• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

ஒரு விபச்சாரியின் காதல் - பாகம் 14

navivij

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2024
134
74
28
Maduravoyal
ஒரு விபச்சாரியின் காதல் பாகம்-14
அந்த வீட்டு பிரோக்கரும் ஹவுஸ் ஓனருமானவன் ரோஹனுக்கு கால் செய்தான்.

ஸ்வீட்டி.... இதோ இப்போ வரேன்.... என்று சொல்லி ஃபோனை எடுத்து கொண்டு வெளியே வந்தான் ரோஹன்.

ஹலோ....


என்ன சார்.... நீங்க சொன்ன பார்ட்டி வந்து இந்த ஏரியாவில் வீடு வேண்டாம்ன்னு சொல்லிவிட்டு போயிட்டாங்க.... அட்வான்ஸ் காசை உங்களுக்கு திருப்பி கொடுக்க சொல்லிட்டு.... நான் பேசிறதை கூட கேட்காம போயிடிச்சு அந்த பொண்ணு....அதை நம்பி இரண்டு பேர் இன்னைக்கு வீடு கேட்டு வந்தவங்களை திருப்பி அனுப்பிட்டேன்.....

அப்படியா.... எங்க போறேன்னு சொன்னாங்களா?....

சார்.... எனக்கு அதனால லாஸ் ன்னு சொல்லிக்கிட்டு இருக்கேன்.... நீங்க என்னன்னா அவங்களை பத்தி கேட்கறீங்க....

உங்களுக்கு என்ன லாஸ்.... அவங்க என்ன ஒரு மாசம் முழுக்க தங்கிட்டு வாடகை கொடுக்காமலா போயிட்டாங்க....

சார் ஆடி மாசம் யாரும் குடி வரமாட்டாங்க.... நாளை மறுநாள் ஆடி மாசம்.... இந்த மாசம் முழுக்க யாரும் வாடகைக்கு வர மாட்டாங்க.... அப்போ எனக்கு லாஸ் தான...

நான் கொடுத்த முப்பதாயிரம் காசை திருப்பி கொடுக்க வேண்டாம்.... நீங்களே வெச்சிக்கோங்க உங்க நஷ்டத்துக்கு....

சார்.... என்னை என்ன காசுக்கு அலையரவன்னு நினைச்சீங்களா.... எனக்கு உங்க காசு வேண்டாம்.... தயவு செஞ்சு இந்த மாதிரி கடைசி நேரத்துல கழுத்தறுக்கும் ஆளுங்களை என் கிட்ட அனுப்பாதீங்க.... என்று கத்திவிட்டு உங்க பணத்தை அக்கவுண்ட்டில் போட்டிடறேன்.... என்று சொல்லி ஃபோனை வைத்தார்.

சே.... தலை வலியா இருக்காளே இந்த லீலா.... என்று நொந்து கொண்டான் ரோஹன்.

உள்ளே வந்தவுடன்....

என்ன டார்லிங்.... ஆஃபீஸ் காலா....

ஆமாம் என்று தலை அசைத்தான் ரோஹன்.

அப்போது சாப்பாடு கொண்டு வந்து கொடுத்தான் ( ஹாஸ்பிடலில் கேண்டீன் பாய்). கையில் டிரிப்ஸ் போய் கொண்டிருந்ததால் வனஜாவால் சாப்பிட முடியவில்லை.

இரு ஸ்வீட்டி.... நான் ஊட்டி விடறேன் என்று சொல்லி விட்டு வனஜாவிற்கு ஊட்டிவிட்டான். கண்கள் கலங்கியது வனஜாவிற்கு....

ஏன் ஸ்வீட்டி.... என்று கண்களை துடைத்துக் விட்டான்.

இல்ல.... அந்த ரமேஷ் ஒரு நாள் கூட என்னை சாப்பிட்டியா ன்னு கூட கேட்டதில்ல.... ஒரு நாள் எனக்கு ஜூரம்.... அப்போ கூட ஒருத்தன் கிட்ட காசு வாங்கிட்டேன்னு சொல்லி அனுப்பிவிட்டுட்டான்.... அவன் கிட்டேயும் முடியல ன்னு கெஞ்சினேன்.... அவனும் ஒத்துக்கல.... அந்த நரகத்தில இருந்து என்னை காப்பாற்றி எனக்கு ஒரு நல்ல வாழ்க்கையை கொடுத்திருக்கீங்க.... உங்களுக்கு நான் எப்படி கைமாறு செய்வது ன்னு தெரியல.... என்றாள் வனஜா.

ரோஹனுக்கும் அவள் சொன்னதை கேட்டு கண்கள் கலங்கியது.

ஸ்வீட்டி.... பிளீஸ்.... பழைய விஷயங்களை மறந்திடு.... அதை பத்தி பேசாதே.... என்றான் ரோஹன்.

அவனுடைய தோள்களில் ஆதரவாக சாய்ந்து கொண்டாள் வனஜா.

***************

என்ன அக்கா சொல்ற.... இப்போ என்ன பண்றது....

இருடா நான் மேனேஜர் கிட்ட பேசி பார்க்கிறேன்.... என்றாள் லீலா.

மேனேஜரிடம்....

சார்.... நானும் என் தம்பியும் சாப்பிட வந்தோம்....

சரி....

பில் ல ஒரு இருநூறு ரூபாய் குறையுது....

