• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

ஒரு விபச்சாரியின் காதல், பாகம் 16

navivij

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2024
134
74
28
Maduravoyal
ஒரு விபச்சாரியின் காதல் பாகம் -16
டார்லிங்.... என்றாள் வனஜா.
சொல்லு ஸ்வீட்டி.... என்றான் ரோஹன்.
இன்னைக்கு லீலாவுக்கு கால் பண்ணவா?
அது வந்து.... டாக்டர் கிட்ட கேட்டு விட்டு சொல்லவா?
ஓகே டார்லிங்.... என்றாள் வனஜா.
லீலா.... அவள் அவனை பற்றி நினைப்பதை வனஜாவிடம் கூறிவிட்டாள் என்ன செய்வது.... வனஜா நம்ப மாட்டாள் ஆனால் லீலா அவளுடைய நெருங்கிய தோழி ஆச்சே.... என்னை ஒரு வருஷமாக தான தெரியும்.... என்றெல்லாம் யோசித்து கொண்டு இருந்தான் ரோஹன்.
அப்போது பிரசாத் சார் ரோஹனுக்கு கால் செய்தார்.
ஹலோ சொல்லுங்க பிரசாத் சார்....
சார்..... நேத்துல இருந்து உங்களுக்கு டிரை பண்ணேன் லைன் கிடைக்கவில்லை.... அந்த பொண்ணு லீலாவதி அப்புறம் அந்த பையன் ராஜூ ரெண்டு பேரும் வேலை வேண்டாம் ன்னு லெட்டர் எழுதி கொடுத்து விட்டு போயிட்டாங்க.... என்றார்.
அப்படியா.... நான் நினைச்சேன்.... அப்படி தான் நடக்கும் ன்னு.... சரி விடுங்க சார்.
சார்.... இன்னொரு விஷயம்.... நீங்க ஆஃபீஸூக்கு வரணும்.... மதியம் ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு.... என்றார்.
இல்ல சார்...என்னால கண்டிப்பா வரமுடியாது.... பிளீஸ் அந்த மீட்டிங்கை வேற நாளைக்கு மாத்திடுங்க....
சார்.... இதுவரை இரண்டு முறை மாத்திட்டோம்.... இன்னொரு முறை மாற்றினா அந்த டீலிங்கையே கேன்சல் பண்ணிடுவாங்க நம்ம கிளையன்ட்ஸ்.... அதனால நமக்கு நிறைய லாஸ் ஆகும்.... என்றார்.
பரவாயில்லை பிரசாத் சார்..... எனக்கு அதை பத்தி கவலை இல்லை.... நீங்க கேன்சல் பண்ணிடுங்க.... என்றான் ரோஹன்.
ஓகே சார்.... பை .... என்று வருத்தமாக சொல்லி விட்டு ஃபோனை வைத்தார் பிரசாத்.
வனஜா ரோஹனை பார்த்து..
என்னாச்சு டார்லிங்..... என்றாள்.
ஒண்ணும் இல்ல ஸ்வீட்டி....
உங்களுக்கு ஆஃபீஸ்ல எதாவது முக்கியமான வேலை இருந்தா நீங்க போயிட்டு வாங்க.... கொஞ்ச நேரம் தானே....நான் பார்த்துக்கிறேன்.......
இல்ல ஸ்வீட்டி முக்கியமான வேலை இல்லை.... என்றான் ரோஹன்.
அப்படியா ‌‌.... சரி ஓகே டியர்.... என்றாள் வனஜா.
சார் டிஸ்சார்ஜ் விஷயமா உங்களை டாக்டர் கூப்பிட்டார்.... என்று ஒரு நர்ஸ் வந்து கூற....
ஸ்வீட்டி.... இதோ வந்திடறேன்.... என்று சொல்லி விட்டு சென்றான் ரோஹன்.
அவனுடைய ஃபோனை வனஜா படுத்திருந்த கட்டிலின் மேலேயே வைத்து விட்டு மறந்து சென்றுவிட்டான் ரோஹன்.
