• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

எழுத்தாளர் சாவி என்கிற சா. விஸ்வநாதன்

Vathani

Administrator
Staff member
Joined
Jul 23, 2021
Messages
862
*💫🌹இன்று எழுத்தாளர், இதழாசிரியர் சா வி என அழைக்கப்பட்ட சா விசுவநாதன் பிறந்த நாள் ஆகஸ்ட் 10, 1916* 💫🌹

IMG_20210810_211229_251.jpg

சாவி தமிழின் மிகச் சிறந்த நகைச்சுவை எழுத்தாளர்களில் ஒருவர். சிறுவயதிலேயே இதழ்த்துறையில் நுழைந்த இவர்
கல்கியில் அவ்வப்பொழுது விடாக்கண்டர் என்ற பெயரில் எழுதி வந்தார். பின்னர் கல்கி ஆசிரியர் சதாசிவம் சாவியை அழைத்து உதவி ஆசிரியர் பதவி வழங்கினார்.


தொடர்ந்து கல்கியில் இவர் எழுதிய மாறுவேஷத்தில் மந்திரி, சூயஸ் கால்வாயின் கதை போன்ற நகைச்சுவைக் கட்டுரைகளுக்கு வாசகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. .

பின்னர் ஆனந்த விகடன் இதழில் ஆசிரியராகி வாஷிங்டனில் திருமணம் என்ற நகைச்சுவைத் தொடரை எழுதினார்.


இத்தொடர் பெரும் புகழ் ஈட்டியது. சிறிது காலம் ஆனந்த விகடனில் பணியாற்றிய பின்னர் குங்குமம், பின்னர் தினமணிக் கதிர் ஆகியவற்றின் ஆசிரியர் பதவியைச் சாவி ஏற்றுக்கொண்டார்.


பின்னர் சாவி என்ற பெயரில் வார இதழ் ஒன்றைத் தொடங்கி பல ஆண்டுகள் அதன் ஆசிரியராகப் பணி புரிந்தார்.


கல்கி, ராஜாஜி, காமராசர், பெரியார் முதலான முக்கியமானவர்கள் பலருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பைப் பெற்றார். கல்கி, ஆனந்த விகடன், குங்குமம், தினமணிக் கதிர் போன்ற இதழ்களில் பணியாற்றிய பின்னர் சாவி என்ற பெயரில் வார இதழ் ஒன்றைத் தொடங்கி பல ஆண்டுகள் அதன் ஆசிரியராகப் பணி புரிந்தார்.


சாவியின் எழுத்துகள் நாட்டுடமையாக்கப்பட்டுள்ளதால் அவருடைய பல படைப்புகள் மின்னூல்களாகத் தமிழ் இணையக் கல்விக் கழகத்தில் கிடைக்கின்ற
 
Top