ஒரு விபச்சாரியின் காதல் பாகம் - 15
இரவு நேரம் நெருங்கி விட்டது....
அக்கா.... என்றான் ராஜூ.
என்னடா.... என்றாள் லீலா.
இருட்டாயிடிச்சு.... இப்போ நம்ம எங்கே போய் தங்குறது....
அதான் டா எனக்கும் தெரியல....
அப்போது அங்கே ஒரு போலீஸ் பேட்ரோல் வண்டி வந்தது.
அதிலிருந்து இறங்கிய ஒரு பெண் போலீஸ்....
நில்லுங்க.... யாரு நீங்க.... இந்த ஏரியாவுல ரொம்ப நேரமா சுத்திக்கிட்டு இருக்கீங்கன்னு எனக்கு கன்ட்ரோல் ரூமில் இருந்து ஃபோன் வந்துச்சு....
மேடம்.... என் பெயர் லீலா.... இவன் என் தம்பி ராஜூ.... நாங்க பாண்டிச்சேரில இருந்து வரோம்.... வீடு எதாவது வாடகைக்கு கிடைக்குமா ன்னு பார்த்து கிட்டு இருந்தோம்.
வேலை செய்யறீயா மா நீ?
இல்ல மேடம்.... வேலை தேடிக் கொண்டு இருக்கேன்....
நீ என்னடா படிக்கிறீயா இல்ல வேலை பண்றீயா....
மேடம் இவனும் வேலை தேடிக் கொண்டு தான் இருக்கான்....
ஏன் துறை வாயை திறந்து பேச மாட்டாரோ....
இல்ல மேடம் அவனுக்கு போலீஸ் ன்னா கொஞ்சம் பயம்....
தப்பு பண்றவங்க தான் போலீஸை பார்த்து பயப்படனும்.... நீ என்ன தப்பு பண்ண....
அய்யோ அதெல்லாம் ஒண்ணும் இல்லை மேடம்....
சரி சரி.... வயசு பொண்ணா இருக்க உன்னை தனியா இங்கே விட்டு விட்டு போகவும் கஷ்டமா இருக்கு.... சரி என் கூட வா.... என் வீட்டில மாடி போர்ஷன் காலியா இருக்கு.... இன்னைக்கு நைட்டு அப்புறம் ஒரு இரண்டு நாளைக்கு தங்கிக்கோ.... வேலை கிடைச்சுதுன்னா சரி.... வாடகை எவ்வளவு ன்னு சொல்றேன்....என்னோட வீட்டிலேயே தங்கிக் கோ.... இல்லன்னா ஒழுங்கா பெட்டியை தூக்கிட்டு பாண்டிச்சேரிக்கே போயிடனும்.... சரியா....
மனதிற்குள்.... அப்படி ஒரு நிலைமை வந்தா....என் வனஜாவையும் அழைத்து கொண்டு பாண்டிச்சேரி போயிடுவேன்.....
சரிங்க மேடம்.... ரொம்ப தேங்க்ஸ்.... என்றாள் லீலா.
சரி சரி.... உன்னோட ஆதார் கார்டை காட்டு.... என்றாள் அந்த லேடி போலீஸ்.
இதோ மேடம் என்று சொல்லி தன் பர்ஸில் இருந்து ஆதார் அட்டையை எடுத்து காண்பித்தாள்.
அதை செக் செய்துவிட்டு பின் தன் ஃபோனில் அதை ஃபோட்டோ எடுத்து கொண்டாள் அந்த லேடி போலீஸ்.
டேய்.... உன்னோட ஆதார் அட்டை எங்கே....
ராஜூவும் எடுத்து காட்டினான்.... அதையும் ஃபோட்டோ எடுத்து கொண்டாள்.
மேடம்....
ம்....
உங்க பேரு என்ன ன்னு நாங்க தெரிஞ்சிக்கலாமா?
அர்ச்சனா ஈ2 போலீஸ் ஸ்டேஷனில் கான்ஸ்டபிள்.... போதுமா.... ஐடி கார்டு.... என்று காண்பித்தாள்.