அவன் சென்றிருக்கும் போது அவனுடைய ஃபோன் அடித்தது.
டார்லிங் என்று கூப்பிட்டாள்.... ஆனால் அதற்குள் அவன் வெளியே சென்று விடவே.... ஃபோனை எடுத்து யார் என்று பார்த்தாள் வனஜா.
பிரசாத் சார் காலிங்.... என்று வந்தது. வேறு யாராக இருந்தாலும் ஃபோனை எடுத்திருக்க மாட்டாள். பிரசாத் சார் தானே என்று நினைத்து கொண்டே எடுத்து பேசினாள்.
ஹலோ பிரசாத் சார்.... எப்படி இருக்கீங்க....‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ என்றாள்.
நல்லா இருக்கேன் மா.... நீங்க எப்படி இருக்கீங்க?
நல்லா இருக்கேன் சார்.... இவர் இருக்கும் போது என்னோட நலனுக்கு என்ன குறை.... என்றாள் வனஜா.
ரொம்ப சந்தோஷம் மா.... சார் இல்லையா?
டாக்டர் கிட்ட டிஸ்சார்ஜ் பண்ண பேசிட்டு வர போயிருக்காரு....
ஓ.... அப்படியா.... அப்போ மீட்டிங்க்கு வருவாரா?
என்ன மீட்டிங் சார்....
ஆஃபீஸ்ல முக்கியமான மீட்டிங் இருக்கு.... என்று அவர் சொன்னதும் ரோஹன் வர மறுத்ததையும் சொன்னார் பிரசாத் சார்.
என்ன சொல்றீங்க சார்.... அதனால கம்பெனிக்கு லாஸ் ஆகுமா....
கண்டிப்பா சொல்ல முடியாது. ஒருவேளை கிளையண்ட்ஸ் மூணு முறையா மீட்டிங் சேஞ்சு பண்ணா கடுப்பாகி டீலீங் கேன்சல் பண்ணா.... லாஸ் ஆக சான்ஸஸ் ஆர் ஹை.... என்றார் பிரசாத் சார்.
ஓகே சார்.... நீங்க கவலைப்படாதீங்க.... ரோஹன் சாரை மீட்டிங்க்கு அனுப்ப வேண்டியது என் பொறுப்பு.... நீங்க எதுவும் கேன்சல் பண்ண சொல்ல வேண்டாம்.... என்றாள் வனஜா.
இதனால எதுவும் பிரச்சனை வராது இல்ல மா?...ஏதோ நான் தான் உங்களை வற்புறுத்தி சொல்ல சொன்னேன்னு நினைச்சுக்க போறாரு..... என்றார் பிரசாத் சார்.
நீங்க டென்ஷன் ஆகாதீங்க சார்.... நான் பார்த்துக்கிறேன்.
தேங்க்ஸ் மா.... பை.... டேக் கேர்.... என்றார் பிரசாத் சார்.
தேங்க்ஸ் சார்.... பை.... என்றாள் வனஜா.
சிறிது நேரம் கழித்து ரோஹன் வந்தான்.
ஸ்வீட்டி.... நம்ம இப்போ வீட்டுக்கு கிளம்பலாம்.... நெக்ஸ்ட் வீக் செக்கப்பிற்கு வரணும்.
சரிங்க.... போகலாம்.... என்றாள் வனஜா.
அப்போது நர்ஸ் வந்து.... சார் நெக்ஸ்ட் வீக் ஆப்பிரேஷனுக்கு நீங்க முன்னாள் வரலையா.... அப்படின்னா மார்னிங் 6 மணிக்கு எம்டி ஸ்டோமெக்ல வரணும்.... என்றார்.
ரோஹன்.... கண்களால் ஜாடை காட்டி கொண்டே....
என்ன சொல்றீங்க.... யாருக்கு ஆப்பிரேஷன்.... என்றான் ரோஹன்.
