• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

என் மேல் விழுந்த மழையே!-46

Meenakshi Rajendran

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jun 22, 2024
153
51
28
Tiruppur
அத்தியாயம்-46
I WAS WITHIN YOU..
YOU MAY NOT REALISE IT.
YOU THOUGHT I LIVED IN SKY.
NOT TRUE.. BEFORE BECOMING RAIN..
I WAS WITH YOU.
EVERYTHING CHANGES.. SO I DID.
BUT I ALWAYS CAME BACK FOR YOU.
DON’T YOU KNOW THAT YOU ARE MY EARTH.
I AM A RAIN.
I HAVE TO FALL ON EARTH.
I NEVER BE ABLE TO STOP THE FALLING.
I MAY HIT YOU HARD WITH MY FORCE.
THAT IS NOT INTENTIONAL BUT INEVITABLE.
YOU HAVE TO BE BEAR ME.
ITS NOT A CONDTION. ITS NATURAL.

YOU ARE MY EARTH

லஷ்மி தன் வருங்கால மருமகளை அணைத்துக் கொண்டார். அவள் எதிரே நின்று கொண்டிருந்த வருணைப் பார்த்த பிருத்விகாவின் முகம் மாறியது. அவள் விழிகளில் இருந்த விஷயத்தை உணர்ந்த வருண் கிருஷ்ஷின் அருகில் சென்றான்.

“வருண் இப்படி ஒரு டிவிஸ்ட் வைப்பனு நான் எதிர்பார்க்கலைடா? எப்படியோ சாதிச்சுட்ட?” என முனு முனுத்தான்.

“சாதிச்சுட்டனா?.. அவ என்னைத் துரத்தி துரத்தி அடிக்க ஸ்கெட்ச் போட்டு கொடுத்துட்டு வந்திருக்கேன்.”

“என்ன வருண் சொல்ற? புரியலை..”

“நல்லது.”
என தன் பேச்சை முடித்துக் கொண்டு வெங்கட ரமணனின் அருகில் சென்றான் அவன்.

“மாமா.. உங்ககிட்ட நிறைய விஷயம் சொல்ல வேண்டியது இருக்கு. நாம கொஞ்சம் வெளியில் போலாமா?”
வருண் இப்படி காரணமில்லாமல் கூப்பிட மாட்டான் என்பதால் அன்று மாலை சந்திக்கலாம் என்று கூறினர்.

“சரி இப்ப சாப்பிட்டு எல்லாரும் மருத மலை முருகன் கோயிலுக்குப் போயிட்டு வந்திடலாம். இன்னிக்கு அன்னதானத்துக்கு ஏற்பாடு செஞ்சுருக்கேன். அபிஷேகமும் இருக்கு. இப்ப போனாதான் சரியா இருக்கும்.” என லஷ்மி கூறியவுடன் பெரியவர்கள் ஆமோதிக்க தேவகி அம்மாள் அனைவரையும் அமர வைத்து பரிமாறினார்.

வருணும் பிருத்விகாவும் அருகில் அமர வைக்க சாப்பிடும் போது எதையோ இருவரும் ஒரே நேரத்தில் எடுக்க முற்பட விரல்கள் தீண்டின. இருவரும் ஒருவரின் ஒருவர் முகத்தைப் பார்த்துக் கொண்டனர். இதற்காகவே காத்திருந்தது போல் கிருஷ் அதைப் புகைபடமாக எடுத்து வருணுக்கு அனுப்பி வைத்தான்.

வருண் உடனே அதை எடுத்துப் பார்த்தான். அவனுக்கு நன்றி கூறிவிட்டு உடனே இன்ஸ்டாவிலும், வாட்ஸப், பேஸ்புக் அனைத்திலும், “Finally Rain met Earth. Soon to be engaged.” என்ற கேப்சனுடன் பதிவிட அடுத்த சில நொடிகளில் லைக்குகளும், வாழ்த்துகளும் குவிய ஆரம்பித்தன. அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் அருகில் இருந்தவளைப் பார்த்தபடி உண்ண ஆரம்பித்தான் வருண். ஆனால் பிருத்விகாவோ கடமையே கண்ணாக உணவில் கவனம் வைத்திருந்தாள்.

