• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

ஒரு விபச்சாரியின் காதல் பாகம் -19

navivij

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2024
134
74
28
Maduravoyal
ஒரு விபச்சாரியின் காதல் பாகம் -19

ஆஃபீஸூக்கு செல்லும் போது போலீஸ் ஸ்டேஷன் வாசலில் ராஜூ கவலையுடன் நின்று கொண்டு இருப்பதை பார்த்த தினேஷ் அவனருகே சென்று என்னாச்சு டா என்றான்.

அவனிடம் அனைத்து விஷயத்தையும் கூறினான் ராஜூ.

என்னடா சொல்ற.... உங்க அக்கா என்ன பெரிய ரிவால்வர் ரீட்டா ன்னு நினைப்பா.... தைரியமா அதுவும் ஒரு கர்ப்பமா இருக்குற பொண்ணை கூட்டிக்கிட்டு போயிருக்கா ன்னு சொல்ற.... என்றான் தினேஷ்.

அண்ணா.... பயமா இருக்கு என்றான்.

என்னோட அக்கா கிட்ட சொல்லிட்டியா?

ஹாங் சொல்லிட்டேன்.... அவங்களும் திட்டினாங்க.... எந்த தைரியத்தில தனியா போயிருக்கா உங்க அக்கா ன்னு....

என்னவெல்லாம் சொன்ன?.... பாண்டிச்சேரி பத்தியும் சொல்லிட்டியா?

இல்ல அண்ணா.... உங்களுக்கு எங்களை பற்றி தெரியுமா?.... என்றான் ராஜூ.

ஆமாம்.... என்று தலை அசைத்தான் தினேஷ்.

அப்போது அங்கே வந்த அர்ச்சனா....

நீ எங்கே டா இங்க.... என்றாள் தினேஷை பார்த்து.

இல்ல அக்கா இவனை இங்கே பார்த்தேன் அதான்.... என்னாச்சு ன்னு கேட்க வந்தேன்....

ஓ.... ஓகே....சரி வா ராஜூ.... லொகேஷனை காட்டு.... போலீஸ் எல்லாரும் வேலை வெட்டி இல்லாம இருக்கோம்னு உங்க அக்காவுக்கு நினைப்பா.... நீங்க வா ன்னு சொன்னவுடனே வருவதற்கு.... நான் என்னோட சுப்பீரியர் ஆஃபீஸர் கிட்ட பர்மிஷன் வாங்கிக்கிட்டு.... டெய்லி லெட்ஜர்ல கையெழுத்து போட்டு விட்டு தான் ஸ்டேஷன்ல இருந்து கிளம்ப முடியும்.... இப்பவே பத்து நிமிஷம் லேட்.... அதுக்குள்ள அவங்க ரெண்டு பேருக்கும் எதாவது ஆச்சுன்னா.... என்ன பண்றது....

அமைதியாக இருந்தான் ராஜூ.

சரி சரி நீ கிளம்பு நான் பார்த்துக்கிறேன் என்று தினேஷை பார்த்து கூறினாள் அர்ச்சனா.

அக்கா.... நானும் வரவா.... என்றான் தினேஷ்.

நான் என்ன சினிமாவுக்கா போறேன்.... நானும் வரவா ன்னு கேட்குற....

இல்ல அக்கா.... நெக்ஸ்ட் வீக்ல மறுபடியும் போலீஸ் எக்ஸாம் எழுதப் போறேன் இல்ல.... நீங்க எப்படி ஒரு கேஸை ஹாண்டில் பண்றீங்கன்னு பார்த்தா எனக்கு யூஸ்ஃபுல்லா இருக்கும் இல்ல.... அதான்.... என்றான் தினேஷ்.

சரி சரி வா.... ஆனா உன்னோட பைக்கிலேயே வா என்று தினேஷிடம் சொல்லிவிட்டு.... ராஜூ என் கூட ஜீப்ல ஏறு.... என்று அவனை அழைத்து கொண்டு கிளம்பினாள் அர்ச்சனா.

லீலாவின் ஃபோன் லொகேஷனை பார்த்து ஃபாலோ செய்து போனார்கள்.

லீலாவின் ஃபோன் சார்ஜ் இல்லாமல் ஸ்விட்ச் ஆஃப் ஆனது.

லைவ் லொகேஷன் கட் ஆனது.

என்னடா கட் ஆயிடிச்சு.... இப்போ என்ன பண்றது?.... என்றாள் அர்ச்சனா.

எனக்கும் ஒண்ணும் புரியலை அக்கா.... என்றான் ராஜூ.

கூட இன்னொரு பொண்ணு இருக்கா ன்னு சொன்னீயே அவ நம்பர் இருக்கா....

வனஜா அக்கா நம்பர் என் கிட்ட இல்லையே.....

என்னடா நீ.... இப்போ உங்க அக்காவை எப்படி காப்பாத்துறது....

அமைதியாக இருந்தான் ராஜூ.

வனஜாவோட ஹஸ்பண்டு நம்பர் இருக்கா....

லீலா அக்கா டெலீட் பண்ண சொன்னாங்க.... நான் பண்ணேனா இல்ல இல்லையா ன்னு தெரியல..... ஒரு நிமிஷம் அக்கா செக் பண்றேன்.... என்று சொல்லி ஃபோனை பார்த்து விட்டு....

ஹாங்.... இருக்கு அக்கா.... நான் டெலீட் பண்ணல.... என்று சொல்லி விட்டு ரோஹன் நம்பரை கொடுத்தான் ராஜூ.

