• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

ஒரு விபச்சாரியின் காதல் பாகம் 11

Vaishnavi Vijayaraghavan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2024
269
137
43
Maduravoyal
ஒரு விபச்சாரியின் காதல் பாகம்-11
லீலா கொடுத்த டைரியை பிரித்து படித்தான் ரோஹன்.
அதில் போன வருடம் இருந்த டைரியில்.... முதல் நான்கு மாதங்களில் அவள் பட்ட துன்பங்களை எழுதியிருந்தாள். மூன்று மாதங்கள் அவளுடைய கணவன் அவளை நன்றாக பார்த்துக் கொண்டான் என்றும்.... அதற்கு பின் தினமும் ஒருவனை அழைத்து வந்து விட்டான் என்றும் எழுதியிருந்தாள்.
அதில் ஒருவன் சிகரெட்டால் அவளுடைய உடம்பில் சுட்டு.... அவள் வலியில் கதறும் போது அவளை அனுபவித்து இருக்கிறான். அதை படித்தவுடன் ரோஹனின் கண்களில் நீர் வழிந்தது. கோபமும் ஆத்திரமும் வந்தது. அந்த கொடியவன் அவன் முன்னே இருந்தால் அவனை கொன்று விடலாம் என்று தோன்றியது.
கடவுளே இந்த நரகத்தில் இருந்து என்னை காப்பாற்று.... என்று அழுதுகொண்டே எழுதியிருந்தாள் போல.... சில எழுத்துக்கள் தண்ணீர் பட்டு கலைந்தது போல இருந்தது.
இன்று என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள். கடவுள் எனக்கு கொடுத்த மறு ஜென்மம்..... கடவுளின் செவிகளில் என் பிரார்த்தனை எட்டிவிட்டது. என்னவன் என்னுடைய ரோஹன்.... என் டார்லிங்.... என்னை முதல் முறையாக பார்த்த நாள்.
அன்றைய தினத்தை நினைத்து பார்த்தான் ரோஹன்.
அந்த மாலில்.... வேகமாக நடந்து வந்தவள்.... அந்த எஸ்கலேட்டரில் சரியாக கால் வைக்காமல் பின்னால் சாய்ந்தாள். அப்போது அவளை தாங்கிப் பிடித்தான் ரோஹன்.
உடனே சுதாரித்துக் கொண்டு எழுந்தவள்.
தேங்க்ஸ் சார்.... என்றாள்.
ஷெரின்.... என்றான் ரோஹன்.
இல்ல சார்.... என் பெயர் வனஜா.... என்றாள்.
ஏய்.... சீக்கிரமா வாடி.... என்று எரிந்து விழுந்தான் அவள் கணவன்.
அப்போது தான் அவள் நெற்றி வகிடை பார்த்தான். திருமணம் ஆகிவிட்டிருக்கிறது.... என்று பார்த்து விட்டு கிளம்பிச் சென்றவன். அவளுடைய கணவன் ஒரு கிழவனிடம் இவளை அறிமுகப்படுத்தினான். அந்த கிழவன் இவளை விழுங்குவது போல பார்த்தான். அப்போது அந்த கிழவன் ரூபாய் நோட்டுகளை அவள் கணவனிடம் கொடுத்தான். அதை வாங்கி கொண்டு....
சரி.... முடிஞ்சதும் ஆட்டோ புடிச்சு வீட்டுக்கு வா..... ராத்திரி சேகர் வருவான்.... என்றான்.
ஏங்க.... பிளீஸ் சேகர் மட்டும் வேண்டாம். இரண்டு முறை அவன் சுட்டதே இன்னும் ஆரல.... என்று கெஞ்சினாள். ஏய் நான் ஆயின்மெண்ட் வாங்கித் தரேன் டி.... அவன் உனக்காக மூணு மடங்கு காசு தரான்....
சீ.... நீ எல்லாம் ஒரு மனுஷனா....
அவளுடைய பக்கத்தில் உட்கார்ந்து இருந்ததால் அவளுடைய தொடையில் கிள்ளினான். முகத்தில் வலியை காட்டாத.... பாவம் எதிரிலே இருக்கும் தாத்தா பயந்து ஓடிட போறாரு.... என்றான்.