சார்.... சாரி சார்.... நான் பேஷன்ட் மாத்தி சொல்லிட்டேன்.... என்றார் அந்த நர்ஸ்.
டார்லிங்.... ஒரு நிமிஷம் பயந்திட்டேன்.... எங்கே எனக்கு இந்த பிஃட்ஸ்னால வேற எதாவது ஆப்பிரேஷனோ ன்னு.... என்றாள் ரோஹனை பார்த்து.
அவன் ஸ்மைல் செய்தான்.
சிஸ்டர்.... ஒழுங்கா கரெக்டா பார்த்து சொல்லுங்க.... ஒரு நிமிஷம் எனக்கு பக்குன்னு ஆயிடிச்சு.... என்றாள் வனஜா.
நர்ஸ் வெளியே சென்றதும்....
டார்லிங்.... ஒண்ணு சொல்லவா?
சொல்லு ஸ்வீட்டி....
இல்ல ஒண்ணு கேட்கவா?
சிரித்துக் கொண்டே அவளுருகில் அமர்ந்து....
என்ன?.... என்றான் ரோஹன்
நான் சொன்னா கேட்பீங்களா?
கண்டிப்பா.... அதுல என்ன சந்தேகம்....
அப்படின்னா.... ஆஃபீஸ் போய் அந்த முக்கியமான மீட்டிங்கை அட்டென்ட் பண்ணிட்டு வாங்க....
உனக்கு எப்படி தெரியும்..... அந்த பிரசாத் சார் சொன்னாரா....
நீங்க டாக்டரை பார்க்க போன போது உங்க ஃபோன் அடிச்சுது.... பிரசாத் சார் தானே ன்னு எடுத்தேன்.... என்று அவரிடம் பேசியதை கூறினாள் வனஜா.
அவர் தான் உன்னை என்னிடம் கேட்க சொன்னாரா?
சே சே.... நான் தான் அவர் கிட்ட சொன்னேன்.... நீங்க மீட்டிங் அரேஞ்ச் பண்ணுங்க ரோஹன் சாரை நான் அனுப்பி வைக்கிறேன்னு.... என்றாள்.
இல்ல ஸ்வீட்டி.... உனக்கு உடம்பு சரியில்லாத நேரத்தில உன்னை தனியா விட்டுட்டு போக மாட்டேன்....
யாரு சொன்னா நான் தனியா இருக்கேன் ன்னு.... அதான் நம்ம குழந்தை எனக்கு துணையாக இருக்கிறதே.... அதுவும் இல்லாம என்னால உங்களுக்கு நஷ்டம் வந்தா அதை நான் தாங்கிக்குவேன்னு நினைக்கறீங்களா?
அமைதியாக இருந்தான் ரோஹன்....
பிளீஸ் டார்லிங்.... இரண்டு மணி நேரம் தான.... வீட்டில தான் நிறைய பேர் இருக்காங்களே.... நான் பார்த்துக்கிறேன்.... என்றாள் வனஜா.
ஓகே ஸ்வீட்டி.... உனக்காக நான் போய் மீட்டிங் அட்டெண்ட் பண்ணிட்டு வரேன்.... என்றான் ரோஹன்.
தேங்க் யூ ஸோ மச் டார்லிங்.... என்று சொல்லி அவனை கட்டி அணைத்து முத்தம் கொடுத்தாள் வனஜா.
அவளை வீட்டில் விட்டுவிட்டு ரோஹன் ஆஃபீஸ் சென்றான்.
அப்போது வனஜா ஃபோன் அடித்தது.
எடுத்து ஹலோ என்றாள்.
என்ன வனஜா.... சொக்கியமா?
யாரு நீங்க....
என்ன அதுக்குள்ள என் குரலை மறந்திட்டியா?....
நீயா?..... என்று அதிர்ச்சியாக கண்கள் விரிய பேசினாள்.
தொடரும்.....
அ. வைஷ்ணவி விஜயராகவன்.
 
  • Like
Reactions: Kameswari