அதை வாங்கி அந்த நம்பருக்கு கால் செய்தாள் அர்ச்சனா.

லைன் கிடைக்கவில்லை.... மறுபடியும் மறுபடியும் கால் செய்தாள். லைன் கிடைக்கவில்லை.

வேற யாரோடவாவது நம்பர் தெரியுமா....

ஹாங்.... பிரசாத் சார் நம்பர் தெரியும்.... என்றான் ராஜூ.

சரி கொடு.... என்று அதை வாங்கி கால் செய்தாள் அர்ச்சனா.

ஹலோ.... நான் ஈ2 போலீஸ் ஸ்டேஷன் கான்ஸ்டபிள் அர்ச்சனா பேசறேன்.

சொல்லுங்க மேடம்.....

உங்க பாஸ் ரோஹன் அவரோட மிஸஸ் நம்பர் கிடைக்குமா?

ஒரு நிமிஷம் மேடம்.... என்று சொல்லி நம்பரை கொடுத்தவர்.... மேடம்....

சொல்லுங்க....

என்ன விஷயம் ன்னு தெரிஞ்சுக்கலாமா?

அவங்களுக்கு ஒரு பிரச்சனை....

அச்சச்சோ.... என்ன ஆச்சு?

கவலைப்பட வேண்டாம்.... நாங்க பாத்துக்கிறோம்.... ரோஹன் சார் லைன் கிடைக்கல.... அவர் லைன் கிடைச்சுதுன்னா.... என்னோட நம்பர் கொடுத்து கால் பண்ண சொல்லுங்க....

ஓகே மேடம்.... கண்டிப்பா சொல்றேன்.... இதே நம்பரா....

ஆமாம்.... ஓகே.... தேங்க்ஸ் மிஸ்டர் பிரசாத்.

ஓகே மேடம்.... தேங்க்ஸ்....

காலை கட் செய்ததிலிருந்து தொடர்ந்து ரோஹனுக்கு கால் செய்தார் பிரசாத் சார்.... லைன் கிடைக்கவில்லை.

வனஜாவின் நம்பருக்கு கால் செய்தாள் அர்ச்சனா.

லீலா எடுத்து ஹலோ.... என்றாள்.

யாரு வனஜா வா....

இல்ல லீலா பேசறேன்.... நீங்க....

ஹலோ.... நான் கான்ஸ்டபிள் அர்ச்சனா பேசறேன்.

மேடம்.... சொல்லுங்க....

உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா.... என்றாள் சற்றே கோபமாக.

மேடம்.... என்னாச்சு மேடம்....

உன் ஃபோன் ஸ்விச்சிடு ஆஃப் ஆயிடுச்சு....
நாங்க எப்படி உன்னை ஃபாலோ பண்ணி வருவது.... புள்ளத்தாச்சி பொண்ணை வேற உன் கூட கூட்டிக்கிட்டு சுத்துற....

இல்ல மேடம் அவளை திருப்பி அவளோட வீட்டுக்கு அனுப்பிட்டேன்.... அவ ஃபோனை எடுத்து கொண்டு நான் மட்டும் தான் போய்கிட்டு இருக்கேன்....

அப்படியா.... சரி அவ ஃபோன்ல இருந்து லைவ் லொகேஷன் ஷேர் பண்ணு....

சாரி மேடம்.... என் ஃபோன் ஆஃப் ஆனதை நான் கவனிக்கல.... இந்த நம்பர்ல இருந்து லைவ் லொகேஷன் ஷேர் பண்றேன்.... என்று சொல்லி விட்டு ஃபோனை ஓப்பன் செய்ய பார்த்தாள்..... முடியவில்லை..... அதில் ஃபிங்கர் பிரிண்ட் வைத்தால் தான் வாட்ஸ் அப் ஓப்பன் ஆகும்..... அச்சச்சோ.... என்று நினைத்து கொண்டாள். கால் செய்யவும் முடியவில்லை. அவள் செல்ல வேண்டிய இடத்திற்கு ஒரு கிலோ மீட்டர் மட்டுமே உள்ளது என்று டிரைவரின் மேப் கூறியது.

மறுபடியும் வனஜா நம்பருக்கு கால் வந்தது.

மேடம் வாட்ஸ் அப் ஓப்பன் பண்ண முடியவில்லை.

என்ன சொல்ற....

சரி ஃபோனை அந்த டிரைவர் கிட்ட கொடு....

அந்த டிரைவர் ஃபோனை வாங்கி சொல்லுங்க மேடம்..... என்றான்.

இதோ பாரு தம்பி.... அந்த பொண்ணுக்கு ஒரு பிரச்சனை.... தயவு செஞ்சு உன்னோட நம்பர்ல இருந்து கரெண்ட் லொகேஷன் ஷேர் பண்ணுங்க.... என்றாள் அர்ச்சனா.

நீங்க யாரு மேடம்....

போலீஸ்....

அப்படியா... ஓகே மேடம்..... லொகேஷன் ஷேர் பண்ணினா நீங்க வந்து இவளை காப்பாத்திடுவீங்களா.... ஹா ஹா... என்று சிரித்தான் அந்த ஆட்டோ டிரைவர்.

அதிர்ச்சியாக அவனை பார்த்தாள் லீலா....

ஃபோன் கட் ஆகிவிட்டது....

அர்ச்சனா தினேஷ் மற்றும் ராஜூ செய்வது அறியாமல் திகைத்தனர்.....


தொடரும்....
அ. வைஷ்ணவி விஜயராகவன்.
 
  • Like
Reactions: Kameswari