அமைதியாக வலியை பொறுத்துக் கொண்டாள். இவை அனைத்தையும் பக்கத்தில் டேபிளில் அமர்ந்து பார்த்து கொண்டு இருந்த ரோஹன்.... அந்த தாத்தாவின் பக்கத்தில் வந்து அமர்ந்தான்.
மூவரும் ஆச்சரியமாக பார்த்தனர். முதலில் யோசித்தவள்.... அவனை மிக அருகே தாங்கிப் பிடிக்கும் போது பார்த்ததால் அவளுக்கு தெரிந்துவிட்டது. அமைதியாக இருந்தாள்.
ஏய்.... யாரு நீ.... என்றான் வனஜாவின் கணவன் ரமேஷ்.
பதில் பேசாமல் ஒரு ஐநூறு ரூபாய் நோட்டு கட்டை அவனிடம் கொடுத்தான் ரோஹன்.
வாய் முழுக்க புன்னகையுடன்..... சார்.... யாரு நீங்க.... என்றான்.
ஒன் வீக்.... எவ்வளவு வேணும்.... என்றான் வனஜாவை காட்டி....
அவனுக்கு ரோஹன் கொடுத்ததே அதிகம்.... பத்து நாட்கள் ஆனாலும் அந்த பணம் கிடைக்காது.... இருந்தாலும் இந்த மாதிரி இன்னொன்று வேணும் சார்.... மறுபடியும் இன்னொரு கட்டை நீட்டினான். ஓகே சார் நான் நெக்ஸ்ட் வீக் இங்கேயே வரேன்.... இவளை இதே இடத்தில விட்டிடுங்க.... என்றான் சிரித்துக் கொண்டே.
ஏய்.... நான் தான் இன்னைக்குக்கு காசு கொடுத்திருக்கேன் என்றார் அந்த தாத்தா.
அவரிடம் அவர் கொடுத்ததை விட இரண்டு மடங்கு பணத்தை நீட்டினான் ரோஹன்.
அதை வாங்கி கொண்டு அந்த தாத்தா....
என்ஜாய் பண்ணு பா.... என்று சொல்லி விட்டு வெளியே போகும் முன் அவனுடன் ரமேஷ் சென்று... வாங்க நான் உங்களுக்கு வேற தரேன்.... என்று அழைத்துச் சென்றான்.
இவை அனைத்தையும் பார்த்த வனஜா.... அதிர்ச்சியாகவும் பிரமிப்பாகவும் நின்று கொண்டு இருந்தாள்.
வாங்க போகலாம்.... என்றான் ரோஹன்.
நடுக்கத்துடனும் பயத்துடனும் அவனுடன் சென்றாள் வனஜா.
அப்போது தான் முதல் முறையாக அந்த வீட்டினுள் காலடி பதித்தாள்.
அவனுடைய அறைக்கு அழைத்து சென்றான்.
அந்த கட்டிலில் அமர்ந்தாள். எப்போதும் அவளுடைய வீட்டில் அல்லது எதாவது ஹோட்டலில் தான் அவளுடைய கணவன் ஆட்களை அனுப்பி வைப்பான்.... ஆனால் இப்போது ஒருவரது வீட்டுக்கு வந்ததால் மிகவும் நடுக்கமாக இருந்தாள் வனஜா.
நீங்க ரெஸ்ட் எடுங்க.... நான் இப்போ வந்திடறேன்.... என்று சொல்லி விட்டு தன் லேப்டாப்பில் ஏதோ வேலை பார்த்து கொண்டிருந்தான் ரோஹன்.
பெட்டில் அப்படியே படுத்து தூங்கி விட்டாள் வனஜா. அரைமணி நேரத்தில் வேலையை முடித்தவன் அங்கே வந்து பார்க்கும் போது வனஜா தூங்கிக் கொண்டிருந்தாள்.
அவளை டிஸ்டர்ப் செய்யாமல் தூரமாக அமர்ந்து அவளையே பார்த்துக் கொண்டு இருந்தான் ரோஹன். அவளை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தவன்.... அவளுடைய கணவனுக்கு என்ன கொடுத்தால் அவளுக்கு டைவர்ஸ் தருவான் என்று நினைத்து கொண்டிருந்தான். அப்போது அலறி அடித்து கொண்டு எழுந்த வனஜா.....
சாரி சார்.... தெரியாம தூங்கிட்டேன்.... அவர் கிட்ட சொல்லிடாதீங்க.... வாங்க.... என்று சொல்லி தன் முந்தானையை அவிழ்த்தாள்.
இல்ல.... இப்போ வேண்டாம்.... ஒரு வாரம் இங்கே தானே இருக்க போறீங்க.... அப்புறமா பார்த்துக்கலாம்.... என்றான் ரோஹன்.