அய்யோ.... இல்ல மேடம்.... எதுக்கு.... ஐடி கார்டு எல்லாம் காட்டறீங்க....
நான் உன்னை கேட்டதும் சரி.... நீ என்னை கேட்டதும் சரி.... இதுல தப்பா நினைக்கவோ கோபப் படவோ எதுவும் இல்லை.... வாங்க வந்து ஜீப்ல ஏறுங்க.... என் டியூட்டி முடிஞ்சிடிச்சு.... நான் இப்போ வீட்டுக்கு தான் போறேன்.... என்றாள் அர்ச்சனா.
சரிங்க மேடம் என்று சொல்லி லீலா முன் செல்ல.... சற்றே நடுக்கத்துடனும் பயத்துடனும் ராஜூ ஜீப்பில் ஏறினான்.
ஒரு வீட்டின் வாசலில் ஜீப் நின்றது.
குட் நைட்டு மேடம்.... நாளைக்கு காலைல வரேன் என்று சொன்னார் டிரைவர்.
ஓகே சுந்தரம்.... பை.... குட் நைட்டு.... என்று சொல்லி விட்டு லீலா மற்றும் ராஜூ வை பார்த்து....
வாங்க.... என்றாள்.
உள்ளே சென்றதும் உட்காருங்க....
தினேஷ்.... என்றாள் அர்ச்சனா.

தினேஷ்
அக்கா.... என்று சொல்லி ஒருவன் வந்து நின்றான்.
மாடி வீட்டு சாவி எடுத்திட்டு வா.... போய் இவங்களுக்கு வீட்டை திறந்து காட்டு.... என்றாள் அர்ச்சனா.
சரிக்கா.... என்று சொல்லி விட்டு சாவியை எடுத்து வந்தவன் மூன்று நான்கு முறை லீலாவை பார்த்தான்.... லீலாவும் இவனை பார்த்தாள்.
இவன் என்னோட தம்பி.... பேரு தினேஷ்....
இவனோட போய் வீட்டை பாருங்க.... நான் டிரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு வரேன்.... என்றாள் அர்ச்சனா.
ஓகே மேடம் என்று சொல்லி விட்டு தினேஷை ஃபாலோ செய்து படியில் ஏறினார்கள் லீலா மற்றும் ராஜூ.
மாடி வீட்டை ஓப்பன் செய்து லைட் போட்டான்.
அப்போது லீலா அவனிடம்....
சார்.... உங்களை எங்கோ பார்த்த மாதிரி இருக்கு.
அமைதியாக இருந்தான் தினேஷ்.
நீங்க பாண்டிச்சேரிக்கு எப்பவாவது வந்திருக்கீங்களா.... என்றாள் லீலா.
ஆம்.... என்று அவன் சொன்ன அடுத்த வினாடி லீலாவிற்கு ஞாபகம் வந்தது....
நீங்க தான.... ஹா.... என்று சொல்லி சிரிக்க தொடங்கியவளை....
ஷூ.... பிளீஸ் அக்கா வராங்க.... என்றான் தினேஷ்.
லீலாவும் அமைதியாக இருந்தாள்.
என்னம்மா.... வீடு ஓகே வா....
நல்லா இருக்கு மேடம்.... ரொம்ப தேங்க்ஸ்.... என்றாள் லீலா.
சரிம்மா.... நான் சொன்னது ஞாபகம் இருக்கு இல்ல.... என்றாள் அர்ச்சனா.
இருக்கு மேடம்.... என்று லீலா சொன்னதும்...
என்ன அக்கா.... என்றான் தினேஷ்.
அப்புறம் சொல்றேன்.... என்றாள் அர்ச்சனா.
சரி.... பூட்டிக்கிட்டு படுங்க.... என்றாள் அர்ச்சனா.
அர்ச்சனா இறங்கியதும்....