அனைவரும் உண்டு முடித்த பின்னர் கோயிலுக்குக் கிளம்ப காரில் ஏறினர். பிருத்விகா தன் தந்தையுடன் ஏற முயற்சிக்க வருணோ அவளை ரமணனிடம் கேட்டு தன்னுடைய காரில் ஏற்றி விட்டிருந்தான்.

லஷ்மி அம்மாள் வருணின் காதில் முனு முனுத்தாள். “இன்னும் சின்னப் பிள்ளை மாதிரி அவகிட்ட சண்டை போட்டுட்டு இருக்காத வருண். நல்ல படியா நடத்து. உன்னைப் பத்தி எந்த கம்பிளைண்டும் வரக் கூடாது. புரியுதா?” என்ற எச்சரிக்கை அதில் ஒளிந்திருந்தது.

சிரித்தப்படியே ஏறி டிரைவின் சீட்டில் அமர்ந்தான் கிருஷ்.
தனக்கு போர் அடிக்கும் என்பதால் கிருஷ்ஷையும், மித்ராவையும் தன் காரில் ஏற்றி இருந்தார் வெங்கட ரமணன். கிருஷ் கல கலப்பாகப் பேசுவதால் அவருக்கு கிருஷ்ஷூடன் பயணம் செய்வது மிகவும் பிடிக்கும். கிருஷ்ஷையும் தன் மகனாகவேப் பார்த்தார்.

“அங்கிள் வருண் தான் மாப்பிள்ளைனு கடைசி வரை சொல்லவே இல்லை பார்த்தீங்களா?”

“அப்படி இல்லை கிருஷ். பிருத்வி அம்மா இறக்கறதுக்கு முன்னாடி லஷ்மிகிட்ட கேட்டுக்கிட்டது. அவங்க இரண்டு பேருக்கும் சம்மதம்னா பிருத்வியை உங்க மருமகளா ஏத்துக்குங்க. இல்லைனா வேற நல்ல பையனா பார்த்து அவளுக்கு கல்யாணம் செஞ்சு வைங்க. வருண் இப்பதான் சம்மதம் கொடுத்தான்.

பிருத்விகாவுக்கு சொல்ல வேண்டாம் அப்படினு சொல்லிட்டான். அதான்.”

“ஆனால் பிருத்விகாவுக்கு ஷாக்தான் அங்கிள். நானுமே அவ ஒத்துக்க மாட்டாளோனு பயந்தேன். அப்புறம் ஓகே சொல்லிட்டாள்.”

இவர்கள் பேசிக் கொண்டே பயணத்தைத் தொடர மித்ரா தன் கைப்பேசியில் மூழ்கி இருந்தாள்.
ஆனால் வருணின் ஏசி காரில் அனலடித்துக் கொண்டிருந்தது. வருணின் இன்ஸ்டா பதிவைப் பார்த்திருந்தாள் பிருத்விகா ஸ்ரீ.

“என்னடா பண்ணி வச்சுருக்க?”

“உண்மையை போட்டுருக்கேன்.”

“உன்னை எல்லாம்.. நாளைக்கு என்னை எத்தனை பேரு கலாய்ப்பாங்களோ..”

“யாரும் கலாய்க்க மாட்டாங்க. ஆல்ரெடி நீ என்னோட கேர்ள் பிரண்ட். அப்புறம் என்ன? எல்லாரும் கங்கிராட்ஸ் பண்ணுவாங்க.”
வருண் கூலாக சொல்ல பிருத்விகா மேலும் கொதித்தாள்.

“நீ எதுக்கு வருண் இந்தக் கல்யாணத்துக்கு ஒத்துகிட்ட?”

“உங்கம்மா கேட்ட விஷயத்தில் இது ஒன்னு. அதான் ஒத்துகிட்டேன்.”

“வருண் கடமைக்கு எல்லாம் நீ கல்யாணம் செஞ்சுக்க வேண்டியது இல்லை. இல்லை அன்னிக்கு சொன்ன மாதிரி என்னைப் பழி வாங்க செய்யறயானு எனக்குப் புரியலை.”
வருண் இதற்கும் நகைத்தான்.

“சரி நீ இந்தக் கல்யாணத்தை நிறுத்தி இருக்கலாம் இல்லை. ஏன் நிறுத்தல? நீ வேண்டாம்னு தலை அசைச்சால் இந்தக் கல்யாணம் நடக்கவா போகுது. அப்புறம் என்ன?”