சரி சார்.... என்றவள் தன் முந்தானையை சரி செய்து கொண்டாள்.
சாப்பிடுறீங்களா.... என்றான் ரோஹன்.
பசி வயிற்றைக் கிள்ளியது.... எப்படி அவனிடம் கேட்பது என்று யோசித்தவள்.... அவன் கேட்டதும்....
ஓகே சார்.... என்றாள் வேகமாக.
ரூமிற்கே சாப்பாடு கொண்டு வந்தான். அவள் எதிரே அமர்ந்து அவனும் சாப்பிட்டான். அவளை பார்த்து கொண்டே சாப்பிட்டான். இவன் என்னவெல்லாம் பண்ணப் போறானோ.... என்று நினைத்து கொண்டே சாப்பிட்டு முடித்தாள் வனஜா.
அன்று முழுவதும் அவளிடம் வரவில்லை ரோஹன். அவளை விட்டு எங்கும் செல்லவும் இல்லை.... இரவு ....
சார்.... என்றாள் வனஜா.
சொல்லுங்க....
நான் டிரெஸ் எதுவும் கொண்டு வரவில்லை.... என்று இழுத்தாள்.
ஒரு நிமிஷம் என்றவன்.... ஒரு சாவியை கொடுத்து.... அந்த கப்போர்டில் இருக்கும் எந்த டிரெஸ் வேணும்னாலும் போட்டுக்கோங்க.... என்றான் ரோஹன்.
கப்போர்டை திறந்தவள் பிரம்மித்தாள்..... அவ்வளவு நிறைய புடவைகள், சுடிதார்கள், டிரெஸ்களை எல்லாம் துணிக்கடையில் தான் பார்த்திருக்கிறாள்.
சார்.... நீங்களே எதாவது கொடுத்திடுங்க.... உங்க ஒயிஃப் ஒன் வீக் அப்புறம் வீட்டுக்கு வந்து பார்த்தா தப்பா ஆயிடப்போகுது.... என்றாள் வனஜா.
நீங்க கவலைப் படாதீங்க.... அவ வர மாட்டா.... எனக்கும் அவளுக்கும் டைவர்ஸ் ஆயிடிச்சு.....
ஓ‌... சாரி சார்.... என்றவள்.... அங்கிருந்த ஒரு நைட்டியை எடுத்து கொண்டு குளிக்க சென்றாள்.
குளித்து விட்டு அதை போட்டு கொண்டு வந்து கட்டிலில் அமர்ந்தாள்.
அதுவரை லேப்டாப்பில் ஏதோ வேலை பார்த்து கொண்டிருந்த ரோஹன்.... எதேச்சையாக அவளை திரும்பி பார்த்தான்.
அந்த லேப் டாப்பை கீழே வைத்து விட்டு அவளருகில் சென்று அவளை கட்டி பிடித்தான். அவனுக்கு அவனுடைய மனைவியின் ஞாபகம் வந்தது. அவளுக்கு முதல் முறையாக அவன் வாங்கி தந்த அந்த நைட்டியை கலர் பிடிக்க வில்லை என்று அவள் போடவே இல்லை. அதைப் பார்த்ததும் ரோஹனால் அவனை கட்டுப் படுத்திக் கொள்ள முடியவில்லை. இருவரும் ஒன்றாயினர். இதுவரை அவளுக்கு கிடைக்காத அன்பும் பாசமும் அந்த உறவில் கிடைத்ததாக உணர்ந்தாள் வனஜா. முதல் முறையாக தாம்பத்தியத்தில் அன்பும் பாசமும் கூட இருக்கும் என்று புரிய வைத்தது ரோஹன் சாருடன் நான் கொண்ட முதல் எக்ஸ்.... என்று எழுதியிருந்தாள்.
அதை படித்தவுடன் ரோஹனின் கண்களில் இருந்து நீர் வழிந்தது.
சார்.... உங்களை டாக்டர் கூப்பிட்டார்.... என்று நர்ஸ் வந்து கூறினார்.
டைரியை மூடி தன் பையில் வைத்து கொண்டு உள்ளே சென்றான் ரோஹன்.
தொடரும்....
அ. வைஷ்ணவி விஜயராகவன்.
 
  • Like
Reactions: Kameswari

Anusha Senthil

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 1, 2024
75
25
18
Coimbatore
ரியல்லி வெரி நைஸ் சிஸ்..
சொல்ல வார்த்தைகளே இல்லை
ஃபாண்ட் சைஸ் மட்டும் பெருசு பண்ணுங்க சிஸ்