ராஜூ வீட்டை சுற்றி பார்த்தான்..... தினேஷ் படிக்கட்டில் இறங்க கால் வைத்தவன்....
அக்கா... பூட்டு என் கையில இருக்கு கொடுத்து விட்டு வரேன் என்று சொல்லி மறுபடியும் ஏறினான்.
என்ன மிஸ்டர்.... நான் உங்களை மறக்கவே மாட்டேன்.... என்று சொல்லி கண்ணடித்தாள் லீலா.
இந்தாங்க பூட்டு சாவி.... நாளைக்கு ஒரு எட்டு மணிக்கு வரேன்.... உங்க கிட்ட தனியா பேசணும்....
எப்படி.... அன்னைக்கு பேசின மாதிரியே வா.... என்று சொல்லி விட்டு சிரித்தாள் லீலா.
பிளீஸ்.... நான் சீரியஸா சொல்றேன்.
கவலைப்படாதீங்க.... இரண்டு நாள்ல போயிடுவேன்.... உங்க அக்கா கிட்ட எதுவும் சொல்ல மாட்டேன்.... இதை தான நாளைக்கு காலைல வந்து பேச நினைச்சீங்க.... என்றாள் லீலா சிரித்துக் கொண்டே.
இல்ல....
பின்ன.... என்ன சொல்ல போறீங்க....
ஐ லவ் யூ....
வாட்....
தினேஷ் கீழே இறங்கி போய்விட்டான்.
அன்றைய நாளை நினைக்க தொடங்கினாள் லீலா.....
மூன்று பேர் பாண்டிச்சேரிக்கு லீலாவின் வீட்டிற்கு கஸ்டமராக வந்தனர்.
காஞ்சனா மற்றும் கஸ்தூரிக்கு இருவர் சென்று விட.... தினேஷ் தான் லீலாவின் ரூமிற்கு வந்தான்.
முதல் பத்து நிமிடத்திற்கு அமைதியாக அமர்ந்து இருந்தான்.
என்ன சார்.... உட்கார்ந்திட்டு போகத்தான் வந்தீங்களா?.... என்றாள் லீலா.
இல்ல.... அது வந்து.... என்றான் தினேஷ்.
பயப்படாதீங்க.... இதுதான் ஃபர்ஸ்ட் டைமா....
ஆமாம்.... என்று தலை ஆட்டினான்.
சரி.... பயப்படாதீங்க.... என்று அவனருகில் சென்று அமர்ந்து அவனுடைய கையை பிடித்தாள் லீலா.... பின்னர் அவனுக்கு இதழ்களில் ஒரு டீப் கிஸ் கொடுத்தாள்....அவனுக்கு கைகள் பயங்கரமாக நடுங்கியது....
என்ன சார் இப்படி பயப்படறீங்க....
மேடம்.... எனக்கு இதெல்லாம் விருப்பம் இல்லை.... எங்க ஃபிரெண்டோட மேரேஜ் பேச்சுலர் பார்ட்டிக்காக வந்தோம்....என் ஃபிரெண்ட்ஸ் தான் கம்பல் பண்ணாங்க இங்கு வரணும்னு....
ஓகே ஓகே ரிளாக்ஸ்.... வேண்டாம் ன்னா விடுங்க.... போங்க.... என்றாள்.
இல்ல மேடம்.... ஒரு மணிநேரம் கழிச்சு போகட்டுமா.... பிளீஸ்.... என் ஃபிரெண்ட்ஸ் எல்லாம் கிண்டல் பண்ணுவாங்க.... என்றான் தினேஷ்.
சரி.... ஓகே.... என்று சொல்லி சிரித்தாள் லீலா.
பிறகு அவன் சென்று விட்டான். அந்த நினைவுகளில் இருந்து வெளியே வந்தவள்.... இவன் ஏன் என்னிடம் ஐ லவ் யூ.... என்று சொல்கிறான் என்று ஆச்சரியப்பட்டாள் லீலா.
தொடரும்.....
அ. வைஷ்ணவி விஜயராகவன்.