என்னது?.... எத்தனை பேருமா.... இந்த மாதிரி கதை சொல்லிக் கிட்டு கிளம்பி வந்திருக்கீங்க‌....

இல்ல சார்.... உண்மையிலேயே.... காலைல ஆட்டோவிற்கு கொடுத்த காசை மறந்திட்டேன்.... இருக்கு ன்னு நினைச்சு தான் சாப்பிட வந்தோம்.... மன்னிச்சிடுங்க....

மன்னிச்சா.... என் நஷ்டத்துக்கு யாரு ஈடு கட்டுவா....

நாளைக்கு காலைல வந்து கொடுத்திடறேன்.... சார்.... என்றாள் லீலா.

நீங்க யாரு யெவரு ன்னு தெரியாம.... உங்களை போயிட்டு நாளைக்கு வந்து மீதி காசை கொடுங்கன்னு சொல்ல.... நான் என்ன லூசுன்னு நினைச்சியா....

எதாவது வேலை இருந்தா சொல்லுங்க சார்.... செஞ்சு அந்த காசை கழிச்சிடறோம்.... என்றான் ராஜூ.

என்ன தம்பி.... நிறைய படம் பார்ப்பியா?.... ஒண்ணு தெரியுமா.... இங்க கிட்சனே கிடையாது.... எல்லாம் ஒரு இடத்தில செஞ்சு எங்க பிராஞ்ச் எல்லாத்திற்கும் சப்ளை பண்ணிடுவாங்க....

நீ அங்கேயே இரு ன்னு தான சொன்னேன் என்றாள் லீலா ராஜூவை பார்த்து.

சார்.... பிளீஸ்... என்ன பண்ணா எங்களை விடுவீங்க....

தம்பி.... அங்கே போய் நில்லுடா.... என்றான் அந்த மேனேஜர்.

அவன் சற்று தூரமாக சென்றதும்....

என் கூட படுக்கறீயா.... நான் கழிச்சிக்கிறேன்.... என்றான் அசடு வழிந்து கொண்டே....

அவ்வளவு தானா டா நீ....ஹாஹாஹா.... என்று சிரித்தாள்.

என்ன சிரிக்கிற.... என்றான் அந்த மேனேஜர் சற்று கோபமாக....

என்னை என்ன அவ்ளோ சீப் ன்னு நினைச்சியா.... ஒரு நாளைக்கு என் கிட்ட வரணும் ன்னா இரண்டாயிரம் ரூபாய் தரணும். அதுக்கு மேலேயும் கொடுக்குறவங்க இருக்காங்க.... இருநூறு ரூபாய்க்கு என்ன கூப்பிடற.... என்றாள் லீலா.

அதிர்ச்சியாக பார்த்தான் அந்த மேனேஜர்.

ராஜூ.... என்றாள் லீலா.

என்ன அக்கா.... என்று அவன் வந்து நின்றான்.

இந்தா இந்த வெள்ளி மோதிரத்தை வித்திட்டு காசு கொண்டு வா.... என்றாள்.

சரிக்கா.... என்று சொல்லி விட்டு பத்து நிமிடத்தில் ஐநூறு ரூபாய் கொண்டு வந்து கொடுத்தான் ராஜூ.

அதை அந்த மேனேஜரிடம் கொடுத்து விட்டு.... அவனை முறைத்துக் கொண்டே... இந்த மாதிரி வேற யாரு கிட்டேயும் கேட்டிடாத.... மூஞ்சி முகரையை பேக்கிறவங்களும் நிறைய பேர் இருக்காங்க.... என்று திட்டிவிட்டு...

ராஜூ.... வாடா போகலாம்.... என்றாள் லீலா.

வெளியே வந்த உடன்....

என்னாச்சு அக்கா.... என்றான் ராஜூ.

கொஞ்ச நாளா நம்ம ஃபிரீயா இருக்கோம் இல்ல.... அதான் கஸ்டமரா வர நினைக்கிறான்.... என்றாள் லீலா.

அக்கா... நான் ஒண்ணு சொன்னா தப்பா நினைக்க மாட்டியே....

என்னடா.... அந்த தொழிலுக்கே போயிடலாம் இல்ல பாண்டிச்சேரிக்கே போயிடலாம் ன்னு சொல்லப் போறீயா?

இல்ல அக்கா....

பின்ன என்ன....

அந்த ரோஹன் சாரை பார்த்தா நல்லவரா தான் தெரியுது.... நமக்கும் ஒரு கவுரவமான வேலை கொடுத்தாரு.... நீ ஏன் அக்கா வீணா அவர் மேல சந்தேக படற....

ராஜூ.... உனக்கு நிறைய ஆம்பளைங்களை பத்தி தெரியாது..... வெளியே நல்லவங்களா காட்டிக்கிட்டு உள்ளுக்குள்ள ரொம்ப கொடூரமானவங்களா இருப்பாங்க.... பொண்ணுங்க கிட்ட தான் அவங்க அதை காட்டுவாங்க.... அதுவும் மறைமுகமா.... அந்த மாதிரி ஒருத்தன் தான் அந்த ரோஹன்....

ஏனோ அவனால் ரோஹனை தவறாக நினைக்க முடியவில்லை.... ஆனால் லீலாவிடமும் ரோஹனிற்காக பேசவும் முடியவில்லை. அமைதியாக அவளுடன் நடந்து சென்றான் ராஜூ.

தொடரும்....

அ. வைஷ்ணவி விஜயராகவன்.
 
  • Like
Reactions: Kameswari