“அது…”

“பதில் சொல்லு..”
அவன் கேள்விக்கு அமைதியாக பிருத்விகா ஹெட் செட்டை எடுத்து காதுக்கு அணிந்து கொண்டாள். அதன் பின் பயணம் அமைதியாகக் கழிந்தது
.
மருத மலைக்குச் சென்றவர்கள் நிம்மதியாக தரிசனம் முடித்து வீட்டுக்கு வந்தனர். தேர்வுகள் இருவருக்கும் முடிந்ததும் திருமணம் முடிவு செய்யப்பட்டிருந்தது.

அதற்கான ஆயத்த வேலைகளில் இருவரின் குடும்பமும் ஆட்பட்டிருக்க பிருத்விகா ஒரு வித சோர்வுடன் காணப்பட்டாள்.
வருண் வழக்கம் போலவே இருந்தான்.

இதற்கிடையில் பிரி வெட்டிங்க் போட்டோ சூட் ஒன்று வந்தது. அதற்காக சிறுவாணி பால்ஸ் வந்திருந்தனர் வருணும், பிருத்விகாவும். கிருஷ்ஷூம் மித்ராவும் உடன் உதவிக்கு வந்திருந்தனர்.

வருணும் அதிகம் பேசவில்லை. முதலில் பல வித போஸ்களில் புகைப்படங்கள் எடுக்கப்பட இறுதியில் டிரண்டிங்கான கன்னத்தில் முத்தமிடும் புகைப்படம் வந்தது.
வருண் முதலில் மறுப்பு தெரிவித்தான். ஆனால் புகைப்பட கலைஞர் விடவில்லை. இதுதான் இப்போது டிரண்டிங்க் என பிருத்விகாவிடம் கேட்க அவளோ என்ன செய்வது வருணைப் பார்த்தாள். இறுதியில் ஓகே என வருணே தலையசைத்து விட்டான். ஆனால் இந்தப் புகைப்படங்கள் மட்டும் மற்ற யாருக்கும் தரக் கூடாது எனக் கட்டளையும் இட்டு விட்டான் வருண்.

பிருத்விகா தான் முதலில் முத்த மிட வேண்டும். அவள் மெல்ல கன்னத்தின் அருகே நெருங்கினாள். வருணும் தன்னை லேசாக அவளுக்கு ஏற்ற மாதிரி சாய்த்து நின்றான்.

இருவரும் நிற்பது அருவி மற்றும் மரங்கள் நிறைந்த பகுதி என்பதால் எங்கிருந்தோ ஒரு பூச்சி நேராக வருணின் முகத்திற்கு அருகே வர அவன் தலையைத் திருப்பி விட்டான். கன்னத்திலிருந்து வழுக்கி இதழில் விழுந்தது முத்தம். அதிர்ச்சியில் இருவரது கண்களும் விரிந்தது.

“ஓகே நைஸ் சாட்.” என போட்டோகிராபர் அவர்களைப் பாராட்டினார்.
இருவரும் சட்டென்று விலகினர்.

“இந்த மாதிரி இல்லாமல் ஏதாவது சிம்பிலா, டிப்ரண்டா சூட் பண்ணுங்க. இதைத்தான் எல்லாருமே செய்யறாங்க..” என வருண் போட்டோகிராபரிடம் சொன்னான்.

“இது நாலாவது டைம்..” என முனு முனுத்தாள் பிருத்விகா.

“ஹான்.. என்ன சொன்ன?”

“ஒன்னும் இல்லை. உனக்குத்தான் எல்லாமே ஈசியாச்சேனு சொன்னேன். எல்லாத்தையும் சுலபமா மறந்திருவே.. அதை சொன்னேன்.” என கடுப்பில் வாயைத் திறந்து கூறி விட்டாள்.

போட்டோகிராபரிடம் பிரேக் கேட்டான் வருண்.

“நீ எங்கூட வா..”
என அவளை இழுத்துக் கொண்டு நடந்தான்.

“என்ன பிருத்விகா என்னைப் பார்த்தால் ரொம்ப ஈசியா இருக்கா உனக்கு?”

