இல்லை.
மாப்பிள்ளை வீட்டார் எங்கே என்று தேடினாள்.
“என்ன பிருத்வி தேடற?”
“அத்தை மாப்பிள்ளை வீட்டுக்காரங்களைக் காணோம்?”
“இருக்காங்க நல்லாப் பாரு பிருத்வி.”
“அத்தை இங்க நாமதான இருக்கோம். இதென்ன பிராங்கா?”
அவள் கேள்வியில் அங்கிருந்த அனைவருமே சிரித்து விட்டனர். வருண் மட்டும் சிரிக்கவில்லை. தன் மகள் முகம் வாடுவதைப் பார்க்க இயலாமல் ரமணன் , “ஸ்ரீ உனக்கு நானும், உங்கம்மாவும் சேர்ந்து முடிவு செஞ்ச மாப்பிள்ளை வருண்தான். அது எங்க எல்லாருக்கும் தெரியும். வருண் மட்டும் தான் படிப்பு முடியட்டும். பிருத்விகாவுக்கும் கொஞ்சம் டைம் கொடுங்க. அவளுக்கு விருப்பமில்லைனா விட்டலாம். அப்படினு முன்னாடியே சொல்லிட்டான்.”
அவளுக்கு இந்த செய்தி புதிது. நிறைய ஆட்கள் வந்தால் பிருத்விகா சம்மதிக்காமல் போய் விட்டால் என்ன செய்வது என்ற காரணத்தால் வேறு யாரையும் அழைக்கவில்லை. பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டு விட்டனர்.
அப்போதுதான் பிருத்விகாவுக்கு உண்மை உறைத்தது.
“அத்தை, மாமா நான் வருண் கிட்ட தனியாப் பேசனும்.” என்றாள்.
“போயிட்டு வாம்மா.”
இருவரும் பிருத்விகாவின் அறைக்குச் சென்றனர்.
முதலில் கனத்த மௌனம் ஆட்சி செய்தது. அவன் முகம் பாராது திரும்பி நின்று கொண்டாள்.
“பேபி..” வருண் அவளை வேண்டுமென்றே அழைத்தான். அந்த அழைப்பில் திரும்பினாள்.
“வருண் எங்கம்மா என்னை மேரேஜ் பண்ணிக்க சொல்லி பிராமிஸ் வாங்குனாங்களா உங்கிட்ட?”
“யெஸ்.”
“அப்ப இதுவரைக்கும் என்னை மேரேஜ் பண்ணிக்குவேனு மிரட்டுனது எல்லாமே உண்மை.”
“அப்படி இல்லை.”
“சரி அன்னிக்கு உன்னோட ரோஸ் கார்டனில் என்ன நடந்துது?” பிருத்விகா கோபமாக இருக்கிறாள் என்று அவள் முகத்திலும், குரலிலும் வெளிப்பட்டது.
“அதை நீதான் சொல்லனும்?”
“வருண் உனக்கு கேம் விளையாடறதுனா ரொம்ப பிடிக்கும் இல்லை. அதுவும் எங்கிட்ட?”
“பிருத்விகா அதெல்லாம் ஃபாஸ்ட். இப்ப எதுக்கு அதைப் பேசிட்டு இருக்க?”
“எதுடா ஃபாஸ்ட். உன்னை நான் கிஸ்... இல்லை உன் கையில் கடிச்சு வச்சதா?”
அவளுக்கு நினைவு வந்து விட்டது என வருணுக்குப் புரிந்தது. அந்நிகழ்வு மனதில் ஓடியது.
வருணிடம் பூவைக் கேட்டு அடம் பிடித்துக் கொண்டிருந்தாள் பிருத்விகா. தவறுதலாக அவனை முத்தமிட்டு கடித்தும் வைத்திருந்தாள். இவை அனைத்து கடத்தப்பட்டு மயக்கம் தெளிந்த போது அவள் நினைவுக்கு வந்திருந்தது.
“ஸோ வாட்? இட்ஸ் ஏன் ஆக்ஸிடெண்ட்.”
“பிரஞ்சு கிஸ் ஆக்ஸிடெண்டா..” எனக் கேட்டாள்.
“சரி அது டிரங்கன் மிஸ்டேக்னு சொல்லிடலாம். இப்ப பிரசண்டுக்கு வருவோம். என்னோட அம்மாவுக்காக இந்தக் கல்யாணத்துக்கு நீ ஒத்துகிட்ட சரியா?”
“அதுவும் ஒரு காரணம்.”
“அதுவும் ஒரு காரணமா? இன்னும் வேற ஒரு காரணம் இருக்கு?”
“எங்க ஃபேம்லியை செலக்ட் பண்ண பொண்ணும் நீதான்.”
“ம்ம்ம். டூ யூ ஈவன் லைக் மி வருண்? கடமைக்குக் கல்யாணம் பண்ணற?”
“கடமைக்கு அதெல்லாம் தேவை இல்லை பிருத்விகா. நம்ம நாட்டில் எவ்ளோ மேரேஜ் இப்படித்தான் நடக்குது. அது கண்டியூ ஆகுது.”
அவனை சில நொடிகள் பார்த்தவள், “ஐ… வோண்ட் மேரி யூ.” என்றவள் அந்த அறையை விட்டு வெளியேறினாள். ஹாலில் வந்து தன் விருப்பமின்மையைத் தெரிவிக்க வந்தவள் அனைவரும் பேசி சிரித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தாள். அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சி தாண்டவமாடியது. ஏனோ அதை அழிக்க மனம் வரவில்லை. பல உணர்வுகளால் தள்ளாடிய பாவை இறுதியில் ஆர்வமாக ஏறிட்ட விழிகளுக்கு தன் தலையை ஆட்டி வைத்திருக்க மித்ரா வந்து கை கொடுத்து வாழ்த்த கிருஷ்ஷூம் அதே செய்தான்.
வருணும் புன்னகையுடன் மாடியில் இறங்கிக் கொண்டிருந்தான்.