“உனக்கு எல்லாமே ஈசி வருண். தஸ்வியைக் கழற்றி விடறது. என்னைக் கிஸ் பண்ணிட்டு வேற ஒருத்தனை கல்யாணம் பண்ணிட்டு வாழச் சொல்றது எல்லாமே ரொம்ப ஈசி..” என இத்தனை நாள் மனதில் அழுத்திய அனைத்தையும் இன்று வாய் விட்டு பேசி விட்டாள்.

“நான் எப்ப உன்னை கிஸ் பண்ணேன்?”

“இதோட சேர்த்து நாலாவது டைம். உனக்கு எப்படி நினைவு இருக்கும்?” என நக்கலாக ஒலித்தது அவள் குரல்.

“ஓ.. அப்ப நான் செஞ்சது பிரச்சினை.. ஆனால் நான் மறந்துட்டேன் சொன்னதுதான் பிரச்சினை இல்லையா……வெயிட்.. நாலாவது டைம்னா? உனக்கு ரோஸ் கார்டனில் நடந்ததும் நினைவில் இருக்கு..”

உடனே தலையைக் குனிந்தாள் பிருத்விகா. அவன் ஆள்காட்டி விரலால் அவள் தாடையை நிமிர்த்தியவன் அவள் முகத்தில் தெரிந்த குற்ற உணர்வில் மனம் வாடிப் போனான்.

“பிருத்விகா ஏண்டி இப்படி படுத்தற? உனக்கு என்னதான் பிரச்சினை இப்ப? சொல்லு. சீரியசா என்னோட மூடை ஸ்பாயில் பண்ணிட்டு இருக்க நீ?”

“இல்லை.. முதல் டைம் நமக்குள்ள நடந்தப்ப உன் மேல் நான் எப்படி கோபபட்டேன். இரண்டாவது டைம் நானே அந்த தப்பைச் செஞ்சுருக்கேன். உன்னை பிசிக்கலா அசால்ட் செஞ்சுருக்கேன். ஐம் சாரி. எல்லாத்தையும் மறந்துட்டு உங்கிட்ட சாரி கூட கேட்கலை..”

“அப்புறம்ம்…”

“எனக்கு நிஜமாவே நியாபகத்தில் இல்லை. அப்பப்ப பிளாஷ் மாதிரி ஏதோ மெமரி வந்தாலும் அதை என்னோட இமேஜினேஷனு நினைச்சுக்குவேன். ஆனால் கிட்நாப்பர் மயக்க மருந்து கொடுத்து எழுந்த பிறகு எனக்கு ஃபுல்லா நினைவு வந்திருச்சு. அந்த ரோசைக் கூட நீதான் எனக்குக் கொடுத்த.. அதுவும் நான் உன்னை கடிச்சு.. எவ்ளோ பெரிய காயம். ஐம் சாரி…”
வருணின் முகத்தில் புன்னகை ஒன்று நீங்காமல் இடம் பிடித்திருந்தது.

“பிருத்விகா நான் மறுபடியும் சொல்றேன். நம்மளோட ஃபாஸ்டை விட்ரு. அதில் இருக்க எல்லாத்தையும் மறந்திடு. இப்ப என்னவோ அதை மட்டும் யோசி.” அதற்குள் போட்டோகிராபர் அவர்களை அழைக்கவும் இருவரும் செல்ல வேண்டிய சூழ்நிலை ஆகிற்று.
காருக்குள் அமர்ந்து ஒருவரை ஒருவர் பார்ப்பது போல் புகைப்படம் எடுக்க வேண்டும் என்று புகைப்பட கலைஞர் கூறவும் பிருத்விகாவும், வருணும் உள்ளே அமர்ந்தனர்.

கன்னத்தில் கை கொடுத்து இருவரும் பார்ப்பது, கைகளைக் கோர்த்திருப்பது பிருத்விகா இறங்க முயல அவளைக் கை பிடிக்கும் வருண் என பல விதங்களில் அவர் எடுத்தனர்.

காரில் இருந்து வெளியே செல்லும் பிருத்விகாவை கையைப் பிடித்து வருண் இழுத்து அவன் மடியில் அமர வைக்க வேண்டும். அப்படி அவன் இழுக்க வருணின் மடி மீது அமர்ந்த பிருத்விகாவின் உடல் லேசாக நடுங்கியது. அவளின் மாற்றத்தை உணர்ந்த வருண், “என்ன பிருத்விகா?” என்றான்.


“இரண்டு பேரு..” அவன் மார்போடு புதைந்தாள் பிருத்விகா.